என் மனைவி சொன்ன கதை

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 14,983 
 

நாங்கள் நெல்லைச் சீமை தாமிரபரணி கரையில் பிறந்தவர்கள்! என் மனைவி ஊருக்கும் என் ஊருக்கும் பத்து மைல்கள் தான்இருக்கும்.

ஒரு முறை வண்ணார் பேட்டையிலுள்ள என் தாத்தாபாட்டி, பெரியப்பா சித்தப்பா காண சென்றோம். நெல்லை டவுனில் என் பெரிய மாமனார் வீட்டில் அவளை விட்டு வேண்டிய பொருள் வாங்க என்னை கடைக்கு அனுப்பினாள். வழியில் என் நண்பனைப் பார்த்தேன்.

புதிய சோனி காசெட் பிளேயர் ஒன்று விற்கப் போகிறேன், பார்க்க வருகிறாயா என்றான்.

நான் வந்த வேலை மறந்து பாட்டுகளிலும் அந்த பாட்டுப்பெட்டியிலும் ஒன்றி விட்டேன், பாட்டி தாத்தா பார்க்கப் போகவில்லை. மறு நாள்தான் போனோம்.

அந்த நாட்களில் காசெட் பிளேயர் அதிசயம் ! தெரிந்தவர் மாட்டு வண்டியில் போனோம்!

நெல்லை ஜங்க்ஷன், ஆற்றுப் பாலம் “பிள்ளை போட்டுப் பலாப்பழம் எடுத்த ஓடை “பாலத்தில்வண்டி சென்று கொண்டிருந்தது .

அப்பொழுது என் மனைவி சரஸ்வதி “இது என்ன தெரியுமா?”என்றாள்.

தெரியும் என்றேன்.

பிறகு அவள் சொன்னது. ஓடும் தண்ணீரில் பலாப்பழம் எடுக்கப் போன ஒருவள் கையிலருந்த குழந்தையை ஆற்றில் தவற விட்டாள்.பலாப்பழத்தின் ஆசையில் குழந்தை பறிபோனது. அது போலத்தான் நீங்களும்!

ஒரு பாட்டுப் பெட்டிக்காக பெரியவர்களை பார்க்க போகவில்லை நம்மை எதிர் பார்த்து எவ்வளவு வேதனைபட்டிருப்பார்கள். பெரியவர்களை காட்டிலும் ஒரு பெட்டி பெரிதாகிவிட்டது.

அப்படி என்ன ஆசை! உறவுகளை விட ஒரு பொருளில் ஆசை! அளவுடன் ஆசை வையுங்கள்! மிஞ்சினால் அது உங்களையும் என்னையும் அழித்துவிடும்!

பொன்னான வார்தைகள்!

அவள் உறுதியும் தீர்மனமும்தான் மிகச் சாதாரண நிலையில் இருந்த என்னை சமூக அந்தஸ்து பெறச் செய்தது, பிறகு எத்தனையோ நல்ல பொருள்கள் வாங்க வைத்தாள்.

என்ன ஆனாலும் எதை வாங்கினாலும் அந்த முதல் வேகம் இல்லை எனக்கு!அந்த நாளை நான் மறக்கவேயில்லை !

சொன்னவள் இல்லை! ஆனால்அந்த வார்த்தைகள் என்னுள்ளேயே அடங்கி விட்டன, அவள் நினைவைப்போல்!

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

3 thoughts on “என் மனைவி சொன்ன கதை

  1. உண்மை தான் உறவுகளை விட எந்த ஒரு பொருளும் உயர்வானதல்லவே .. அருமையான கருத்து தோழரே.. வாழ்த்துக்கள் ..

    1. தங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி . .

  2. நல்ல கருதது . நினைவில் இருக்க வேண்டிய சொற்கள் .

    சங்கரநாராயணன் அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *