அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 30, 2021
பார்வையிட்டோர்: 4,063 
 
 

அத்தியயம்-9 | அத்தியயம்-10 | அத்தியயம்-11

ராமசாமி வீடு விற்று பணத்தை ‘பாங்க்லே’ தன் கணக்கிலே போட்டு விட்டு,’பாங்க்’ மானேஜ ரைப் பார்த்து “சார்,என் பையனுக்கு சிதம்பரத்லே கல்யாணம் ஆகப் போறது.அதனால் நான் சிவபுரியே விட்டுட்டு,சிதம்பரம் போய் அவனோட நிரந்தரமா இருந்துண்டு வரலாம்ன்னு நினைக்கிறேன். அதனால் நீங்கோ தயவு செஞ்சி உங்க ‘பாங்கலே’ என் கணக்கே மூடிட்டு,என் மொத்த பணத்துக்கும் சேத்து ஒரு ‘ட்ராப்டா’ தர முடியுமா”என்று கேட்டார்.

உடனே ‘பாங்க் மானேஜர்’ தன் உதவி மானேஜரைக் கூப்பிட்டு “இவர் கணக்கை ‘மூடிட்டு’ மொத்த பணத்துக்கும் ஒரு ‘ட்ராப்டு’க் குடுத்துடுங்க” என்று சொன்னதும்,உதவி மானேஜர் “சரி சார்” என்று சொல்லி விட்டு ராமசாமியை தன்னுடம் அழைத்துக் கொண்டு தன் ‘டேபிளுக்கு’ வந்தார்.

ஒரு அரை மணி நேரம் ஆனதும் அந்த உதவி மானேஜர் ராமசாமிக் கணக்கை ‘மூடி விட்டு’, அவருடைய மொத்த பணத்தையும் ஒரு ‘ட்ராப்டை’க் கொடுத்தார்.ராமசாமி அந்த உதவி மானே ஜரூக்கு தன் நன்றியை சொல்லி விட்டு அவா¢ட்ம் இருந்து ‘ட்ராப்டை’ வாங்கிக் கொண்டு,வீட்டு க்கு வந்து அந்த ‘ட்ராப்டை’ சுவாமி பாதத்திலே வைத்தார்.

ராமசாமி தன்னிடம் இருந்த எல்லா பாத்திரங்களையும்,மீதி மளீகை சாமான்களையும்,சேர்களை யும்,கட்டிலையும்,தன்னிடம் வேலைப் பார்த்து வந்த ஆட்களிடம் பிரித்து பிரித்துக் கொடுத்தார்.தன் துணீமணீகள் எல்லாவற்றையும்,பத்மாவின் மீதி நகைகளையும்,மீதி புடவைகளையும் ஒரு பொ¢ய பெட்டியிலே எடுத்து வைத்துக் கொண்டார்.

சொன்னது போல் சாம்பசிவன் அந்த சனிக்கிழமை அப்பா வீட்டுக்கு வந்தான்.சாம்பசிவன் வந்ததும் வராததுமாய் ராமசாமி “சாம்பசிவா,நான் இந்த ஆத்தே நல்ல விலைக்கு வித்துட்டேன். ஆத்லே இருந்த எல்லா பாத்திரங்களையும்,மீதி மளீகை சாமான்களையும்,சேர்களையும், கட்டிலை யும்,என்னிடம் வேலைப் பார்த்து வந்த ஆட்கள் கிட்டே பிரிச்சுக் குடுத்துடேன்.இந்த ஆத்தை வித்த வர் கிட்டே ஒரு ஐஞ்சு நாள் ‘டயம்’ கேட்டு இருக்கேன்.இந்தப் பெட்டியிலே என் துணி மணிகளை யும்,அம்மாவின் மீதி நகைகளையும்,மீதி புடவைகளையும் எடுத்து வச்சுண்டு ரெடியா இருக்கேன்” என்று சொன்னதும் சாம்பசிவன் சந்தோஷத்தில் குதித்தான்.

“அப்பா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.அம்மா தவறிப் போய் இததனை வருஷத்துக்கு அப்புறம் நாம ரெண்டு பேரும் ஒன்னா சேந்து இருக்கப் போறோம்.நீங்களும் இனிமே என்னோடு இருந்து வந்து சமைக்காம இருந்து வந்து காமாக்ஷி சமைக்கைற சாப்பாட்டை சாப்பிட்டுண்டு வரலாம்” என்று அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு சந்தோஷத்திலே சொன்னான் சாம்பசிவன்.

ராமசாமி “சாம்பசிவா,நாம முதல்லே ராதாவுக்கு ‘போன்’ பண்ணி ‘நான் உன்னோடு சிதம்பரம் கிளம்பிப் போறேன்’ என்கிற சமாசாரத்தே சொல்லலாம்”என்று சொல்லி விட்டு ராதாவுக்கு ‘போன்’ பண்ணி “ராதா,சாம்பசிவன் சாயங்காலம் ஆத்துக்கு வந்து இருக்கான்.நான் இருந்து வந்த ‘ஆத்தே’ நல்ல விலைக்கு வித்துட்டேன்.இன்னிக்கு ராத்திரி அவனோட கிளம்பி சிதம்பரம் போறேன்.உங்க ஆத்துக்காரா¢டமும்,மாமானார்,மாமியார் இடமும் கொஞ்சம் சொல்லிடு” என்று சொன்னார்.

“நான் சொல்லிடறேன்ப்பா.நீங்கோ சிதம்பரத்லே சந்தோஷமா இருந்துண்டு வந்து, உங்க உடம்பே ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வாங்கோ.அடிக்கடி ‘போன்’ பண்ணி பேசிண்டு இருங்கோ. நானும் ‘போன்’ பண்ணி பேசிண்டு இருங்கோ”என்று சொல்லி ‘போனை கட்’ பண்ணினாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராமசாமி “சாம்பசிவா, இந்த ஆத்லே சாப்பிட ஒன்னும் இல்லே.வா ரெண்டு பேரும் வரதன் ‘மெஸ்’ஸுக்குப் போய்.ஏதாவது சாப்டுட்டு,அவன் கிட்டேயும் கேசவன் கிட் டேயும் ‘நான் உன்னோடு கிளம்பி சிதம்பரம் போறேன்’ என்கிற சமாசாரத்தையும் சொல்லலாம்” என்று சொல்லி விட்டு தன் பெட்டியை எடுக்கப் போனார்.

உடனே சாம்பசிவன் அப்பாவின் பெட்டியை வாங்கிக் கொண்டு,அப்பாவுடன் ரெண்டு தெரு தள்ளீ இருந்த வரதனும் கேசவனும் நடத்தி வந்த ‘மெஸ்’ஸுக்கு வந்தான்.ராமசாமியையும்,சாம்பசி வனையும் பார்த்ததும் வரதன் “வாங்கோ மாமா.எங்கே இவ்வளவு தூரம்.சாம்பசிவனோட இந்த ராத்திரி வேளைளே வந்து இருக்கேளே”
என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

ராமசாமி அவனிடமும்,கேசவனிடமும் தான் நிரந்தரமாக சிதம்பரத்துக்குப் போய் பையனோட தங்கப் போற சமாசாரத்தை சொன்னார்.இருவரும் “என்ன மாமா,நீங்கோ எங்களே எல்லாம் விட்டுட்டு, சிதம்பரத்துக்குப் போய் நிரந்தரமா இருக்கப் போறேளா” என்று வருத்தமாகக் கேட்டார்கள்.

உடனே ராமசாமி “ஆமாம்.வர புதன் கிழமை சாம்பசிவனுக்கு கல்யாணம்.இந்தாங்கோ அவன் கல்யாணப் பத்திரிக்கை.நான் அவன் கூட இருந்துண்டு வரலாம்ன்னு முடிவு பண்ணீ இருக்கேன். நீங்கோ ரெண்டு பேரும் சாம்பசிவன் கல்யாணத்துக்கு செவ்வாக் கிழமே காத்தாலேயே கல்யாண சத்திரத்துக்கு வந்துடுங்கோ” என்று அழைத்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் வரதன் “மாமா,இந்த ‘மெஸ்’ வியாபாரம் நாளுக்கு நாள் குறைஞ்சுண் டே வறது.இப்படியே போனா இந்த ‘மெஸ்’ஸே நிரந்தரமா மூட்டிட்டு, சிதம்பரத்லே சமையல் வேலே க்குத் தான் போகணும்ன்னு நாங்க நினைச்சுண்டு இருக்கோம்.நீங்கோ சிதம்பரத்லே சந்தோஷமா பிள்ளே,மாட்டுப் பொண்ணோட இருந்துண்டு வாங்கோ.நாங்கோ ரெண்டு பேரும் நிச்சியமா செவ்வா கிழமே காத்தாலேயே கல்யாண சத்திரத்துக்கு வந்துடறோம்” என்று சொன்னார்கள்.

சாம்பசிவன் பில்லுக்கு பணத்தை கொடுக்கப் போனான்.

உடனே இருவரும் “நாங்க இப்ப குடுத்த ‘டிபனு’க்கு பணமே வாங்கிக்க மாட்டோம்.மாமா எங்களுக்கு ஒரு கஷ்டம்ன்னு வந்தப்ப எல்லாம் நிறைய உதவி பண்ணீ இருக்கார்.நீங்கோ பண்ணி இருக்கற உதவிகளுக்கு எல்லாம்,நாங்க பண்ற இந்த சின்ன உதவி ஒரு தூசு போல.நாங்க ரெண்டு பேரும் இந்த ‘டிபனை ப்ரீயா’த் தறோம்.அப்போ தான் எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.நீங்கோ சாப்பிட்ட இந்த ‘டிபனு’க்கு நாங்க பணமே வாங்கிக்க மாட்டோம்.சமயத்லே உங்களுக்கு இந்த உதவி யே எங்களால் பண்ண முடிஞ்சதேன்னு நினைச்சு நாங்க சந்தோஷப் படறோம்”என்று சொன்னார்கள்.

“அது வேறே,இது வேறே.நாங்க சாப்பிட்டதுக்கு நீங்கோ பணம் வாங்கிண்டே ஆகணும்” என்று சொல்லி சாம்பசிவனிடம் இருந்து பில்லையும்,பணத்தையும் வாங்கி வரதனிடம் கொடுத்து விட்டு “கல்யாணத்லே பாக்கலாம்.நீங்கோ ரெண்டு பேரும்அவசியம் வாங்கோ”என்று சொல்லி விட்டு சாம்ப சிவனை அழைத்துக் கொண்டு ‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்தார் ராமசாமி.

சிதம்பரம் போகும் ‘பஸ்’ வந்ததும்,இருவரும் அதில் ஏறி சிதம்பரம் வந்தார்கள்.

சாம்பசிவன் அப்பா பெட்டியை எடுத்துக் கொண்டு அவன் வாடகைக்குப் பார்த்து இருக்கும் வீட்டுக்கு வந்து பூட்டைத் திறந்து அப்பாவை உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.

வீட்டைப் பார்த்ததும் ராமசாமி “சாம்பசிவா ‘ஆம்’ ரொம்ப நன்னா இருக்கு.நம்ப மூனு பேருக்கு ம் ‘எதேஷ்டம்’ ”என்று சொன்னார்.

அடுத்த நாள் காலையிலே ராமசாமி சாம்பசிவனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு ‘பாங்கு’க்குப் போய்,ஒரு ஜாயிண்ட் அக்கவுண்ட்’ ஒன்றை ‘ஓபன்’பண்ணி, அவர் கொண்டு வந்த ‘ட்ராப்ட்’ பணத்தை ‘அந்த ஜாயிண்ட் அக்கவுண்டில்’ போட்டார்.

சாம்பசிவன் மஹா தேவ குருக்களை கோவில்லே பார்த்து “மாமா,அப்பா அவர் இருந்த ஆத்தை யும்,நஞ்சை,புஞ்சை நிலங்களையும் வித்துட்டு,நேத்தி ராத்திரிலே இருந்து,என் கூட புது ஆத்லே என்னோடவே தங்கிண்டு வறார்” என்று சந்தோஷத்துடன் சொன்னான்.

சாமபசிவன் சொன்ன சமாசாரத்தை மஹா தேவ குருக்கள் மரகத்திடமும்,காமாக்ஷி இடமும் சொன்னார்.

“நல்ல வேலே பண்ணார் அந்த மாமா.பாவம் ஆத்துக்காரி தவறிப் போனதில் இத்தனை வருஷமா தனியா சமையல் பண்ணி சாப்டுண்டு வந்துண்டு இருந்தார்.கல்யாணம் ஆயி காமாக்ஷி அந்த ஆத்துக்குப் போய் சமையல் பண்ண ஆரம்பிச்சா,அவர் நிம்மதியா இருந்துண்டு வரலாம். மாப்பிள்ளை யும் வாரா வாரம் சனிக் கிழமை சிவபுரிக்குப் போக வேணாம்”என்று சொன்னாள் மரகதம்.

“ஆமாம் மரகதம் நீ சொல்றது ரொம்ப நிஜம்.அவருக்கும் வயசா யிண்டு இருக்கு.இனிமே அவருக்கு நிம்மதி வேணும்.அவர் சதோஷமா இருந்துண்டு வரணும்” என்று மணைவி சொன்னதை ஆமோதித்தார் மஹா தேஉவ குருக்கள்.

கல்யாண சத்திரத்துக்கு மஹா தேவ குருக்களும் மரகதமும் திங்கட் கிழமை இரவே போய் தங்கினார்கள்.

செவ்வாய் கிழமை ஒரு எட்டு மணி வாங்கில் ராமசாமியும் சாம்பசிவனும் சந்த்திரத்துக்குப் போனார்கள்.மஹா தேவ குருக்களும்,மரகதமும் அவர்களை வவேற்று,அவர்களை ஒரு ‘ரூமு’க்கு அழைத்துப் போய் “நீங்கோ எல்லோரும் இந்த ‘ரூம்’லே தங்கிண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு, ‘காபி’ ’டிபன்’ சாப்பிடஅழைத்துப் போனார்கள்.

இவர்கள் சத்திரத்துக்கு வந்த அரை மணிக்குள்ளே கணேசனும்,கமலாவும்,ராதாவும் சுந்தரமும் சத்திரத்துக்கு வந்தார்கள்.ராமசாமி அவர்களை ‘காபி டிபன்’ சாப்பிட அழைத்துப் போனார்.

மத்தியானம் பதினோரு மணிக்கு வரதனும் கேசவனும் சத்திரத்துக்கு வந்தார்கள்.ராமசாமியும் சாம்பசிவனும் அவர்களை வரவேற்றார்கள்.

மஹா தேவ குருக்கள் அந்த கால வழக்கப் படி சாம்பசிவன்,காமாக்ஷி கல்யாணத்தை ஐந்து நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள்.பிறகு சமையல் காரர் செய்து இருந்த ‘தட’‘புட’ லான கல்யாண சாப்பாட்டை கல்யாணத்திற்கு வந்து இருந்த எல்லா உறவுக்காரர்களும்,நண்பர்களும் எல்லா வேளையும் ரசித்து சாப்பிட்டு விட்டுப் போனார்கள்.

இந்தக் கல்யாணத்திற்கு மஹா தேவ குருக்களின் உறவுக்காரர்களும், மரகதத்தின் உறவுக்காரர் களும்,நண்பர்களும்,ராமசாமியின் உறவுக்காரர்களும் சிவபுரியில் இருந்து திரளாக வந்து கலந்துக் கொண்டு சாம்பசிவனையும்,காமாக்ஷியையும் ஆசீர்வாதம் பண்ணி விட்டு,நிறைய ‘கிப்டு’களை எல்லாம் கொடுத்தார்கள்

குருக்கள் ஆர்டர் பண்ணி இருந்த பொ¢ய கட்டில் மெத்தை,தலையணகள்,உறைகள்,ரெண்டு போர்வைகளை,நிறைய பூ மாலைகள்,’ஸ்வீட்’, கார வகைகள்’எல்லாம் எடுத்துக் கொண்டு ஒரி ‘மினி லாரி’ சத்திரத்துக்கு வந்து ஒரு ‘ரூமில்’ இறக்கி வைத்து விட்டு,மஹா தேவ குருக்கள் இடம் பணத்தை வாங்கிக் கொண்டு போனார்கள்.

எல்லா உறவுக்காரர்கள்,நண்பர்கள் முன்னிலையிலே மஹா தேவ குருக்கள் தம்பதிகள்,சாம்ப சிவனுக்கும்,காமாக்ஷிக்கும் சத்திரத்திலேயே வாத்தியாரை வைத்துக் கொண்டு ‘சாந்தி முஹ¥ர்த்தத் தை’ பண்ணி முடித்தார்கள்.

கல்யாணம் சுபமாக முடிந்ததும் கணேசன் தம்பதிகளும்,ராதாவும் சுந்தரமும் எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு சிவபுரிக்குப் போனார்கள்.வரதனும் கேசவனும் ராமசாமி இடமும் சாம்பசிவன் இடமும் சொல்லிக் கொண்டு சிவபுரிக்குப் போனார்கள்.

கல்யாணம் இவ்வளவு விமரிசையாக நடந்ததை நினைத்து மஹா தேவ குருக்கள் தம்பதிகள் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.குருக்கள் ஒரு ‘மினி லாரி’யில் கட்டில்,மெத்தை,தலையணகள் போர் வைகள் எல்லாவற்ரையும் ஏற்றி சாம்பசிவன் வீட்டில் இறக்கி வைக்க ஏற்பாடு பண்ணீனார்.

ராமசாமியும்,கணேசன் தம்பதிகளும்,ராதாவும் சுந்தரமும் குருக்கள் தம்பதிகளைப் பார்த்து “கல்யாணம் ரொம்ப நன்னா நடந்தது.நீங்கோ ஏற்பாடு பண்ணீ இருந்த சமையல் காரர் ரொம்ப பேஷா சமைச்சு இருந்தார்.எங்க சாம்பசிவன் கல்யாணம் இவ்வளவு நன்னா நடக்கும்ன்னு நாங்க நினைக்க வே இல்லே” என்று புகழ்ந்தார்கள்.

காமாக்ஷி அம்மா அப்பா ரெண்டு பேர் காலிலும் விழுந்து நமஸ்காரம் பண்ணி விட்டு எழுந்து, கண்களில் கண்ணீர் முட்ட”அம்மா,அப்பா.நான் அவரோட போய் வறேன்.இத்த்னை வருஷமா நான் உங்க கூட இருந்து வந்தேன்.இனிமே நீங்கோ ரெண்டு பேரும் தனியா இருந்துண்டு வறணும்.உங்க ரெண்டு பேருடைய உடம்பையும் ஜாக்கிறதையாப் பாத்துண்டு வாங்கோ.முடிஞ்சப்போ எங்க ஆத்து க்கு வந்து என்னையும்,அவரையும்,என் மாமனாரையும் பாத்துட்டுப் போங்க” என்று சொன்னாள்.

”காமாக்ஷி நீ புக்காத்துக்குப் போகும் போது கண்லே தண்ணி விடக் கூடாது.நீ சந்தோஷமா உன் ஆத்துக்காரர்,மாமனார் கூட போய் வா.உங்க அப்பா தான் உள்ளூரிலேயே மாப்பிள்ளையே பாத்து இருக்காறே.நாங்க முடிஞ்சப்ப நிச்சியமா உங்க எல்லாரையும் வந்து பாக்கறோம்.நீங்கோ மூனு பேராப் போக வேணாம்.நானும் உன் கூட உங்க புது ஆத்துக்கு வந்து,உங்க எல்லாரையும்,விட்டுட்டு வறேன்”என்று சொல்லி விட்டு காமாக்ஷியை கட்டிக் கொண்டாள் மரகதம்.

உடனே மஹாதேவ குருக்கள் காமாக்ஷியைப் பார்த்து “நான்,உன் கூடவரலையேன்னு நினைச் சுக்காதே காமு.எனக்குக் கோவில்லே கொஞ்ச அவசரமான ஒரு வேலே இருக்கு.நான் வாசல் வரை க்கும் உங்க ளோட வந்துட்டு,உங்களே எல்லாம் வழி அனுப்பிட்டு,அப்புறமா முடிஞ்சப்ப உங்க எல்லா ரையும் நிச்சியமா வந்துப் பாக்கறேன்.என்னே தப்பா எடுத்துக்காதே” என்று அவள் கையைப் பிடித்துச் சொன்னார்.

பிறகு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு,தன் பெட்டியை எடுத்துக் கொண்டாள்.சாம்ப சிவன் தன் பெட்டியையும்,அப்பாவின் பெட்டியையும் எடுத்துக் கொண்டான்.மஹா தேவ குருக்கள் ஏற்பாடு பண்ணீ இருந்த ‘டாக்ஸி’ வந்தவுடன்,மூவரும் பெட்டிகளை ‘டிக்கியி’லே வைத்து விட்டு ‘டாக்சியிலே’ ஏறிக் கொண்டார்கள்.

‘டாக்ஸி’ சாம்பசிவன் பார்த்து இருக்கும் வீட்டின் வாசலில் நின்றதும்,சாம்பசிவன் டிரைவருக்கு ப் பணத்தைக் கொடுத்து விட்டு,தன் பெட்டியையும்,அப்பாவின் பெட்டியையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.

காமாக்ஷி தன் பெட்டியை எடுத்துக் கொண்டு,தன் அம்மாவையும் அழைத்துக் கொண்டு,புது வீட்டுக்குள் தன் வலது காலை முதலில் வைத்து உள்ளே போய்,தன் பெட்டியை வைத்து விட்டு, கழுத்திலே இருந்த தன் மாலையையும்,தன் கணவன் கழுத்திலே இருந்த மாலையையும் கழட்டி சுவற்றில் இருந்த ஒரு ஆணியில் மாட்டினாள்.

வீட்டுக்குள் போய் சுவாமி படத்திற்கு தன் கணவருடன் ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு, எழுந்துப் போய் பாலைக் காய்ச்சி,சுவாமிக்கு ‘நினேதனம்’ பண்ணி விட்டு,எல்லோருக்கும் ‘காபி’ப் போட்டுக் கொடுத்தாள்.

காமாக்ஷிக் கொடுத்த ‘காபி’யைக் குடித்து விட்டு,ராமசாமி தன் ரூமுக்குப் போய், அவர் பெட்டியைத் திறந்து,பதமாவின் மீதி நகைகளையும்,மீதி புடவைகளையும் எடுத்துக் கொண்டு வந்து “அம்மா காமாக்ஷி, இந்த நகைகளும்,புடவைகளும் உன் மாமியாருடையது.அவ போட்டுக் கொண்டு இருந்த பாதி நகைகளையும்,புடவைகளையும் நான் ராதாவுக்கு ஏற்கெனவே குடுத்துட்டேன்” என்று சொல்லும் போது அவர் குரல் தழு,தழுத்தது.

காமாக்ஷி மாமனார் கொடுத்த நகைகளையும்,புடவைகளையும் அவள் கையிலே வாங்கிக் கொண்டு அம்மாவிடம் காட்டினாள்.மரகதம் காமாக்ஷியைப் பார்த்து “அந்த நகைகளையும் புடவை களையும் ஜாக்கிறதையா வச்சுண்டு வா.ஒரு நாள் கிழமைலே நீஅந்த நகைளைப் போட்டுண்டு புடவையையும் கட்டிக்கோ” என்று சொன்னதும்,“சரிம்மா.நீ சொன்னபடியே நான் பண்றேன்” என்று சொன்னாள் காமாக்ஷி.

மரகதம் காமாக்ஷி கொடுத்த ‘காபி’யைக் குடித்து விட்டு,கொஞ்ச நேரம் இருந்து விட்டு எல் லோரிடமும் சொல்லிக் கொண்டு தன் வீட்டுக்குக் கிளம்பினாள்.

“நாங்க மூனு பேரா கல்யாண சத்திரத்தே விட்டுப் போகக் கூடாதேன்னு,நினைச்சு நீங்கோ இவ்வளவு தூரம் எங்க கூட வந்தேள்.உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’” என்று மரகதத்துக்கு தன் நன்றியை சொன்னார் ராமசாமி.

சாம்பசிவனும் காமாக்ஷியும் வாசல் வரைக்கும் வந்து மரகதத்தை ஒரு ஆட்டோவில் ஏற்றி,வழி அனுப்ப வந்தார்கள்.

மரகதம் தன் கணகளைத் துடைத்துக் கொண்டே”காமு,ஜாக்கிறதையா இருந்துண்டு வாம்மா. எனக்கு சதா உன் ஞாபகமாவே இருக்கும்.பொ¢யவா கிட்டே அன்பாவும் ஆசையாவும் பழகிண்டு வா” என்று சொல்லி,ஆட்டோவில் ஏறிக் கொண்டு டிரைவரைப் பார்த்து “கிளம்புப்பா” என்று சொன்னதும் அந்த ஆட்டோ டிரைவர் கிளம்பினான்.
ராமசாமியும்,காமாக்ஷியும் சாம்பசிவனும் கையை ஆட்டிக் கொண்டு இருந்தார்கள்.

அடுத்த நாளே சாம்பசிவன் அப்பாவுக்கு ஒரு ‘சிங்கல்’ கட்டில்,மெத்தை, தலையணை, உறை கள்,போர்வைகள் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து அவர் ‘ரூமில்’ போட்டான்.
சாம்பசிவன்,தன் மணைவி காமாக்ஷியுடனும்,அப்பாவுடனும் அந்த வீட்டில் சந்தோஷமாக குடித்தனம் செய்து வந்தார்கள்.காமாக்ஷி வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து வந்தாள்.
ஒவ்வொரு சனிக் கிழமை சாயங்காலமும் சாம்பசிவன்,காமாக்ஷியையும்,அப்பாவையும் அழைத் துக் கொண்டு சிவபுரிக்குப் போய் அக்காவையும்,அத்திம்பேரையும்,கணேசன் தம்பதிகளையும் பார்த்து விட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,அவர்கள் வீட்டில் ஒரு வேளை சாப்பிட்டு விட்டு,அவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஒரு ‘மினி பஸ்’ பிடித்துக் கொண்டு சிதம்பரம் வந்துக் கொண்டு இருந்தான்.

சுந்தரமும்,ராதாவும் மாசம் ஒரு தடவை சாம்பசிவன் வீட்டுக்கு வந்து எல்லோரையும்,பார்த்து விட்டு சிவபுரியிலே கிடைக்காத சில சாமான்களை வீட்டுக்கு வாங்கிக் கொண்டுப் போனார்கள்.

கல்யாணம் ஆகி மூன்று மாதம் ஆனதும்,மஹாதேவ குருக்களின் சிபாரிசால்,கோவில் அதிகாரி கள் சாம்பசிவன் மாச சம்பளத்தை ஐயாயிரம் ரூபாயாக ஆக்கினர்கள்.
உண்மை தொ¢யாததால் சாம்பசிவன் காமாக்ஷியைப் பார்த்து ரகசியமாக ”நீ எனக்கு பொண்டா ட்டியா வந்த வேளே,கோவில் அதிகாரிகள் என் சம்பளத்தே இப்போ ஐயாயிரமா ஆக்கி இருக்கா” என்று சந்தோஷமாகச் சொல்லிக் கொண்டான்.

தன் அப்பாவிடமும் சாம்பசிவன்,தன் சம்பள உயர்வை சொல்லி சந்தோஷப் பட்டான்.

சாம்பசிவ குருக்களுக்கு அந்த ஊரில் வசித்து வந்த நிறைய பிராமண குடும்பங்கள திங்கட் கிழமை,பிரதோஷம்,கார்த்திகை சோமவாரம்,சிவ ராத்திரி,அவர்கள் பிறந்த நாள், போன்ற விசேஷ நாட்களில் நடராஜருக்கு விசேஷ பூஜை பண்ணச் சொல்லி,அவருக்குத் தனியாக தக்ஷணையை கொடுத்து வந்தார்கள்.

அந்த குடும்பங்களில் யாராவது ஒரு ‘காரோ’, ‘ஸ்கூட்டரோ’ வாங்கினால்,சாம்பசிவ குருக்களுக் கு ‘டியூட்டி’ இல்லாவிட்டாலும்,அவர் வீட்டுக்கு வந்து அவரை அழைத்துப் போய் வாங்கி இருக்கும் ‘காருக்கோ’,’ஸ்கூட்டருக்கோ’ பூஜை பண்ணச் சொல்லி சந்தோஷப் பட்டு அவருக்கு நிறைய தக்ஷ ணையைக் கொடுத்து வந்தார்கள்.

நாடைவிலே அந்த ஊரிலேயே மிகவும் ‘ராசியான குருக்கள்’ என்கிற பெபரை வாங்கினார் சாம்பசிவ குருக்கள்.

சாம்பசிவ குருக்களும் யார் வந்து தேங்காய்,பழம்,வெத்திலைப் பாக்கு வாழைப் பழம் எல்லாம் கொடுத்து நடராஜருக்கு அர்ச்சனைப் பண்ணச் சொன்னால்,‘ஏனோ’ ‘தானோ’ என்று பண்ணாமல், மிகவும் சிரத்தையாக சிவனுக்கு எல்லா அஷ்டோத்திரமும் முழுக்கச் சொல்லி,தேங்காயை உடைத்து உரக்க மந்திரம் சொல்லி,நடராஜருக்கு தேங்காய், வெத்திலைப் பாக்கு, வழைப்பழம், எல்லாவ்ற்றையும் நிவேதனம் பண்ணி,பிறகு கற்பூரத்தை நடராஜருக்கு காட்டி விட்டு,அர்ச்சனைத் தட்டு கொடுத்தவா¢ டம்,கறபூரத்தைக் காட்டி விட்டு,உடைத்த தேங்காய்,வாழைப் பழம் பிரசாதத்தை பவ்யமாக கொடுத்து வந்தார்.

அர்ச்சனை தட்டைக் கொடுத்தவர் சாமசிவ குருக்கள் நடராஜருக்கு மிகவும் சிரத்தையாக எல்லா சிவன் நாமாவையும் சொல்லி,அர்ச்சனைப் பண்ணி,தங்களுக்கு கற்பூரத்தைக் காட்டி, தேங் காய்,வாழைப் பழ பிசாதத்தைக் கொடுக்கும் போது மிகவும் சந்தோஷப் பட்டு,அவர் தட்டில் மற்ற குருக்களுக்கு போடும் ‘தகஷனை’ விட அதிகமாகவே போட்டு வந்தார்கள்.

மொத்ததில் சாம்பசிவ குருக்கள்,அந்த நடராஜர் கோவிலில் அந்த ஊர் மக்கள் எல்லோரிடமும் மிக நல்ல பேர் வாங்கி,எல்லா மக்களின் நன் மதிப்பையும் வாங்கி வந்தார்.ஊர் மக்கள் எப்போது கோவிலுக்கு வந்தாலும் சாம்பசிவ குருக்களைக் கூப்பிட்டு அர்ச்சனை பண்ணி வரச் சொன்னது மற்ற குருக்களுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
அவர் தனியாக இருக்கும் போது மற்ற குருக்கள் எல்லோரும் சாம்பசிவ குருக்களைப் பார்த்து “யோவ்,சாம்பசிவ குருக்களே,நீ என்ன வசிய மருத்தே வச்சு இருக்கீர்.வரவா எல்லாம் ‘சாம்பசிவ குருக்கள் எங்கே’’ சாம்பசிவ குருக்கள் எங்கே’ன்னு கேட்டுண்டே வறா.எங்களே எல்லாம் பாத்தா அவாளுக்கு ஒரு குருக்களாவே தொ¢யலே.சில பேர் அவா வாங்கி இருக்கிற ‘காரு’க்கும் ‘ஸ்கூட்டருக் கு’ம் பூஜே பண்றதா இருந்தா,உம்மே உங்க ஆத்துக்கு அழைச்சுண்டு வந்து பூஜை பண்ண சொல்றா. நாங்க என்ன நடராஜருக்கு நீர் சொல்ற சிவ அஷ்டோத்திரத்தே சொல்லாம,விஷ்ணு அஷ்டோத்திரத் தையா சொல்லி பூஜை பண்றோம்” என்று கேட்டு கிண்டல் பண்ணி வந்தார்கள்.

சாம்பசிவ குருக்கள் பொறுமையாக ”இந்த கேள்வியை நீங்கோ எல்லாம் அவாளைத் தான் கேக்கணும்.என்னேக் கேட்டா நான் அவா ‘சார்ப்பா’ என்ன பதில் சொல்ல முடியும் சொல்லுங்கோ. நீங்கோ அவாளைக் கேக்கறது தானே” என்று சொல்லி விட்டு,அவரை கூப்பிட்ட ஒரு பக்தர் கொடுத்த அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு நடராஜர் மூல சன்னிதிக்குள் போனார்.

மொதத்தில் மற்ற சக குருக்களுக்கு சாம்பசிவ குருக்கள் மேலே மிகவும் பொறாமையாக இருந்து வந்தது.

அவர்கள் எல்லோரும் சாம்பசிவ குருக்களுக்கு வரும் உபா¢ வருமானம் எல்லாம் மஹா தேவ குருக்களின் சிபாரிசால் தான் வருகிறது என்று நினைத்து அவா¢டம் போய் ”என்ன மாமா.உங்க மாப்பிள்ளைக்கு உங்க சிபாரிசால் தான் இப்படி உபா¢ வருமானம் வறது.எங்களுக்கு நீங்கோ அந்த மாதிரி எங்களுக்கும் கொஞ்சம் சிபாரிசு பண்ணக் கூடாதா” கேட்டார்கள்.

உடனே மஹாதேவ குருக்கள்அவர்களிடம் “இதோ பாருங்கோ.நான் என் மாப்பீள்ளைக்கு எந்த சிபாரிசும் பண்ணலே.இந்த ஊர் ஜனங்க அப்படி பண்ணா,அது அவா விருப்பம்.அதுக்கு நான் என்ன பண்ன முடியும் சொல்லுங்கோ” என்று சொல்லி விட்டார்.ஆனால் உள்ளூர சந்தோஷப் பட்டார் மஹா தேவ குருக்கள்.

வீட்டுக்குப் போய் தன் மணவி மரகதம் இடம் மாப்பிள்ளைக்கு வரும் உபா¢ வருமானம் பற்றிச் சொன்னார் மஹா தேவ குருக்கள்.

கோவில் அதிகாரிகள் கொடுக்கும் சம்பள பணத்தை தவிர சாமபசிவ குருக்களுக்கு உபா¢ வரு மானம் வந்துக் கொண்டு இருக்கவே, அவரும் காமாக்ஷியும் கஷ்டம் இல்லாமல் குடித்தனம் பண்ணி வந்தர்கள்.இருவரும் ராமசாமியை நன்றாகக் கவனித்துக் கொண்டு வந்தார்கள்.

அந்த சனிக் கிழமை கிழமை ராதா தன் கணவருடன் சாம்பசிவன் வீட்டுக்கு வந்த போது அப்பாவை தனியாகக் கூப்பிட்டு ‘தான் ‘உண்டாகி’ இருக்கும் சந்தோஷ சமாசாரத்தே சொன்னாள். ராமசாமி சந்தோஷப் பட்டு இந்த சந்தோஷ சமாசாரத்தை சாம்பசிவன் கிட்டேயும்,காமாக்ஷி கிட்டேயும் சொன்னார்.சாம்பசிவனும்,காமாக்ஷியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

அடுத்த சனிக் கிழமை சாம்பசிவன் மணைவியையும்,அப்பாவையும் அழைத்துக் கொண்டு, சிவபுரிக்கு போனார்.

ராமசாமி தன் மாமனாரிடமும்,மாமியாரிடமும்,சுந்தரம் இடமும் சொல்லி விட்டு, ராதாவை தங்களுடன் ஒரு வாரத்திற்கு சிதம்பரத்துக்கு அழைத்து வந்தார்.
வீட்டுக்குள் நுழைந்ததும் தன் மாட்டுப் பொண்ணை அழைத்து “காமாக்ஷி, உனக்கு நன்னாத் தொ¢யும்.ராதாவோட அம்மா அவ கல்யாணம் ஆன சில மாசத்திலேயே ‘பரலோகம்’ போயிட் டா.அவ இருந்தா ராதாவுக்கு வாய்க்கு பிடிச்ச சமையலையும்,அவ ஆசைப் படற பக்ஷணங்களையும் பண்ணித் தருவா.நீ கொஞ்சம் சிரமம் பாக்காம ராதாவுக்கு அவ ஆசைப் படற சமையலையும்,பக்ஷணங்களையும் கொஞ்சம் பண்ணித் தர முடியுமாம்மா” என்று அவர் ‘எண் ஜான் உடம்பை ஒரு ஜானாக’க் குறுக்கிக்
கொண்டு கேட்டார் ராமசாமி.

உடனே காமாக்ஷி “நான் நிச்சியமா அக்காவுக்குப் பிடிச்ச சமையலையும்,பக்ஷணங்களையும் பண்ணி தறேன்ப்பா” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.ராமசாமி தன் மாட்டுப் பெண்ணின் நலல குணத்தை நினைத்து சந்தோஷப் பட்டார்.காமாக்ஷியின் நல்ல குணத்தை நினைத்து சந்தோஷப் பட்டார் சாம்பசிவன்.

சொன்னது போலவே காமாக்ஷி ராதாவின் வாய்க்கு பிடிச்ச சமையலையும்,அவ ஆசைப் பட்டப் பக்ஷணங்களை எல்லாம் பண்ணிக் கொடுத்தாள் காமாக்ஷி.அந்த வார சனி கிழமை சாயங்காலம் சாம்பசிவன் அப்பாவையும்,காமாக்ஷியையும் அழைத்துக் கொண்டு,சிவபுரிக்குப் போய் ராதாவை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு,சிதம்பரம் வந்தான்.
ஒரு நல்ல நாள் பார்த்து சாம்பசிவ குருக்கள் கோவில் வேலைக்குப் போய் வர ஒரு’ஸ்கூட்டரை’ வாங்கி அதற்கு பூஜைப் போட்டு விட்டு ஓட்டி வந்தார்.சாம்பசிவன் ஒரு ‘ஸ்கூட்டரை’ வாங்கி இருப்ப தைப் பார்த்த ராமசாமியும்,காமாக்ஷியும் சந்தோஷப் பட்டார்கள்.மஹாதேவ குருக்களும்,மரகதமும் மாப்பிள்ளை ‘ஸ்கூட்டர்’ வாங்கி இருக்கும் சமாசாரத்தைக் கேள்விப் பட்டு சந்தோஷப் பட்டார்கள்.

காமாக்ஷிக்கு நிறைய தெய்வ பக்தி இருந்தது.அவள் சமையல் பண்ண மீதி நேரங்களில் காலையிலும் மாலையிலும் நிறைய சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லி வீட்டில் இருந்த சுவாமிகளு க்கு பூஜை பண்ணி நிவேதனம் பண்ணி கற்பூர தீபம் காட்டி,சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு வந்தாள்.காமாக்ஷியின் தெய்வ பக்தியைப் பார்த்து ராமசாமி மிகவும் சந்தோஷப் பட்டார்.

ராமசாமி மத்தியானம் சாப்பிட்டு விட்டு அவர் ‘ரூமி’ல் படுக்கப் போனதும்,காமாக்ஷி,அக்கம் பக்கத்தில் இருந்த மாமிகளுக்கு ‘நாராணீயம்’’அபிராமி அந்தாதி’ ‘திருப்புகழ்’ போன்ற வகுப்புகள் எடுத்து வந்து பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தாள்.

ராதாவுக்கு ஏழு மாசம் ஆனதும்,ராமசாமி பிள்ளையையும்,மாட்டுப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சிவபுரிக்குப் போய்,கணேசன் தம்பதிகளிடம் சொல்லி விட்டு,ராதாவை ‘வளை காப்புக்கு’ சிதம்பரத்துக்கு அழைத்து வந்தார்.ராதாவின் ‘வளைக் காப்பு‘க்கு எல்லா ஏற்பாடுகள் பண்ணினாள் காமாக்ஷி.ராமசாமி சிவபுரிக்கு ‘போன்’ பண்ணி,கணேசன் தம்பதிகளையும்,சுந்தரத்தையும் ராதா வின் ‘வளை காப்புக்கு’ வரும்படி அழைத்தார்.

ராமசாமி ராதாவுக்கு ஒரு ஜோடி கருகுமணி வளையல் செய்து போட்டார்.ராதாவின் வளை காப்புக்கு ‘பங்ஷனுக்கு’,சிவபுரியிலே இருந்து,கணேசன் தம்பதிகளும்,சுந்தரமும் வந்து இருந்தார் கள்.

காமாக்ஷி அழைக்கவே, மரகதமும்,காமாக்ஷி இடம் ‘ஸ்லோகங்கள்’ கற்றுக் கொண்டு வந்த மாமிகளும் ராதாவின் வளை காப்புக்கு வந்து இருந்தார்கள்.எல்லோர் முன்னிலையிலும் ராதாவின் ‘வளை காப்பு’ ‘பங்ஷன்’ மிக நன்றாக நடந்தது.காமாஷி வந்த அம்மாவுக்கும்,எல்லோருக்கும் நிறைய கண்ணாடி வளையல்களை கொடுத்தாள்.

காமாக்ஷி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு ராதாவின் ‘வளைக் காப்பு’‘பங்ஷனை’ சிறப்பாக செய்ததைப் பார்த்து ராமசாமி மிகவும் சந்தோஷப் பட்டு “காமாக்ஷி.நீ ராதாவுக்கு அம்மா இல்லாத குறை தொ¢யாத அளவுக்கு,இவ்வளவு அக்கறை எடுத்துண்டு அவ ‘வளை காப்பு’‘ பங்ஷ னை’ ரொம்ப நன்னா பண்ணேம்மா.உனக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்ம்மா’”என்று சொல்லி பாராட்டி விட்டு விட்டு,தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.அந்த வார வாரம் சனி கிழமை
யே சாம்பசிவனும்,காமாக்ஷியும் ராதாவை சிவபுரிக்குக் கொண்டு போய் விட்டு விட்டு வந்தார்கள்.

ராதாவுக்கு எட்டாம் மாசம் நடந்த ’சீமந்த பங்கஷனுக்கு’ ராமசாமியும்,சா ம்பசிவனும்,காமா க்ஷியும் சிவபுரிக்குப் போய் கலந்துக் கொண்டு,ராதாவுக்கு ‘சீமந்தம்’ முடிந்ததும் சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் எல்லோர் இடமும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

சிதம்பரம் கிளம்பும் போது ராமசாமி ராதாவைப் பார்த்து “உனக்கு நல்லபடியா பிரசவம் ஆயி, சீக்கிரமா எங்களுக்கு ஒரு பேரனே பெத்துக் குடு” என்று ஆசீர்வாதம் பண்ணீனார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *