“அறத்தால் வருவதே இன்பம்” என்பது ஒரு குறட்பாவில் பாதி அடி. கடமையைச் செய்து மகிழ்வது தான் உண்மையான ம்கிழ்ச்சி என்பது இதன் பொருள்.
இரவு 11 மணி அடித்தும் உறங்காமல் படுக்கையிலே புரண்டு கொண்டிருந்த கணவனைப் பார்த்து, “ஏன் இப்படிப் புரண்டு புரண்டு படுக்கிறீர்கள்; துரக்கம் வரவில்லையா?” என்று கேட்டாள் மனைவி.
‘ஒன்றும் இல்லை’ என்றான் கணவன். மணி 12 ஆகியது. ஒன்று அடித்தது, இரண்டும் ஆகிவிட்டது. அப்போதும் உறங்காமல் இருந்த கணவனைப் பார்த்து உண்மையைச் சொல்லுங்கள், என்ன காரணம்?” என்று. வருத்தத்துடன் மனைவி கடுமையாகக் கேட்டாள்.
எதிர் வீட்டுக்குப்பக்கத்தில், மாடியில் உள்ள வங்கியில் ரூ 10,000 கடன் வாங்கியிருந்தேன். நாளையுடன் கெடு முடிகிறது. நாளை காலை 10 மணிக்குள் பணத்தைக் கட்டியாக வேண்டும். கையிலும் பணம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல், உறக்கம் வராமல் தவிக்கிறேன்” என்றான் கணவன். “தெரிந்தவர் யாரிடமாவது கேட்டுப் பார்த்தீர்களா?” என்றாள்; “இன்று காலை முதல் இரவு வரை, போகாத இடமெல்லாம் போய், கேட்காதவரிடமெல்லாம் கேட்டும் பலன் ஒன்றும் இல்லை. அலைச்சல் தான் மிச்சம்” என்றான் கணவன்.
இது கேட்ட மனைவி, “கொஞ்சம் இருங்கள் வருகிறேன்” என்று சொல்லிச் சென்றாள். அந்த வங்கி மாடிக்குச் சென்று, கதவைத் தட்டி, உறங்கிக் கொண்டிருக்கும் மானேஜரை எழுப்பினாள். “என்னம்மா! இந்த நேரத்தில்?” என்று அவர் கேட்க,
“என் கணவர் உங்கள் வங்கியில் வாங்கிய 10 ஆயிரம் ரூபாயை நாளை கட்டவேண்டுமாமே! அவரிடம் கையில் பணம் இல்லை. யார் யாரையோ கேட்டுப் பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. அவரால் நாளைக்கு அந்தப் பணத்தைக் கட்ட முடியாது. இதை சொல்விப் போகத் தான் வந்தேன்” என்று, அவரிடம் சொல்லிவிட்டு வந்து, தான் வீட்டில் நுழைந்து கதவைச் சாத்திவிட்டு வந்து, கணவரிடம் –
“இனி அவன் தாங்க மாட்டான். நீங்கள் தூங்குங்கள்” என்று சொன்னாள், சுடமை தவறாத அன்பு மனைவி.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை