அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 12, 2021
பார்வையிட்டோர்: 3,395 
 

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

டாக்டர் வேறு ஒரு ‘பேஷண்டை’க் கவனிக்கப் போய் விட்டார்.

அக்காவும்,அத்திம்பேரும் ‘பாங்கு’க்கு வந்ததும் மூவரும் ‘பஸ் ஸ்டாண்டுக்கு’ வந்து ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிதமபரம் வந்து ‘ஹாஸ்பிடலு’க்கு வந்தார்கள்.

சாம்பசிவன் அப்பாவிடம் அவன் ‘பாங்க்லே’ இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஒரு லக்ஷ ரூபாயைக் கொடுத்தான்.ராமசாமி அந்தப் பணத்தை தன் கைப் பையில வைத்துக் கொண்டார்.

ஒரு மணி நேரம் கழித்து ‘நர்ஸ்’ பத்மா ரத்த பரிக்ஷ ‘ரிப்போர்ர்ட்டை’ டாக்டரிடம் காட்டினாள். டாகடர் அந்த ‘ரிபோர்ட்டை’ப் பார்த்து தன் புருவத்தை சுறுக்கினார்.டாகடர் அந்த ‘ரிப்போர்ட்டை’ கையிலே எடுத்துக் கொண்டு வந்து பத்மா ‘ரூமு’க்கு வந்து கவலையுடன் ”சார்,இவங்க சக்கரை ‘லெவலும்’,கொலஸ்ட்ரால் லெவலும்’ கொஞ்ச கூட குறையலையே.இந்த ‘கண்டிஷலே’ நான் அவங்க ளுக்கு இந்த ‘மேஜர் ஆபரேஷனை’ பண்றது ரொம்ப சரியே இல்லே.இன்னும் ஒரு நாள் பாத்துட்டு இவங்க ‘சுகர் லெவலும்’ ‘கொலஸ்ட்ரால் லெவலும்’ குறையலேன்னா,நான் ஆபரேஷனைத் தள்ளிப் போடாம,கடவுள் மேலே பாரத்தே போட்டு பண்ணீ விடறேன்” என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

“இன்னும் ஒரு நாள் பொறுத்துப் பாக்கலாம் பத்மா.உன் ‘சக்கரை லெவலும்’ ’கொலஸ் ட்ரால்’ ‘லெவலும்’ பகவான் ‘அனுக்கிஹத்தால்’ குறையட்டும்.அந்த டாக்டர் உனக்கு நல்ல படி ‘ஆபரேஷன்’ பண்ணி,உன் உடம்பு நன்னா ஆகணும்”என்று ராமசாமி கண்களில் கண்ணீர் மல்க சொன்னார்.

சாம்பசிவனும், ராதாவும்,சுந்தரும் ராமசாமி இடம் சொல்லிக் கொண்டு கிளம்பி சிவபுரிக்குப் போய் விட்டு,அடுத்த நாள் பத்து மணிக்கு வந்தார்கள்.

அம்மா ‘ரூமு’க்கு வந்ததும் சாம்பசிவன் “அம்மா,நீங்கோ இப்போ எப்படி இருக்கேள்.’ஹாஸ்பிட ல்’லே குடுத்த சாப்பாட்டே சாப்பிடேளா.நீங்கோ ரொம்ப சோர்வா இருகேளே” என்று அம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.ராதா எதிர் பக்கம் உட்கார்ந்துக் கொண்டு “அம்மா,நீங்கோ நிம்மதியா இருந்துண்டு வாங்கோ.உங்களுக்கு எல்லா ம் சரி ஆயி நீங்கோ ஆத்துக்கு சீக்கிரமா வந்திடுவேள்”என்று சொன்னாள்.

அந்த ‘ஹாஸ்பிடலில்’ பத்மாவுக்கு உப்பு குறைவான உணவைத் தான் கொடுத்து வந்தார்கள். ராமசாமி வேளா வேளைக்கு பிடிக்காமல் ஏதோ கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

அடுத்த நாள் எடுத்த பத்மா ரத்த ‘ரிப்போர்ட்டில்’ சக்கரை ‘லெவலும்’’கொலஸ்ட்ரால் லெவலும்’ மிகவும் கொஞ்சமாகத் தான் குறைந்து இருந்தது டாக்டர் பத்மாவை ‘செக் அப்’ பண்ணிணார்.பத்மா முன்னே விட இன்னும் சிரமப் பட்டு மூச்சு விட்டுக் கொண்டு இருந்தாள்.அந்த டாக்டர் “நாம இனிமே ‘டிலே’ பண்றதிலே எந்த அர்த்தமும் இல்லே.இவங்களுக்கு நான் ‘ஹார்ட் ஆபரேஷனை’ பண்ணி முடிவு பண்ணீ இருகேன்.இவங்க முன்னே விட மூச்சு விட ரொம்ப சிரமப் படறாங்க” என்று சொல்லி அங்கே இருந்த ‘நர்ஸை’க் கூப்பி ட்டு “இவங்களே ‘ரெடி’ பண்ணீ ஆபரேஷன் தியேட்டருக்கு இட்டுக் கிட்டு வாங்க” என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

ராமசாமி பத்மாவைக் கவனித்தார்.அவள் முன்னே விடஇப்போ அதிகமாகவே மூச்சு விடச் சிரமப் பட்டு வந்தாள்.சாம்பசிவன் ”அப்பா,டாக்டர் சொல்றது சரியா இருக்கு.அம்மா முன்னே விட இப்போ ரொம்பவே மூச்சு விட சிரமப் படறா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ‘டியூட்டி நர்ஸ்’ “நீங்க எல்லாம் வெளியே போய் இருங்க.நான் இவங்களே இன்னும் ஒரு அரை மணி நேரத்துக் குள்ளே ‘ஆபரேஷனுக்கு’ ரெடி பண்ணீ,ஆபரேஷன் தியேட்டருக்கு அழைச்சுக் கிட்டுப் போவணும்” என்று சொன்னாள்.

“பத்மா,நீ சுவாமியே வேண்டிண்டு ‘ஆபரேஷனுக்கு’ப் போ.¨தா¢யமா இருந்துண்டு வா. உனக்கு ஒன்னும் ஆகாது.நாங்களும் ‘ஆபரேஷன் தியேட்டரு’க்கு வெளீயே உக்காந்துண்டு சுவாமியே வேண்டிண்டு வறோம்” என்று ராமசாமி சொல்லி விட்டு,எல்லோரையும் அழைத்துக் கொண்டு ‘ரூமை’ விட்டு வெளியே வந்தார்.

எல்லோரும் வெளியே போனதும் அந்த ‘நர்ஸ்’ பத்மாவைப் பார்த்து “நீங்க ‘பாத் ரூமு’க்குப் போய் விட்டு வாங்க.அப்புறமா ‘பாத் ரூம்’ போக முடியாது.நான் உங்க ‘டிரஸ்ஸை’ மாத்தி,உங்களே ‘ஆபரேஷன் கட்டில்லே மாத்தி ‘ஆபரேஷன் தியேட்டருக்கு’க் கொண்டு போகணும்”என்று சொன்னது ம் பத்மா “சரிங்க.நான் ‘பாத் ரூம்’ போயிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு,மெல்ல அவள் படுத்துக் கொண்டு இருந்த கட்டிலில் இருந்து கீழே இறங்கி ‘பாத் ரூமு’க்குப் போனாள்.

பத்மா ‘பாத் ரூமில்’ இருந்து வந்ததும் ‘நர்ஸ்’ பத்மாவுக்கு ஆபரேஷன் உடையைப் போட்டு. பத்மாவை இன்னொரு ‘நர்ஸ்’ உதவியுடன்,’ஆபரேஷன்’ கட்டிலில் மாற்றி,இரண்டு ‘நர்ஸ்’களும் பத்மாவை ‘ஆபரேஷன் தியேட்டரு’க்கு அழைத்து போனார்கள்.

‘ஆபரேஷன் தியேட்டர்’ வாசலில் போட்டு இருந்த ‘சேர்’களில் உட்கார்ந்துக் கொண்டு, ராமசாமியும்,சாம்பசிவனும்,ராதாவும் சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.

பத்மாவுக்கு ஆறு மணி நேரம் ‘ஆபரேஷன்’ நடந்ததது.

‘ஆபரேஷனை’ப் பண்ணி விட்டு டாக்டர் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்.

ராமசாமியும்,மற்ற மூவரும் எழுந்து நின்றார்கள்.

டாக்டர் வந்து ராமசமியைப் பார்த்து “உங்க சம்சாரத்துக்கு ஆபரேஷன் நல்ல படியா முடிஞ்சதுங்க” என்று சொன்னார்.உடனே ராமசமி தன் கையைக் கூப்பி “ரொம்ப நன்றி டாக்டர்” என்று கண்க ளில் கண்ணீர் வழியச் சொன்னார்.

“இன்னும் கொஞ்ச நேரத்லே அவங்களே I.C.U.க்கு ‘ஷிப்ட்’ பண்ணீ விடுவாங்க.அவங்களுக் கு மயக்கம் தெளிய இன்னும் ரெண்டு நேரமாவது ஆவும்.அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சவுடன் I.C.U.வில் இருக்கும் ‘நர்ஸ்’ உங்க கிட்டே வந்து சொல்லுவாங்க.அப்போ நீங்க ஒருத்தர் ஒருத்தரா ரெண்டு நிமிஷத்துக்கு, அவங்களே I.C.U.க்குள் போய் பார்த்துட்டு வரலாம்.அங்கே நீங்க ஒன்னும் அதிகமா பேசக் கூடாது.மத்த ‘சீரியஸ் பேஷன்ட்டுகளு’க்கு தொந்தரவா இருக்கும்.அவங்களே நான் இன்னைக்கு சாயகாலம் வரை ‘அப்சர்வ்’ பண்ணி விட்டு,அவங்க ‘கண்டிஷன் நார்மலா’ இருந்தா, நான் அவங்களே சாயங்காலம் ‘ரூமி’ல் கொண்டு வந்து விட்டு விடுவேன்“ என்று சொல்லி விட்டுப் போனார் டாக்டர்.

உடனே சாம்பசிவன் அந்த டாக்டரைப் பர்த்து “உங்களுக்கு ரொம்ப நன்றி டாக்டர்” என்று தன் கையைக் கூப்பி சொன்னான்.

விதி யாரை விட்டது. பத்மாவை விட!!

நான்கு மணி நேரம் ஆகியும் பத்மாவுக்கு மயக்கம் தெளியவே இல்லை.அங்கே இருந்த ‘நர்ஸ்’கள் பத்மாவை இப்படியும் அப்படியும் அசைத்துப் பார்த்தார்கள்.பத்மா கண்ணே முழித்தேப் பார்க்கவில்லை.பயந்துப் போன ஒரு ‘நர்ஸ்’ இன்னொரு ‘நர்ஸிடம் “நான் இவங்க ‘கண்டிஷனை’ டாக்டர் கிட்டே போய் சொல்லிட்டு வறேன்”என்று சொல்லி விட்டு ஓடிப் போய் ‘ஆபரேஷன்’ பண்ண டாக்டரிடம்” டாக்டர்,அவங்களே என்ன அசைச்சாலும்,அவங்க கண்ணே முழிக்காம இருக்காங்க” என்று பயந்துப் போய் சொன்னாள்.

உடனே டாக்டர் தன் ‘ஸ்டெதஸ்கோப்பை’ எடுத்துக் கொண்டு அந்த ‘நர்ஸ¤’டன் வேகமாக ‘ஆபரேஷன் தியேட்டருக்குள்’ போனார்.

நான்கு மணி நேரம் ஆன பிறகு டாக்டரும் ‘நர்ஸ¤ம்’ வேகமாக ஆபரேஷன் தியேட்டருக்குள் போவதைப் பார்த்து ராமசாமியும்,சாம்பசிவனும்,ராதாவும்,சுந்தரமும் பயந்துப் போய் விட்டார்.

ராமசாமி,மற்ற மூவரையும் பார்த்து “’ஆபரேஷன்’ ஆயி நாலு மணி நேரம் ஆறது.பத்மாவுக்கு மயக்கம் தெளிஞ்சதா இல்லையான்னு தெரியலே.ஆனா ‘ஆபரேஷன்’ பண்ண டாக்டர் வேகமா அந்த ‘நர்ஸோடு’ மறுபடியும் ‘ஆபரேஷன் தியேட்டருக்கு’ள்ளே போறாறே. என்னவா இருக்கும்.அந்த டாக்டர் பத்மாவுக்கு ரெண்டு மணி நேரத்லே மயக்கம் தெளிஞ்சுடும்ன்னு தானே சொன்னார்” என்று கவலை யுடன் கேட்டார்.

மற்ற மூவரும் ராமசாமி கேட்டதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் நினைத்துக் கவலைப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.

ஆபரேஷன் தியேட்டருக்குள் போன டாக்டர் பத்மாவை தன் ‘ஸ்டெதஸ்கோப்பை’ வைத்து மறுபடியும் மறுபடியும் பரிசோதனைப் பண்ணினார்.அந்த I.C.U.விலும் அவர் முகத்தில் வேர்வை தெரிந்தது.அவர் ‘ஸ்டெதஸ்கோப்பை’ கழுத்தில் இருந்து எடுத்து விட்டு,அங்கே இருந்த ‘நர்ஸ்’களிடம் “இவங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இறந்து விட்டு இருக்காங்க” என்று சொல்லி விட்டு, ‘ஆபரேஷன் தியேட்டரை’ விட்டு வெளியே வந்தார்.

“ரொம்ப சாரி சார்.அவங்க மயக்கம் தெளியாம,ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி இறந்து விட்டாங்க” என்று அந்த டாக்டர் ராமசாமி இடம் சொல்லி விட்டு நின்றுக் கொண்டு இருந்தார்.

டாக்டர் சொன்னதைக் கேட்ட ராமசாமிக்கும்,சாம்பசிவனுக்கும்,ராதாவுக்கும்,சுந்தரதிற்கும் உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.

“டாக்டர்,நீங்கோ பத்மாவுக்கு நல்லபடியா ‘ஆபரேஷன்’ முடிஞ்சுதுன்னு சொன்னேள்.அப்படி இருக்கும் போது எப்படி பத்மா செத்துப் போய் இருக்க முடியும். உண்மையே சொல்லுங்க.நீங்கோ ‘ஆபரேஷனை’ சரியா பண்ணேளா.நீங்கோ ‘ஆபரேஷனே’ சரியா பண்ணீ இருந்தா,எப்படி பத்மா செத்துப் போய் இருப்பா” என்று அழுதுக் கொண்டே கேட்டார் ராமசாமி.

“மிஸ்டர் ராமசாமி,எந்த டாக்டரும் ‘பேஷண்டை’ சாக அடிக்க மாட்டாங்க. ‘பேஷண்டே’ காப்பா த்தறது தான் அவங்க வேலே.உங்க சம்சாரம் ரெண்டு நாளா ஒன்னும் சாப்பிடாம ரொம்ப ‘வீக்கா’ இருந்து இருக்காங்க.அவங்க மயக்க மருந்திலே இருந்ததாலே,அவங்களுக்கு தெம்பு வறாம இறந்து விட்டாங்க.ஒரு ’பேஷண்ட்க்கு’ ‘ஆபரேஷனையும்’, மயக்க மருந்தையும் தாங்கிக்கிற சக்தி இல்லே ன்னா அவங்க இப்படி தான் இறந்துப் போயிடுவாங்க“ என்று வருதத்துடன் சொன்னார் டாகடர்.

“இனிமே இந்த டாக்டரைக் கேக்கறதிலே ஒரு பிரயோஜனும் இல்லே.அவ சொன்னதையே தான் சொல்லிண்டு இருப்பார்.நமக்கு எது உண்மைன்னு தெரியாதே’ என்று நினைத்தார் பரமசிவம்.

“என் பத்மா,என்னே விட்டுப் போயிட்டா.இனிமே உண்மை என்னன்னு தெரிஞ்சிண்டு நான் என்ன பண்ணப் போறேன்.ஈஸ்வரா,உனக்கே இது நியாயமாப் படறதா.இனிமே நான் தனியா இந்த ‘லோகத்லே’ எப்படி இருந்துண்டு வரப் போறேன்” என்று ராமசாமி கதறி அழுதுக் கொண்டு இருந்தார்.

‘அம்மா,நீங்கோ என்னையும்,அப்பாவையும் இப்படி தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டே ளே.இனிமே நாங்க ரெண்டு பேரும் என்னப் பண்ணப் போறோம்” என்று தலையிலே அடித்துக் கொண்டு அழுதான் சாம்பசிவன்.

“அம்மா,எங்களே எல்லாம் இப்படி தவிக்க வீட்டு போக உங்களுக்கு எப்படிம்மா மனசு வந்தது. எனக்கு ஒரு குழந்தே போறந்தா அதே பாக்கக் கூட நீங்கோ இல்லையே.அந்தக் குழந்தே என்னேப் பாத்து கேட்டா நான் என்ன சொல்லப் போறேன்.நீங்கோ ஏன் எங்களே எல்லாம் இப்படி தவிக்கும் படி விட்டுட்டு போயிட்டேள்” என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் ராதா.

ராமசாமி கண்ணீல் இருந்து தாரை தாரையாக வழிந்துக் கொண்டு இருந்தது.சுந்தரும் அழுதுக் கொண்டு இருந்தான்.

“டாக்டர்,நான் ஆபரேஷனுக்கு ஒரு லக்ஷ ரூபா கட்டினேன். பத்மா தான் செத்துப் போயிட்டா. அந்த பணத்தேயாவது நீங்கோ கொஞ்சம் ‘ரீபண்ட்’ பண்ணுங்களேன்”என்று ராமசாமி கேட்டதும் “அந்தப் பணத்தே ‘ஹாஸ்பிடல்’ நிர்வாகம் ‘ரீபண்ட்’ பண்ண மாட்டாங்க சார்” என்று சொல்லி விட்டு போய் விட்டார் அந்த டாக்டர்.

கொஞ்ச நேரம் ஆனதும் அந்த டாக்டர் ராமசாமியிடம் வந்து “சார்,நான் இந்த ‘ஹாஸ்பிடல் டைரக்டர்’ கிட்டே பேசினேன்.அவர் பரிதாப் பட்டு,உங்களுக்கு எங்க ‘ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸை’ இலவசமா தர ஒத்துக் கிட்டு இருக்கார்.நீங்க உங்க சம்சாரத்தின் ‘பாடியே’ எங்க ‘ஆம்புலன்ஸ்லே சிவபுரிக்குக் கொண்டு போங்க.இந்த ஒரு உதவியேத் தான் என்னால் உங்களுக்குப் பண்ண முடியும்” என்று சொன்னார்.

ராமசாமி டாக்டரைப் பார்த்து” ரொம்ப நன்றி டாக்டர்” என்று கையைக் கூப்பி சொல்லி விட்டு அழுதுக் கொண்டே இருந்தார்.

I.C.U.வில் இருந்து பத்மா ‘பாடியை’ ஒரு வெள்ளைத் துணியால் முழுக்க மூடி விட்டு, ஒரு கட்டிலில் கொண்டு வந்தார்கள்.பத்மாவின் ‘பாடியை’ அந்த ‘ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ்’ வண்டியிலே ஏற்றிக் கொண்டு அழுதுக் கொண்டே இருந்தார் ராமசாமி.

மற்ற மூவரும் அழுதுக் கொண்டே அந்த ‘ஆம்புலன்ஸ்லே’ ஏறிக் கொண்டு சிவபுரிக்கு வந்தார்கள்.

அந்த ‘ஆம்புலன்ஸில்’ இருந்து பத்மாவின் ‘பாடி’யை ராமசாமி வீட்டுக்குள் கொண்டு வைத்து விட்டு,‘ஆம்புலன்ஸை’ சிதமபரத்திற்கு ஓட்டிக் கொண்டு போய் விட்டார்கள் அதில் வந்த ஆட்கள்.

அது வரைக்கும் ஒன்னும் சொல்லாமல் அழுதுக் கொண்டு இருந்த ராமசாமி “பத்மா,உன் உடம்பு சின்னதா இருக்கும் போதே, நீ என் கிட்டே சொல்லி இருந்தேன்னா,நான் உன்னே காப்பாத்தி இருப்பேனே.நீ உன் வியாதியே ரொம்ப முத்த விட்டுட்டு,அப்புறமா தான் என் கிட்டே சொன்னே. எல்லாம் என் போறாத வேளே,நான் இந்த ‘லோகத்லே’ தனியா இருந்துண்டு வரணும்ன்னு என் தலை யிலே அந்த பகவான் எழுதி இருக்காரே.விதியே யாரால் மாத்த முடியும்.இப்போ என்னே விட்டுட்டு சந்தோஷமா போயிட்டே.இப்போ நானும் சாம்பசிவனும் அனாதையா ஆயிட்டோம்.அவன் ஒரு குருக்கள் வேலேக்குப் போறதே,நீ பாக்காமலே உன் ‘பரகோலம்’ போயிட்டே.என்ன அவசரம் உனக்கு” என்று சொல்லி தலையிலே அடித்துக் கொண்டு அழுதார்.

அப்பாவைக் கட்டிக் கொண்டு “அழாதீங்கோப்பா.இப்போ எனக்கும் சாம்புவுக்கு நீங்கோ மட்டும் தான் இருக்கேள்.நீங்கோ இந்த மாதிரி ரொம்ப நேரம் அழுதா உங்க உடம்புக்கு ஆகாது” என்று சொல்லித் தேற்றி வந்தார்கள் சாம்பசிவனும்,ராதாவும்.

ராதா தன் அம்மா தவறிப் போன விஷயத்தை தன் மாமனருக்கும்,மாமியாருக்கும் தெரிவித் தாள்.உடனே கணேசனும் கமலாவும் ராமசாமி வீட்டுக்கு வந்தார்கள்.அழுதுக் கொண்டு இருந்த ராமசாமியையும்,ராதாவையும்,சாம்பசிவனையும் துக்கம் விசாரித்து விட்டு நின்றுக் கொண்டு இருந் தார்கள்.

விஷயம் கேள்விப் பட்டு ராமசாமி நிலங்களில் வேலை செய்து வந்த எல்லா கூலிக்காரரகளும் ராமசாமியின் வீட்டுக்கு வந்து பத்மாவின் ‘பாடி’க்கு வணக்கம் சொல்லி விட்டு,வாயைப் பொத்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராதா தன் கணவனையும்,மாமனாரையும், மாமியாரையும் வீட்டுக்குப் போக சொல்லி விட்டு,அப்பாவோடவும்,தம்பியோடவும் அந்த வீட்டிலே தங்கி இருந்தாள்.

விஷயம் பரவியதும் ராமசாமியின் நண்பர்களும்,வரதனும்,கேசவனும்,தூரத்து உறவினர் களும் ராமசமியின் வீட்டுக்கு வந்து ராமசாமியையும்,ராதாவையும்,சாம்பசிவனையும் துக்கம் விசாரித்து விட்டு,கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போனார்கள்.

விஷயம் கேள்விப் பட்டு.வரதனும்,கேசவனும் ஒரு ‘கேனில்’ காபிப் போட்டுக் கொண்டு வந்து எல்லோருக்கும் குடிக்க ஒரு ‘கப்’ ‘காபி’யேக் கொடுத்தார்கள்.

பிறகு ராமசாமியைப் பார்த்து “மாமா,இன்னிலே இருந்து ‘புண்யாவசனம்’ வரைக்கும் எல்லா நாளுக்கும், நாங்க உங்களுக்கு சாப்பாடுப் பண்ணித் தறோம்” என்று சொன்னார்கள்.

உடனே ராமசாமி “ரொம்ப நன்றிப்பா.எல்லா செலவுக்கும் என்ன பணம் ஆச்சுன்னு நீங்க எனக்குச் சொல்லுங்கோ. ‘புண்யாவசனம்’ ஆனதும்,நான் உங்களுக்கு அந்தப் பணத்தே குடுத்து விடறேன்.சமயத்லே நீங்கோ ரெண்டு பேரும் இந்த பொ¢ய உதவியே பண்ணீ இருக்கேள்.உங்க ரெண்டு பேருக்கும் என் நன்றிப்பா”என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

உடனே வரதன் “மாமா,நீங்களும் மாமியும்,நாங்க ரெண்டு பேரும் கஷ்டத்லே இருந்தப்ப பண்ண உதவியே விட நாங்க பண்ற உதவி ஒன்னும் பொ¢சே இல்லே.இந்த மாதிரி சமயத்லே நாங்க ரெண்டு பேரும் இந்த உதவியே பண்ணியே ஆகணும் மாமா.அது எங்க கடமை” என்று அழுதுக் கொண்டே சொன்னார்கள்.

ராமசாமி வீட்டு வாத்தியாருக்கு ‘போன்’ பண்ணி,பத்மா ‘தவறி’ப் போன சமாசாரத்தை அழுது க் கொண்டே சொல்லி விட்டு,அவரை வீட்டுக்கு வரச் சொன்னார்.

ஒரு மணி நேரத்தில் வாத்தியார் ராமசாமி வீட்டு வந்தார்.வாத்தியார் வந்ததும் ராமசாமி,சாம்பசி வனை அழைத்துக் கொண்டு, மயானத்துக்கு போய், பத்மாவின் ‘பூத உடலை’ ‘தகனம்’ பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தார்.

வீட்டுக்கு வந்த இருவரும் குளித்து விட்டு வந்தார்கள்.வரதன் கொண்டு வந்து வைத்த ‘டிபனை’ ராமசாமியும், சாம்பசிவனும்,ராதாவும் அழுதுக் கொண்டே சாப்பிட்டார்கள்.

அடுத்த நாள் சாம்பசிவனைப் பார்த்து “இன்னும் பன்னண்டு நாள் செலவுக்கு பணம் வேணும். நான் ஒரு ‘செக்’கைத் தறேன்.நீ பாங்குக்குப் போய் பணத்தே ‘ட்ரா’ பண்ணீண்டு வா”என்று சொல்லி ஒரு ‘செக்’கை எழுதி சாம்பசிவனிடம் கொடுத்தார்.சாம்பசிவன் அந்த ‘செக்’கை எடுத்துக் கொண்டு போய், ‘பாங்க’ திறந்ததும் பணத்தை வாங்கிக் கொண்டு வந்தான்.
ராமசாமி ஒன்பது நாள் காரியங்களைப் பண்ணி முடித்தார்.

‘பத்தாம் நாள்’ கணேசன் தம்பதிகளும்,பத்மா இறந்துப்போன அன்று வந்து இருந்து உறவுக் காரர்களும் வந்து இருந்தார்கள்.

பன்னிரண்டு நாள் காரியங்கள் ஆனதும்,பதி மூன்றாம் நாள் வாத்தியார் ராமசாமியின் வீட்டை ‘புண்யாவசனம்’ செய்தார்.இதற்கும் கணேசன் தம்பதிகளும்,பத்மா இறந்துப்போன அன்று வந்து இருந்த உறவுக்காரர்களும் வந்து இருந்தார்கள்.வரதனும்,கேசவனும் எல்லோருக்கும் கல்யாண சமையல் பண்ணீப் போட்டார்கள்.

ராமசாமி வாத்தியாருக்கு எல்லா நாள் காரியத்திற்கும்,’புண்யாவசனத்துக்கும்’ஆன செலவைக் கேட்டு அவருக்குக் கொடுத்து அனுப்பினார்.

சாப்பிட்ட பிறகு எல்லோரும் ராமசாமி இடம் சொல்லிக் கொண்டுப் போனார்கள்.

ராதாவும்,சுந்தரமும்,கணேசன் தம்பதிகளும் ராமசாமி இடமும்,சாம்பசிவன் இடமும் சொல்லிக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனார்கள்.

ராமசாமி வரதனையும்,கேசவனையும் கூப்பிட்டு,”இந்த பதி மூனு நாளைக்கும் சாப்பாட்டுக்கும் ‘காபி’க்கும் ‘டிபனு’க்கும் மொத்தம் எவ்வளவு நான் தரணும்.உங்களுக்கு ஆன மொத்த செலவை யும் சரியா சொல்லுங்கோ.ஒரு ரூபாய் கூட குறைக்க வேணாம்.நீங்கோ பண்ண சா£ர உபகாரமே எனக்குப் போதும்” என்று கண்களில் கண்ணீர் மல்கச் சொன்னார்.

வரதனுக்கு நன்றியை சொல்லி விட்டு,அவர் கேட்ட பணத்தை அவருக்கு கொடுத்து அனுப்பி னார் ராமசாமி.

புண்யாவசனம்’ ஆன மறு நாள் ராதா அப்பாவிடமும்,தம்பி இடமும் சொல்லிக் கொண்டு தன் வீட்டுக்குக் கிளம்பத் தயாரானாள்.

“அப்பா,அம்மா இல்லாத இந்த ஆத்லே,இனிமே நீங்களும் சாம்பசிவனும் தனியா இருந்துண்டு வரணும்ன்னு நினைச்சா நேக்கு அழுகை அழுகையா வறது.நான் முடிஞ்சப்ப உங்களையும்,சாம்பசி வனையும் ஒரு எட்டு வந்து பாத்துட்டுப் போறேன்,நீங்கோ உங்க உடம்பே ஜாக்கிறதையா பாத்துண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு அப்பாவுக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணீனாள் ராதா.

ராமசாமி தன் பீரோவைத் திறந்து பத்மா போட்டுக் கொண்டு இருந்த நகைகளையும்,கட்டி இருந்த பட்டு புடவைகளையும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார்.

அவர் ராதவைப் பார்த்து “அம்மா ராதா இந்த நகைகள் எல்லாம் அம்மா போட்டுண்டு இருந்தது. புடவை எல்லாம் அவ கட்டிண்டு இருந்தது. நீ நகைகளையும் புடவைகளையும் சரி பாதியாப் பிரிச்சு எடுத்துண்டு,மீதி நகைகளையும் புடவைகளையும் என்னிடம் குடுத்துட்டுப் போ.நான் அந்த நகைகளையும்,புடவைகளையும் சாம்பசிவன் கல்யாணம் பண்ணீண்டதும்,அவன் பொண்டாட்டிக்குத் தர சௌகா¢யமா இருக்கும்” என்று கண்களில் கண்ணீருடன் சொன்னார்.

அப்பா சொன்னதைக் கேட்டு சாம்பசிவன் கண்களில் கண்ணீர் முட்டியது.

அவன் தன் மனதில் ‘அப்பா எவ்வளவு பார பக்ஷம் இல்லாம அம்மா போட்டு இருந்த நகைகளையும்,புடவைகளையும் பிரிச்சுக் குடுத்து இருக்கார்’ என்று நினைத்தான்

உடனே ராதா அழுதுக் கொண்டே அப்பா சொன்னது போல நகைகளையும்,புடவைகளையும் சரி பாதியாகப் பிரித்து,ஒரு பாக நகைகளையும்,புடவைகளையும் அவள் எடுத்துக் கொண்டு,மிதி நகைகளையும்,புடவைகளையும் அப்பாவிடம் கொடுத்தாள்.ராமசாமி அந்த நகைகளையும் புடவை களையும் மறுபடியும் பீரோவிலே வைத்தார்.

கண்களில் கண்ணீர் முட்ட ராதா நகைகளையும்,புடவைகளையும் தன் பெட்டியில் வைத்துக் கொண்டு,அவள் வீட்டுக்கு கிளம்பிப் போக ரெடி ஆனாள்.“அம்மா ராதா,நீ உங்க ஆத்துக்காரோட வும்,மாமனார்,மாமியா ரோடவும் சந்தோஷமா இருந்துண்டு வா.நாங்க ரெண்டு பேரும் எங்களே பாத்துக்கறோம்” என்று சொல்லி ராதாவை எழுப்பி முதுகிலே தட்டிச் சொன்னார் ராமசாமி

வீட்டுக்கு வந்த பத்மா அப்பா வீட்டில் இருந்து அவள் பங்காக அவள் கொண்டு வந்த நகை களையும்,புடவைகளையும் ஆத்துக்காரர் இடமும்,மாமியார் இடமும்,மாமனார் இடமும் காட்டினாள்.

ராமசாமிக்கு பத்மா இல்லாத அந்த வீடு சூன்யமாக இருந்தது.

ராமசாமியும்,சாம்பசிவனும் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டு வந்தார்கள்.

பத்மா இறந்து சரியாக ஒரு வருடம் ஆகியது.ராமசாமி ஆத்து வாத்தியாரை வைத்துக் கொண்டு இறந்துப் போன மணைவி பத்மாவுக்கு ‘வருஷாப்திகத்தை’ பண்ணி முடித்தார்.

ராமசாமி சாம்பசிவனைப் பார்த்து “சாம்பு,நீ என்னோடு இன்னும் எத்தனை நாளைக்கு இருந்து ண்டு வரப் போறே.அம்மா ஆசைப் பட்டா மாதிரியும்,நீயும் ஆசைப் பட்டா மாதிரியும்,நீ சிதம்பரத்துக் கு போய்,அங்கே யாராவது ஒரு குருக்களைப் பாத்து,உன் ஆசையே சொல்லி,சிதம்பரம் நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் ஆகிற வழியேப் பாறேன்” என்று சொன்னார்.

“அப்பா நான் உங்களே தனியா விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்.நானும் உங்க கூடவே இருந்துண்டு வறேன்.நீங்கோ வேண்டாம்ன்னு மட்டும் சொல்லிடாதீங்கோ” என்றூ அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

“சாம்பு,இது என் தலை எழுத்து,உன் அம்மா என்னேயும் உன்னேயும் இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போகணும்ன்னு நாம ரெண்டு பேரும் அந்த பகவான் கிட்டே வரம் வாங்கிண்டு வந்து இருக்கோம்.எனக்கு வயசு ஒன்னும் அப்படி ஜாஸ்தியா ஆகலே.நான் விவசாயத்தையும், வீட்டு சமையல் வேலையையும் தனியா செஞ்சிண்டு வருவேன்.நீ வளந்து வறப் பையன்.நீ ஆசைப் பட்டா மாதிரி சிதம்பரத்துக்குப் போய் அந்த நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் வேலேக்கு முயற்சிப் பண்ணி,அந்த வேலேயே வாங்கற வழியேப் பாரு.உன் அம்மாவும் நீ இந்த குருக்கள் வேலே செய்ய ணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டா.உனக்காக இல்லாட்டாலும்,’பரலோகம்’ போயிட்ட உன் அம்மா வோட ஆசையே பூர்த்தி பண்ணவாவது,நீ சிதம்பரம் நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் வேலேயே பண்ணீண்டு வரணும்.நீ சிதம்பரத்துக்கு போய் வாப்பா” என்று கண்களீல் கண்ணீர் முட்ட சொன்னார் ராமசாமி.

சாம்பசிவன் ரொம்ப நேரம் யோஜனைப் பண்ணி விட்டு “நீங்கோ சொல்றது ரொம்ப சரி. எனக் காக இல்லாவிட்டாலும்,நான் அம்மாவுக்காகவாவது சிதம்பரம் போய் அந்த நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் வேலேயேத் தேடிண்டு வறேன்.நான் சிதம்பரம் நடராஜர் கோவிலிலே ஒரு குருக்கள் ஆனா த் தான் அம்மாவோட ஆத்மா சாந்தி அடையும்”என்று கண்களில் கண்ணீர் தளும்பச் சொன்னான். அப்பாவிடம் சொல்லி விட்டு சாம்பசிவன் அக்கா,அத்திம்பேர் வீட்டுக்குக் கிளம்பினான்.

சாம்பசிவன் அக்கா,அத்திம்பேர் வீட்டுக்குப் போய் “நான் சிதம்பரம் போய் அந்த நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் வேலேயேத் தேடிக் கொள்ளப் போறேன்.உங்க எல்லோருடைய ஆசீர்வாத மும் எனக்கு பரிபூரணமா இருந்து, யாரோட உதவியாலேயாவது எனக்கு ஒரு குருக்கள் வேலே கிடை க்கணும்” என்று சொல்லி விட்டு,அத்திம்பேர் காலிலும்,கணேசன் காலிலும் விழுந்து நமஸ்காரம் பண்ணீ விட்டு ‘அபிவாதயே’யேச் சொன்னான்.

அவர்கள் இருவரும் “எங்க ரெண்டு பேரோட ஆசிர்வாதம் உனக்கு என்னைக்கும் உண்டு சாம்பசிவா.நீ சிதம்பரத்துக்குப் போய் அந்த குருக்கள் வேலேக்கு ‘ட்ரை’ பண்ணு.உனக்கு அந்த வேலே நிச்சியமாக் கிடைக்கும்” என்று சொல்லி அனுப்பினார்கள்.சாம்பசிவன் வீட்டுக்கு வந்து அத்திம்பேரும்,ராதாவின் மாமனாரும் சொன்னதை அப்பாவிடம் சந்தோஷமாச் சொன்னான்.
ஒரு நல்ல நாளாகப் பார்த்து சாம்பசிவன் அப்பாவிடன் “அப்பா,நான் சிதம்பரம் போய் வறேன். நீங்கோ இங்கே தனியா இருந்துண்டு வறப் போறேள்.உங்க உடம்பை ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வாங்கோ.ஏதாவது அவசம்ன்னா அத்திம்பேருக்கு ‘போன்’ பண்ணீ சொல்லுங்கோ.அவர் உடனே வருவார்” என்று சொல்லி விட்டு ஒரு பையிலே தன் துணி மணிகளை எல்லாம் எடுத்துண்டு வைத்துக் கொண்டு,சுவாமி ‘ரூமு’க்குப் போய் சுவாமிக்கு தனக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி விட்டு,ஒரு நமஸ்காரத்தைப் பண்ணினான்.

“சாம்பு,நீ தனியா சிதம்பரம் போறே.அங்கே உனக்கு யாரையும் தெரியாது.நான் உன் செலவு க்கு ஒரு இருபதாயிரம் ரூபாய் தறேன்.அதே ஜாக்கிறதையா வச்சுக்கோ.வேளா வேளைக்கு நன்னா சாப்பிடு.பட்டினி எல்லாம் இருக்காதே.நான் குடுத்த பணம் போறலேன்னா மறுபடியும் சிவபுரிக்கு வா. இன்னும் ரெண்டு வாரத்லே எனக்கு எல்லா நஞ்சை நிலத்திலேயும் நெல் சாகுபடி ஆயி கையிலே, பணம் இருக்கும்.எனக்குப் பணத் தட்டுபாடு இருக்காது.என் ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும். உன் அம்மாவும் ஆசீர்வாதமும் இருக்கும்.நீ சிதம்பரம் போய் வா” என்று சொன்னார் ராமசாமி.

‘பஸ் ஸ்டாண்டுக்கு’ வந்து சிதம்பரம் போகும் ஒரு ‘மினி பஸ்’ ஏறி உட்கார்ந்துக் கொண்டான். அவன் மனம் யோஜனைப் பண்ணியது.‘சிதம்பரம் போய் நாம என்ன பண்ணப் போறோம். யாரைப் பாக்கப் போறோம்.நமக்கு சிதம்பரத்லே யாரையும் தெரியாதே. சிதம்பரத்லே நாம எங்கே தங்கறது .எப்படி ஒரு குருக்கள் ஆகப் போறோம்’ என்று பல வித யோஜனைகள எல்லாம் பண்ணிக் கொண்டு இருந்தான்.

சாம்பசிவன் ஏறி வந்த ‘மினி பஸ்’ சிதம்பரம் வந்து சேர்ந்தது.சாம்பசிவன் தன் துணிப் பையை எடுத்துக் கொண்டு ‘பஸ்ஸை’ விட்டு கீழே இறங்கி,’பஸ் ஸ்டாண்டை’ விட்டு வெளியே வந்து சிதம் பரம் நடராஜர் கோவில் இருக்கும் பிராதன வழியில் நடந்து வந்துக் கொண்டு இருந்தான்.

அவன் கண்ணில் நடராஜர் கோவிலுக்கு எதிரே இருந்த ஒரு ‘ஆண்கள் தங்கும் ஹாஸ்டல்’ ‘போர்டு’ ஒன்று தெரிந்தது.

சாம்பசிவன் தன் மனதில் ‘எப்படியும் நாம சிதம்பரத்லே ரெண்டு மூனு நா¨ளைக்காவது தங்கி இருந்து தான்,இந்த குருக்கள் வேலேயேத் தேடிக்கணும்.அந்த ரெண்டு மூனு நாளைக்கு ‘ஹோட்டல் ரூம்’ ரொம்ப செலவு ஆகும்.நாம இந்த ‘ஹாஸ்டல்லே’ தங்கி இருக்கலாம்’ என்று நினைத்து அந்த ‘ஹாஸ்டலுக்கு’ப் போய் அங்கே இருந்த மானேஜரைப் பார்த்தான்.

அந்த மானேஜரை பார்த்து “சார்,எனக்கு சிதம்பரத்லே மூனு நாள் வேலே இருக்கு. உங்க ‘ஹாஸ்டல்லே’ ஒரு நாளைக்கு நான் தங்க எவ்வளவு ரூபாய் வாடகைத் தர வேண்டி இருக்கும்” என்று சாம்பசிவன் பயந்துக் கொண்டே கேட்டான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *