ரகசிய டைரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 16,001 
 
 

மதன்……மதன்…என்று கூறி கொண்டே வந்தான் வருண். பின் மதனை பார்த்ததும்,மச்சான் வாடா ஜாகிங் போவோம் என்றான்.அதற்கு மதனோ எல்லாரும் காலையில தான் ஜாக்கிங் போவாங்க ஆனா நீ மட்டும் மத்தியானம் இந்த மொட்டை வெயிலை ஜாகிங் போறது மட்டும் இல்லாம அதுக்கு என்ன வேற துணைக்கு கூப்பிடுற என்னடா மச்சான் நியாயம் என்றான்.

வருணோ மதனை பிடிச்சு இழுத்து வாடா என்றான்.வருணும் மதனும் ஓடி விட்டு சாலையில் ஒரு ஓரமா அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.அங்கு ஒரு டைரி கிடப்பதை கண்ட மதன் அதை எடுத்தான்,அது என்ன என்று வருணும் பார்த்தான்.அந்த டைரியில் என் பெயர் கிஷோர்,நா ஒரு மருத்துவர்,நானும் என் நண்பர்களும் மனித உடம்பில் எந்த நோயும் வராமல் இருக்க ஒரு ஆன்டிபயாடிக் மருந்து கண்டு பிடிச்சோம்.ஆன அது கொஞ்சம் வீரியமான மருந்து அதனால மனித உயிருக்கு கூட ஆபத்து வரும்,கிட்டத்தட்ட அது ஒரு விஷம் மாரி,ஆனா இத யார் உடம்புலயாவது டெஸ்ட் பன்னா தான் அது எப்பிடி வேலை செய்யுது பாத்து சரியான மருந்தை தயார் பண்ண முடியும்.ஆனா இந்த மருந்தோட பின் விளைவுகள் பாத்து நா இந்த எக்ஸ்பிரிமெண்ட் வேண்டானு சொன்னேன் ஆனா அவங்க கேட்கலை இத ஒரு சின்ன குழந்தை மேல செலுத்தி அது எப்பிடி வேலை செய்யுதுன்னு பாக்க போறாங்க,நா இதுக்கு ஒத்துகலனு என்னை கத்த்தியால குத்திட்டாங்க சோ நா இன்னும் கொஞ்சம் நேரத்துல செத்துடுவேன் இந்த டைரியை படிக்கிறவங்க யார இருந்தாலும் அவங்க அந்த சின்ன பொண்ண காப்பத்துங்க அந்த டெஸ்ட் எக்ஸ்பிரிமெண்ட் என்க நடக்கும்னு இந்த டைரி லாஸ்ட் பக்கத்துல எழுதிருக்கேன் எப்பிடியாவது காப்பத்துங்க அந்த குழந்தையை என்று எழுதி இருந்தது.

இதனை படித்த மதன் நமக்கு எதுக்கு தேவை இல்லாத வேலை என டைரியை தூக்கி எறிந்தான். வருணோ அதை எடுத்து, அந்த சின்ன பொண்ண காப்பாத்தனும் என்றான். மதனோ மச்சான் நம்ம செத்துடுவோண்டா என்றான். அதுக்குன்னு அப்பிடியே விட முடியாது இதே நம்ம வீட்டு பொண்ணா இருந்தா விடுவோமா?என்றதும் மதன் சற்று யோசித்து விட்டு சரி டா மச்சான் என்றான்.போலீஸ் கிட்ட போ வேண்டாம் இது வேற யாருக்காவது தெரிச்சதுனா நம்ம காலி,நம்மலே பாத்துக்கலாம் என்றான்.வருணும் சரி டா நா போயி இந்த டைரி எழுதுனவரு வீட்டுக்கு போயி அவர் அங்க இருக்காரான்னு பாக்குறேன்,நீ அந்த டெஸ்ட் நடக்குற இடத்தை சுத்தி கவனி எப்பிடி நம்ம அந்த இடத்துக்குள்ள போறதுன்னு, நாளைக்கு தான் அந்த டெஸ்ட் நடக்க போதுன்னு எழுதி இருக்காரு நமக்கு இன்னைக்கு முழுக்க டைம் இருக்கு என்றான் வருண், இருவரும் பிரிந்தனர்.

வருண் டைரி எழுதியவர் வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர் இல்லை. அவரின் போட்டோ மட்டும் இருந்தது அதனை தன் போனில் போட்டோ எடுத்து கொண்டு திரும்பினான்.மதனும் அந்த இடத்தை கவனித்து விட்டு வருணிடம் வந்தான்.உடனே வருண் அந்த வீட்டில் யாரும்யில்லை என்றதும்,மதனோ அந்த டெஸ்ட் நடக்குற இடத்துக்குள்ள போறது ரெம்ப கஷ்டம் என்றான்.வருண் ஏன்? என்று கேட்க,உடனே மதன் அந்த வீட்டுக்குள்ள அந்த டாக்டர்ஸ் மட்டும் தான் உள்ள போக முடியும் வேற யார இருந்தாலும் கேட் கிட்டயே பேசி வாட்ச்மேன் திருப்பி அனுப்பிறான்,இப்ப என்னடா பண்ணுறது? என்றான் வருண்.

மதனோ அதுக்கு ஒரு வழி இருக்கு டா மச்சான் அந்த வாட்ச்மேனை தூக்கிட்டு நா அவன் வேஷம் போட்டு அங்க போறேன் என்றான். எப்படி வாட்ச்மேனை கடத்துறது?என்றான் வருண்.அதற்கு மதன்,அவன் சரியா 5 மணிக்கு டீ கடை போவான் அப்ப நீ அவன் கிட்ட பேச்சு குடுத்து ரோட்டோட கார்னெற்கு கூட்டிட்டு வா நா கார்ல வெய்ட் பண்ணுவேன் அப்பிடியே அவனை கார்ல வச்சு கடத்திடலாம் என்றான்.உடனே சரி அவனமாரி வேஷம் போடலாம் ,குரள்ல வச்சு கண்டுபிச்சுடா என்ன பண்ணுறது என்றான்.மச்சான் நா ஒரு மிமிகிரி ஆர்ட்டிஸ்ட் மறந்துடய,அவன் குரல்ல ஒரு தடவை கேட்ட போதும் அப்பிடியே பேசுவேன்,எப்பிடியும் டீ கடையில கொஞ்சம் பேசுவான் நீ அதை ரெகார்ட் பண்ணு மீதியை நா பாத்துகிறேன் என்றான் மதன்.வருணும் சரி என்றான்.

இருவரின் பிளான் படி மதன் வீட்டிற்குள் நுழைந்தான்.மதன் மூலம் வருணும் நுழைந்தான்.இருவரும் இருட்டும் வரை காத்து இருந்தனர். இருட்டியதும் வீட்டிற்குள் மறைவாய் சென்றனர்.அங்கு டாக்டர்ஸ் மது அருந்தி தன்னோட டெஸ்ட் பத்தியும்,அவங்க பண்ண கொலை பத்தியும் பேசினர். அதை மதன் வீடியோ எடுத்தான்.பின் வருண் மதனிடம் நா இங்க இருந்து இவங்க இன்னும் என்ன, என்ன பேசுராங்களோ அதை உன் போன்ல வீடியோ எடுக்குறேன், நீ மேல குழந்தை எங்க இருக்குனு பாத்து, தூக்கிட்டு வா என்றான் வருண்.

மதனும் குழந்தையை தூக்கி கொண்டு வந்து,வருணிடம் கொடுத்தான்,போனைமதன் கையில் கொடுத்து மச்சான் வீடியோ பத்திரம் டா என்றான் வருண்.மேலும் வருண் இரவோட இரவா பத்திரிகையாளர்களை வர வைத்து நடந்ததை கூற,அவர்களும் டாக்டர்ஸ் வீட்டுக்கு வந்தனர்.

அனைவரும் டாக்டர்ஸ் பாத்து நிறைய கேள்வி கேட்க?அவர்களோ அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு என்றனர்.வருணோ மதன் அந்த டைரிய காட்டு என கூற மதனோ என்ன டைரி?என்றான்.வருண் அதிர்ந்துவிட்டான், உடனே டாக்டர்ஸ் சிரித்தனர்.வருண் அந்த குழந்தையை காட்டி இந்த பொண்ண நீங்க கொல்ல பாக்கலா?என்றான். உடனே டாக்டர்ஸ் அது நாங்க தத்து எடுத்த பொண்ணு,அவளை கடந்தி நீ பணம் கேட்ட,அதை நாங்க குடுக்க தான் ரெடி ஆனோம் இப்ப என்ன டா நா நாங்க கொலை பண்ண பாக்குறோம்னு ஏதோ லூசு மாரி பேசுற?என்றனர். மதனும் என் நண்பன் இப்பிடி தான் அடிக்கடி பண்ணுவான் அவன் கொஞ்சம் லூசு,எல்லாத்துக்கும் சாரிங்க என்றான்.

வருணுக்கு என்ன நடக்குதுன்னு புரியல.உடனே மதன் வருண் அருகே வந்து என்ன மச்சான் ஷாக்கா இருக்கா,அந்த டைரிய பாத்த உடனே நா இவங்க கிட்ட டீல் பேசிட்டேன்.உனக்கு தான் இது எல்லாம் பிடிக்காதே,எப்ப பாரு நீதி,நேர்மை, நியாயம்னு பேசுவ அதான் உன்ன இப்பிடி குழந்தை திருடின கேஸ்ல மாட்டி விட்டேன் என்றான். அந்த டைரி,அப்புறம் ஏன் போன்ல நா எடுத்து, நீ பாத்தியே ஒரு வீடியோ அதை அழிச்சுட்டேன். இப்ப உண்ட எதும் இல்ல. உன்ன அப்பிடியே விட்ட நீ ஏதாவது பிரச்னை பண்ணுவேனு சரியா பிளான் பண்ணி உன்ன போலீஸ்ட மட்டிவிட்டுட்டேன்,இது தான் எங்க பிளான், இப்ப கொஞ்ச நேரத்துல குழந்தை கடத்துன கேஸ்ல நீ உள்ள போயிடுவ நா இவங்க கிட்ட பணம் வாங்கி சந்தோசமா இருப்பேன்.

உடனே பத்திரிகையாளர்களிடம் மதன்,என் நண்பன் பண்ணது தப்பு தான் ஏதோ பணத்துக்காக ஆசைப்பட்டு இப்பிடி பண்ணிட்டான் என்றான்.

வருணோ ஒரு சிறிய புன்னையுடன் ஒரு வீடியோவை பத்திரிகையாளர்களிடம் காட்டினான். அனைவரும் அதிர்ந்தனர்.

இப்ப வருண் மதனிடம் என்ன மச்சான் நீ மட்டும் தான் ஷாக் தருவியா எப்பிடி என் ஷாக். நீ குழந்தைய தூக்க மேல போனில அப்ப தான் உன் போன்ல இருந்து என் போண்ணுக்கு வீடியோவ சென்ட் பண்ணிட்டேன். ஒரு சேவ்டிகாக, அப்புறம் தான் உன் போனை குடுத்தேன் என்றான்.

போலீஸ் குற்றம் புரிந்த டாக்டர்ஸ் மற்றும் அதற்கு துணை போன மதனையும் சிறையில் அடைத்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *