என்ன உடம்பு உங்களுக்கு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 5,681 
 
 

சண்டிகாரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த ஊர்.

அந்த ஊரில் வசித்து வந்தார் ஹரி சிங்கும் அவர் மனைவியும். அவருக்கு நாலு ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தது.

ஏரி கால்வாய் பாய்ச்சலில் வருடத்திற்கு ரெண்டு போகம் கோதுமை பயிர் இட்டு வந்து, அந்த ரெண்டு போக விளைச்சலில் வந்து கோதுமையை தன் வீட்டுக்கு வருடாந்தரத்துக்கு வேண்டிய கோதுமையை வைத்துக் கொண்டு மீதி கோதுமையை விற்று விட்டு, பணம் பண்ணி, தன் குடும்பத்தை நடத்தி வந்தார் ஹரி சிங்க்.

அவருக்கு திருமணம் ஆகி நாலு வருடம் கழித்து ரெட்டை குழந்தைகள் பிறந்தார்கள். ஒரு குழந்தைக்கு ‘ராம் சிங்க் ’என்கிற பெயரையும்,இன்னொரு குழந்தைக்கு ‘பரத் சிங்க்’ என்கிற பெயரையும் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள் ஹரி சிங்க் தம்பதிகள்.

ராம் சிங்கும், பரத் சிங்கும் சுமாராகத் தான் படித்து வந்தார்கள்.

இருவரும் சுமாரான மார்க் வாங்கி ‘ட்வெல்த்’பாஸ் பண்ணினார்கள்.

இருவரும் அப்பாவைப் பார்த்து “அப்பா, நான் MBBS படிச்சு ஒரு டாக்டர் ஆக ரொம்ப ஆசைப் படறேன்” என்று சொல்லவே ஹரி சிங்க் மிகவும் சந்தோஷப் பட்டு ‘டொனேஷன்’ கொடுத்து இரு பிள்ளைகளையும் சண்டிகார் மருத்துவ கல்லுரியில் ‘சீட்’ வாங்கி MBBS படிப்பு படிக்க சேர்த்தார்.

ராம் சிங்கும்,பரத் சிங்கும் கஷ்டப் பட்டு படித்து வந்து மூன்று வருட படிப்பை ரொம்ப சுமாரான மார்க் வாங்கி ‘பாஸ் பண்ணினார்கள்’ வருடாந்திர லீவு முடிந்ததும், இருவரும்,நாலாவது வருட படிப்புக்கு கல்லூரிக்கு வந்தார்கள்.

முதல் நாள் பாடம் எடுக்க வந்த ‘ப்ரொபஸர்கள்’ எல்லோரும் ஒரு வாய் வைத்தார் போல் “மாணவர்களே, மாணவிகளே,கடந்த மூனு வருஷத்லே உங்களுக்கு பாடம் எடுத்த எல்லா ‘ப்ரொபஸர்களும்’ உடம்பின் சில பாகங்களை பற்றி தான் உங்களுக்கு சொல்லிக் குடுத்து இருப்பார்கள். இது கடைசி வருஷமானதால்,நாங்கள் இந்த வருடம் உடம்பில் இருக்கும் மற்ற மீதி பாகங்களை பற்றி பாடம் எடுத்து வருவோம்.வருடாந்திர பரிக்ஷயிலே உங்களுக்கு ஒரு மனிதனின் உச்சந்தலை லே இருந்து,உள்ளங்கால் வரைக்கும் உள்ள எந்த பாகத்தில் இருந்தும் கேள்விகள் வரலாம்.அதனால் நீங்கள் எல்லோரும் நாங்கள் நடத்தும் பாடத்தோடு,கடந்த மூணு வருஷம் நடந்த எல்லா பாடங்களை யும் அவசியம் படித்து வரணும்.வருடாந்திர பரிக்ஷயிலே மொத்தம் பன்னன்டு கேள்விகள் இருக்கும். நீங்கள் பன்னன்டு கேள்விகளுக்கும் பதில் எழுத வேணாம்.அதில் உங்களுக்கு ‘சாய்ஸ்’ இருக்கும். நீங்கள் ஏதாவது ஆறு கேள்விகளுக்கு மட்டும் “சரியான” பதில் எழுதினால் போதும் உங்களுக்கு 100 மார்க் கிடைத்து விடும்” என்று சொன்னார்கள்.

கல்லூரி விட்டு வீட்டுக்கு வந்ததும் ராம் சிங்கும், பரத் சிங்கும் ‘காபி டிபன்’ சாப்பிட்டு விட்டு, தங்கள் ரூமுக்கு வந்து யோஜனைப் பண்ணீனார்கள்.

நெடு நேரம் யோஜனைப் பண்ணி விட்டு பெரியவனான ராம் சிங்க், பரத் சிங்கைப் பார்த்து ”பரத்,நீ உடம்ப்லே வயித்துக்கு மேலே இருக்கிற பாகங்களை பத்தி மட்டும் நல்லா படிச்சு வா.நான் வயித்து கீழே இருக்கிற பாகங்களை பத்தி நல்லா படிச்சி வறேன்.வருடாந்திர பரி¨க்ஷ பேப்பர்லே ‘சாய்ஸ்’ இருக்குன்னு எல்லா ‘ப்ரொபஸர்களும்’ சொன்னாங்க.அதனால்லே, நீ அந்த கேள்வித் தாள்ளே வயித்துக்கு மேலே இருக்கிற பாகங்களைப் பத்தின மூணுகேள்விகளுக்கு பதில் எழுது. நான் வயித்துக்கு கீழே இருக்கிற பாகங்களைப் பத்தின மூணு கேள்விகளுக்கும் மட்டும் பதில் எழுதறேன். நாம ரெண்டு பேரும் அந்த மூணு கேள்விகளுக்கு இருக்கும் 50 மார்க்கில் குறைஞ்சது 40 மார்க்குக்கு மேலே வாங்கி ‘பாஸ்’ பண்ணி விடலாம்” என்று சொன்னான்.

உடனே பரத் சிங்க், ”ராம் நீ சொல்றது ரொம்ப நல்ல ‘ஐடியா’.நாம ரெண்டு பேரும் நிச்சியமா அந்த MBBS படிப்பு படிச்சு ‘பாஸ்’ பண்ணி டாக்டர் ஆகி விடுவோம்” என்று சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டான்.

பேசிக் கொண்டது போலவே ராம் சிங்கும்,பரத் சிங்கும் நன்றாகப் படித்து, MBBS வருடாந்திர பரிக்ஷயிலே 42 மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணினார்கள்.

ஹரி சிங்குக்கும் அவர் மணைவிக்கும் தங்கள் ரெண்டு பிள்ளைகளும் MBBS படித்து விட்டு ஒரு ‘டாக்டர்’ ஆகி விட்டார்கள் என்பதை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

‘ரிஸல்ட்’ வந்த அடுத்த தினம் ராம் சிங்க் நேடு நேரம் யோஜனைப் பண்ணீ பரத் சிங்கைக் கூப்பிட்டு “பரத்,எனக்கு ஒரு ஐடியா தோணுது.நாம வாங்கி இருக்கிற மார்க்குக்கு நமக்கு எந்த ‘நர்சிங்க் ஹோமிலும்’ டாக்டர் வேலே கிடைக்காது.இந்த ஊர்லே ரெண்டு டாக்டர் தான் ‘க்ளினிக்’ வச்சு இருக்காங்க.நாம அப்பா கிட்டே சொல்லி ‘பாங்க்லே’ ‘லோன்’ வாங்கி,நாம ரெண்டு பேரும் அடுத்து, அடுத்து தெருவிலே ஆளுக்கு ஒரு ‘க்ளினிக்’ தொறக்கலாம். என் கிட்டே வர நோயாளி அவனுக்கு ‘வயித்து மேலே ஏதாச்சும் வியாதி’ன்னு சொல்லிக் கிட்டு வந்தா, நான் உடனே உன்னுடைய ‘விசிடிங்க் கார்டை’குடுத்து உன்கிட்டே வரச் சொல்றேன். அதே மாதிரி உன் கிட்டே வர நோயாளி அவனுக்கு ‘வயித்து கீழே ஏதாச்சும் வியாதி’ன்னு சொல்லிண்டு வந்தா,நீ உடனே என்னுடைய ‘விசிடிங்க் கார்டை’ குடுத்து என் கிட்டே அனுப்பி விடு. நாம் ரெண்டு பேரும் அவங்களுக்கு வைத்தியம் பண்ணி வந்து நல்லா சம்பாதிச்சு வரலாம்”என்று சொன்னான்.

பரத் சிங்குக்கு ராம் சிங்க் சொன்ன ‘ஐடியா’ ரொம்ப பிடித்து இருந்தது.உடனே பரத் “ராம், நீ சொன்ன ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று சொல்லி ஆமோதித்தான்.

அடுத்த நாளே இருவரும் அப்பாவைப் பார்த்து தங்கள் ‘ப்லானை’ச் சொன்னார்கள்.

ஹரி சிங்கும் உடனே ‘பாங்க்லே’ ‘லோன்’ போட்டு,இருவருக்கும் அடுத்து,அடுத்து, இருக்கும் தெருவிலே ஒரு சின்ன இடமாகப் பார்த்து ‘க்ளினிக்குக்கு’ வேண்டிய எல்லா சாதனங்களையும் வாங்கி விட்டு ஒரு ‘க்ளினிக்கு’ ‘ராம் சிங்க் க்ளினிக்’ என்று பெயர் வைத்து விட்டு,அடுத்த ‘க்ளினிக்கு’பரத் சிங்க் க்ளீனிக்’ என்று பெயர் வைத்து விட்டு,ஒரு நல்ல நாள் பார்த்து ‘குருத்வாராவில்’ இருந்து ஒரு சீக் குருவை வரச் சொல்லி ரெண்டு ‘க்ளினிக்கையும்’ திறந்து வைத்தார்.

முதல் நாள் ராம் சிங்க் டாக்டர் ‘சீட்’லே உட்கார்ந்துக் கொண்டு ‘நர்ஸை’ப் பார்த்து “’நர்ஸ்’ முதல் ‘பேஷண்டை’ வரச் சொல்லுங்க”என்று சொன்னதும்,முதல் ‘பேஷண்ட்’ வந்து வியாதிஸ்தர் உட்காரும் சேரில் உட்கார்ந்ததும், ராம் சிங்க் அவரைப் பார்த்து “என்ன உடம்பு உங்களுக்கு” என்று கேட்டதும், அந்த வியாதிஸ்தர் ‘இந்த டாக்டர் இவ்வளவு நல்லவரா இருக்காறே.நாம வந்து குந்தின உடனே, நம்மே பாத்து இவ்வளவு கரிசனமா “என்ன உடம்பு உங்களுக்கு” ன்னு கேக்கறாரே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு “டாக்டர், எனக்கு ரெண்டு நாளா கழுத்து..” என்று சொல்லி முடிக்கவில்லை, உடனே ராம் சிங்க் “நீங்க அடுத்த தெருவிலே இருக்கிற ‘பரத் சிங்க் க்ளினிக்கு’ப் போங்க.அவர் உங்க கழுத்துக்கு ரொம்ப நல்லா வைத்தியம் பண்ணுவார்” என்று சொல்லி விட்டு பரத் சிங்க் ‘விஸ்டிங்க் கார்டடை’ அவரிடம் கொடுத்தார்.

அந்த வியாதிஸ்தரும் ராம் சிங்குக்கு தன் நன்றியைச் சொல்லி விட்டு, அடுத்த தெருவிலே இருந்த ‘பரத் சிங்க் க்ளினிக்கு’ப் போனார்.

முதல் நாள் பரத் சிங்க் தன் டாக்டர் ‘சீட்’லே உட்கார்ந்துக் கொண்டு ‘நர்ஸை’ப் பார்த்து “’நர்ஸ்’ முதல் ‘பேஷண்டை’ வரச் சொல்லுங்க” என்று சொன்னதும் முதல் ‘பேஷண்ட்’ வந்து வியாதிஸ்தர் உட்காரும் சேரில் உட்கார்ந்ததும் பரத் சிங்க் “என்ன உடம்பு உங்களுக்கு” என்று கேட்டதும்,அந்த வியாதிஸ்தர் ‘இந்த டாக்டர் இவ்வளவு நல்லவரா இருக்காறே.நாம வந்து குந்தின உடனே,நம்மே பாத்து இவ்வளவு கா¢சனமா “என்ன உடம்பு உங்களுக்கு” ன்னு கேக்கறாரே என்று சந்தோஷப் பட்டுக் கொண்டு “டாக்டர்,எனக்கு ரெண்டு நாளா இந்த கால் முட்டி…”என்று சொல்லி முடிக்க வில்லை, உடனே உடனே பரத் சிங்க் “நீங்க அடுத்த தெருவிலே இருக்கிற ‘ராம் சிங்க் க்ளினிக்கு’ப் போங்க. அவர் உங்க கால் முட்டிக்கு ரொம்ப நல்லா வைத்தியம் பண்ணுவார்” என்று சொல்லி விட்டு ராம் சிங்க் ‘விஸ்டிங்க் கார்டடை’ அவரிடம் கொடுத்தார்.

அந்த வியாதிஸ்தரும் பரத் சிங்குக்கு தன் நன்றியைச் சொல்லி விட்டு,அடுத்த தெருவிலே இருந்த ‘ராம் சிங்க் க்ளினிக்கு’ப் போனார்.

ராம் சிங்கும்,பரத் சிங்கும் மனிதனின் உடம்பிலே பாதி பாகங்களை மட்டும் நன்றாகப் படித்து ‘பாஸ்’ பண்ணி இருந்ததால்,அவரிடம் வந்த வியாதிஸ்தர்களை நன்றாக பரிசோதனை பண்ணி விட்டு சரியான மருத்தை கொடுத்து,அவர்கள் வியாதியை பூரணமாக குணப் படுத்தி,பணம் சம்பாதித்து வந்தார்கள்.

ஆறு மாத காலத்துக்குள்ளேயே அந்த ஊரில் இருந்த மக்களிடம் மிக நல்ல பேரை சம்பாத்தித்து விட்டார்கள் ராம் சிங்கும்,பரத் சிங்கும்.

அந்த ஊரில் வசித்து வந்த மக்கள் எல்லோரும் ‘ராம் சிங்க் க்ளினிக்கை’ பற்றியும்,’பரத சிங்க் க்ளினிக்கை’ பற்றியும் மிக உயர்வாக பேசி வந்தார்கள்.

அந்த ஊரில் வசித்து வந்த அனைவரும் ஒருவர் மற்றவரிடம் ”அந்த ரெண்டு டாக்டர்களும் ரொம்ப நல்லவங்க தெரியுமா. நாம போய் வியாதிஸ்தர் சேர்லே குந்தி, நம்ப உடம்பே பத்தி சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளாறவே டாக்டரே நம்மேப் பாத்து ‘என்ன உடம்பு உங்களுக்கு’ன்னு கரிசனமா கேட்டுட்டு’ நம்ப உடம்பை பூரணமா யார் குணப்படுத்து வாங்க என்கிற விவரத்தையும் சொல்லி, அந்த டாக்டர் விலாசத்தையும் நம்ம கிட்டே தறார்” என்று சொல்லி புகழ்ந்து வந்துக் கொண்டு இருந்தார்கள்.

அந்த ஊரில் வசித்து வந்த மக்கள் அனைவரும் தங்கள் உடம்பை ‘ராம் சிங்க் க்ளினிக்கிலோ’, ‘பரத் சிங்க் க்ளினிக்கிலோ’, தான் காட்டி வைத்தியம் பார்த்து வந்தார்கள்.

அது வரையில் அவர்கள் போய் வந்துக் கொண்டு இருந்த மற்ற ரெண்டு ‘கிளிக்னிக்கு’ போவ தை அறவே நிறுத்தி விட்டார்கள்.

அந்த ஊர்லே ‘ராம் சிங்க் க்ளினிக்கும்’,‘பரத் சிங்க் க்ளினிக்கும்’ கொடிகட்டி பறந்துக் கொண்டு இருந்தது.

இருவரும் நிறைய சம்பாதித்துக் கொண்டு வந்தார்கள்.மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

வியாதிஸ்தர்களே வராமல் இருந்ததால், ரெண்டு ‘க்ளினிக்கையும்’ நடத்தி வந்த டாக்டர்கள் ‘க்ளினிக்கை’ மூடி விட்டு,வேறே எங்கோ போய் விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *