கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 14,678 
 
 

தெரு முனையை நெருங்கியதும் மூக்கை பொத்திக்கொண்டேன்.நூறடி தூரத்தில் போடப் பட்டிருந்த துருவேறிய கட்டிலின் மேல் வைத்திருந்தார்கள்.சுண்ணாம்புத் துகள்கள் சிதறிக் கிடந்தன.மலமும் பினாய்லையும் கலந்தது போன்றொரு நாற்றம் குடலைப் பிடுங்கியது.

“நீ போய் பாத்துட்டு வந்துரு டா.அங்க இருந்திருந்தா நான் போயிருக்க மாட்டேனா?,’அம்மா கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் தான் இங்கு வந்தேன்.நரைத்த தலைமயிர்.ஒடிசலான கன்னங்கள்.கருப்புத்துணியினை வாயில் திணித்து வைத்தால் போன்று,ஈக்கள் வாயினை அடைத்திருந்தன. தலைக்கருகில் அவளின் ஆஸ்தான பழுப்போரிய பை. நான் மட்டும் தான் அங்கிருக்கிறேன். அனாதைப்பிணம் கேள்விப்பட்டிருக்கிறேன்.சுற்றி ஒருவர் கூடவா இல்லாமல் இருப்பார்கள்?.

என்னடா அம்மா இப்படி மாட்டி விட்டாளே என்று கடுப்பாகியிருந்த அக்கணத்தில் ஒரு கிழவி வந்தாள். “நேத்திக்கு ராவே உசிரு போய்டுச்சு நைனா.இன்னிக்கு காலைலே டீ எடுத்துனு வந்தப்போ தான் கண்டுக்குனன். இடுப்பெலும்பு ஒடிஞ்சதனால, சப்பைல இருந்து,ஒரே புழுவா வர ஆரம்பிச்சிடுச்சு..அத்தையெல்லாம் தொடச்சுவுட்டு துணிய போட்டு அடச்சி வெச்சிருக்கென் என்றாள்.

அவள் புழு என்றதுமே எனக்கு இன்னும் குமட்டுவது போலிருந்தது.பிணத்தின் மேலிருந்த பார்வையை திருப்பிக் கொண்டேன்.

“சரி தம்பி,நீ யாரு? இதுக்கு ஒறவா?”

“இவுங்க எங்க வீட்டுல வேலை செஞ்சவங்க”

“யாரு பெத்த பிள்ளையோ, நீ நல்லாயிருப்ப தம்பி. அனாதை பொணத்த பாக்க வந்துருக்கியே.இந்த காலத்துல சொந்த ஆத்தா செத்தாலே ஒரு நாயும் சீண்டுரதில்ல.காப்ரேஷன் காரங்க கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க.அது வரைக்கும் வேணும்னா அந்த சேர்ல ஒக்காந்துக்கோ தம்பி.

“அக்கா”. வளரும் வரை எனக்கு செவிலியாகவும், அதன் பின் வீட்டு வேலையும் செய்து வந்தவள்.அம்மா ரிடையர்ட் ஆனதும் , அக்காவை வேலையிலிருந்து நிறுத்தியாகிவிட்டது. ஒண்டிக்கட்டை.சொந்தமென்று யாரும் இல்லை.திருமணமும் செய்து கொள்ளவில்லை. ஒரு நாய் வளர்த்து வந்தாள்.அது செய்யும் சேஷ்டைகள் அம்மவிடம் சொல்லிக்கொண்டிருப்பாள்.தண்ணீர் ஈரம் காய்வதற்குள் முகத்தில் அப்பிய பவுடர் திட்டும்,எப்போதும் சி¡¢த்துக் கொண்டிருப்பது போல் இருக்கும் முன் வரிசை கோரை பற்களும் தான், அக்கா என்றதும் சட்டென என் நினைவுக்கு வருவன.

வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு கிளம்பும் பொழுது,தவறாமல் என்னை முத்தமிட்டு செல்லுவாள்.அருவருப்பாக இருக்கும்.நினைத்துப் பாருங்கள், கரை படிந்த கோரை பற்களிலிருந்து கொடுக்குப்படும் எச்சில் முத்தம்.

என் இருபத்தி ஐந்தாம் பிறந்தனாளன்று, பொட்டலம் போல் மடித்து ஏதோ ஒன்றை என் கையில் திணித்தாள்.அது என்னவென்று கூட திறந்து பார்க்காமல் அப்படியே மேஜையில் வைத்து விட்டு விருட்டென பறந்துவிட்டேன்.

பார்ட்டிக்கு வந்திருக்கும் நண்பர்கள் முன்னிலையில் முத்தம் கொடுத்து விடுவாளென்ற பயம் வேறு.

அடுத்த நாள் அம்மா,’ டேய் அக்கா உனக்கொரு வெள்ளி செயின் கிப்டா குடுத்திருக்குடா.

நீ சம்பாதிக்கிறது உன் வாய்க்கும் வயித்துக்குமே பத்தாதேக்கா.எதுக்கு இதெல்லாம் பண்ற? உனக்கு தானக்கா கஷ்டம்”

‘கொழந்தைக்கு இது வரைக்கும் நான் ஒன்னியுமே செஞ்சதில்லமா.எனக்கு இன்னா கொழந்தையா குட்டியா?,தம்பி செயின போடுலனாலும் பரவால்லம்மா. அத திருப்பி என் கிட்ட குடுத்துராதீங்கம்மா’,என்றாள்

அம்மா சொன்னதை பெருசாக அலட்டிக்கொள்ளாமல் “ஓ” என்றேன்.

வெகு நாட்கள் கழித்து அம்மாவை வழியில் பார்த்த ஆயா ஒருவர்,’ அக்கா எங்கோ கீழே விழுந்து இடுப்பெலும்பை ஒடிதுக்க் கொண்டதாக சொன்னார்.

“இப்போ எப்டி இருக்காங்க.நேரம் கெடைக்கறப்போ நான் அவங்கள வந்து பாக்குறேனு சொல்லுங்க. எதனா எமெர்ஜென்சினா இந்த ந்ம்பருக்கு போன் பண்ணுங்க என்று தன் நம்பரை கொடுத்து வந்ததாக சொன்னாள்.அவர் தான் இன்று காலை அம்மாவிற்கு போன் செய்திருக்க வேண்டும்

“ஆன் வா வா வா!!,மெல்ல லெப்ட் ல ஒடி.அப்டியே கொஞ்சம் சென்டர்ல வல்ச்சிகோ.பாடி காலான்ட வர மாரி நிற்திக்கோ பா.”

அமரர் ஊர்தி வந்தாகி விட்டது.

காரணமேயன்றி நெஞ்சு கனப்பது போலிருந்தது.ஆசுவாசப்படுதிக்கொண்டு, கட்டில் பக்கம் திரும்பினேன். பிணத்தின் இடுப்பில் படர்ந்திருந்த துணியானது மெல்ல கலைந்து ,அதன் மேல் கொத்தாக ஏதோ ஊர்வது போல் இருந்தது.ஆம். அவை புழுக்கள் தான்.

எனக்கு தலைசுற்றி கண்ணிருட்டியது. சிறிது நகர்ந்து சென்று வாந்தி எடுத்தேன். வெலவெலத்துப் போனேன்.அங்கு நிற்பதற்கே அருவருப்பாய் இருந்தது.

பிணத்தை எடுக்க வந்த காப்ரேஷன் ஆளிடம் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு வீட்டுக்கு விரைந்தேன்.

குளியலை போட்டுவிட்டு வழக்கமாக உபயோகிக்கும் டியோட்ரன்ட்டை உடல் முழுவதும் பீய்ச்சினேன்.மலமும் பினாய்லும் கலந்தது போன்று ஒரு வாடை அடித்தது.

5 thoughts on “அக்கா

  1. Lots to take in from this story!
    The impact it creates in the readers is so strong
    which makes it successful.

    My hearty congrats and best wishes to the author.

    #Respect

  2. A good read. Story created an impact that I am feeling heavy deep inside. And the plot was too real and common that it makes you feel guilty, dunno why. Everybody does come across people like this but later forget them in their walk of life. Nobody can be blamed or accused, but it is the kindness which we re lacking.

    The act of paying Rs.500 and the last line in which he smells the last scent of the ambience where his “Akka” was instead of the deo is a nice touch. The description of each and every frame was too much in detail that at some points it was disgusting, though making the story too real and causing impacts. But unfortunately, they are the truth around us which most of us wouldn know or care about! Good job capturing the other side.

    Overall, Worth the read!

    1. Dear Mr. Naveen. Awesome. When i read this I feel like a real conversation. Simply short and sweet. Expecting more stoires... says:

      மிக அருமை & எளிமை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *