அமராவதியின் பூனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2021
பார்வையிட்டோர்: 4,213 
 

ரசாக்கின் வீட்டில் பூனைகள் மிகுந்துவிட்டன. கூடத்தில் மல்லாந்து படுத்தபடி சமையல் புகையில் கறுப்பாகிவிட்ட உள் கூரையை வெறித்துக் கிடந்தான் அப்பூனைகள் பெருகுவதற்கு அவன் மனைவி அமராவதிதான் காரணம். அவள் தான் மிகப் பிரியமாக ஒரு பூனையை வளர்த்து வந்தாள். அதன் பிள்ளைகள் தான் தற்போது அவன் வீட்டில் பெருகிக் கிடப்பது. அவன் ஒருநாள் மேல் சுவரில் எட்டிப்பார்த்து எண்ணியும்கூட அவனால் அப்பூனைக்குட்டிகளை எண்ணிக்கையோ அடையாளமோ வைத்துக்கொள்ள முடியவில்லை.

தனிமை அவனைச் சூழ்ந்து கிடந்தது. அமராவதி இருக்கும் வரை அவ்வீடு அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் தங்கை ஆதியம்மாளைக் கொண்டுவந்து குடித்தனம் செய்ய ஆரம்பித்து விட்ட பிறகு வீடே அவனுக்கு அலுப்பான ஒரு பொருள் போல் ஆகிவிட்டது. ஆதியம்மாள் வெளி வேலைக்குப் போயிருக்கிறாள் அவனைவிடப் பருத்த கெட்டியான கறுப்பு உருவம். அவள் அவனை மரியாதை கெட்டத்தனமாக நடத்துவதாக ரசாக் எண்ணிக்கொண்டிருந்தான். மிகவும் தட்டமான உடலமைப்பைப் பெற்றிருந்தவன்தான் ரசாக். பிற்பாடு அவனுடல் நிறைய விசனங்களில் விழுந்து மெலிந்து போய்விட்டது.

எழுந்து தட்டில் சோறுபோட்டு நீரூற்றி வெங்காயம் உரித்துக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தான் அதற்காகவே காத்திருந்தது போல் சுவரின் மேலிருந்து பூனைகள் ஒவ்வொன்றாய் அவனருகில் வந்தன. அப்பூனைகளில் ஒன்றை அவனுக்கு மிகவும் பிடிக்கும். செம்பழுப்பும் வெண்மையும் கலந்து பூனை. மொழுமொழுவென்றிருந்தது. மென் நரம்புகள் போல் பிற மீசை இரு பக்கமும் அந்தரத்தில் கோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. அவை அனைத்திற்கும் சோற்றுக் கவளங்களை உருட்டி வைத்தான். அந்தச் செம்பழுப்புப் பூனை அவன் பக்கவாட்டை உரசிக் குரலெழுப்பி அவனைப் பார்த்தது. அவன் அதை விசாரித்துப் பேசியபடி அதற்குத் தனியாகச் சோறு உருட்டி வைத்தான். அது நாவால் தீண்டிப் பருக்கைகளைச் சுவைக்கத் தொடங்கியது. அவன் வாசலை வெறித்தபடி சோறுண்டான். வெண்ணிற வெயில் வாசலுக்கு வெளியே அடைத்துக்கொண்டது போலிருந்தது. எங்கோ மரம் வெட்டும் ஓசையும் கோழிகள் சண்டை பிடித்துக்கொண்டு இட்டிக்கொள்வதும் கேட்டுக்கொண்டிருந்தன. சில குட்டிகள் எழுந்து போய்விட்டிருந்தன. செம்பழுப்புப் பூனை மீண்டும் அவனைக் குரல் கொடுத்து அழைத்தது. அதற்கு வைத்த சோறு சாப்பிடப்பட்டு, மண் தரையில் ஈரம் மட்டுமே இருந்தது. அப்பூனை மட்டும் அவன் சாப்பிடும் நேரம் வரை அவனுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். சாப்பிட்டபின் அதை, ‘போ போ’ என்பான். அது அவன் காலை உரசிக்கொண்டு இடமும் வலமும் நுழைந்து வரும். லேசாகக் காலால் எத்துவான். ஓடிவிடும். பின்பு படுக்கையிலோ அல்லது சோறுண்ணும் நேரத்திலேயோ மீண்டும் அவனோடு இருக்கும்.

ஆதியம்மாளுக்கு இந்தப் பூனைகளைக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. பூனை குத்த வரும் குறவன்களிடம் இப்பூனைகள் அனைத்தையும் பிடித்துக்கொடுத்து விடப் போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தாள். இடையிடையே அவள் அக்காள் எப்படித்தான் இதைப் பிரியமாக வளர்த்தாளோ என்று வேறு அங்கலாய்த்துக்கொண்டாள்.

வெயில் தாழ ஆதியம்மாள் விறகு பொறுக்கிக்கொண்டு வீட்டை அடைந்தபோது ரசாக் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அவள் விறகைப் பொத்தென்று சாய்த்துவிட்டு உள்ளே வந்து அவனைப் பார்த்தாள். நடந்து வந்த களைப்பும் அன்றைய வெயிலும் அவன் தூக்கமும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது. வியர்வையைத் துடைத்தபடி உள்ளே வந்து பாத்திரங்களை உருட்டியபடி ஏச ஆரம்பித்தாள். அவள் குரலில் அவனும் அவன் தலைமாட்டில் படுத்திருந்த செம்பழுப்பு பூனையும் விழித்துக்கொண்டார்கள். அவன் எழுந்தவுடன் அவளை நன்றாக உதைக்க வேண்டுமென்று நினைத்தான். அவள் ஒரு குச்சியை எடுத்து அந்தப் பூனையை அடிக்க வந்தாள். அது சட்டென சன்னலில் தாவி ஏறிச் சுவருக்கு மேல் ஒளிந்து கொண்டது. “அந்தப் பூனை உன் என்ன செய்கிறது” என்று அலுத்தபடி எழுந்து வெளியே வந்தான். தெருப்பிள்ளைகளும் பெண்களும் வெளிச் செல்லும் ஆண்களுமான நடமாட்டத்துடன் இருந்தது தெரு. ஆகாயத்திலிருந்து இதமான சாயங்கால வெளிச்சம் ஊரின்மேல் கவிழ்ந்து கிடந்தது மனதுக்கு இதமாக இருந்ததுது. இந்நேரத்தில் கத்திக்கொண்டிருப்பதுதான் அவனுக்கு மிக எரிச்சலாக இருந்தது. அது அவள் சுபாவம் என்று விட்டிருந்தான். சில நாள் அவள் எல்லை மீறித் திட்டிக்கொண்டிருக்கும்போது கழியைத் தூக்கிக்கொண்டு வந்து தட்டியையும் வெறும் இடத்தையும் அடித்துச் சப்தம் காட்டி அவளை மிரட்டுவான் ஆரம்பத்தில் அவளும் அச்செயலுக்குப் பயந்தாள். பிறகு அவள் நன்றாகத் தெரிந்து கொண்டாள். அவன் தன்னை அடிக்க மாட்டான் என்று. அவனுக்கு டீ குடிக்க வேண்டும் போலிருந்தது. எதிரில் அவன் சேக்காளி வந்து கொண்டிருந் தான். இருவரும் பேசிக்கொண்டபடி ரோட்டுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். அப்போது எதிர்ச்சாரியிலிருக்கும் காசி வாசலில் நின்றபடி ரசாக்கைப் பார்த்துச் சிரித்தான். ரசாக்கும் சிரித்தான். ரசாக்கிற்கு அவனைக் கொலை செய்ய வேண்டும் போலிருந்தது. காசி தனது தொங்கு மீசையை உருவிக் கொண்டான். இருவருக்குமான சங்கேதம் இச்செயலில் ஒளிந்து கொண்டிருந்தது. ரசாக் அவனிடம் ரோட்டுக்கு டீ குடிக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு சென்றான். காசியும் அவர்களை மரியாதையுடன் பேசி அனுப்பினான்.

காசி அருகிலுள்ள டூரிங் டாக்கீஸில் டிக்கெட் கிழிக்கிறான். சில சமயங்களில் பையன் வராத சமயத்தில் இரும்பு வாளியில் பசை நிரப்பிக்கொண்டு சைக்கிள் ஹாண்டில் பாரில் மாட்டியபடி ஊர் ஊராகச் சென்று போஸ்டரும் ஒட்டுவான். வழி நெடுக, பார்க்கும் நபர்களெல்லாம் மாறிய படத்தின் பெயரைக் கேட்டு அவனை அரித்தெடுத்து விடுவார்கள். அவனால் சொல்லாமல் செல்ல முடியாது. சிலர் படம் எப்படி என்பார்கள். அவன் பார்த்திருக்காவிட்டாலும் சணடைகளும் நல்ல பாடல்களும் அமைந்த படம் எனது பொய் சொல்லிச் செல்வான். பல சமயங்களில் பல ஊர்களில் அதுதான் அவனது அடையாளமாகவும் இருந்தது. எப்படியாவது ஆபரேட்டராக ஆகிவிட வேண்டுமென்ற துடிப்பு அவனிடம் முன்பு இருந்தது. கிழவன் செத்தால் உண்டு என்றிருந்தான். கிழவன் தன் மகனைக் கூட்டிக்கொண்டுவந்து தொழில் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தவுடன் மனசு விட்டுப் போய்விட்டது.

அதிகமும் வேலை எதுவும் இருக்காது. சாயங்காலம் சென்றால் போதும். சிறுநீர் கழிப்பிடம் மட்டும்தான். மண் தரையிலேயே கீற்றுத் தட்டி கட்டி இருபக்கங்களிலும் பிரித்து விட்டிருந்தார்கள். பிளீச்சிங் பௌடர் மட்டும் விசிறிவிட்டு வந்தால் வேலை விட்டது. கேன்டீனில் ஆளில்லாதபோது கடையில் நின்று வேலை செய்வான். சிறு வயதில் தூக்கிய முறுக்குத் தட்டுதான் என்றாலும் தற்போது தொடுவதில்லை. தட்டியில் சாய்ந்து கொண்டு பாக்கு மென்றபடி டிக்கெட் கிழித்துக் கொண்டும் அங்குமிங்கும் பேச்சுக் கொடுத்து நகர்ந்தபடியும் சில ரீல்கள் ஓடும் வரை நிற்பான். இரண்டாம் காட்சி முடிந்தபின் ஓனர் கிளம்பும் வரை இருந்து விட்டு சைக்கிளில் ஏறி வீடு வந்து சேர வேண்டியதுதான். பகல் நேரங்களில் அதிகமும் விவசாய வேலைக்குச் சென்று விடுவான்.

அன்றிரவு அவன் வேலை முடிந்து வரும்வரை தந்திக் கம்ப நிழலில் செம்பழுப்புப் பூனை அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. இருளில் ஒளிந்தபடி அவன் சைக்கிள் சப்தத்தைக் கேட்டபடி இருளில் பதுங்கிப் பதுங்கி அவன் வீட்டைக் குறுக்காகக் கடந்து உள்ளே சென்று நின்றுகொண்டது. பூனையின் தொடர் இருப்பை அவன் அறிவான். அவனுக்குத் தினமும் இது வாடிக்கை. அவன் எத்தனை தாமதமாக வீடு திரும்பினாலும் அப்பூனையைப் பார்க்கத் தவறியதில்லை. அவன் சோறுண்ணும்போது அவனை முன்னும் பின்னும் உரசும். சோறிடுவான். சப்தமெழுப்பாமல் சாப்பிட்டு அவன் பின் பக்கத்தில் வந்து மெத்தென்று சரிந்து அமரும். அவனுக்குப் பிடித்தமானதாக இருக்கும். அவனுக்குத் தெரியும் அது ரசாக்கின் பூனையென்று. அப்படியே அள்ளி சில சமயம் மடியில் வைத்துக்கொள்வான். உயிருள்ள பூப்பந்து போல் அவனின் கதகதப்பான மடியில் பேசிக் கொஞ்சும். அவன் அதற்கு முத்தமிடுவான். கிழவி சகிக்க முடியாமல் அவனைத் திட்டுவாள்.

***

ரசாக் ஒரு மிகச் சிறந்த சிலம்ப விளையாட்டு வீரனாக இருந்தான். கோவில் திருவிழாக்கள் அவன் சிலம்ப வீச்சை அறியும். காற்றை வெட்டி வீசிப் பறக்கும் அவனது சிலம்பம் எண்ணற்ற விளையாட்டு வீரர்களைத் தோற்கடித்திருக்கிறது.

அந்நேரத்தில் அவனுடலும் ஒரு ஈவிரக்கமற்ற சிலம்பக் கோல் போலவே தோன்றும்.

திருமணம் செய்துகொண்டு வந்தபோது அமராவதிக்கு அவனைப் பிடிக்கவில்லை . தன் அழகுக்கு ரசாக் பொருத்தமில்லாதவன் என அவள் எண்ணிக்கொண்டிருந்தாள். முதல் வழி வரும்போது அவன் முன்னேயும் அவள் இரு பின்னேயும்தான் நடந்து வந்தாள். இரண்டாம் வழி வந்தபோது அவனை விடுத்து விளைந்த பயிர்களில் ஒளிந்து கொண்டாள் அவன் தனியாகவே வீடு வந்து சேர்ந்தான். மூன்றாவது வழி ரசாக் மறுத்துவிடவே பெரியவர்கள் அவளைச் சமாதானம் செய்து அனுப்பினார்கள்.

அமராவதியை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் உடல் வனப்பும் பூனைமயிர் பளபளக்கும் கன்னத்துச் சருமமும் மேலுதடும் அவனுக்கு மிகக் கவர்ச்சியாக இருந்தன. அவள் மேலாடையற்று முதுகு காட்டிப் படுத்துறங்கும்போது அவளுடல் ஒரு வாலிபனுடைய உடல் போலவே தோற்றம் தரும். ஆவலுடன் சில சமயங்களில் அவள் இயக்கத்தில் லயித்து உயிர்த்தொடுகையே வேறாயிருக்கும் தருணங்களில் ஒருக்களித்த முகத்துடன் இருப்பாள். அப்போது ஒரு ஆணைப் புணருவது போலவும் ரசாக்குக்குத் தோற்றம் தந்திருப்பதை அவளிடம் கூறியிருக்கிறான். அவள் வெறுமனே சிரித்தாள்.

ஊர் மக்கள் புடை சூழ மேளதாளத்துடன் மாரியம்மன் கோவில் திடலில் அவன் தார்பாய்ச்சி இறங்கி சலா வரிசை எடுத்துத் தொடை தட்டிச் சிரித்தபடி களமிறங்கும்போது இளைஞர்கள் விசிலடித்துக் கரகோஷித்தார்கள். ரசாக்கிற்கு ரசிகர்கள் அதிகம். அவனைவிடப் பன்மடங்கு பருத்தும் மார்புகளை விரித்தும் தசைகள் புடைக்கக் கோல் வீசுபவர்களும், இறங்கும் வரைதான் ஹீரோக்களாக இருந்தார்கள். நான்கு வீச்சுகளில் மேள ஒலிக்கரகோஷத்துடன் பிடுங்கப்பட்ட எதிராளியின் கம்பு ரசாக்கின் கைகளில் சேர்ந்திருக்கும். இரு கரங்களிலும் இரு கம்புகள் இரு கைச் சுற்றில் திளைத்து, காற்றைக் கிழித்துக்கொண்டிருக்கும். முந்தியும் பிந்தியுமான கால எடுப்புகளும் மண் சீய்ப்புகளும் அவனை வெறிகொண்ட மிருகம்போல் காட்டும். அருகிலுள்ள பெண்கள் அமராவதியை இடித்தார்கள். ரசாக்கிற்குப் போகுமிடமெல்லாம் பெண்கள் சகவாசம் என்றார்கள். அமராவதிக்கு மெல்லத் தாழ்வுணர்ச்சி மேலேறத் தொடங்கிவிட்டது அப்போது.

அவனது சிலம்பத்தின் முன் தான் மிகச் சாதாரணம் என்று நினைத்தாள். மைய இரவுவரை அவனை வீழ்த்த முடியாத சிலம்ப விளையாட்டுகள் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் இறைந்து வந்து கிடந்தன. எல்லோர் சிலம்பமும் பிளவுபட்டு அவனது வீச்சில் கிழிந்து சப்தமிட்டன. நடுத்தெரு வரும் போது தெரு மையத்தை வலம் வந்து மைதானத்தை அகலப்படுத்தினான். தாகத்திற்குத் தண்ணீர் கேட்டபோது யார் யாரோ ரசாக் தண்ணீர் கேட்டதாக ஆர்வத்துடன் கொண்டுவந்தார்கள். அவன் இரண்டு மூன்று வீட்டுச் செம்புத் தண்ணீரைத் தொடர்ச்சியாக வாங்கிக் குடித்தான். மேலெல்லாம் வியர்வை மினுங்க இரும்பு போன்ற உடம்பை ஆறப் போட்டபடி பிரம்புச் சிலம்பை இடது கரத்தில் ஊன்றிப்ப் பிடித்து வானைப் பார்த்துக் குடித்தான். எல்லோரும் ரசாக்கைப் பார்த்தார்கள். சிறுபிள்ளைகள் அவன் சிலம்பைத் தொட்டுப் பார்த்து ஓடின. குமராகப் போகும் பெண்களும் கன்னிப் பெண்களும் ரசாக்கைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் கும்பலில் ஒளிந்தார்கள். நட்சத்திரங்கள் மினுத்திருக்க ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் வீசியடித்தான் தனது சிலம்பாட்டத்தை. வெளியூரிலிருந்து வந்த சிலம்பக்காரர்கள் இறுமாப்புடன் புகைபிடித்துக்கொண்டிருந்தார்கள். மேலத்தெரு வளைவில் வெளியூர்க்காரர்கள் சுற்றி இறங்கி வளைத்தார்கள் ரசாக்கை, ரசாக் சிரித்தபடி உற்சாகமாய் ‘ம்ஹூம்’ எனக் குரலெழுப்பி முன்னேறி ஆடினான். ஊர் மக்கள் கரகோஷித்துச் சிரித்தார்கள். ரசாக் விட்டுக்கொடுத்து ஆடினான். விடையாட்டைத் தெரிவிக்கவே விளையாடுவது போல் அந்த நேர விளையாட்டில் புன்னகை அவன் முகத்தில் பிரியாதிருந்தது. ’வெளியூர் காரங்கல்ல! அதான் விட்டுப்புடிக்கிறான். விரோதம் தட்டிறக் கூடாது பாரு” என்றார்கள். ஒரு கரத்தில் சிலம்பமும் மறு கரத்தில் ரகசியமும் வைத்தவனைப்போல் புஜத்தில் நேர்க் கோட்டில் கைகளை விரித்து எட்டி வைத்துச் சுற்றியபடி ‘வா ராஜா’ என்றான் எதிரியை. ரசாக் காற்றில் எழும்பிச் சுழன்று வீசும் ஏதோ ஒரு வீச்சுக்காக ஜனக்கூட்டம் காத்துக் கிடந்தது கண்களைப் பரக்கப் போட்டபடி. அப்படித்தான் செய்தான் ரசாக்கும். இமைக்கும் கணத்தில் புரியாத பாஷை போல் அவன் மன வேகத்தின் குரலும் ஆவேசமும் வெடித்துச் சிதற, எதிராளியின் கம்பு எகிற எதிரியின் நெற்றிப் பொட்டில் நிறுத்தியிருந்தான் தன் சிலம்பு நுனியை .

விளையாட ஆட்கள் இல்லாமல் தேர் நகர்ந்து ஊர் சுற்றி வரும்போது ஆட்டங்கள் சூழ்ந்து கொண்டன. பலபேர் ரசாக்கின் சிலம்பாட்டத்திற்காகக் கண்விழித்துக் களைத்து ஏமாந்தார்கள். மேலத்தெரு வளைவிலேயே அவன் வெளியூர்க்காரர்களைச் சந்தித்துவிட்டதாகப் பார்த்தவர்கள் பார்க்காதகளுக்குச் சொன்னார்கள். ரசாக் நினைத்தபடியே அமராவதி வியந்து போயிருந்தாள். ஒருவகையில் ரசாக்கின் சிலம்பாட்டத்தின் முதல் தூண்டுகோலே அமராவதிதான். அவள் முன் தனது வீரத்தைச் சொல்லிவிடும் ஆவேசமாகத்தான் அவனது துள்ளல்கள் இருந்தன. ஊர் மெச்சும் விளையாட்டுக்காரனை அவள் பிடிக்கவில்லை என்பதைத் தனக்கு நேர் அவமானமாகத்தான் அவன் கருதினான். என் திறமைதான் ‘நான்’ என்று இவன் சொல்வதாக இருந்தது, அதன் பின்னான அவளுடன் கலந்த முதல் சிரிப்பு.

அமராவதி எதுவும் பேசவில்லை . மறுநாள் அவனுக்குக் கோழிக் குழம்பு செய்து எண்ணெய் சூடேற்றிக் கொடுத்தாள் ரசாக் எதிர்பார்த்ததுதான் என்றாலும் தெரு மணக்க அவள் அப்படிக் குழம்பு செய்வாள் என்று நினைத்துப் பார்க்கவில்லை. சிலம்பம் வீசத் தொடங்கிய காலத்திலிருந்தே தசை இறுகிப் போன உடலைத் தொட்டுத் தடவி எண்ணெய் விட்டாள். அவன் மூர்க்கமான காமத்துடன் அவள் கரம்பற்றி நெரித்தான். அது மிகவும் வலியாக இருந்தது. வீட்டுக்குள் வரும்போது கைகளை உதறி நெட்டி முறித்துக்கொண்டாள் சிரித்துக் கொண்டபடி அவன் காமத்தின் ஆவேசம் அந்நொடிகளில் சொல்லப்பட்டுவிட்டபோது அவள் மனம் அத்தீவிரமான கணங்களை நாடியபடி காத்திருந்தது.

அன்றிரவு தன்னைத் திறந்து போட்டு அவனுக்குப் பருகக் கொடுத்தாள். ஒரு மிருகத்தின் ஆவேசம் போல்தான் இருந்தது அவனது இயக்கம். தன்னை அப்புள்ளியில் மெய்ப்பிக்கும் வெறி அவனுள் கூடி எழுந்து கொண்டிருந்தது. அவளும் அம்முரட்டுத்தனத்தில் தன்னைக் கொடுத்தபடி புடைத்தெழுந்த காமத்தோடு முறுக்கேறிக் கிடந்தாள். அவள் கற்பனைக்கான ஆண் உருவைக் கொடுத்தது போல் அவன் இயங்கினான். நகக்கீறலும் பல்பதியும் கடியுமாய் இயக்கத்தில் லயித்தபடி கீறலாய்த் திறந்த விழிகளால் அவன் முகத்தைப் பார்த்துக் கிடந்தாள். உச்சம் எழுந்தபோது அவனை ஒரு விலங்கினமாகவே பார்க்க முடிந்தது. முலைகளைக் கைவிட்டு முதுகினடியில் இரு தோள்பட்டை வழியாயும் கைகளை நீட்டித் தலையில் கோர்த்துப் பற்றிக்கொண்டு அவளை ஒரு கைக்கு அடக்கமான ஒரு பொருளைப் போல் பாவித்து இயங்கினான். கன்னங்களைப் பற்கள் கரண்டி அழுத்த முத்தினான். அவள் அத்தனையும் ஏற்றுக்கொண்டவளாய்க் கால்களை அந்தரத்தில் மடித்து நீந்தவிட்டுக் கரங்களால் அவன் பிருட்டத்தைப் பிடித்தழுத்தி வேகம் காட்டினாள். ஆவேசமாக மூச்சு காற்றும் உடலியக்கமும் ஏறுமாறான மூச்சுக்காற்றும் சுரந்து பெருகும் வியர்வைகளுமாய் அறையைப் புணர்ந்தன. பீய்ச்சப்பட்ட இந்திரியம் முடிந்தும் விலக்க முடியாத கோர்ப்பால் பிணைந்து கிடந்தார்கள். அவன் இதோடு இறங்கிவிடுவான் என்று நினைத்தாள் சில நிமிடங்கள் மூச்சுக் காற்றும் வெப்பமும் தணியக் கிடந்தவன் அவள் முகத்தை ஆசுவாசமாகக் கடித்தான். அவள் சிரித்தாள். உதடுகளைச் சப்பி மென்றான். மிக மெதுவாய் இயக்கம் காட்டினான். அவளுக்கு சவால் போல் இருந்தது. அவள் இடைவெளி எதிர்பார்த்திருந்தாள். சட்டென விறைத்த குறியுடன் அவன் மீண்டும் இயங்க ஆரம்பித்தான். அவள் மீண்டும் வழிவிட்டபடி வகுத்துக்கொடுத்தாள். முன்பைவிட அதிவேகமாக இயங்கினான். அவளுக்கு அவன் மேல் ஆசை சுரந்தது. அவனது இயக்கத்தினூடே இயக்கத்திற்கப்பாற்பட்டு வளமான கரும் புற்கள் போல் விளைந்து சென்று கன்னத்தில் வட்டமடித்து வீரமான மீசையை உருவி அழகு பார்த்தாள். அவனுக்கு மரியாதையாக இருந்தது. மறுநாளான பகல்களில் அவன் உறங்கினான். அவள் கறியும் மீனும் ஆக்கிப் போட்டு இரவுகளில் பால் காய்ச்சி வைத்தாள். அவன் ஒருபோதும் சளைக்காதவன் போலவும் விருப்பமான நாய்க்குட்டி போலவும் அவளையே சுற்றிச் சுற்றி வந்தான். அவள் தனது குறியில் எரிச்சல் மிகுந்திருப்பதாக அவனிடம் ரகசியக் கெஞ்சலுடன் வெட்கத்துடன் கூறியபோதுதான் அவன் கம்மென்றிருந்தான்.

சாப்பிடும் வேளை முடிந்த இரவில் ரசாக் வீட்டுக்கு வந்தான். சில வாசல்களில் உறக்கம் வராதவர்கள் உதிரிகளாய் மங்கலான நிலவொளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். உள் கூடத்தில் ஆதியம்மாள் மல்லாந்து படுத்திருப்பது நிழல்வாட்டில் தெரிந்தது. மறுபுறத்தில் அவளின் நிழல் சிம்மனியின் வெளிச்சத்தில் அசைந்தசைந்து உறங்கிக்கொண்டி ருந்தது. கதவைச் சாத்திவிட்டுச் சாப்பாட்டை எடுத்து வைத்துச் சாப்பிடத் தொடங்கினான். பூனைகள் மேலிருந்து கீழிறங்கி வந்தன. அக்குரல்களைக் கேட்டதும் தூக்கம் விலகிப் பூனை களைத் திட்டியபடி அவள் புரண்டு படுப்பதைப் பார்த்தான்.

ஆதியம்மாளின் சமையல் ரசாக்குக்குப் பிடிப்பதில்லை. உப்பும் உறைப்பும் இருந்தால் குழம்பாகிவிடுமா என்று எடை பிடித்துப் பார்த்தான். அவளும் ஏதேதோ முயற்சி செய்து பார்த்தாள். கூடுதலாக எண்ணெய் விட்டுச் செய்தால் ருசி கூடுமெனச் செய்து திட்டு வாங்கியும் தெருக்களில் பணிக்கை கேட்டும் அலைந்தாள். அவளுக்கு அப்படித்தான் சமைக்க வந்தது. மீண்டும் மீண்டும் அவன் சத்தம் போட்டே ஒரு நாளில் சமையல் சட்டிகளைக் குழம்போடு தெருவில் போட்டு உடைத்தான். ரசாக் அதோடு நிறுத்திக்கொண்டான். அமராவதியின் குழம்புப் பக்குவமும் உடல் பக்குவமும் அவனை ஏக்கத்தின் ஆழத்தில் தள்ள மூடின. வெளியூர்களில் இருக்கும் தனது பழைய காதலிகள் பலரின் வீட்டுக்கும் செல்லத் தொடங்கினான். மீசையை வீரமாக உருவிவிட்டபடி தன் வீரமும் குணமும் அறியாதவள் ஆதியம்மாள் என அவர்களிடம் குறை கூறி முடித்தான். அவர்களும் ரசாக் சொல்வது உண்மைதான் என்றார்கள் அமராவதியின் சுத்தமான குளியலுக்கு முன்னும் சுவையான சமையலுக்கு முன்னம் எந்த ஊர்ப் பெண்ணும் இணையல்ல என்றான் தற்போது அவன் காதலிகள் யாவரும் பிள்ளை குட்டிகள் ஈன்று வாழ்வின் பாதாளத்தில் வீழ்ந்து போயிருந்தார்கள். அங்கு சென்று அவர்களுக்குக் கைச் செலவுக்கு கூடப் பணம் கொடுக்க முடியாமல் பார்த்து வருவது அவனுக்கு அசிங்கமாக இருந்தது.

சாப்பிட்டு முடித்துக் கூடத்தில் தனது பாயையும் தலையணையையும் எடுக்கச் சென்றவன் அவளைப் பார்த்தான். ஆடை மறைப்பற்ற அவளது பருத்த தனங்கள் வட்டமான சதைப் பந்தைப் போல அவள் நெஞ்சில் மிதந்திருந்தன. அங்கேயே தனது படுக்கையைச் சரிசெய்து போட்டவனைத் தூக்கக் கலக்கத்தோடு பார்த்தவள் அவனை வெளியில் சென்று படுக்கச் சொன்னாள். அவன் இன்னும் சிறிது நேரத்தில் சென்று படுப்பதாகக் கூறி அமர்ந்தான். சட்டென அவள் புடவையை வாரி எடுத்து மேலில் சுற்றிக்கொண்டு வெளிவாசலுக்கு வந்து வெறுந்தரையில் சுருண்டு கொண்டாள். அவன் அவளுக்கு மட்டும் கேட்கும் தொனியில் அவளை உள்ளே அழைத்தான். அவள் தெருவே கேட்கும்படி அவனை வெளியே வந்து படுக்கச் சொன்னாள். பிறகு அவன் எழுந்து வெளி வாசலுக்கு வந்தபோது அவளது முதுகில் காலால் ஒரு எத்து எத்திவிட்டுப் போனான் ஆத்திரத்துடன். அதன்பின் உள்ளே சென்று படுத்துக்கொண்ட அவள் அவன் தூங்கிய பிறகும் அவனைத் திட்டிக்கொண்டிருந்தாள்.!

***

அமராவதிக்கும் பூனைகள் மிகவும் பிடிக்கும். அவள் மணியக்காரர் வீட்டிலிருந்து ஒரு சாம்பல் நிறப் பூனையைக் கொண்டு வந்தாள். அவன் ஒரு பூனைக்குட்டியைக் கொண்டு கொடுத்தான். அது ஒரு புலிக்குட்டி போலவே இருந்தது. அவைள் இரண்டும் அவள் பிள்ளைகள் போல் வலம் வந்தன. அமராவதி அதற்கு அதிகமும் கவிச்சிக் குழம்புகள் பழக்கி வந்தாள். அவை கவிச்சிகளற்ற நாட்களில்கூட கவிச்சிக் சோறு கேட்டு பசியோடு படுத்துக் கொண்டன. அவைகளை பழக்கிவிட்டால் அப்படித்தான் என்று ரசாக் அலுத்துக்கொண்டான். மறுநாளும் மறுநாளும் ரசாக் வேண்டுமென்றே பால் சாதம் வைத்தான். அவை எங்கோ சென்று வயிற்றை ரொப்பிக்கொண்டு வந்து பிடிவாக அவற்றைப் புறக்கணித்தன. கடைசியில் அச்சாதத்தில் கவிச்சி சேர்த்துப் போட முடிவு செய்திருந்தான். அவை மீண்டும் இழைந்து கிடந்தன.

ரசாக் சிலம்பம் கற்றுக்கொடுக்க ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்தான். வாக்கும் ராசியும் அவனுக்கு இருக்கிறதென்றார்கள். நிறைய இளைஞர்கள் அவனிடம் தொழில் கற்றுக்கொள்ளக் காத்துக் கிடந்தார்கள். ரசாக்கும் நேக்காகக் கற்றுக்கொடுத்தான். சிறுபிள்ளைகள்கூட அவனது பக்குவமான போதிப்பில் படுசுத்தமாக சலா வரிசை வைத்தார்கள். கடைத்தெருவில் தழையவிட்ட சலவை வேட்டியும் கைக் கொண்டையில் சிறுமடிப்பாய் உருட்டிவிடப்பட்ட முழுக்கைச் சட்டையுமாய் வலம் வந்து கொண்டிருந்தான். கடைத் தெருக்களில் அவன் நடப்புக்கு மரியாதை இருந்தது. பெரும் மளிகைக் கடைகளிலும் டீக்கடைகளிலும் அவனுக்குக் கடன் வசதிக்கான கணக்குகள் இருந்தன. ஒவ்வொரு வாரமும் ஊர் திரும்பும் நாட்களில் அவளுக்குப் பிரத்யேக மஞ்சள் குளியலும் அவனுக்குச் சுடு எண்ணெய்க் குளியலும் கறிக் குழம்புமாய் வீடு மணத்தது. அறைச் சுவர்கள் அவர்களைப் பார்த்துக் கூச்சப்பட்டன. அமராவதிக்கு இரண்டு ஜதை கொலுசுகளும் மூக்குத்தியும் வாங்கிப் போட் டான். அவன் வீரத்தின் அடையாளங்கள் என்பதாக மீசையைப் புறங்கையால் மேவியபடி சொல்லிக் கொண்டான். அவளுக்கும் பெருமையாக இருந்தது. தெரு திரண்டு வெள்ளிக்கிழமைகளிலோ சனிக்கிழமைகளிலோ சம்பிரதாயம்போல் அருகிலுள்ள டூரிங் டாக்கீஸுக்கு சினிமாவுக்குச் செல்லும் வழக்கம். ஆரம்பத்தில் அமராவதி பின்தங்கினாலும் மறுநாள் பகலில் சினிமாவின் கதை எழும்பிப் பைப்படிகளிலும் வயல் வெளிகளிலும் கரைவதை அவள் தனித்திருந்து கேட்க விரும்பாதவளாய் அவர்களோடு கூடிக்கொண்டாள்.

காசி சினிமா கொட்டகையில் அவளுக்கு நிறையச் சலுகைகள் செய்து கொடுத்தான். மணல் குமித்து அமரும் உயரத்திற்கு மணப்பலகை கொண்டு வந்து தருவதிலிருந்து உடன் வரும் அனைவருக்கும் நான்கு இடைவேளைகளில் முறுக்கும் தேநீரும் மாறி மாறி வந்தன. சினிமாவுக்குப் போனால் அமராவுடன் போக வேண்டும் என்றார்கள். நாளடைவில் டிக்கெட் கூட இல்லாமல் அவளை உள்ளே அனுப்பினான் காசி. அவள் அதையும் விரும்பினாள். ரீல் பெட்டிகள் சுழல்வதையும் சதுரத்தின் வழி பாயும் ஒளியை அங்கிருந்து பார்க்கவும் காசி ஏற்பாடு செய்தான். சின்னதான ஒரு விரற்கடை அளவு அவள் விரலைப் பிடித்துப் பாயும் ஒளியில் நீட்டினான் திரை முழுவதும் ஓடும் அப்படத்தில் அவள் விரல் நுனி பூதாகாரமாய் எட்டிப் பார்ப்பதை அறிந்து இன்பமாய்த் திடுக்கிட்டாள். கொட்டகையுள் திட்டி விசிலடித்தார்கள். இருவரும் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டார்கள். பின்னாளில் சினிமாக் கொட்டகையே அவளுடையது போலானது.

ஊருக்குத் திரும்பி வந்த ஒரு நாளில் ரசாக் தன் வீட்டில் பூனைகளைக் காணாமல் பக்கத்து வீடுகளில் கேட்டான். அவர்கள் தயக்கமற்று காசிநாதனின் வீட்டைச் சுட்டினார்கள். தன் வீட்டை விட்டு அவை அங்கு சோறுண்ணச் செல்வது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. என்ன செய்வது என்று பலமாக யோசித்துக்கொண்டிருந்தான். அவன் வந்த வாசனை அறிந்ததும் பூனைகள் வீடு திரும்பி அவனைக் கொஞ்சின. அதன் வாஞ்சையில் அவன் கோபம் மெல்ல உள்ளே தள்ளப் பட்டது. ஊடலாகக் கோபித்துக்கொண்டான். அவைகளுக்கு இன்னும் நன்றாகப் பராமரிப்பும் உணவும் வழங்கப்பட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அப்பூனைகளின் அழகில் வேறு வழியின்றி மீண்டும் மயங்க ஆரம்பித்தான்.

அன்றிரவு அவன் அமராவதியைப் புணர்ந்து மயக்குவதில் ஈடுபட்டான். அவள் அத்தனை நாள் காத்திருப்பின் தாபம் மிதப்பதாய்ப் பிருட்டத்தைப் பிடித்து வேகம் காட்டினாள், சில வினாடிகளின் இயக்கத்திலேயே அவளை வெல்ல முடியாத ஒரு தூரத்தில் தடுக்கி விழுந்துவிட்டது போல் ஒரு பொறி தட்டிப் பறந்தது அவனுக்கு. தனக்கெதுவும் உடல் குறையில்லை வெறும் மனப்பயம்தான் என்றுணர்ந்து இயங்கினான். இருவருக்குமான ஒரே உச்சம்தான். அவன் விலகிப் படுத்தான். அவள் புணர்ந்த நிலையிலேயே ஆடைகள் கிடக்க, கீறிப்பிளந்த விழியோடு துயில ஆரம்பித்தாள். புரண்டு படுத்தபோது அவளுடைய ஆடைகளைச் சரிசெய்துவிட்டுப் படுத்தான். பயம் கண்களைத் திறந்து தூக்கத்தை விலக்க உருட்டியது. எப்போது தூங்கினோம் என்றறியாத கலை போன்ற துயிலில் விழுந்தான்.

அமராவதியின் தொடைவரை தொங்கும் நீண்ட கூந்தலும் மலர்ந்த உடலும் அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பின. அவன் அதிகப்படியான கனத்தை உணரும்படியான அசைவில் மேலேறிப் படுத்தாள். அவள் உடல் சருகு என்று அவனுக்குத் தெரியும். கூந்தல் இரண்டாக முன்பக்கத் தோள்கள் வழி வழிந்து இறங்க, துவண்டு விட்ட அவனது குறியைப் பிடிவாதமாகத் தொட்டெழுப்பித் தனக்குள் நிரப்பிக்கொண்டு இயங்க ஆரம்பித்தாள். வலி உயிர் போவது போலிருந்தது அவனுக்கு. அவனைப் போலவே அவன் கால்களைத் தூக்கிப் பிடித்து அந்தரத்தில் நீந்தவிட்டாள். அப்படியான கோணத்தில் இல்லாமலேயே அவள் இயங்குவதற்குத் தடையெதுவும் இல்லாதபோதும் அவன் கீழிருக்க அவள் இயங்கும் உடலுறவு பிடித்திருந்தது. வலி மிகும் இடுப்பசைவும் கடினத் தசையால் படர்ந்த ஆண் மார்பைப் பிசைவதுமாய் அவள் இயக்கம் இருந்தது. அவனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவளைக் கெஞ்சுவது போலி தந்தது அவன் முகம். அவளுக்காகப் பொறுத்துக்கொண்டான். அவள் முகம் மறைக்க வந்து விழும் கேசத்தை விலக்கியபடி வியர்வைத் துளிகள் பூக்கப் பூக்க அசைந்து கொண்டிருந்தாள். பிடிவாதமான அசைவுகளின் மூலம் அவள் உணர்த்தும் செய்தி அவனுக்கு உறைத்தது. தன்னை ஒரு உறுப்பாகவும் அதன் வீர்யங்களுக்கான கவனிப்பாகவுமே பாவிப்பது போன்ற உணர்வு அவனை வெட்கமுறச் செய்தது. அவனது பயம் அவள் மேல் கோபத்தைக் கொண்டு வந்தது. வலி தாளாது அவளை அப்படியே அந்தரத்தில் உருவித் தள்ளி மேலெழுந்தான். அவள் ஒதுங்கி விழுந்து அவமானப்பட்டாள். அவன் தனது ஆடையை எடுத்தான். அவள் அவனைக் குற்றத்துடன் பார்த்தாள். அவன் முனகியபடி வெளிவாசலுக்கு வந்தான். இதமான காற்று வெற்றுடம்பைத் தழுவியது நிம்மதியாக இருந்தது. உடல் பதறிக்கொண்டிருந்தது. முகப்பில் படுத்திருந்த பூனையைக் காலால் எத்தித் தள்ளினான். எஜமானனின் வெறுப்புப் புரியாத பூனை மெல்ல நழுவ ஆரம்பித்தது.

கயிற்றுக் கட்டிலை வாசலில் எடுத்துப் போட்டுத் துண்டைத் தலைக்கு வைத்துப் படுத்தான். நட்சத்திரங்களும் பிறை நிலவும் பார்க்கக் கிடைத்தன. அவை அவனை வரவேற்பது போலிருந்தது மனதுக்குச் சற்று இதமாக இருந்தது. பின் தவறு செய்து விட்டோமென உறுத்திக்கொண்டிருந்தது. அவளைத் தண்ணீர் கொண்டுவரச் சொன்னான். அவள வெளியே வரவில்லை. பிறகு அவனே எழுந்து சென்று மண் குடத்தில் நீர் சாய்த்து வயிறு முட்டக் குடித்தான். குளிர்ந்த நீர் குடலில் சேகரமாகி உடலே ஜில்லென்று ஆனது போலிருந்தது.
அமைதியைத் தேடி மனம் பரபரத்தது. முகம் தெரியாத மன அழுத்தமும் பெருமூச்சுக்குப் பின் சிறு விடுதலை உணர்வும் வந்தன. அவளைப் பார்த்தான். அவள் புடவை குறுக்கும் மறுக்குமாய் மேலில் மூடி அடிபட்ட பறவையாய் மருண்டு கிடந்தாள்.

சிறிது நேரத்திற்குப்பின் அவன் உள்ளே வந்து அவளருகில் படுத்தான். அவள் தன்னை மூடிக்கொண்டு அவனை விலக்கித் தள்ளினாள். அவன் பொறுத்துக்கொண்டான். குழந்தையை தூக்கிக் கொஞ்ச விழைவது போலவும் குழந்தை அவனிடம் ஒட்டாது ஓடி ஒளிவது போலவும் இருந்தது. அவன் வாய் விட்டுக் கெஞ்சினான். அவன் பொறுமையாய்ப் பேசும் அத்தனை வார்த்தைகளையும் கேட்டாள். கட்டியணைக்க முற்பட்டபோது தட்டிவிட்டாள். அவன் அப்படித் தொடர்ந்து தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டும் போலிருந்தது. அவனுக்குக் கண்களில் நீர் திரண்டது. அவள் அப்போது அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். முறுக்கு மீசை வைத்த குழந்தை போலிருந்தான். திருவிழாவில் அசுரகதியில் வீசிப் பறக்கும் சிலம்பமும் அவன் மீசை உருவிக்கொண்டு தொடை தட்டிச் சிலம்பத்தை உயர்த்திக் கர்ஜிப்பதும் அவன் நினைவைத் தொட்டுத் திரும்பின. அவளுக்குள் சிறு மகிழ்ச்சி தொட்டு ஓடியது. அவள் நிலம் பார்க்கத் தொடங்கினாள். எதிர்பார்த்தவன்போல் அருகில் வந்து அணைத்தான். காதல் வார்த்தைகளை முத்தமிட்டபடி கிசுகிசுத்தான். அவள் அவனைச் செல்லமாகத் தோளிலும் நெஞ்சிலும் அடித்தாள். முதுகில் குத்திப் பிருட்டத்தைக் கிள்ளினாள். அவன் மெல்ல அவளை மலர்த்தி, குனிந்து ஆடை விலக்கி அவள் யோனியில் உதடு பதித்தான். அவன் அப்படிச் செய்வான் என்று அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை . அவனும் அது தன் வீரத்திற்கு அழகல்ல என்று கருதியிருந்தான். அதுதான் அவளை வசியப்படுத்த அவன் வைத்திருந்த கடைசி ரகசியமாய் அவனுக்குப் பட்டது. அவள் கூசினாள். தலையைப் பற்றி முகத்திற்கு இழுத்தாள். விருப்பமாக முலை பருகும் உணர்ச்சியோடு சுவைக்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அவள் கால்களை அகட்டியபடி கூத்துக்காரனைப் போன்ற அவனது நீண்ட சுருள் கேசத்தைச் சுரக்கும் தினவுடன் கோதிவிட ஆரம்பித்தாள்.

பல நாட்கள் பூனைகள் அவன் வீட்டை விட்டு வெளியேறாதிருந்தன. அவைகளுக்குப் பராமரிப்பும் சம்பாத்தியமுமாய் ஊருக்கு ஊர் சிலம்பம் கற்றுக்கொடுப்பதை மேலும் அதிகப்படுத்திக்கொண்டான். அவனது சிலம்ப வீச்சில் அவன் காதலும் குடும்ப விசனமும் இருந்தது. சிலம்பம் கோலி எடுக்கும்போது கெண்டைக்காலில் தட்டிக்கொண்டிருந்தது மனப்பிசகு என்று சமாதானப்படுத்திப் பார்த்தான். பாடத்தில் சிறு பிள்ளைகள் சுற்றத் தெரியாமல் இடித்துக் காள்ளும் நிகழ்வு தனக்கு நேர்வது அபசகுனம்தான். விசனம் விழத் தொடங்கிய காலத்தில் ஊர் தொலைவாகிக்கொண்டுவந்தது.

அவன் தொழில் செய்து கொடுத்த ஊர்களில் அவனை விசாரித்தவர்கள் அமராவதியின் பூனை மீண்டும் மீண்டும் வீட்டில் தங்காதது பற்றியும் பேசிவிட்டுச் சென்றார். அந்நேரங்களில் ரசாக் மிகவும் மனமொடிந்து போனான். பூனைகளுக்குக் காசி என்னென்ன உணவு வகைகளைக் கொடுக்கிறான் என்று ரசாக் யோசித்துப் பார்த்தான். இந்தப் பூனைகளுக்குக் கொஞ்சமும் விசுவாசம் இடையாது என்றெண்ணினான் அதன் முடிவில், சலிக்காமல் கொள்ளாமல் எப்படி ஒரே விதமான அல்லது அதைவிட அதிகமான ருசியோடும் அளவோடும் தினமும் பரிமாறுவது. அது ஒரு மனிதனால் முடிகிற காரியம்தானா என்றும் நினைத்தான். இதுவரை ரசாக்கின் பூனை சாப்பாடு போதுமென்று எழுந்து போனதாகவே தெரியவில்லை என்று நினைத்தபோது திடுக்கிடலான பயம் வந்தது. கொஞ்சம் முயற்சித்தால் இன்னும் சிறிது நேரத்திற்குப் பிறகு என்பது போல் சுற்றிவந்து பருக்கைகளை நாவால் தீண்ட ஆரம்பித்து விடுகிறது என்பதை யூகித்து மலைத்தான். அதை எப்படி எவ்வகையில் பராமரித்து வந்தால் நம் காலைச் சுற்றிக்கொண்டு கிடக்கும் என்பதுதான் அவனுக்குப் பிரச்சினையாக இருந்தது. சோறிடுவதற்கு முன்பு அவைகளுக்கு விசுவாசத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று நினைத்தான். அவன் வீட்டுப் பூனைக்கு அது புரியுமா என்றும் எண்ணினான். நிறையப் பூனைகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறான். அவைகளெல்லாம் வீட்டுக்குள் தான் இருக்கின்றனவா என்று சந்தேகித்தான். இவன் வீட்டுக்கு எதேச்சையாக வந்த சில பூனைகளுக்கும் இவன் சோறிட்டுப் பார்த்திருக்கிறான். சிலதுகள் உணவைப் பொருட்படுத்தாது சட்டெனத் துள்ளி ஏறி ஓடிவிட்டிருக்கின்றன. சிலதுகள் அவன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்லும்போது பதுங்கியபடி எதிர்ச் சாரியில் நின்று குரல் கொடுத்திருக்கின்றன. அவன் அலட்சியம் செய்து கடந்துவிடுவான். அது போல் தன் வீட்டுப் பூனை ஏன் இங்கேயே தன் வீட்டிலே மட்டும் இருந்துவிடக் கூடாது என ஏங்கினான்.

ஒரு வெள்ளிக்கிழமையில் டூரிங் டாக்கீஸில் வேற்றூரிலிருந்து தனியாளாக வெறுப்பும் அலைக்கழியும் மனச்சுமையுமாய் வந்து காத்துக் கிடந்தான் ரசாக். டிக்கெட் கிழிப்பவன் அமராவதியின் பூனையைக் கொஞ்சிக் கொஞ்சிப்பேசுவதை கீற்றுப் பொத்தல்கள் வழி பார்த்துக்கொண்டிருந்தான். அவள் அப்போது அப்போது தன் பூனையை எல்லோருக்கும் தெரியம்படியாகவே காட்டிக்கொண்டிருந்தாள். அவளுக்கு அது பற்றி பயம் போய்விட்டிருந்தது. அன்றிரவு அவளுக்காக இனிப்புகளும் மலர்ச்சரங்களும் வாங்கிச் சென்று அவளுக்கு முன் வீட்டில் காத்திருந்தான். அன்றிரவு அவனுக்கு நெருக்கமான தோழியுடன் தாமதமாக வீடு வந்தாள். அவனைக் கண்ட அவளுக்குள் குறுகுறுத்தது. ரசாக் எதுவும் பேசாது அவலை சோறு போடச் சொல்லிப் பார்த்தான். அவள் முகம் கைகால் அலம்பிக்கொண்டு வந்து சோறு போடத் தொடங்கியபோது வாசல் கதவைச் சாத்திவிட்டு ஆடைகளைக் கழற்றச் சொன்னான். அவளுக்குப் பயமும் உதறலும் எழும்பத் தொடங்கின பிறகு அவனே வந்து ஆடை களைந்தான். உடலுறவு கொள்வான் என்று எதிர்பார்த்தாள். அவன் சோறுபோடச் சொன்னான் அவள் துணியை எடுத்து மேலில் போர்த்த முனைந்தபோது அவன் உள்ளே சென்று சிலம்பக் கழியைக் கொண்டு வந்து வலது கையைக் கழிமேல் ஊன்றி வைத்து ஒரு பைத்தியக் காரனைப் போல் அவளைப் பார்த்தான். அவள் மிரள ஆரம்பித்தாள். அவளைப் பயப்பட வேண்டாமெனக் கூறி நான் சொல்கிறபடி நடந்து கொண்டால் போதும் என்றான். அவள் துணியைப் பிரம்பால் ஒதுக்கித் தள்ளினான். மீண்டும் அவளைச் சோறு போடச் சொன்னான். அவளுக்கு மிகுந்த கூச்சமாக இருந்தது. தனக்குள் ஒடுங்கியபடி நடந்து சென்று பானை திறந்து தட்டில் சோறும் கிண்ணத்தில் குழம்பும் ஊற்றி எடுத்து வந்தாள். அவன் எதிரில் நிற்க முடியாமல் நகரச் சென்றவளை நீட்டிய பிரம்பால் தொட்டுத் தனக்குப் பிசைந்து ஊட்டுமாறு சொன்னான். அவள் தான் துணியை உடுத்திக்கொள்வதாக மெதுவாகக் கெஞ்சினாள். இமைக்கும் நேரத்தில் பிரம்பு காற்றைக் கிழித்து அவள் தோளையும் தொடையையும் தட்டி மீண்டது நுட்பமான அடியாக இருந்தது. வலியுடன் கூடிய விர்ரென்ற பயம் அவள் உடல் முழுதும் பரவி அழுத்தியது. அவள் அவன் முன் அமர்ந்து சாப்பாட்டைப் பிசைந்து அவனுக்கு ஊட்டினாள். அவளுடலை வெறித்துப் பருகியபடியும் மீசையை உருவிவிட்டுக்கொண்ட படியும் அகல வாய் திறந்து உருண்டைகளை வாங்கி மென்றான அவளுக்கு அழுகை வந்தது. அடக்கிக்கொண்டாள். மலர்களை எடுத்துச் சூடிக்கொள்ளச் சொன்னான் எடுத்துக் கூந்தல் சுற்றி வைத்துக்கொண்டாள். கூந்தலை அவிழ்த்துவது சொன்னான். இனிப்புகளை எடுத்துச் சுவைக்கச் சொன்ன அவனும் வாய் திறந்து பெற்றுக்கொண்டான். அவளை சோறுண்ணச் சொன்னான். இவை யாவும் ஒரு நிதானித்த லயத்திலேயே சொல்வதுதான் அவளுக்கு பேரச்சமாக இருந்தது. அவள் சாப்பாடு வேண்டாமென்று கூறிப்பார்த்தாள். அவன் சாப்பாடு போட்டுவந்து அவளுக்கு ஊட்டினான். அவளுக்கு எதுவோ முழுதும் புரிந்தது போலிருந்தது. இனிப்புக்குள் விஷமிருந்திருக்கும் எனக் கருதி அழ ஆரம்பித்தாள். அவனும் இனிப்பு உண்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அவளை அலக்காகத் தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்தினான். படுக்கை முழுதும் மல்லிகை மலர்களைச் சிதறப் போட்டு வைத்திருந்ததைப் பார்த்தாள். அவளுக்கு மிகவும் துக்கமாக இருந்தது. இது ஒரு இன்பமான நாளாகவே முடிந்து அவன் கோபம் தீர்ந்துவிட வேண்டிக் கொண்டாள். அவன் முத்தங்களோ கட்டியணைப்புகளோ எதுவுமின்றிப் புணர ஆரம்பித்தான். அவள் எந்தப் பிணக்குமில்லாமல் உடலை வகுத்துக் கொடுத்தாள். அவனுடைய உச்சம் முடிந்து சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவளைப் புணரக் கோரி மேலேற்றினான். அச்சிறிது நேர ஓய்வில் அவன் மேல் வழிந்த வியர்வையை அவள் மெல்லத் துடைக்க முற்பட்டபோது அவள் விரல்களைக் கெட்டியாகப் பிடித்தழுத்தித் தூர வீசினான். அவனாய்த் தணிந்தால்தான் உண்டு என்றுணர்ந்தவளாய் அவனுடலின் மேலே சாய்ந்து லேசான குரலில் வேண்டாம் என்றாள். பிடிவாதமாக நிமிர்த்தி இயங்கச் செய்தான். அவள் மெல்ல இயங்க ஆரம்பித்தாள். உடலுறவுக்கெதிரான முகத்துடன் வேகம் கூட்டச் சொன்னான். காட்டினாள். இன்னும் இன்னும் என்று துரிதப்படுத்தினான். தடுமாறினாள். உறுப்பு கழன்று விலகியது. கைகளைத் தலைப்பிணைப்பாய் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் தோரணையில் அவளையே எடுத்துப் பொருத்தச் சொன்னான். மீண்டும் இயக்கம் துரிதம். அவளுக்கு மிக எரிச்சலாக இருந்தது. சிறிது நேரத்தில் அவள் சோர்வுற்றுப் படுத்தாள் அவன் மேலேயே. சட்டென அவளைப் புரட்டி அவன் மேலேறிப் புணர ஆரம்பித்தான். புணர்ந்து கொல்லும் ஆவேசம் அவன் கண்களில் அலைந்தது. அவளுடல் ஓரிடத்தில் நில்லாமல் நகரத் தொடங்கிய போது தரையில் ஊன்றியங்கிய தன் கரங்களை அவளது இரு கைகளிலும் பற்றியழுத்திப் பிடித்துக்கொண்டு இயங்கத் தொடங்கினான். மிருக வெறி அவன் உறுமலில் கசிந்து கொண்டிருந்தது. அவளுக்கு அவனது சிலம்பாட்டத்தின்போது எழும் ஆவேசம்தான் நினைவுக்கு வந்தது. அவளுடல் பயங்கரமான களைப்பில் பிசுபிசுத்தது. சில நிமிடங்களில் விலகிக் கவிழ்ந்தான். மூச்சற்ற மௌன வெளி அவள் அறையை அடைத்துக்கொண்டிருந்தது. அவள் தன் ஆடைகளை எடுக்க முனைந்தபோது காலால் – லாவகமாகத் தன் பக்கம் தள்ளிக்கொண்டான். அவள் ஆடைகளைக் கேட்டாள். அப்படியே படுத்துக்கொள்ளுமாறு கூறினான். உடலைக் குறுக்கி மூலையில் அமர்ந்த அழத் தொடங்கினாள். ரசாக்கிற்குச் சற்று நிம்மதியாக இருந்தது. அவன் எதையும் கண்டுகொள்ளாதவன்பே கூரையை வெறித்துக் கிடந்தான். பிறகு துணிகளைச் சுருட்டி அவள் மேல் விட்டெறிந்துவிட்டு வாசலுக்கு எழுந்து போனான் அவனுக்குச் சற்று நிம்மதியாக இருந்தது. வாரிக்கொண்ட ஆடைகளில் புதைந்தழுதாள். நிதானமாக அழுகை முடித்து ஒவ்வொன்றாய்ப் பூட்டிக்கொண்டாள். எங்காவது ஓடிவிட வேண்டும் போலிருந்தது. காசியின் ஞாபகம்தான் வந்தது. சட்டென அவள் மனம் தீவிரமான காத்திருப்பில் வலிக்கத் தொடங்கியது. ஒரே ஒரு அசமந்த கணம்தான் தேவையென்று பட்டது. ரசாக்கை நினைப்பதற்கே பயங்கரமாக இருந்தது. ரசாக் இனித் தன்னுடன் பழையபடி கொஞ்சிப் பேசவோ விளையாடிக் களிக்கவோ மாட்டான் என்பதாக உறுத்திக் கொண்டிருந்தது. இது இனிமேல் தினம் தினம் தொடரும் என அவள் மனம் பயமுறுத்திக்கொண்டிருந்தது. காசி கடைசிவரை தன்னை வைத்துக் காப்பாற்றுவானா என யோசித்துக் குழம்பினாள். வாசலில் கட்டிலில் ரசாக் படுத்திருப்பான் என எண்ணினாள். அவளும் தரையில் படுத்துருண்டு கொண்டாள். இனிப்பில் எதுவும் விஷமில்லை என்று விடியுமுன்பான உறக்கத்தின்போதுதான் அவள் முற்றாக உணர்ந்து கொண்டாள். இருவரும் பிரிந்து படுத்திருப்பதும் முன் இரவின் பயங்கரம் இனி எப்போதுமில்லை என்பதுபோல் மனம் நினைத்தது. ரசாக்கிடம் மன்னிப்புக் கேட்டு அழ வேண்டுமென்று நினைத்தாள்.

அப்போதைய இருளின்போது தன் பாதங்களை வருடும் உணர்வும் மெத்தென்ற தொடுகையுணர்வும் ரசாக்கிற்கு வந்தது. பூனை அவனை வாஞ்சையுடன் பார்த்துச் சப்தமிட்டது. அதை அலட்சியமாகத் தட்டிவிட்டுத் தூங்க எத்தனித்தான். அதன் மென்மையும் அழகும் அவனை வதைத்தன. ஆயினும் அதன் குணம் அவனுக்குப் பிடிக்கவில்லை . இவ்வுலகிலேயே நாய்தான் நன்றியுள்ளது என்று நினைத்தான். அப்பூனை அவனருகில் நெருங்கி நின்று தன் விருப்பத்தை உணர்த்தியது. அவனுக்கு அது தேவையாக இருந்தது. அவனும் அதைத் தடவிக் கொடுத்தான். கண்களைத் திறவாமலேயே கட்டித் தழுவினான். அவன் விரல் மேவிக் கலைவதில் பூனையின் உடல் விருப்பமாக நடுங்கியது. அவன் அதன் உயிர் அழுத்தத்தை உணர்ந்தான். அதன் கழுத்துப் பகுதி வந்தவுடன் காத்திருந்தவன் போல் அவன் காலைச் சுற்றி இழைந்தபடி வந்து கொண்டிருந்தது. சிலம்பக் கோலை உள்ளே சென்று எடுத்துவந்து பூனையின் நடுமுதுகில் வைத்து நீவி விளையாடினான். அது அவனைப் பழைய மிரட்சியுடன் பார்த்துக் கெஞ்சியது. காலால் மிக நுட்பமாகப் பூனையைப் புரட்டி சிலம்பக்கோலை உள் கழுத்தில் வைத்தான். அதன் நாடி துடிப்பதைக் கம்பின் வழி உணர்ந்தான். மிக லாவகமாகவும் நுட்பமாகவும் கம்பைத் தூக்கி வீசி முடித்தான். ஒரே ஒரு வீச்சுதான். அவன் எதிர்பார்த்ததுதான். எந்தச் சப்தமுமில்லாது அது மல்லாந்து படுத்துக் கிடந்தது. பிறகு நிதானமாக உள்ளே சென்று கத்தி எடுத்து வந்து சிலம்பக் கோலை இரண்டாக வெட்டி முறித்துப் பூனைமேல் வீசினான். நிதானமாக எழுந்து சென்று அமராவதியின் புடவை ஒன்றைக் கொண்டுவந்து தூக்கை ஏற்றிப் பூனையை மாட்டினான். அந்தரத்தில் நின்று கொண்டு தரையைக் குனிந்து பார்க்கும் ஒரு ஜீவனைப் போல அது தொங்கத் தொடங்கியது.

***

காசி அகாலத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தான். அவன் சைக்கிள் சப்தத்தைக் கேட்டபடி தந்திக் கம்ப இருளில் பஞ்சுப் பாதங்களுடன் காத்து நின்றது செம்பழுப்பு நிறப் பூனை. யாருமற்ற அத்தெருவின் குறுக்கே இடமும் வலமும் பயந்தபடி பார்த்துக்கொண்டு அவன் வீட்டுக்குள் நுழைந்தது. அவன் வீட்டுக் கிழவி போ போவென விரட்டினாள். அவள் மேல் பாய்ந்துவிடுவது போல் கத்தி முன்னங்கால்களை முன்னும் பின்னுமாய் அசைத்துப் பார்த்தது. அவன் கிழவியைச் சமாதானப்படுத்தி விட்டுப் பூனையை வாரிக்கொண்டு சாப்பாட்டில் அமர்ந்தான். அவனுடன் வெவ்வேறு விதமாய் முனகியும் கத்தியும் பேசிக்கொண்டிருந்தது. அதற்குத் தரையில் உணவு உருட்டி வைத்தான். அவனை விட்டு நழுவியோடி நாவால் தீண்டித் தின்னத் தொடங்கியது. பிறகு அவன் பின்புறத்தில் மெத்தென்று சாய்ந்து உரசி அமர்ந்தது. அவனுக்கு விருப்பமான குறுகுறுப்பாக இருந்தது.

அதிகாலை இருளில் ரசாக் தன் படுக்கைக்குள் நுழையும் பூனையை உணர்ந்தவனாய் கண் திறவாத விழிப்பில் வாரி மார்பில் போட்டுக்கொண்டு தடவிக்கொண்டிருந்தான். தன் பூப்பாதங்களை அவன் வெற்றுடல் மீது நடை பழகிக் காட்டியது. அவன் கட்டியணைத்தான். அது விருப்பமாகக் கத்தியது.

விடிந்தபின் ஆதியம்மாளின் குரலில் அது எழுந்து சுவரில் ஏறி அமர்ந்து கொண்டு கீழே நிகழும் குடும்பத்தை பார்த்துக்கொண்டிருந்தது.

– உயிர்மை (நவம்பர் 2003)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *