அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 | அத்தியாயம்-20
சாம்பசிவன் காலையிலே எழுந்து குளித்து விட்டு,சந்தியாவந்தனத்தைப் பண்ணி விட்டு,தான் இத்தனை வருஷங்களாக பூஜை பண்ணீ வந்த நடராஜரை நன்றாக வேண்டிக் கொண்டு தன் பெட்டி யை எடுத்துக் கொண்டு சிதம்பரம் ரயில் நிலையத்துக்குப் போய் சென்னைக்குப் போய் சேர்ந்தார்.
பிறகு சென்னையிலே இருந்து கிளம்பும் வாரணாசி துரித வண்டியில் ஏறி காசிக்குப் போய் சேர்ந்தார்.
இரண்டு நாள் கழித்து சாம்பசிவன் காசிக்கு வந்து சேர்ந்ததும்,நேராக சங்கர மடத்துக்குப் போய் அங்கே இருந்த ‘மானேஜரை’ப் பார்த்து “சார்,நான் சிதம்பரம் நடராஜர் கோவிலே ஒரு குருக்களா வேலே பண்ணிண்டு இருந்தேன்.இருபத்தி ஐஞ்சு நாளைக்கு முன்னாலே என் சம்சாரம் ‘திடீர்’ன்னு காலமாயிட்டா.அவ போன பிற்பாடு எனக்கு சிதம்பரத்லே இருந்து வர பிடிக்கலே.என் கடைசி காலத் தே நான் காசிலே கழிக்கலாம்ன்னு நினைச்சு,என் மொத்த பணத்தையும் ஒரு ‘ட்ராப்டா’ கொண்டு வந்து இருக்கேன்.இந்த ‘ட்ராப்டை’ உங்க மடத்லே குடுத்துட்டு,இங்கேயே தங்கி வரலாம்ன்னு நினைக்கறேன்.நீங்கோ கொஞ்சம் உதவி பண்ண முடியுமா” என்று கேட்டு அவர் கொண்டு வந்த ‘ட்ராப்டை’ அவரிடம் கொடுத்தார் சாம்பசிவன்.
சங்கர மடத்தின் மானேஜர் சாம்பசிவன் கொடுத்த ‘ட்ராப்டை’ வாங்கிப் பார்த்தார்.
அவருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.அந்த ‘ட்ராப்டில் பன்னனடு மூனு லக்ஷத்து இருபத்தி ஆயிரம் ரூபாய்’ என்று ‘டைப்’ பண்ணீ இருந்தது.
சாம்பசிவன் கொடுத்த ‘ட்ராப்டை’ மடத்து மானேஜர் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு “நீங்கோ இந்த மடத்லே சந்தோஷமா தங்கீண்டு வாங்கோ.எங்க மடத்லே இருக்கிற இருக்கிற ஒரு சின்ன சிவன் கோவில்லே,நீங்கோ சிதம்பரம் நடராஜர் கோவில்லே பண்ணீண்டு இருந்தா மாதிரி, அபிஷேகம் பண்ணி,அலங்காரம் பண்ணி,நிவேதனம் பண்ணி கற்பூர தீபம் காட்டி வாங்கோ.இந்த குருக்கள் வேலையை இங்கே பண்ணீண்டு வந்த மாமா தவறிப் போய் ஆறு மாசம் ஆறது” என்று சொன்னார்.
“அந்த மாமா பேர் மஹா தேவ குருக்களா” என்று சாம்பசிவன் கேட்டதும்,”உங்களுக்கு அவரே எப்படித் தொ¢யும்” என்று ஆச்சரியமாகக் கேட்டார் மடத்தின் மானேஜர்.
“அவர் என் மாமனார் தான்.அவருடைய சம்சாரம் இப்போ எங்கே இருக்கா” சாம்பசிவன் என்று கேட்டதும் “அந்த மாமி மஹா தேவ குருக்கள் மாமா தவறிப் போறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடித் தான் தவறிப் போய்ட்டா” என்று சொன்னார் மானேஜர்.
மானேஜர் சொன்னதைக் கேட்டு வருத்தப் பட்டார் சாம்பசிவன்.பிறகு மானேஜர் காட்டிய சின்ன ‘ரூமில்’ தன் பெட்டியை வைத்து விட்டு “நான் நாளைக்குக் குளிச்சுட்டு,நாளேலே இருந்து சிவன் கோவில்லே பூஜை பண்ணீண்டு வறேன்”என்று சொன்னார் சாம்பசிவன்.
அடுத்த நாள் மத்தியானம் சாம்பசிவன் அருகில் இருந்து தபால் ‘ஆபீஸ்’க்குப் போய் இரண்டு ‘இன்லண்ட் லெட்டர்களை’ வாங்கி,’தான் காசிக்கு சௌக்கியமாக வந்து சேர்ந்து விட்டதாயும்,இப்போ து சங்கர மடத்தில் ஒரு குருக்களாக வேலே செய்துக் கொண்டு வரும் விஷயத்தை’யும் எழுதி விட்டு, அதில் சங்கர மடத்தின் விலாசத்தையும் எழுதி, ஒரு ‘இன்லண்ட் லெட்டரை’ மாப்பிள்ளைக்கும், இன் னொரு ‘இன்லண்ட் லெட்டரை’ ராதாவுக்கும் ‘போஸ்ட்’ பண்ணினார் சாம்பசிவன்.
சாம்பசிவன் ‘இன்லண்ட் லெட்டர்’ கிடைத்ததும், மீராவும்,ராதாவும் சந்தோஷப் பட்டு அவருக்குப் பதில் போட்டார்கள்.
’நாம காசிக்கு வந்துட்டோம்.நமக்கும் தினமும் சிவனுக்கு தினம் பூஜை பண்ணீ வரும் பாக்கியம் கிடைச்சு இருக்கு.இப்படியே நம்ம காலத்தே கழிச்சுட்டு,‘அவர்’ என்னைக்கு என்னே அழைச்சுக்கணும்ன்னு ஆசைப் படறாரோ,அது வரைக்கும் நாம இந்த காசிக்ஷத்ரத்லே இருந்துண்டு வரலாம்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டார் சாம்பசிவன்.
ஒரு நாள் இரவு மீரா தன் கணவரிடம் ”நான் பிள்ளை உண்டானா என் ஆபீஸ்லே எனக்கு மூனு மாசம் தான் ‘பிள்ளை பேறு லீவு’ தான் தருவா.நான் என் வேலையை ராஜினாமா பண்ணிட்டுத் தான் குழந்தேயே பாத்துண்டு வரணும்.அப்போ நான் பண்ணீண்டு வர என் வேலேயே ராஜினாமா பண்ண வேண்டி வருமே.என்ன பண்ணலாம்” என்று கேட்டாள்.
கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு “நீ கேக்கறது ரொம்ப நியாயமான கேள்வி தான். நீ வேலேயே ராஜினாமா பண்ணீட்டா,அப்புறமா உனக்கு வேலே கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு ம்.தவிர இத்தனை வருஷ ‘சர்வீஸ¤ம்’ வீணாயிடும்” என்று சொன்னதும் மீரா சந்தோஷப் பட்டாள்.
“நான் என் அம்மா அப்பாவே சிவபுரியே விட்டுட்டு இங்கே வந்து நிரந்தரமா நம்ம கூட இருக்க முடியுமான்னு கேக்கறேன்.அவா ‘சரி’ன்னு சொல்லி நம்மோடு வந்து இருந்தா,அம்மா குழந்தயே பாத்துண்டு வந்தா,நீ மறுபடியும் வேலேக்குப் போய் வரலாமே” என்று சொல்லி விட்டு அம்மா அப்பாவுக்கு ‘போன்’ பண்ணினான் ராகவன்.
ராகவன் அப்பா ‘போன்லே’ வந்ததும் “அப்பா,அம்மா பாட்டி இப்போ இல்லேயே.நீங்கோ ரெண்டு பேரும் எதுக்கு தனியா சிவபுரிலே தனியா இருந்துண்டு வரப் போறேள்.எங்களோட இருந்து ண்டு வாங்கோளேன்.நாளைக்கே மீராவுக்கு ஒரு குழந்தேப் பொறந்தா,அவ ‘பிள்ளை பேறு லீவு’ முடிஞ்சப்புறம் ‘ஆபீஸ்’க்குப் போக வேண்டி இருக்கும்.அம்மா அந்தக் குழந்தயே பாத்துண்டு வந்தா, மீரா மறுபடியும் வேலேக்குப் போய் வரலாமே” என்று கேட்டான்.
“ராகவா,நாங்க ‘திடு திப்’புன்னு சிவபுரியே விட்டு வர முடியாதே.நிலங்களை எல்லாம் விக்கணு ம் இந்த வீட்டே விக்கணும்.இதுக்கு எல்லாம் ‘டயம்’ வேணுமே” என்று சுந்தரம் கேட்டதும்.”அப்பா நீங்கோ இன்னும் ரெண்டு மூனு மாசத்துக்குளே எல்லாத்தையும் வித்துட்டு எங்க கூட வந்து இருங் கோ.எங்களுக்கு ‘பொ¢யவா’ன்னு எங்க கூட யாரும் இல்லையே” என்று கெஞ்சிக் கேட்டான் ராகவன்.
“சரி ராகவா.நீ சொன்னா மாதிரியே பண்றேன்” என்று சொல்லி விட்டு,சுந்தரம் ராதாவிடம் ராகவன் சொன்னதைச் சொல்லி தான் சொன்ன பதிலையும் சொன்னான்.அப்பா ஒத்துக் கொண்டதை மீராவிடம் சந்தோஷமாக்ச் சொன்னான் ராகவன்.
“ராகவன் கேக்கறது ரொம்ப நியாயம் தான்.அவனுக்கு மாமனார் மாமியார்ன்னு இப்போ யாரும் அவன் கூட இல்லே.நாளைக்கே மீராவுக்கு ஒரு குழந்தே பொறந்த அவளுக்கு அந்த குழந்தேயே எப்படி வளத்து வறதுன்னே தொ¢யாது.ராகவன் சொன்னா மாதிரி மீரா ‘ஆபீஸ்’லே தர லீவு முடிஞ்ச ப்புறம் வேலேக்குப் போயாகணுமே.நீங்கோ நிலத்தையும் இந்த வீட்டையும் சீக்கிரமா விக்கப் பாருங் கோ.நாம அவா கூடப் போய் இருந்துண்டு வரலாம்.நமக்கு இனிமே இந்த சிவபுரிலே என்ன இருக்கு சொல்லுங்கோ.நாம அவா கூடவே போய் இருந்துண்டு வரலாம்”என்று சொன்னாள் ராதா.
“நம்மாத்துக்கு மூனு வீடு தள்ளீ ஒரு ‘ப்ளாட்’ கட்டறா.அது முடியற ‘ஸ்டேஜ்லே’ இருக்கு. இந்த நாத்திக் கிழமை நாம போய்,அந்த ‘ப்ளாட்’ கட்டறவர் கிட்டே ஒரு மூனு ‘பெட் ரூம்’ ‘ப்ளாட் புக்’ பண்ணலாம்.நீங்களும் நானும் ‘பாங்க்லே ப்ளாட் விலைக்கு லோன்’ போட்டு,அந்த ‘பில்டருக்கு’ குடுத்துட்டு,ரெண்டு பேருமா ‘லோனை’ அடைச்சுண்டு வரலாம்” என்று மீரா சொன்னதும்,ராகவன் “வொ¢ குட் ஐடியா மீரா” என்று சொல்லி மீராவைப் பாராட்டினான்.
அந்த ஞாயிற்றுக் கிழமையே ராகவனும்,மீராவும் இன்னும் நான்கு மாதத்தில் முடிய இருக்கும் ஒரு மூனு ‘பெட் ரூம் ப்ளாட்டை புக்’ பண்ணினார்கள்.
அன்று சாயந்திரமே ராகவன் அப்பாவுக்கு போன் பண்ணீ “அப்பா,நாங்க இருக்கும் ஆத்து க்கு மூனாவது காலி ‘க்ரவுண்டே’ ஒரு ‘பிள்டர்’ ‘ப்ளாட்’ கட்டறார்.நானும் மீராவும் ஒரு மூனு ‘பெட் ரூம்’ ‘ப்ளாட் புக்’ பண்ணி இருக்கோம்.அந்த ‘ப்லாட்’ இன்னும் நாலு மாசத்லே ரெடி ஆயிடும்” என்று சொன்னதும் சுந்தரமும்,ராதாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.
ஆறு மாசம் ஆனதும் மீரா தன் உடம்பில் ஏற்பட்டு இருக்கும் ‘மாறுதலை’ச் சொல்லவே. ராகவன் அவளை ஒரு லேடி டாகடா¢டம் அழைத்துப் போய் காட்டினான்.
அந்த லேடி டாக்டர் மீராவை நன்றாக பா¢சோதனைப் பண்ணி விட்டு,‘டெஸ்ட்டு’ கள் எல்லாம் எடுத்துப் பார்த்து விட்டு மீரா கருவுற்று இருப்பதாக சொல்லி,மாத்திரைகள் எழுதிக் கொடுத்து விட்டு, “நீங்க இவங்களே ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ‘செக் அப்’புக்கு அழைச்சி கிட்டு வாங்க” என்று சொல்லி தன் ‘பீஸை’யும்,’டெஸ்டுகள்’ எடுத்ததற்கு ஆன செலவையும் சொன்னாள்.
ராகவன் சந்தோஷப் பட்டு டாக்டர் சொன்ன பணத்தைக் கொடுத்து விட்டு,மீராவை ஒரு ஆட்டோவில் ஏற்றீக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.மீரா விஷயம் கேள்விப் பட்டு பரமசிவம் மிகவும் சந்தோஷப் பட்டான்.
வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் ராகவன் தன் அம்மா அப்பாவுக்கு மீரா கர்ப்பமாய் இருக்கும் சந்தோஷ சமாசாரத்தை ‘போனில்’ சொன்னான்.உடனே சுந்தரமும்,ராதாவும் “எங்க ரெண்டு பேருக்கும் கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ராகவா.மீராவை ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வா” என்று சொன்னார்கள்.
மீராவை டாக்டர் ‘செக் அப்’ புக்கு ரெண்டு மாதத்துக்கு ஒரு தடவை தவறாமல் அழைத்துப் போய் காட்டிக் கொண்டு வந்தான் ராகவன்.
ராதாவும் சிவபுரியில் அதிகமாக வேலை இல்லாத போது சென்னைக்கு வந்து மீராவைப் பார்க்க வந்தார்கள்.அப்படி வரும் போது ராதா மீராவுக்கு வாய்க்குப் பிடித்த பக்ஷணங்களை எல்லாம் பண்ணி க் கொண்டு வந்து கொடுத்து விட்டு,சென்னையிலே ஒரு வாரம் இருந்து அவளுக்கு பிடித்த சமைய¨ லயும் பண்ணிப் போட்டாள்.
“நீங்கோ எனக்கு என் அம்மா இல்லாத குறை தொ¢யாம பாத்து ண்டு வந்து,எனக்கு வாய்க்கு பிடிச்ச பக்ஷணங்களையும் சமையலையும் பண்ணிப் போட்டு இருக்கேள் எல்லா மாட்டுப் பொண்ணு க்கும் இந்த மாதிரி ஒரு மாமியார் கிடைக்கவே மாட்டா” என்று கண்களில் கண்ணீர் முட்ட மீரா சொன் னாள்.“மீரா,நீ யாரோ இல்லே.நீ என் தம்பிப் பொண்ணு.உன் அம்மாவுக்கும் இப்போ உயிரோடு இல்லே.நான் இந்த உதவியே பண்ணாம வேறே யார் பண்ணுவா.நான் தான் உனக்கு பண்ணனும்” என்று சொல்லி மீராவைக் கட்டிக் கொண்டாள் ராதா.
சுந்தரம் தன் நிலங்களையும் வீட்டையும் ஒரு நல்ல விலைக்கு விற்றார்.’காஸ் க்னெக்ஷனை’ காஸ் கடையிலே கொடுத்து விட்டு அவர் கொடுத்து இருந்த ‘டெபாஸிட்’ பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.
‘பிள்டர்’ ”சார்,நீங்க் ‘புக்’ பண்ண மூனு ‘பெட் ரூம் ப்ளாட் ரெடி’ ஆயிடிச்சி” என்று ‘போன்’ பண்ணீ சொன்னதும்,ராகவனும் மீராவும் ‘பிள்டா¢டம்’ இருந்து வீட்டு பத்திரத்தை வாங்கி ‘பாங்கில்’ லோன் போட்டு,’பிள்டருக்கு’ பணத்தை கொடுத்தார்கள்.அந்த ‘ப்ளாட்டில்’ எல்லா ‘எலக்ட்ரிக்’ வேலைக்கும் ஒரு ‘எலக்ட்ரிக் கம்பெனிக்கு’ஆர்டர் கொடுத்தார் ராகவன்.
மீராவுக்கு ஆறு மாதம் ஆனதும் வீட்டில் சமையல் வேலைக்கு ஒரு சமையல் கார மாமியை ஏற்பாடு பண்ணி விட்டு, “மீரா நீ இனிமே சமைக்க வேணாம்.’டே டைம்லே’ நல்ல ‘ரெஸ்ட்’ எடுத்து ண்டு வந்து,காலத்தாலேயும்,சாயங்காலமும் நிறைய நடந்து வா” என்று ராகவன் சொன்னதும், “சரி, நான் நீங்கோ சொன்னடியே செய்யறேன்.நீங்கோ நிம்மதியா இருந்துண்டு வாங்கோ” என்று சொன்னாள் மீரா.
மீரா தன் கணவன் சொன்னபடி தவறாமல் செய்துக் கொண்டு வந்தாள்.கூடவே பரமசிவம் போய் வந்துக் கொண்டு இருந்த ‘க்ரெச்சை’ நிறுத்தி விட்டு,வீட்டில் இருந்து வரச் சொன்னாள்.
அந்த வருடம் பள்ளிக் கூடம் திறந்ததும் ராகவன் பரமசிவத்தை நங்க நல்லுரில் இருந்த ஒரு நல்ல பள்ளீ கூடத்திலே இரண்டாம் வகுப்பிலே சேர்த்தார்.பரமசிவமும் சந்தோஷமாக அந்தப் பள்ளீக் கூடத்திற்குப் போய் படித்துக் கொண்டு வந்தான்.பள்ளிக் கூடம் முடிந்ததும் வீட்டுக்கு வந்தததும், சமையல் கார மாமி பரமசிவத்துக்குக் குடிக்க ‘காம்ப்ளாண்’ கொடுத்து வந்தாள்.பரமசிவம் சமையல் கார மாமி கொடுத்த ‘காம்ப்லணை’ குடித்து விட்டு,வெளியே போய் விளையாடி கொண்டு இருந்தான்.
பரமசிவத்துக்கு நிறைய சுவாமி பக்தி இருந்தது.
அவன் தவறாமல் திங்கட் கிழமைகளீல் சிவன் கோவிலுக்கும்,வெள்ளி கிழமைகளில் அம்மன் கோவிலுக்கும் போய் சுவாமியை வேண்டிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தான்.ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் தவறாமல் சிவன் கோவிலுக்குப் போய் சுவாமி தா¢சனம் பண்ணி விட்டு வந்துக் கொண்டு இருந்தான்.
அவனுக்கு ‘மஹா பொ¢யவாளிடம்’ நிறைய ஈடுபாடு இருந்து வந்தது.
தினமும் பள்ளீ கூடம் போகும் முன் பரமசிவம் ஆத்தில் மாட்டி இருந்த ‘மஹா பொ¢யவா’ படத்தே பாத்து ‘ஹர ஹர சங்கர,ஜெய ஜெய சங்கர’ என்று மூன்று தடவை சொல்லி விட்டு அவரை நன்றாக வேண்டிக் கொண்டுக் கிளம்புவான்.
சுந்தரம் சென்னைக்கு ‘போன்’ பண்ணீ “ராகவா,நான் எல்லா நிலங்களையும் இந்த ஆத்தை யும் நல்ல விலைக்கு வித்துட்டேன்.ஆத்லே இருக்கற எல்லா ‘பர்னிச்சர்க்ளையும்’ பழைய சாமான்க ளை எல்லாம் வித்துட்டு,வெறுமே எங்க ரெண்டு பேருடைய துணீ மணீகளை மட்டும் எடுத்துண்டு நாளைக்கு சென்னைக்கு வறோம்” என்று சொன்னார்.
“நீங்கோ ரெண்டு பேரும் சென்னைக்கு வறோம்ன்னு சொன்னதே கேக்க எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”என்று ‘கோரஸாக’க்’ சொன்னார்கள் ராகவனும்,மீராவும்.
அடுத்த நாள் காலையிலே சுந்தரமும் ராதாவும் சிவபுரியை விட்டு கிளம்பி ஒரு ‘கால் டாக்ஸி யிலே’ ராகவன் வீட்டு வந்தார்கள்.ராகவனும்,மீராவும்,பரமசிவமும் அவர்களை சந்தோஷமாக வீட்டுக் குள்ளே வரவேற்றார்கள்.
மீராவுக்கு ஒரு ஜதை கருகு மணி வளையலையும்,ஒரு ஜதை பவழ மணீ வளையலையும் வாங்கி மீராவின் வளை காப்பு விழாவைக் கொண்டாடினார்கள் ராதாவும்,சுந்தரமும்.
மீரா தன் மனதுக்குள்ளே ‘நாம உண்டாகி இருக்கோம்ன்னு கேள்விப் பட்டா,நம்ம அம்மா வும்,அப்பாவும் எவ்வளவு சந்தோஷப் படுவா.பாவம் அம்மா உடம்பு வந்து ‘பரகோலம்’ போயிட்டா. அப்பா விரக்தியாலே காசிக்குப் போயிட்டா.நமக்கு இப்போ மாமனார், மாமியார் தானே எல்லாம்’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள்.
மீரா ‘தாய் பேறு லீவில்’ இருந்து வந்தாள்.மீராவுக்கு எட்டு மாதம் ஆனதும் வாத்தியாரை வீட்டுக்கு வரவழைத்து ‘சீமந்த’விழாவை விமா¢சையாகக் கொண்டாடினார்கள் ராதாவும் சுந்தரமும்.
சீமந்தம் ஆனதும் ராகவனும் மீராவும் சுந்தரத்துக்கும் ராதாவுக்கும் நமஸ்காரம் பண்ணினார்கள். “மீரா,சீக்கிரமா எங்களுக்கு ஒரு பேரனே பெத்துக் குடு” என்று சொல்லி ஆசீர்வாதம் பண்ணினார்கள் ராதாவும் சுந்த்ரமும்.
மாமனார் மாமியார் சொன்னதை கேட்டதும்,மீரா பகவானை வேண்டிண்டு ‘பகவானே,அவா ஆசைப்படறா மாதிரி எனக்கு ஒரு பிள்ளைக் குழந்தை பொறக்கணுமே.நீ தான் எனக்கு அதுக்கு அனுக்கிரஹம் பண்ணணும்’ என்று தன் மனதில் வேண்டிக் கொண்டாள்.
மீராவுக்கு பிரசவ வலி வந்ததும் ராகவன் மீராவை அருகில் இருந்த ஒரு ‘நர்ஸிங்க் ஹோமில்’ சேர்த்தார்.ராகவனும்,பரமசிவமும் ‘நர்ஸிங்க் ஹோமில்’போட்டு இருந்த சேர்களில் உட்கார்ந்துக் கொண்டு சுவாமியயை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.
ஆறு மணி நேரம் கழித்து ஒரு ‘நர்ஸ்’‘லேபர் வார்ட்டில்’ இருந்து வெளியே வந்து “அவங்களுக்கு முதல்லே ஒரு பெண் குழந்தையும்,ரெண்டு மணி கழிச்சு ஒரு ஆண் குழந்தையும் பொறந்து இருக்கு” என்று சொல்லி விட்டு மறுபடியும் ‘லேபர் வாட்டுக்குள்’ போய் விட்டாள்.
‘லேபர் வார்ட்டில்’ இருந்த ஒரு ‘நர்ஸ்’ ராகவன் இடம் வந்து “நீங்க இப்போ உள்ளே போய் அவங் களையும்,குழந்தைகளையும் பாக்கலாம்” என்று சொன்னதும் இருவரும் ‘லேபர் வார்டுக்குள்’ போய் மீராவையும் குழந்தைகளையும் பார்த்தார்கள்.
“நமக்கு ஒரு பொண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பொறந்து இருக்கு.அப்பா,அம்மா ஒரு பேரன் வேணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டா.நான் ஒரு பேரனோடு,ஒரு பேத்தியையும் பெத்துக் குடுத்து இருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொன்னாள் மீரா.
“மீரா,ஒரே பிரசவத்லே ஒரு பொண் குழந்தையும்,ஒரு ஆண் குழந்தையும் பொறக்கறது எல்லாம் பகவான் செயல்.அவர் உனக்கு இந்த ஒரு பிரசவத்லே அப்படி ‘அனுக்கிரஹம்’ பண்ணி இருக்கார்” என்று வேதாந்தமாகச் சொன்னார் ராகவன்.
ராகவன் தன் அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி “அப்பா மீராவுக்கு ஒரு பெண் குழந்தையும், ரெண்டு மணி கழிச்சு ஒரு ஆண் குழந்தையும் பொறந்து இருக்கு” என்று சந்தோஷமாகச் சொன்னார்.
சுந்தரமும்,ராதாவும் சமையல் கார மாமி கொடுத்த ‘காபி டிபனை’ சாப்பிட்டார்கள்.
“மாமி,ஒரு தாம்பாளத்திலே கொஞ்சம் ‘ஆரத்தயே’ ரெடியா கறைச்சு வையுங்கோ.நாங்க குழந் தேகளையும்,மீராவையும்ஆத்துக்கு அழைச்சுண்டு வரும் போது நாம ரெண்டு பேருமா ‘ஆரத்தி’ சுத்த சௌகா¢யமா இருக்கும்”என்று ராதா சொன்னதும்”நான் ரெடியா வக்கறேன்” என்று சொன்னாள் மாமி.
சுந்தரமும்,ராதாவும் ‘நர்ஸிங்க் ஹோமு’க்கு போய் மீராவையும் குழந்தைகளையும் பார்த்தார்கள்.
“மீரா குழந்தை ரெண்டும் ரொம்ப அழகா கலரா பொறந்து இருக்கா” என்று சந்தோஷமாகச் சொல்லி குழந்தைகளின் கைளைத் தொட்டுப் பார்த்து மெல்ல வருடினாள் ராதா.
“குழந்தை ரொம்ப அழகா இருக்கு.ராகவன் பொறந்த அப்புறமா எங்களுக்கு ஒரு பொண் குழந்தை பொறக்கணும்ன்னு நானும்,ராதாவும் ரொம்ப ஆசைப் பட்டோம்.ஆனா எங்களுக்கு அப்புற மா குழந்தயே பொறக்கலே.மீரா இப்போ ஒரு பொண் குழந்தையோட,ஒரு ஆண் குழந்தையையும் பெத்து,எங்களுக்கு அந்த குறையே தீத்து வச்சு இருக்கே” என்று சுந்தரம் சொல்லி சந்தோஷப் பட்ட பிறகு தான் மீராவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
“அக்கா குழந்தே ரெண்டும் ரொம்ப அழாகா இருக்கா.குழந்தை ரெண்டும் உன் ஜாடையாவே இருக்கு” என்று சந்தோஷமாகச் சொன்னான் பரமசிவம்.
பிரசவம் பார்த்த டாக்டர் ராகவனைப் பார்த்து “நீங்க இவங்களையும் குழந்தையைகளையும் வீட்டுக்கு இட்டுக் கிட்டு போவலாம்“ என்று சொன்னதும்,ராகவன் அந்த ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ மீரா பிரசவத்துக்குக் கட்ட வேண்டிய பணத்தை கட்டினான்.ராதா ரெண்டு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டாள்.
மீரா மெல்ல கட்டிலை விட்டு கீழே இறங்கி ‘நர்ஸிங்க் ஹோமை’ விட்டு வெளியே வந்தாள்.
ராகவன் எல்லோரையும் ஒரு ‘கால் டாக்ஸியில்’ வீட்டுக்கு அழைத்து வந்தான்.சமையல்கார மாமி ஒரு தட்டில் ‘ஆரத்தை’க் கறைத்து வைத்து இருந்தாள்.
ராதா ஒரு குழந்தையை மீரா கையிலே கொடுத்து விட்டு,ஒரு குழந்தையை ராகவன் கையிலே கொடுத்து விட்டு,ரெண்டு பேரையும் ஒன்றாக நிற்கச் சொல்லி விட்டு,ரெண்டு பேருக்கும் குழந்தை களுக்கும் சமையல் கார மாமியை வைத்துக் கொண்டு,ஆரத்தியை சுத்தி கொட்டி விட்டு,கொஞ்சம் ஆரத்தி ஜலத்தை ராகவனுக்கும்,மீராவுக்கும் இட்டு விட்டு,மீராவைப் பார்த்து “மீரா உன் வலது காலை முதல்லே வச்சு உள்ளே வா”என்று சொன்னதும் மீரா தன் வலது காலை வீட்டுக்குள்ளே வைத்து மெல்ல நடந்து வந்து வந்து குழந்தையை ராதாவிடம் கொடுத்தாள்.
ராகவனும் குழந்தையுடன் வீட்டுக்கு உள்ளே வந்து குழந்தையை ராதாவிடம் கொடுத்தான். ராதா ரெண்டு குழந்தைகளையும் கொண்டு போய் கட்டிலில் விட்டாள்.
மீராவுக்கு ‘குழந்தயே எப்படி குளிப்பாட்டுவது’ ‘எப்படி தூக்கி வைத்துக் கொள்வது’எப்படி தூங்க வைப்பது’ என்று எல்லாம் மீராவுக்கு சொல்லிக் கொடுத்தாள் ராதா.
பத்தாம் நாள் ராதா பக்கத்து வீட்டுக்குப் போய்,அங்கே இருந்த மாமியிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு அந்த மாமி இடம் “மாமி,எனக்கு ரெண்டு தொட்டில் வேனும்.எங்க பேத்திக்கு,பேரனுக்கும் நாளைக்கு தொட்டில் போடணும்” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
அந்த மாமி “என் கிட்டே ஒரு தொட்டில் இருக்கு.நான் தறேன்.இன்னொரு தொட்டிலுக்கு நான் பக்கத்து ஆத்து மாமி கிட்டே இருந்து வாங்கித் தறேன்” என்று சொல்லி விட்டு அவர் பையன் ராமனைக் கூப்பிட்டு “ராமு,நீ சித்தே பக்கத்ததுக்குப் போய், இப்போ புதுசா மூனாவது ஆத்லே வந்து இருகிற மாமிக்கு ஒரு தொட்டில் வேணும்ன்னு கேட்டு வாங்கிண்டு வாயேன்” என்று சொன்னதும் அந்த பையன் பக்கத்து வீட்டுக்கு போய் ஒரு தொட்டிலை வாங்கிக் கொண்டு வந்தான்.
அந்த மாமி ராதாவைப் பாத்து ”நீங்கோ உங்க ஆத்துக்குப் போங்கோ.நான் ராமனை ரெண்டு தொட்டிலையும் உங்க ஆத்துக்கு கொண்டு வந்து தறச் சொல்றேன்” என்று சொன்னதும்,ராதா அந்த மாமியைப் பார்த்து “நீங்கோ நாளைக்கு சாயங்காலமா ஒரு ஆறு மணிக்கு எங்காத்லே ‘தொட்டில் போடற விழாவுக்கு’ நிச்சியமா வாங்கோ” என்று கூப்பிட்டதும்,அந்த மாமி “நான் கட்டாயமா வறேன்” என்று சொல்லி ராதாவை அனுப்பி வைத்தாள்.
ராதா வீட்டுக்கு வந்தததும்,ராமன் ஒவ்வொரு தொட்டிலாகத் தூக்கிக் கொண்டு வந்து ராதா வீட்டில் வைத்தான்.உடனே ராகவனும்,மீராவும்,ராதாவும்,சுந்தரமும் அந்த பையனைப் பார்த்து “உனக்கு ரொம்ப தாங்க்ஸ்ப்பா” என்று சொல்லி அனுப்பினார்கள்.
ராகவனும்,பரமசிவமும் கடையில் இருந்து நிறைய பூ மாலைகளையும்,வெத்திலை பாக்கு, வாழைப் பழம்,ஒரு கிலோ ‘ஸ்வீட்டும்’ வாங்கி வந்தார்கள்.
பத்தாம் நாள் சாயங்காலம் ராகவனும்,பரமசிவமும்,ரெண்டு தொட்டிலுக்கும் நிறைய பூ மாலை களை எல்லாம் சுற்றி அலங்கா¢த்தார்கள்.மீராவும், ராதாவும் நன்றாக ‘ட்ரஸ்’ பண்ணிக் கொண்டார்கள் சரியாக ஆறு மணிக்கு பக்கத்து வீட்டு மாமி ராகவன் வீட்டுக்கு வந்தாள்.ராதா அந்த மாமியைப் பார்த்து “வாங்கோ மாமி,இவ தான் என் மாட்டுப் பொண்ணு.இவ பேர் மீரா.இவளுக்குத் தான் ரெண்டு குழந்தைங்க பொறந்து இருக்கு” என்று சொல்லி விட்டு,மீராவை அறிமுகப் படுத்தினாள்.
அந்த மாமி “நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.சாதாரணமா ஒரு பிரசவத்லே ரெண்டும் ஆணாப் பொறக்கும்,இல்லே ரெண்டும் பொண்ணாப் பொறக்கும்.ஆனா உங்க மாட்டுப் பொண்ணுக்கு ஒரு பையனும்,ஒரு பொண்னும் பொறந்து இருக்கே” என்று ஆச்சரியமாகச் சொன்னாள்.
ராதா குழந்தைகள தொட்டிலிலே விட்டு விட்டு,ஒரு தாலாட்டுப் பாட்டு பாடி ரெண்டு தொட்டி லையும் மெல்ல ஆட்டினாள்.பக்கத்து வீட்டு மாமியும் ஒரு தாலாட்டுப் பாட்டுப் பாடி ரெண்டு தொட்டி லையும் ஆட்டினாள்.
கொஞ்ச நேரம் ஆனதும் ராதா அந்த மாமிக்கு ஒரு தட்டில் ரெண்டு ‘ஸ்வீட்டை’ வைத்து சாப்பிடக் கொடுத்தாள்.அந்த மாமி சாப்பிட்டு முடிந்ததும்,ராதா அந்த மாமியைப் பார்த்து” நீங்கோ. ரெண்டு ‘தொட்டில்’ ஏற்பாடு பண்ணினதுக்கும்,குழந்தேகளுக்கு தாலாட்டு பாடினத்துக்கும் ரொம்ப ‘தாங்க்ஸ்’” என்று சொல்லி விட்டு,அந்த மாமிக்கு வெத்திலை,பாக்கு,வாழைப் பழம் எல்லாம் வைத்து கொடுத்தாள்.
அடுத்த நாள் வாத்தியார் வந்ததும் பூஜையை பண்ணி விட்டு,வீட்டுக்கு ‘புண்யாவசனம்’ பண்ணி விட்டு,’புண்யாவசன’ ஜலத்தை வீட்டு பூராவும் தெளித்தார்.”குழந்தைக்கு ‘நாம கரணம்’ பண்ண என்ன பேர் வக்கப் போறேள்” என்று கேட்டதும் மீராவும் ராகவனும் “வாத்தியார் பொண் குழந்தைக்கு ‘சரோஜா’ன்னு பேர் வையுங்கோ.ஆண் குழந்தைக்கு ‘வரதன்’ன்னு பேர் வையுங்கோ” என்று சொன்னதும்,அந்த வாத்தியார் பெண்குழந்தையின் காதிலே மூன்று தடவை ‘சரோஜா’ என்ற பெயரைச் சொன்னார்.பிறகு ஆண் குழந்தை காதிலே மூன்று தடவை ‘வரதன்’ என்ற பெயரைச் சொன்னார்.
இந்த விழாவுக்கு அக்கம் பக்கத்திலே இருந்தவர்கள் எல்லோரும் வந்து சிறப்பித்தார்கள்.
சமையல் கார மாமி கல்யாண சமையல் சமைத்து இருந்தாள்.சமையல் கார மாமி எல்லோருக்கும் நுனி வாழை இலைப் போட்டு,அவள் பண்ணி இருந்த கல்யாண சமையலைப் பறிமாறினாள்.எல்லோ ரும் சமையல் கார மாமியைப் பார்த்து “சமையல் ரொம்ப பேஷா இருந்தது” என்று ஒரு வாய் வைத்தார் போல புகழந்தார்கள்.சமையல் கார மாமி மிகவும் சந்தோஷப் பட்டாள். சாப்பிட்டு முடிந்ததது ராகவன் வாத்தியாருக்கு வெத்திலை,பாக்கு வாழைப் பழம் வைத்து,கூடவே ’தக்ஷணையையும்’ கொடுத்து அனுப்பினார்.
அரை வருட ‘லீவு’ முடிந்து, பள்ளீ கூடம் திறந்ததும்,பரமசிவம் பள்ளீ கூடம் போய் படித்துக் கொண்டு வந்தான்.
ராதா குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு வந்ததால்,மீரா ‘பிள்ளை பேறு லீவு ‘முடிந்ததும், வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தாள்.
‘எலக்ட்ரிக் கமபெனி சூப்பர்வைஸர்’ ராகவன் வீட்டுக்கு வந்து ராகவனைப் பார்த்து “சார்,உங்க வீட்டுக்கு நீங்க சொன்ன எல்லா ‘எலக்ட்ரிக்’ வேலையும் நாங்க முடிச்சு இருக்கோம்” என்று சொன் னதும் ராகவனும்,சுந்தரமும் அவர் கூடப் போய் பார்த்தார்கள்.எல்லாம் சரியாக இருக்கவே, ராகவன் அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து அனுப்பினார்.
ராகவனுடன் கூட இருந்த சுந்தரம் “ராகவா,நான் என் கிட்டே இருக்கற பணத்தே வச்சுண்டு என்னப் பண்ணப் போறேன்.நான் அந்த ‘ப்ளாட்டுக்கு’ எல்லா ‘பர்னிச்சர்களையும்’,ஆத்துக்கு வேண்டிய எல்லா பாத்திரங்களையும் வாங்கிப் போடறேன்.இங்கே இருக்கிற பழைய பாத்திரங்களை எல்லாம் ஒரு ‘முதியோர் இல்லத்துக்கு’ குடுத்துட்டு,அந்த புது ‘ப்ளாட்’டுக்கு ஒரு நல்ல நாளாப் பாத்து ‘கிருஹப்பிரவேசம்’ பண்ணிட்டு,நாம எல்லாம் போய் இருந்துண்டு வரலாம்” என்று சொன்னார்.
“சரிப்பா.அப்படியே பண்ணலாம்” என்று ராகவன் சந்தோஷமாக சொன்னான்.
ராகவனும்,சுந்தரமும் அந்த ‘ப்ளாட்டுக்கு’ எல்லா ‘பர்னிச்சர்களையும்’,ஆத்துக்கு வேண்டிய எல்லா பாத்திரங்களையும் வாங்கிப் போட்டு விட்டு,பழைய வீட்டில் இருந்த பாத்திரங்களை எல்லாம் ஒரு ‘முதியோர் இல்லத்துக்கு’ கொடுத்தார்கள்.
வாத்தியாரைக் கூப்பிட்டு ஒரு நல்ல நாளாகப் பார்த்து அந்த ‘ப்லாட்டு’க்கு ‘கிருஹப்பிரவேசம்’ பண்ணி விட்டு,எல்லோரும் அந்த ‘ப்லாட்டு’க்கு சந்தோஷமாக குடி வந்தார்கள்.
சுந்தரமும்,ராதாவும் பேரன்,பேத்தியைப் பார்த்துக் கொண்டு வந்தார்கள்.
பள்ளிக் கூடம் முடிந்து வீட்டுக்கு வந்ததும்,பரமசிவம் சரோஜவுடனும்,வரதனுடனும் விளை யாடிக் கொண்டு வந்தான்.
சரோஜாவுக்கும்,வரதனுக்கும் நான்கு வயது ஆனவுடன் ராகவன் அவர்களை பரமசிவம் படித்து க் கொண்டு வந்த பள்ளிக் கூடத்திலேயே சேர்த்து படிக்க வைத்தார்.
சுந்தரம் சரோஜாவையும்,வரதனையும் காலையிலே ஓன்பது மணிக்கு பள்ளீக்கூடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு விட்டு,மத்தியானம் பன்னிரண்டு மணீக்கு பள்ளிக் கூடம் விட்டதும்,வீட்டு க்கு அழைத்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.
ஆறு வருடங்கள் ஓடி விட்டது.
பரமசிவத்திற்கு பதினோறு வயது ஆனதும் ராகவனும்,மீராவும் அந்த மாசி மாதத்திலே ஐந்து வாத்தியார்களை வீட்டுக்கு வரச் சொல்லி பரமசிவத்திற்கு ‘கிரமமாக’ ‘உபநயனம்’ போட்டார்கள்.
சமையல் கார மாமி சமைத்து வைத்து இருந்த கல்யாண சமையலை எல்லா வாத்தியார்களும் சாப்பிட்ட பிறகு ராகவன் வாத்தியார்களுக்கு தக்ஷணையையும்,தாம்பூலத்தையும் கொடுத்தார்.பிறகு “நீங்கோ பரமசிவத்துக்கு சந்தியாவந்தன மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்க ஒரு ‘அஸிஸ் டெண்ட்’ வாத்தியாரே காத்தாலேயும்,சாயங்காலத்திலேயும் அனுப்ப முடியுமா” என்று கேட்டார் ராகவன்.
– தொடரும்…