ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 3,342 
 

அத்தியாயம்-13 | அத்தியாயம்-14

இந்த மாதிரி ‘பாஷன் டிரஸ்’,‘பாஷனான’ செருப்பு,தலை மயிரை ‘பாஷனா’ வெட்டிண்டு வர சுதா இனிமே அவ சம்பள பணத்லே ஆத்துக்கு காலணா கூட தர மாட்டா.அவளை இனிமே நாம ‘ஏன் சுதா,உன் சம்பள பணத்தை ஆத்லே குடுக்காம இருக்கே கேக்கறதிலே ஒரு பிரயோஜனும் இல்லே. அவளுக்கே ‘நாம கல்யாணம் பண்ணீண்டுப் போனா, அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா கிட்டே நம்ப சம்பள பணத்தே தர முடியாதே.கல்யாணம் ஆற வரைக்கும்,நம்ம சம்பள பணத்தே ஆத்லே குடுப்போன்ன்னு அவளுக்கு தோணலயே.எல்லாம் நம்ம போறாத காலம்.சுதா புத்தி இப்படி ‘தறி கெட்டு’ ப் போகும்ன்னு நான் கனவிலே கூட நினைக்கலே.சில பேருக்கு கையிலே நாலு காசு வந்துட்டா தலை கால் தெரியாம ஆட்டம் போடுவா. சுதா அதுக்கு ஒரு விதி விலக்கு இல்லையே” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் ராமநாதன்.

உடனே மங்களம் “நீங்கோ அழாதீங்கோ.எனக்கு கஷ்டமா இருக்கு.சுதா புத்தி இப்படி ‘தறி கெட்டு’ப் போகும்னு நானும் நினைக்கலே” என்று சொல்லி தன் கணவனுக்கு தேத்தறவு சொன்னாள்.

ஆறு மாசம் ஆனதும் சுதா ‘நாம நமக்கு வரும் சம்பள பணத்தே ஆத்லே குடுக்கலேன்னு அம் மா கேட்டப்ப அப்பாவும் இருந்தா.ஆனா அவர் ஒன்னும் சொல்லலே.நாம ஆத்லே வெறுமனே சாப்பி ட்டுண்டு வறது இனிமே அவாளுக்குப் பிடிக்காது.நாமோ வித விதமான ‘பாஷன் டிரஸ்கள்’ எல்லாம் வாங்கிண்டு,‘பாஷனா’ செருப்பு போட்டுண்டு, தலை மயிரை ‘பாஷனாக’வெட்டிண்டு வந்துண்டு இருக்கோம்.இது எல்லாமே அவா நாலு பேருக்கும் சுத்தமா பிடிக்காது.இன்னும் கொஞ்ச நாள் போனா, அப்புறமா அம்மா கோவத்திலே ‘இது என்ன தர்ம சத்திரமான்னு கேப்பா. அப்போ நாம என்ன பதில் சொல்றது’ என்று யோஜனை பண்ணிக் கொண்டு வந்தாள்.

’இனிமே நாம சும்மா இருக்கக் கூடாது.பீட்டரை காதலிக்கற சமாசாரத்தை ஆத்லே சொல்லியே ஆகணும்’ என்கிற முடிவுக்கு வந்தாள் சுதா.

தன் மனதை ¨தா¢யப் படுத்திக் கொண்டாள்.

ஒரு நாள் இரவு வீட்டுக்கு வந்ததும் சுதா அவள் அம்மா கிட்டே தனியாக ரகசியமாக “அம்மா, நான் என் கூட வேலை செஞ்சு வர பீட்டர் என்கிற யையனை உயிருக்கு உயிரா காதலிக்கறேன்ம்மா அவரும் என்னை உயிருக்கு உயிரா காதலிக்கறார்ம்மா. நீ எப்படியாவது அப்பா கிட்டேயும், தாத்தா பாட்டிக் கிட்டேயும் சொல்லி அவரை எனக்குக் கல்யாணம் பண்ணீ வைம்மா.அவர் ரொம்ப நல்லவர் ம்மா” என்று அவள் புடவைத் தலைப்பை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

சுதா சொன்னதை கேட்டதும் மங்களத்துக்கு தூக்கி வாரிப் போட்டது.

அவள் உடனே “என்ன சொல்றே சுதா.நாங்க பெரியவா உனக்கு ஒரு நல்ல பையனாப் பாத்து கல்யாணம் பண்ணீ வைக்க மாட்டோமா என்ன.அதுக்குள்ளே நீ எதுக்கு இந்த ‘காதல் கத்திரிக்கா’ எல்லாம் பண்ணனும்.நீ அந்த ‘கிருஸ்தவ சுப்பர் மார்கெட்’ வேலையிலே சேரும் போதே நான் ரொம்ப கவலைப் பட்டேன்.முதல்லே வித வித ‘பாஷன் டிரஸ்’ எல்லாம் வாங்கிண்டே.அப்புறமா ‘பாஷனான’ செருப்பு வாங்கிண்டே.அப்புறமா தலை மயிரை ‘பாஷனா’ வெட்டிண்டே.வேறே ஜாதிப் பையங்க, கிருஸ்தவ பையங்க சிநேகிதம் இவளுக்கு வறாம இருக்கணுமேன்னு தினமும் கவலைப் பட்டு அந்த அம்பாளை வேண்டிண்டு வந்துண்டு இருக்கேன்.நீயோ பாக்க ரொம்ப அழகா இருக்கே.நான் கவலைப் பட்டு வந்த மாதிரியே ‘நான் ஒரு கிருஸ்தவப் பையனை காதலிக்கறேம்மா’ன்னு சொல்லிண்டு வந்து நிக்கறயே. போறாததுக்கு அவர் ரொம்ப நல்லவர்ம்மா’ன்னு ‘சர்டிபிகேட்டும்’ வேறே தறே.உனக்கு புத்திகெட்டுப் போச்சா என்ன” என்று எல்லோர் காதிலும் படும் படி கத்தினாள்.

உடனே விமலா “என்ன சுதா ஒரு கிருஸ்தவ பையனை காதலிக்கறாளா.என்ன காதல் வேண்டி இருக்கு உனக்கு.அம்மா சொல்றா மாதிரி நாங்க பெரியவா உனக்கு ஒரு நல்ல பையனைப் பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வக்க மாட்டோமா என்ன.அதுக்குள்ளே உனக்கு என்ன அவசரம் சுதா. ஒரு கிருஸ்தவ பையனை காதலிக்கறேன்னு சொல்லிண்டு வந்து நிக்கறே” என்று அவளும் கோவ மாகக் கத்தினாள்.

சுதா சொன்னதைக் கேட்டு ராமசாமியும், மங்களமும், விமலாவும் கேட்டதைப் போலவே சுதாவைக் கேட்டார்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தார் ராமநாதன்.சுதாவைப் பார்த்து “என்ன சுதா.நீ உன் சம்பள பணத்தை ஆத்லே குடுக்காம உன் ‘பாங்க்’ கணக்கிலே போட்டு வச்சுக்கப் போறேன்னு. சொன்னப்ப,நான் ஒன்னும் சொல்லலே.போகட்டும்ன்னு நாங்க யாரும் ஒன்னும் சொல்லாம இருந் தோம். நீ இப்ப ஒரு கிருஸ்தவ பையனை காதலிக்கறேன்னு சொல்லிண்டு இருக்கே. நம்ம குடும்பத்து க்கு காதல் எல்லாம் எதுக்குமமா” என்று வருத்தத்துடன் கேட்டார்.

சுதா ஒன்றும் சொல்லாமல் சும்மா தரையை பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.

அப்பா “நான் காலிக்கறவர் பேர் பீட்டர்.அவரை மனசார காதகிக்கறேன்.நான் கல்யாணம் பண் ணிண்டா அவரைத் தான் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்.அவர் ரொம்ப நல்லவர்.பாக்க ரொம்ப அழகாவும் இருப்பார்.பிராமண ஜாதி பையன் மாதிரி நிறமாவும் இருப்பா.அவர் ஒரு கிஸ்துவ ஜாதியைச் சேர்ந்தவர்.என்னைக் கல்யாணம் பண்ணிண்டா,நம்ம ஆத்து வழக்கம் போல,நம்ம ஆத்து ஆகாரத் தை போல அவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க சம்மத்திச்சு இருக்கார். என்னே காலம் பூராவும் கண் கலங்காம வச்சுண்டு வறேன்னு சத்தியம் பண்ணி இருக்கார்” என்று சொன்னாள்.

உடனே மங்களம் “என்ன சொல்றே சுதா.உனக்கு பயித்தியம் கியித்தியம் பிடிச்சுருக்கா என்ன. நம்ப ஜாதி என்ன,அவ ஜாதி என்ன.நம்ம ஆசாரம் எங்கே.நம்ப ஆகாரம் எங்கே. நம்ப சுவாமி என்ன. அவா சுவாமி என்ன.நம்ம கலாசாரம் என்ன,அவா கலாசாரம் என்ன. எப்படி நாங்க உனக்கு அந்த கிரு ஸ்தவ பையனை கல்யாணம் பண்ணீ வக்க முடியும்.நான் ஒரு நல்ல பிராமண பையனாப் பாத்து அவ னை உனக்கு ‘ஜாம்’ ’ஜாம்’ என்று கல்யாணம் பண்ணி வக்கிறேன்.அவளை நீ கல்யாணம் பண்ணின்டு,சந்தோஷமா குடுத்தனம் நடத்து.தெரியறதா.மறுபடியும் அந்த கிருஸ்தவ பையன் பேச்சை இந்தாத் லே எடுக்கவே எடுக்காதே” என்று ஒரு பெரிய ‘லெக்சரே’க் கொடுத்தாள்.

ஒரு பத்து நிமிஷம் கழித்து சுதா மெதுவாக “அம்மா, நீங்க எனக்கு வேறு எந்தப் பையனையும் பாக்க வேணாம்.நான் வேறு எந்த பையனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.நான் கல்யாணம் பண்ணீண்டா பீட்டரைத் தான் கல்யாணம் பண்ணீப்பேன்” என்று சொல்லி விட்டு ஒன்றும் சாப்பிடா மல் படுக்கப் போனாள்.

மங்களம் சுதாவின் கையைப் பிடித்துக் கொண்டு “சுதா,நீ இந்த வயசிலே, எல்லா பொண்களுக் கும் அழகா இருக்கிற ஆண் பசங்களே பாத்தா இப்படித் தான் கல்யாணம் பண்ணிக்கத் தோணும். நான் இல்லேன்னு சொல்லலே.நம்ம குடும்பம் ஒரு ‘சிரேஷ்டமான’ பிராமண குடும்பம்.இந்த மாதிரி ஒரு குடும்பத்லே நாங்க எப்படி ஒரு கிருஸ்தவப் பையனை இந்த ஆத்து ‘மாப்பிள்ளே’ ன்னு சொல்லி க்கறது.உனக்கு என்ன ஒரு நல்ல பிராமண பையன் கிடைக்க மாட்டானா என்ன.ஆயிரம் நல்ல பிராம ண பையங்க கிடைப்பா சுதா.வேணாம் இந்த கிருஸ்தவ பையன்.நான் ஒன்னே பெத்த அம்மா சொல்றேன்.தயவு செஞ்சி பிடிவாதம் பிடிக்காதேம்மா.நான் உன்னே கெஞ்சிக் கேட்டுக்கறேன்”என்று சுதா வின் கைகளைப் பிடித்து கெஞ்சினாள்.

ஆனால் சுதா “நீ என்ன சொன்னாலும் நான் கேக்க மாட்டேன்.நான் பீட்டரைத் தான் நிச்சியமா கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” என்று சொல்லி விட்டு அம்மாவின் பிடியில் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு படுக்கப் போய் விட்டாள்.

ராமநாதனுக்கும் மங்களத்துக்கும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தார்கள்.

விமலா மட்டும்”இந்தப் பொண்ணுக்கு என்ன காதல் வேண்டி இருக்கு.நாம எல்லாம் என்ன காதல் பண்ணீயா கல்யாணம் பண்ணிண்டோம்.அப்பா அம்மா பாத்தவாளைத் தானே கல்யாணம் பண் ணிண்டு சந்தோஷமா இருந்து வறோம்.என்ன காதலோ கத்திரிக்காவோ.எனக்கு ஒன்னும் புரியலே. இந்த காலத்து குழந்தைகளே வினோதமா பேசறா” என்று சொல்லி அவள் பங்குக்கு புலம்பினாள்.

மங்களம் சுதா இருந்த ரூமுக்குப் போய் சுதாவிடம்” சுதா,நீ வயசு பொண்ணு.இத்த்னை நேரமா வேலை செஞ்சிட்டு வந்து சாப்பிடாம படுத்துக் கொள்ளக் கூடாது.வா என் கூட ஒரு வாய் நன்னா சா ப்பிட்டு விட்டு அப்புறமா தூங்கப் போ” என்று கா¢சனமாக சொல்லி சுதாவை எழுப்பி வந்து சாப்பாடு போட்டாள்.

சுதா சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ராமசாமி அவள் இடம் போய் “அம்மா சுதா,நாம எல்லாம் பிராமணா.கிருஸ்தவா சாப்பிடற ஒன்னையும் நாம சாப்பிட மாட்டோம்.கிருஸ்தவா சாப்பாடே தனி.நீ அந்த கிருஸ்தவப் பையனை கல்யாணம் பண்ணீண்டா,அவன் சாப்பிட விரும்புகிற, அவன் இத்தனை நாள் சாப்பிட்டுண்டு வர சாப்பாட்டைத் தானே நீ சமைச்சுப் போடணும்.அப்புறமா உனக்கு ன்னு நாம சாப்பிட சாப்பாட்டை சமைச்சு சாப்பிடணும்.இது எல்லாம் அவசியம் இல்லையேம்மா. நீ நன் னா யோஜனைப் பண்ணும்மா.நீ அவனை மெல்ல மறந்துட்டு,நம்ப பிராமண ஜாதிப் பையனா,அது கூட வேணாம்,ஒரு ஐயங்கார் பையனையோ,ஒரு மாத்துவப் பையனயோ பாத்து காதல் பண்ணு. நாங்கோ அந்த பையனை உனக்கு கல்யாணம் பண்ணி வக்கிறோம்.இந்த கிருஸ்தவப் பையன் வேணாமேம்மா” என்று மெல்ல கா¢சனமாகச் சொன்னார்.
உடனே சுதா “தாத்தா,எனக்குப் பீட்டரை நன்னாத் தெரியும்.அவன் பொறந்ததிலே இருந்து இது நாள் வரைக்கும்,நாம சாப்பிடற சாப்பாட்டைத் தான் சாப்பிட்டுண்டு வறார்.அவர் இந்த ‘நான் வெஜ்’ சாப்பாட்டை சாப்பிடறதே இல்லையாம்” என்று சொல்லி விட்டு, சாப்பிட்டு விட்டு தன் கைக ளை கழுவிக் கொண்டு படுக்கப் போனாள்.
அதற்கு பிறகு ராமசாமி ஒன்னும் சொல்லாமல் எழுந்துக் கொண்டார்..

சுதா படுத்துக் கொண்டே பீட்டரைப் பற்றி யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.’என்ன சொன்னா இந்த அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பீட்டரை கல்யாணம் பண்ணிக் கொள்ல சம்மதிப்பா. ஒருத்தருக்கு ஒருத்தரை ரொம்ப பிடிச்சு இருந்தா போறாதா.இந்த ஜாதி வித்தியாசம் எல்லாம் எதுக்கு பாக்கரா இந்த அம்மா, அப்பா, தாத்தா பாட்டி எல்லாம்.நம்மை சந்தோஷமா பீட்டருக்குக் கல்யாணம் பண்ணிக் குடுக்க கூடாதோ.இந்த ஜாதி வித்தியாசம் எல்லாம் அந்த காலத்லே தானே பாத்துண்டு இருந்தா.இப்போ காலம் எவ்வளவு மாறி இருக்கு.இவா கொஞ்சமாவது மாறக் கூடாதா. என்னே ஒரு நல்ல பிராமண பையனுக்குத் தான் கல்யாணம் பண்ணிக் குடுப்பேன்னு பிடிவாதம் பிடிச்சுண்டு வறாளே’ என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தாள்.

அவளுக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு இருந்தாள்.

ஒருத்தருக்கு காதல் வந்தால்,அந்த காதல் கைக் கூடி வந்து,கல்யாணம் நடக்கும் வரை தூக்கமே வராதே!

அவள் யோஜனை பின்னோக்கிப் போனது.

கனமான தன் பள்ளிக் கூட பையையை முதுகில் மாட்டிக் கொண்டு,கம்ப்யூட்டர் புஸ்தகத்தை தன் கையில் வைத்துக் கொண்டு பள்ளீகூட ‘காம்பவுண்டை’ விட்டு வெளியே வந்துக் கொண்டு இருந்தாள் சுதா.

“சுதா,சுதா” தன் பேரை யாரோ கூப்பிடுகிறார்களே என்று நினைத்து சுதா திரும்பிப் பார்த்தாள். வாட்டசாட்டமான ஒரு பையன் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான். சுதா அவனைப் பார்த்து “என் பேர் உனக்கு எப்படித் தெரியும்.ஏன் என்னைக் கூப்பிட்டே”என்று கொ ஞ்சம் கோவமாகக் கேட்டாள்.

”உன் ‘ப்ரெண்ட்ஸ்’உன் பேரை சொல்லி கூப்பிடுவதை நான் கேட்டு இருக்கேன் சுதா.என் பேர் பீட்டர். சுதா நாம ரெண்டு பேரும் எதிரே இருக்கிற ‘காபி ஷாப்லே’ ஒரு காபி குடிக்கலாமா” என்று சுவாதீனமாகக் கேட்டான்.

“நான் உன் கூட எல்லாம் காபி குடிக்க வரமாட்டேன்.அதுக்கு வேறே பொண்ணேப் பாரு” என்று கோவமாக சொல்லி விட்டு வேகமாக பள்ளீ கூடத்தை விட்டு ‘பஸ் ஸ்டாண்டுக்கு’ வந்து ஒரு பஸ்ஸைப் பிடித்து ஏறி தன் வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தாள் சுதா.பஸ்ஸில் உட்கார்ந்துக் கொண்டு தன்னை கூப்பிட்ட பீட்டரை நினைத்து “இவ்வளவு பொண்ணுங்க இருக்கும் போது ஏன் இந்த பீட்டர் என்னை மட்டும் கூப்பீட்டான்’ என்று யோஜனைப் பண்ணீ கொண்டு இருந்தாள். தான் இறங்க வேண்டிய இடம் வந்து விடவே அந்த நினைப்பில் இருந்து வெளி வந்து ‘பஸ்ஸை’ விட்டு கீழே இறங்கி தன் வீட்டுக்கு வந்தாள்.

அடுத்த வாரமும் சுதா பள்ளீக்கூடத்தில் இருந்து வெளியே வந்துக் கொண்டு இருக்கும் போது பீட்டர் சுதா பேரைச் சொல்லி மறுபடியும் அழைத்தான்.இந்த தடவை சுதா பீட்டரை கிட்டத்திலே பார்த்தாள்.அவன் பார்க்க மிக அழகாக இருந்தான்.தன் ஆசையைக் கட்டுப் படுத்திக் கொண்டு சுதா பீட்டரைப் பார்த்து “பீட்டர்,நான் ஒரு ஐயர் வீட்டுப் பொண்ணு. உன் ‘சிநேகிதம்’ எனக்கு ஒத்து வறாது” என்று சொல்லி விட்டு ‘விடு’ ‘விடு’ என்று ‘பஸ் ஸ்டாண்ட்டுக்கு’ வேகமாக வந்து விட்டாள்.

பீட்டருக்கு மிகவும் ஏமாற்றமாய் இருந்தது.’அவ ஐயர் வீட்டுப் பொண்ணா இருந்தா என்ன. ஏன் என் கூட ஒரு ‘காபி’ சாப்பிட வர மாட்டேன்னு சொல்லிட்டா” என்று வருத்தப் பட்டுக் கொண் டே பீட்டர் போனான்.ஆனால் பீட்டருக்கு சுதாவின் அழகு ரொம்ப பிடித்து இருந்தது. அவன் தன் மனசுக்குள் ‘எப்படியாவது நாம அவ கூட பழகணும்’ என்று மிகவும் ஆசைப் பட்டான்.

பீட்டர் பள்ளி கூடம் முடிந்தவுடன் தினமும் சுதாவை காபி சாப்பிட அழைத்துக் கொண்டு இருந்தான்.சுதா தோழிகள் சுதாவைப் பார்த்து “சுதா,பீட்டர் உன்னே தினமும் ‘காபி’ சாப்பிட அழை க்கிறானே.ஒரு தடவை போயேன்.அந்த பீட்டர் என்னை இப்படி தினமும் அழைச்சா,நான் அவனுடன் போய் ‘காபி’ சாப்பீட்டு வருவேன். ’காபி’ சாப்பிடறதிலே, ஒரு தப்பும் இருகிறதா எங்களுக்குத் தெரியலே” என்று சொன்னார்கள்.

அடுத்த நாளும் பீட்டர் சுதாவை ‘ காபி’ சாப்பிடக் கூப்பிட்டான்.

சுதா நெடு நேரம் யோஜனைப் பண்ணி விட்டு,பீட்டருடன் அவன் அழைத்த ‘காபி’ ‘ஹோட்ட லுக்கு’’காபி ‘சாப்பிடப் போனாள்.பீட்டர் ரெண்டு பேருக்கும் ‘காபி’ ஆர்டர் பண்ணினான்.சர்வர் ‘காபி’யை கொண்டு வந்து வைத்ததும்,பீட்டர் சுதாவைப் பார்த்து “சுதா இந்த ‘காபி’யைக் குடி” என் று சொல்லி ஒரு டவரா டம்ளரை அவள் அருகில் தள்ளீனான்.சுதாவுக்கு ஒரு பக்கம் பயமாகவும், ஒரு பக்கம் அந்த ‘காபி’யை குடிக்க ஆசையாகவும் இருந்தது.

பீட்டர் தன்னிடம் தள்ளீன டவரா டம்ளரை தன் கையில் எடுத்து ‘காபி’யை ஆற்றிக் கொண்டு இருந்தாள்.பீட்டர் ‘காபி’யைக் குடித்துக் கொண்டே சுதாவைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

பீட்டர் காபியை உறிஞ்சி கொண்டே”சுதா,நீ ஒரு ஐயர் வீட்டுப் பொண்ணுன்னு அன்னிக்கு சொன்னே.நானும் உன்னைப் போலவே பொறந்ததில் இருந்து எந்த ‘நான் வெஜ் ஐயிட்டமும்’ சாப்பிட் டதே கிடையாது.வெறுமனே காய் கறிகள் தான் சாப்பிட்டு கிட்டு வறேன்”என்று சொன்னான்.பீட்டர் சொன்னதை ஆச்சா¢யமாக கேட்டுக் கொண்டு இருந்தாள் சுதா.’காபி’யைக் குடித்துக் கொண்டே கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் பற்றீன சந்தேகங்களை பீட்டா¢டம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ‘ஹோ ட்டலை’ வீட்டு வெளியே வந்து,”போய் வறேன் பீட்டர்.எனக்கு ரொம்ப ‘டயம்’ ஆயிடுத்து.என் ஆத்லே என்னை தேடுவா.நான் ஆத்துக்குப் போகணும்” என்று சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினாள் சுதா.

பீட்டர் சுதாவை விட்டு பிரிய இஷ்டம் இல்லாமல் “சா¢,சுதா.நீ இன்னிக்கு வீட்டுக்குப் போ. ஆனா நாம இந்த மாதிரி அடிக்கடி ‘காபி’ சாப்பிடலாம் என்ன.நான் கூப்பிடற போதெல்லாம் நீ என் னோட ‘காபி’ சாப்பிட வறணும் என்ன” என்று சொல்லி சுதாவை அனுப்பி வைத்தான்.

சுதாவுக்கு ‘லெவந்த்’ ‘ட்வெத்’’ பாடப் படிப்புகள் அதிகம் ஆகி வரவே,அதற்கு அப்புறம் அவள் பீட்டருடன் ‘காபி’ சாப்பிட போகவே நேரம் கிடைக்கவே இல்லை.
‘தூங்காம இருந்தா எப்படி நாளைக்கு வேலைக்குப் போறது’ என்று நினைத்து தன் கண்களை மூடிக் கொண்டு தூங்க முயற்சி செய்தாள் சுதா.

பீட்டா¢ன் அப்பா ஜான் ‘க்ரேஸ் சூப்பர் மார்கேட்டில்’ ஒரு ‘சூப்ப்ர்வைசராக’ வேலை செய்து வந்தார்.அவருக்கு அப்பா இல்லை.தன் அம்மாவுடன் வசித்து வந்துக் கொண்டு இருந்தார்.

ஜான் ‘நர்ஸ்’ வேலை செய்து வந்த மேரியை நாலு வருஷம் காதலித்து வந்தார்.நாலு வருஷம் ஆனதும்,இரண்டு பேருக்கும் ஒருவரை மற்றோருவருக்கு மிகவும் பிடித்து இருக்கவே,மேரியின் பெற் றோற்களும்,ஜானின் அம்மாவும் கலந்து பேசி,ஜான் மேரி திருமணத்தை ஒரு ‘சர்ச்சில்’ ‘சுப்பீரியர் பாதர்’ முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து வைத்தார்கள்.

ஜான் மேரி திருமண வாழக்கை இனிமையாகப் போய்க் கொண்டு இருந்தது. இரண்டு வருடங் கள் கழித்து ஜான் மேரிக்கு பிரசவ வலி எடுத்ததால் அம்மாவை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு ‘நர்சிங்க் ஹோமில்’ சேர்த்தான்.உடனே ஜான் மேரியின் பெற்றோர்களுக்கு மேரியை பிரசவத்திற்க்காக அவன் சேர்த்து இருந்த ‘நர்சிங்க் ஹோமின்’ பேரை சொல்லி முடிந்தால் வந்து பார்க்கவும் அழைத்தான்.

ஜான் அழைத்ததும் மேரியின் பெற்றோர்கள் அந்த ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ வந்தார்கள்.

மேரிக்கு பிரசவ வலி அதிகமாக எடுத்ததால்,அவள் வாய் விட்டு கத்திக் கொண்டு இருந்தாள். அருகில் இருந்த ‘நர்ஸ்கள்’ எல்லாம் “என்ன மேரி,நீங்களே ஒரு’ நர்ஸ்.நீங்க எத்தனையோ பிரசவங்க ளே பாத்து இருக்கீங்க.ஆனா நீங்களே இப்படி வாய் ஓயாம கத்தி கிட்டு இருக்கீங்க.கொஞ்சம் பொறுமையா இருங்க.இன்னும் பத்து நிமிஷத்லே டாகடர் வந்து விடுவார்.அவர் வந்ததும்,உங்களுக்கு பிர சவம் பாத்தார்ன்னா எல்லாம் நல்ல படியா முடிஞ்சி,சீக்கிரமா உங்களுக்கு ஒரு அழகான குழந்தை பொறந்திடும்.கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று சொல்லி மேரியை தேற்றி வந்தார்கள்.

ஆனால் மேரி வாய் ஓயாமல் கத்திக் கொண்டு இருந்தாள்.

’லேபர் வார்டுக்கு’ வெளியே இருந்த மேரியின் பெற்றோர்களும், ஜானும்,அவன் அம்மாவும் ‘ஏன் மேரி இப்படி வாய் விட்டு கத்தறா.அவளுக்கு வலி ரொம்ப அதிகமா இருக்கு போல இருக்கே. பிரசவம் பாக்கற டாகடர் இன்னும் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ வரலையே” என்று கவலைப் பட்டுக் கொண் டு வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.’லேபர் வார்ட்டில்’ இருந்த ‘நர்ஸ்களும்’ அடிக்கடி ‘லே பர் வார்ட்டை’ விட்டு வெளியே வந்து டாக்டர் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டு இருந்தார்கள். எல்லோரும் மிகவும் ‘டென்ஷனாக’ இருந்தார்கள்.

அரை மணி நேரம் ஆனதும் டாகடர் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’வந்து ‘லேபர் வார்டுக்கு’ப் போனார்.

மேரி வாய் விட்டு கத்திக் கொண்டு இருந்ததை கேட்ட டாகடர் ‘ஏன் இந்த அம்மா இப்படி கத்த தறாங்க’ என்று யோஜனைப் பண்ணீக் கொண்டு இருந்தார்.அங்கு இருந்த ‘நர்ஸ்கள்’ எல்லாம் டாக்ட ரைப் பார்த்து “டாக்டர்,இந்த அம்மாவே ஒரு நர்ஸ்.நாங்க எவ்வளவு சொல்லியும்,இவங்க விடாம உரக்க வாய் விட்டு கத்திக் இருக்காங்க” என்று ‘கம்ப்லெயின்’ பண்ணினார்கள்.

டாக்டர் நன்றாக யோஜனைப் பண்ணீ விட்டு மேரிக்கு மயக்கம் வர கொஞ்சம் ‘பவர்புல்’ ‘இஞ் செக்ஷனை’ப் போட்டு விட்டு பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். டாகடர் ‘இஞ்செக்ஷனை’ப் போட்ட ரெ ண்டாவது நிமிஷமே மேரி மயக்கம் ஆகி விட்டாள்.குழந்தை வயிற்றுக்குள்ளே இருந்தது.டாகடர் அருகில் இருந்த ‘நர்ஸ்களை’ப் பார்த்து “அவங்க ரொம்ப சீக்கிரமா மயக்கமா ஆயிட்டாங்க.அவங்களாலே முக்க முடியாது.நீங்க அவங்க இடுப்பை அமுக்கி விடுங்க” என்று சொன்னதும்,அருகில் இருந்த ‘நர்ஸ்கள்’ டாகடர் சொன்னது போல செய்துக் கொண்டு இருந்தார்கள்.

பத்து நிமிஷம் கழித்து டாக்டர் மெல்ல குழந்தையை வெளியே எடுத்தார்.

ஒரு ‘நரஸ்’ அந்த குழந்தையை எடுத்துப் போய் நன்றாக குளிப்பாடி விட்டு,மேரி பெட்டின் பக் கத்திலே இருந்த ஒரு தொட்டிலிலே மெல்ல வைத்தாள். குழந்தை பலமாக அழ ஆரம்பித்தது.

‘லேபர் வார்டுக்கு’ வெளியே ஆவலாகக் காத்துக் கொண்டு இருந்த மேரியின் பெற்றோர்களும், ஜானும்,அவன் அம்மாவும் உடனே கர்த்தரை வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் “குழந் தை பொறந்தாச்சு,குழந்தை பொறந்தாச்சு” என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கையை குலுக்கி, சந் தோஷப் பட்டர்கள்.

ஒரு ‘நர்ஸ்’ ‘லேபர் வார்ட்டை’த் திறந்துக் கொண்டு “அவங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந் தை பொறந்து இருக்கு. நீங்க எல்லாம் நான் மறுபடியும் வந்து சொன்ன பிறகு தான் அவங்களையும் குழந்தையையும் பாக்க முடியும்.ஒரு அரை மணி நேரம் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று சொல்லி விட்டு மறுபடியும் ‘லேபர் வார்ட்டு’ க்குள் போய் விட்டாள்.

உடனே போய் மேரியையும்,அவளுக்குப் பிறந்து இருந்த குழந்தையையும் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டு வந்த மேரியின் பெற்றோர்களுக்கும்,ஜானுக்கும்,அவன் அம்மாவுக்கும் ரொம்ப ஏமாற்றமாய் இருந்தது.அவர்கள் பொறுமையாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்கள்.’இன்னும் அரை மணி நேரம் ஆகும்ன்னு சொல்லிட்டு போனாங்களே அந்த நர்ஸ்’ என்று தங்கள் கைக் கடிகாரத்தை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.எல்லோரும் ‘எப்ப இன்னும் அரை மணி ஆவும். நாம போய் பொறந்த அந்த குழந்தையே பாக்கலாம்’என்று காத்துக் கொண்டு இருந்தார்கள்.

‘லேபர் வார்ட்டில்’ இருந்த மூனு ‘நர்ஸ்களும்’ மேரியை மெல்ல எழுப்ப நினைத்து அவளை தட்டி எழுப்பிக் கொண்டு இருந்தார்கள்.ஆனால் மேரி கண் முழிக்கவே இல்லை.பிரசவம் பார்த்த டாக் டரும் மேரியை உலுக்கி எழுப்ப முயற்சி செய்துக் கொண்டு இருந்தார்.ஆனால் மேரி கண் முழிக்கவே இல்லை.உடனே அவர் ஒரு ‘நர்ஸை’ தன் ‘ஸ்டெதஸ்கோப்பை’ கொண்டு வரச் சொன்னார்.நர்ஸ் ‘ஸ்டெதஸ்கோப்பை’க் கொண்டு வந்ததும்,டாகடர் மேரியின் நாடி துடிப்பை ‘செக்’ பண்ணிப் பார்த்தார்.

ஒரு ஐஞ்சு நிமிஷம் பார்த்த பிறகு அவர் தன் ‘ஸ்டெதஸ்கோப்பை’தன் காதுகளில் இருந்து கழட்டி அந்த மூனு நர்ஸ்களிடமும் மெதுவாக “அவங்க இறந்துட்டாங்க. நீங்க எல்லாம் சும்மா இருங்க. நான் வெளியே போய் அவங்க உறவுக்காரங்க கிட்டே எல்லாம்,’அவங்க ரொம்ப கத்தி கத்தி வீக்காயி ட்டாங்க.அவங்களால்லே முக்கவே முடியலே.அதனால்லே நான் குழந்தயே உடனே வெளியே எடுத் தாகணும்ன்னு அவங்களுக்கு மயக்க மருந்து ஊசி போட்டேன்.எல்லா ‘நர்ஸ்களும்’ நானும் மெல்ல குழந்தை வயித்லேயே இறந்துப் போகாம வெளியே எடுத்து குழந்தயே காப்பாத்திட்டோம்.ஆனா அவ ங்க ரொம்ப வீக்காக இருந்ததாலே மயக்கம் தெளியாமலே இறந்துட்டாங்க.எங்களால் குழந்தையை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சிச்சு.அவங்களே காப்பாத்த முடியலே.ரொம்ப சாரிங்க’ன்னு சொல்லி விடறேன்.நீங்களும் அதே மாதிரி சொல்லுங்க.வேறே எதையும் தயவு செஞ்சி சொல்லிடாதீங்க” என்று கேட்டுக் கொண்டார்.

உடனே எல்லா ‘நர்ஸ்களும்’ “சா¢ டாக்டர், நீங்க சொன்னா மாதிரியே நாங்களும் சொல்றோம்” என்று சொன்னதும் டாகடர் ¨தா¢யமாக ‘லேபர் வார்ட்டை’ விட்டு வெளியே வந்தார்.

அவர் தன் குரலை சோகமாக வைத்துக் கொண்டு “அவங்க இறந்துட்டாங்க.அவங்க ரொம்ப கத்தி கத்தி வீக்காயிட்டாங்க.அவங்களால்லே முக்கவே முடியலே.அதனால்லே நான் குழந்தயே உட னே வெளியே எடுத்தாகணும்ன்னு அவங்களுக்கு மயக்க மருந்து ஊசி போட்டேன்.எல்லா ‘நர்ஸ்க ளும்’ நானும் மெல்ல குழந்தை வயித்லேயே இறந்துப் போகாம வெளியே எடுத்து குழந்தயே காப்பாத் திட்டோம்.ஆனா அவங்க ரொம்ப வீக்காக இருந்ததாலே, மயக்கம் தெளியாமலே இறந்துட்டாங்க. எங்களால் குழந்தையை மட்டும் தான் காப்பாத முடிஞ்சிச்சு.அவங்களே காப்பாத்த முடியலே.ரொம்ப சாரிங்க”என்று சொன்னதும்,மத்த நர்ஸ்களும் “ஆமாங்க,நாங்க மூனு பேரும் தான் அவங்க வயத்தை மெல்ல,மெல்ல,அமுக்கி குழந்தையே வெளியே எடுத்தோம்” என்று சொல்லிக் கொண்டு வருத்தத் தோடு நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

டாகடரும்,மத்த மூனு நர்ஸ்களும் சொன்னதை கேட்டதும் ‘லேபர் வார்டுக்கு’ வெளியே ஆவ லாகக் காத்துக் கொண்டு இருந்த மேரியின் பெற்றோர்களுக்கும்,ஜானுக்கும்,அவன் அம்மாவுக்கும் தூக்கி வாரிப் போட்டது.

உடனே ஜானின் அம்மா “டாகடர்,என் மருமக ரொம்ப ‘ஹெல்தியா’ தானே இருந்தா.நீங்க சொல்றதே என்னால் நமப முடியலே. நீங்க போட்ட மயக்க ‘இஞ்செக்ஷனால்’ தான் மேரி இறந்துப் போய் இருக்கணும்”என்று கத்தினாள்.

ஜானுக்கும்,மேரியின் பெற்றோர்களுக்கும் என்ன பண்றது என்றே புரியாமல் அழுதுக் கொ ண்டு டாகடர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் வாயைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால் அந்த டாகடர் தன் தவறை ஒத்துக் கொள்ளாமல் அவர் சொன்னதையே சொல்லிக்கொண்டு இருந்தார்.அந்த மூனு ‘நர்ஸ்களும்’ சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.

அரை மணி நேரம் ஆகியும் டாகடரும் மூனு நர்ஸ்களும் விட்டுக் கொடுக்காமல் அவர்கள் சொ ன்னதையே சொல்லிக் கொண்டு இருந்ததால் வேறே வழி இல்லாமல் மேரியின் பெற்றோர்களும், ஜானும்,அவன் அம்மாவும் டாகடர் சொல்வது ‘பொய்யாக’ இருக்காது என்று நம்பினார்கள்.

ஒரு நர்ஸ் “நீங்க இப்போ போய் குழந்தையே போய் பாக்கலாம்” என்று சொன்னதும் எல்லோரும் மேரி இறந்து போன துக்கத்தை மறந்து விட்டு குழந்தையைப் போய் பார்த்தார்கள்.மேரிக்கு பிறந்த ஆண் குழந்தை உண்மையிலேயே நல்ல கலராகவும்,அழகாகவும் இருந்தான்.அவர்கள் அந்த ஆண் குழந்தையை பார்த்ததும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ஜான் குழந்தையைப் பார்த்தானே ஒழிய அவன் மேரி தலை மாட்டுக்குப் போய் “மேரி, நீ இவ் வளவு வீக்கா இருப்பேன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சு இருந்தா,நான் நமக்கு குழந்தயே வேணாம் ன்னு நினைச்சு உன்னோடு ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழ்ந்து வந்து கிட்டு இருப்பேனே.ஒரு அழகான ஆண் குழந்தயே என் கிட்டே குடுத்துட்டு,என்னை தனியா தவிக்க விட்டுட்டு,நீ கர்த்தர் கிட்டே போயிட்டேயே. நான் இந்த குழந்தயே எப்படி வளத்து வறப் போறேன்.அவன் பேச ஆரம்பிக் கும் போது ‘அப்பா,என் அம்மா எங்கேன்னு கேட்டா நான் என்ன சொல்லுவேன் மேரி” என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

ஜான் அழுவதைப் பார்த்த அவன் அம்மாவுக்கு அழுகை அழுகையாக வந்தது. அவளும் ஜானைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

மேரியின் பெற்றோர்களும் மேரி தலை மாட்டில் நின்றுக் கொண்டு “மேரி,,நீ இந்த சின்ன வயசி லேயே எங்களலே எல்லாம் தனியா தவிக்க விட்டுட்டு கர்த்தர் கிட்டே ஏம்மா போயிட்டே.நீ இன்னும் ரொம்ப வருஷம் புருஷன் குழந்தேங்க கூட சந்தோஷமா இருந்து வருவேன்னு தானேம்மா, உனக்கு நானும்,அம்மாவும் சந்தோஷமா கல்யாணத்தே பண்ணீ வச்சோம்” என்று கதறி அழுதார்கள்.

இவர்கள் எல்லோரும் இப்படி சத்தம் போட்டு அழுவதைப் பார்த்து அந்த டாக்டர் “நீங்க எல்லோ ரும் இப்படி சத்தம் போட்டு இங்கே அழக் கூடாதுங்க.இது ஒரு ‘நர்ஸிங்க் ஹோம்.இங்கே நிறைய நோ யாளிங்க இருக்காங்க.அவங்களுக்கு ரொம்ப இடைஞ்சலா இருக்கும்.நீங்க எல்லோரும் தயவு செஞ்சி வெளியே போங்க” என்று சொன்னதும் அவர்கள் எல்லோரும் வெளியே வந்து கொஞ்ச நேரம் அழுதுக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு மணி நேரம் ஆனதும் ஜான் தன் மனசைத் தேற்றிக் கொண்டு ஒரு ‘வேனை’ ஏற்பாடு பண் ணிக் கொண்டு மேரியின் ‘பாடியை’ அழுதுக் கொண்டே வீட்டுக்குக் கொண்டு வந்தான்.விஷயம் கேள்விப் பட்ட ஜான் நண்பர்கள் எல்லோரும் ஜான் வீட்டுக்கு வந்து ஜானையும்,அவன் அம்மாவை யும் துக்கம் விசாரித்தார்கள்.

அடுத்த நாள் ஜான் மயானத்துக்குப் போய் மேரியை அடக்கம் பண்ணி விட்டு வீட்டுக்கு அழுதுக் கொண்டே வந்தான்.வீட்டுக்கு வந்த ஜானை அவன் அம்மா தேத்தறவு சொல்லி சாப்பிடச் சொன்னாள்.ஜானும் அம்மா சொன்னதற்காக பிடிக்காமல் கொஞ்சம் சாப்பாடு சாப்பீட்டான்.

ஜானும்,அவன் அம்மாவும் மூன்று நாடகளுக்குப் பிறகு அந்த ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் போய், அவர்கள் கேட்ட பணத்தை கட்டி விட்டு பிறந்த ஆண் குழந்தையை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.ஜானும் அவன் அம்மாவும் அந்த குழந்தையை ‘சர்ச்சு’க்கு எடுத்துக் கொண்டு போய் ‘பாதர் சுபீரியர்’ கையால் ‘பீட்டர்’ என்று ஒரு பெயரை வைத்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *