இந்தியா பாகிஸ்தான் 20க்கு20 கிரிக்கட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 14,447 
 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டி ஆரம்பமாவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருந்தது…

இப்போது நேரம் 6.30…

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பிரச்சினையால் இந்தப் போட்டி கொழும்பில் நடத்தப்படுகிறது.

போட்டிக்கு பெருந்திரளான மக்கள் பார்வையாளர்களாக கூடி இருந்தார்கள்.

இலங்கை போட்டிக்கு கூட இந்த அளவுக்கு அரங்கம் நிரம்பியதில்லை…

இந்த இடத்தில் ஒரு குண்டு வெடித்தால் எப்படி இருக்கும்?

நினைக்கவே அச்சமாக இருந்தது..

சில நிமிடங்களுக்கு முன்னர் ஒருவரின் கையில் இருந்து தவறி விழுந்த கைப்பேசியில் இப்படி ஒருவர் குறுஞ்செய்தி இருந்தது…

‘குண்டு வைக்க வேண்டிய இடத்தில் வைத்தாயிற்றா? என்னிடம் ஒரு ரிமோட் இருக்கிறது.. உங்களிடம் இருக்கும் ரிமோட் கவனம்.. எனது ரிமோட்டில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால், உங்களது ரிமோட்டை பயன்படுத்துங்கள்’

கைப்பேசியைத் தவறவிட்டவர் பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு அருகில்தான் இருக்கிறார்…

தவறவிட்ட கைப்பேசியை எடுத்து அவரிடம் கொடுக்க முயற்சிக்கும் போது எதேட்சையாக இந்த குறுந்தகவலை படிக்க நேர்ந்தது…

காவற்துறைக்கு தகவல் சொல்ல அச்சமாக இருந்தது…

ராகேஷை அழைத்தேன்….

ராகேஷ் ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஒரு எழுத்தாளரும் கூட…

தகவல் சொல்லி 10 நிமிடங்கள் இருக்கும்…

இந்தப் போட்டிக்கான மைதானத்தை ஏற்பாடு செய்கின்றவர்களை கண்காணிக்கும், கண்காணிப்பாளர்களைக் கண்காணிக்கும் பணி என்னுடையது…

என் பேர் கணிக்கா…

ராகேஷின் வருகைக்காக மைதான வாயிலில் நின்று கொண்டிருக்கிறேன்..

எனது பின்னந்தோள் தட்டப்பட்ட போது திரும்பிப் பார்த்தேன்…

அது ராகேஷ்…

ஆங்கில படங்களில் வரும் புலனாய்வாளர்கள் போல இருந்தார்…

அவர் தலையில் வைத்திருந்த தொப்பி அவரது முகத்தை மறைக்கும் வகையில் இருந்து…

இருள ஆரம்பிக்கும் தருணத்தில் அவரது முகம் அவ்வளவு தெளிவாக தெரியாத படிக்கு அதனை கச்சிதமாக மறைத்து வைத்திருந்தார்..

‘வாங்க ராகேஷ்.. உங்களுக்குத்தான் வெயிட்டிங்…’

‘ம்ம்ம்… எனக்கு அந்த ஆள காட்டுங்க…’

‘யா… சுவர்… கம் வித் மீ…’

முதல்ல இத கழுத்துல மாட்டிக்கோங்க…

மைதான அனுமதிக்காக தற்காலி அடையாள அட்டை ஒன்றை அவரது கழுத்தில் தொங்கவிட்டு அவரையும் அழைத்துக் கொண்டு மைதானத்துக்குள் சென்றேன்…

பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு அருகில் சென்று ஒரு மறைவிடத்தில் நின்றபடி, குறித்த நபரைக் காண்பித்தேன்…

அவர் பார்க்க ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர் போல இருந்தார்..

ஆனால் உறுதியாக எந்த நாட்டவர் என்று சொல்ல முடியவில்லை…

மிதமாகத் தாடி இருந்தது.. கறுப்பு கண்ணாடி போட்டிருந்தார்…

விசேட விருந்தாளிக்கான அடையா அட்டை அவரது கழுத்தில் தொங்கியது…

ஆங்கில மொழியிலேயே பேசினார்…

சில நிமிடங்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்த ராகேஷ், அங்கிருந்து கட்டுப்பாட்டு அறைக்குப் போ வேறு வழி இருக்குமா என்று கேட்டார்…

இல்லை என்றேன்…

கிரிக்கட் போட்டிக்கான எல்லாப் பொருட்களும் அங்குதான் இருக்கும்…

எல்லாக் கட்டுப்பாட்டு செயற்பாடுகளும் அங்கிருந்துதான் மேற்கொள்ளப்படும்.

‘இல்ல ராகேஷ்… நேரா போறதுதான் ஒரே வழி… ஆனா அங்க போய் என்ன செய்ய போறீங்க?’

‘நீங்க சொல்றமாதிரி குண்டு இருக்குமா இருந்தா அங்கதான் இருக்கும்… முதல்ல அவன பிடிச்சி விசாரிப்போம்… பிறகு எல்லாம் தெரியவரும்…’

மெதுவாக ராகேஷ் அங்கிருந்து கட்டுப்பாட்டு மையத்தை நோக்கி நடக்கலானார்… நானும் கூடவே சென்றேன்…

அந்தநபர் எங்களைக் கண்ட போது, கண்களைத் திசைமாற்றாமல் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

போகிற போக்கில் அந்த நபரை மிதமாக மோதி, மன்னிப்பு கேட்டுவிட்டு கட்டுப்பாட்டு அறைக்குள் சென்றார்…

அந்த நபர் எங்களைப் பின்தொடர்ந்து வந்தது தெரிந்தது…

ராகேஷ் வேகமாக நடந்தார்…

சில அடிகள் தொலைவில் இருந்த ஆண்களுக்கான மலசலக்கூடத்தில் நுழைந்த போது, பின்னால் அந்த நபரும் சென்றிருந்தார்…

நான் வெளியில் காத்துக் கொண்டிருந்தேன்…

3 நிமிடங்கள் கடந்திருக்கும்…

மலசலக்கூடத்தில் இருந்து ஒருவர் ஓடி வந்தார்…

பின்னர் ராகேஷ் வெளியில் ஓடி வந்தார்…

மீண்டும் பிரதான கட்டுப்பாட்டு அறையை நோக்கி ஓடினோம்..

‘நீங்கச் சொன்னது உண்மைதான் கணிக்கா.. இங்க ஒரு குண்டு வச்சிருக்காங்க… இந்த அறைக்குள்ளதான் இருக்கு… அவன் இத பற்றி முழுசா சொல்றதுக்குள்ள அவன யாரோ சுட்டுட்டாங்க..’

ராகேஷ் பதற்றமாக இருப்பதாகத் தெரியவில்லை..

அவர் சாதாரணமாகவே அதனை சொல்லிக் கொண்டே நடந்தார்..

‘சுட்டாங்கனு சொல்றீங்க… சத்தமே கேட்கல்லயே..’

‘சைலன்சர் பிக்ஸ் பண்ணி இருப்பாங்க…’

கட்டுப்பாட்டு அறைக்குள் சென்று சந்தேகம் சந்தேகம் வராதபடிக்கு நாங்கள் நடந்து கொள்ள முயற்சித்தோம்…

அங்கிருந்த முக்கியப் பொருட்கள் அனைத்தையும் சோதிக்கலானோம்..

அதிகாரிகள் எங்களை ஒருமாதிரி பார்ப்பது புரிந்தது..

அங்கு மொத்தமாக 8 பேர் இருந்தார்கள்…

பார்ப்பதற்கு புதியவர்கள் போல் தெரிந்தார்கள்…

கட்டுப்பாட்டு அறையில் இருந்த சிலரை எனக்குத் தெரியும்…

ஆனால் அவர்களில் ஒருவரேனும் இப்போது இருக்கவில்லை…

அவர்களில் 3 பேர் ராகேஷை நோக்கி வந்தார்கள்…

ராகே{க்கு சமிக்ஞை செய்தேன்…

அவரும் ஏலவே அதனை அறிந்து வைத்திருந்தார்…

ராகேஷின் முதுகு பக்கமாக வந்த ஒருவர் அவரை பற்றிக் கொள்ள, இன்னொருவர் கண்ணத்தில் அறைந்தார்…

ராகேஷ் தரையில் காலை உந்தி எழுந்து பின்னால் பிடித்திருந்தவரைக் கீழே தள்ளிவிட்டு, வலது கையால் முன்னால் நின்றிருந்த இரண்டு பேருக்கும் ஒவ்வொரு குத்துவிட்டார்…

அந்தக் குத்துகள் முகத்தில் விழுந்தன..

அவர்கள் நிலைதடுமாறி போன தருணத்தில் மீத மிருந்த ஐந்து பேரும் எங்களை நோக்கி ஓடி வந்தார்கள்…

நான் ஒதுங்கி கதவுக்கு அருகில் சென்று நின்று கொண்டேன்..

ராகேஷ் அவர்களை நோக்கி ஓடிச் சென்று, ஒருவரின் சட்டையை இழுத்து தலையோடு போர்த்திவிட்டு, அவருக்குப் பின்னல் வந்தாரின் கழுத்துப் பகுதியில் கையால் தாக்கியபடியே எதிர்த்திசையில் திரும்பு வலது முழங்கையால் மற்றுமொருவரின் வயிற்றில் தாக்கினார்.

பின்னர் பின்னால் நின்றிருந்த ஒருவரின் தலையை முன்னால் இருந்தவாறே இடது கையால் பிடித்து முன்பக்கமாக புரட்டி வீழ்த்தினார்..

குனிந்த படி இருந்த ராகேஷ் மேலும் கீழே விழுவதைப் போன்று இன்னும் தாழ்ந்து கால்களை தமக்கு பின்னால் தாக்க தயாராக இருந்தவரின் காலை உதைக்க அவரும் தடுமாறி கீழே விழுந்தார்…

அங்கிருந்த விக்கட் கம்பு ஒன்றை எடுத்து அனைவரையும் சரமாரியாக தாக்கினார்…

என்னை வெளியில் சென்று காவற்துறையை அழைக்கச் சொன்னார்…

நான் வெளியில் வந்து காவற்துறை அதிகாரிகளைத் தேட ஆரம்பித்த வேளையில் அவர்களே கட்டுப்பாட்டு அறையை நோக்கி ஓடி வந்துக் கொண்டிருந்தார்கள்..

இப்போது சற்று நிம்மதியாக இருந்தது…

சில நொடிகளில் ராகேஷ் அங்கிருந்து வெளியில் வந்தார்.

அவர் ஓடி வரும் அழகு மெய்சிலிர்க்க வைத்தது..

தமது கடிகாரத்தை சரி செய்தபடியே என்னையும், பின்னர் என்னை நோக்கி வந்த காவற்துறை அதிகாரிகளையும் பார்த்தபடி சிரித்தார்…

அவரது சட்டை பொத்தான்கள் கழன்றிருந்தன..

அவற்றைச் சீர்செய்து கொண்டு என் அருகில் வந்தார்..

அதற்குள் அங்கு காவற்துறையினர் வந்து சேர்ந்தார்கள்..

‘வாங்க… உங்களுக்குத்தான் வெயிட்டிங்.. நீங்களே வந்துட்டிங்க’

ராகேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரை நான்கு பேர் சுற்றிவளைத்து பிடித்துக் கொண்டார்கள்…

அவர் கைகளில் விலங்கு இடப்பட்டது.

எனது இரண்டு கைகளையும் இரண்டு பேர் பிடித்துக் கொண்டு இழுத்தபடியே மைதானத்தைவிட்டு வெளியில்கொண்டு சென்றார்கள்…

நாங்கள் அவர்களுக்கு விளக்க முயற்சித்தோம்..

ஏதுவென்றாலும் காவற்துறை நிலையத்துக்கு வந்து சொல்லுமாறு சொன்னார்கள்…

நாங்கள் ஒரு நீல நிற ஜீப் வண்டியில் ஏற்றப்பட்டோம்..

ராகே{க்கு அருகிலேயே என்னை அமரச் செய்தார்கள்..

எங்களைச் சுற்றி அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்…

மைதானத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உரத்துச் சொன்னேன்…

அவர்கள் அமைதியாக வந்தார்கள்..

ராகேஷ் என் வலத்துக்காலில் கையை வைத்து அமைதியாக இருக்குமாறு கூறினார்.

நான் என்ன சொன்னாலும் அவர்கள் கேட்கமாட்டார்கள் என்பது புரிந்தது…

சில நிமிடங்கள் பயணித்திருப்போம்..

நேரம் 6.45..

வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு ஒரு வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.

அது காவற்துறை நிலையத்தைப் போல் இல்லை..

நான் களவரப்பட்டேன்…

ராகேஷ் அமைதியாக இருந்தார்…

அவருக்கு ஏதோ புரிந்திருக்கும் என்று நம்பினேன்…

அந்த வீட்டின் ஒரு அறையில் கைகளை உயர்த்திக் கட்டியவாறு எங்களை நிற்கச் செய்தார்கள்…

ராகேஷை அப்படிப் பார்ப்பது கவலையாக இருந்தது…

எவ்வளவு பெரிய எழுத்தாளர் அவர்? நானும் அவருக்கு மிகப்பெரிய விசிறி…

சில காலமாக தனிப்பட்ட பழக்கம்…

தொலைப்பேசியிலும், பேஸ்புக்கிலும் தொடர்பு கொண்டு பேசியதுண்டு…

இதுதான் முதல்சந்திப்பு…

முதல்சந்திப்பே இப்படி இருக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை…

அவர் என்ன நினைத்துக் கொண்டிருப்பாரோ தெரியவில்லை…

ஒன்றும் பேசாது இருந்தார்.

ஆனால் அவரது முகத்தில் குழப்பங்கள் எவையும் தெரியவில்லை…

அந்த அறையை அவர் மேலும் கீழுமாக பார்த்து அளந்து கொண்டிருந்தார்…..

எனது முகத்தைப் பார்த்து ஒருமுறை சிரித்தார்…

பயப்பட வேண்டாம் என்று சொல்வதைப் போல இருந்தது…

‘இவங்களெல்லாம் யார் ரகேஷ்’

‘நம்மல கூட்டி வந்தது பொலிஸ் இல்ல… எல்லாம் ஒரே டீம்தான் போல இருக்கு…’

‘எதுக்காக இப்படி பண்றாங்க…’

‘இந்தியா பாகிஸ்தானுக்கு சண்டைய மூட்டிவிடுறதுக்காக இருக்கலாம்.. இல்லனா சிறிலங்கால பாதுகாப்பு இல்லனு காட்டுறதுக்காக இருக்கலாம்…’

எனக்கு அச்சமாக இருந்தது…

நீண்ட நேரம் நாங்கள் அப்படியே இருக்க வேண்டி ஏற்பட்டது..

பின்னர்

எங்களுக்கு முன்னால் போடப்பட்டிருந்த பெரிய திரை ஒன்று திறக்கப்பட்டது…

முன்னால் பெரிய விறாந்தைப் போன்ற அறை…

அதில் போடப்பட்டிருந்த ஆடம்பர ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்கள்…

அவர்கள் பருமனாகவும், உயர்ந்தவர்களாகவும், மூக்கு நீண்டவர்களாகவும், தாடி வைத்தவர்களாகவும் இருந்தார்கள்…..

அவர்கள் மிகப்பெரிய செல்வந்தர்களின் தோற்றத்தில் தெரிந்தார்கள்..

அவர்களுக்கு முன்னாள் இருந்து பெரிய கடிகாரத்தில் நேரம் 7.50 என்று காட்டியது…

இன்னும் பத்து நிமிடங்களில் கிரிக்கட் போட்டி ஆரம்பிக்கவிருக்கிறது..

என்ன நடக்குமோ என்ற அச்சம் மேலோங்கியது..

அவர்களில் ஒருவர் எங்கள் அருகில் வந்தார்…

அவரது கையில் தண்ணீர் போத்தலும், அப்பில் பழம் ஒன்றும் இருந்தன…

போத்தலில் இருந்த நீரை ராகேஷின் முகத்தில் வீசினார்…

ராகேஷ் முகத்தை உதறிக் கொண்டார்… துடைக்க வழியில்லை…

பின்னர் கையில் இருந்த அப்பில் பழத்தை ராகேஷின் முகத்துக்கு முன்னால் நீட்டினார்…

ராகேஷ் அப்பில் பழத்தையும் அவரது முகத்தையும் பார்த்தார்…

அவரது முகத்தில் கேள்வி குறி இருந்தது..

‘என்ன… ஒன்னும் புரியல்லயா?’

ராகேஷ் புரியாததை போலத் தலையை ஆட்டினார்..

‘ இது எப்பல் இல்ல… ரிமோட் கன்ட்ரோல்… மெச்ல முதல் பந்து வீசும் போது நான் இந்த பழத்த கடிச்சா, அங்கு குண்டு வெடிக்கும்..’ (அவர்)

எனக்கு பதட்டமா இருந்தது…

‘குண்ட எங்க வச்சிருக்க’

‘ஹையோ… நாங்க அந்த அளவுக்கு கெட்டவங்க இல்லா தம்பி.. நாங்க குண்டெல்லாம் வக்கல்ல…’

‘பின்ன’

‘பந்ததான் வச்சோம்… ஹ…ஹா…ஹா…’

அவர் அந்த அப்பில் பழம் போல் இருந்த ரிமோட்டை மேலும் கீழுமாக திருப்பி காட்டினார்..

‘இப்ப போம்ப் எக்டிவ் ஆகிறீச்சி… முதல் போல் பட்டு அது பெட்ல படும் போது குண்டு வெடிக்கும்… நாங்க நினைச்சது நடக்கும்…’

திடீரென இயங்கிய ராகேஷ் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்து மேலே தொங்கியபடி, முன்னாள் இருந்தவரை உதைத்து, அந்த ரிமோட்டை கீழே விழச் செய்தார்…

பின்னர் தனது கைகளை அவிழ்த்துக் கொண் ரிமோட்டை கையில் எடுத்து ஏதோசெய்ய முயற்சித்து, பின்னர் வீசி எறிந்தார்..

அதற்கு அவர் மற்றயவர்களால் பிடித்து மீண்டும் கட்டப்பட்டார்…

மீண்டும் எழுந்த அந்த நபர்

‘என்ன… கைய அவிழ்த்து விடனுமா?’ என்றார்…

ராகேஷ் ஒன்றும் சொல்லவில்லை…

‘சரி… நாம ஒரு செலஞ்ச் பண்ணிக்கலாமா?’ (அவர்)

‘என்ன?’– (ராகேஷ்)

போலர் முதல் பந்த வீசு ரெடியாகும் போது நான் உன்ன அவிழ்த்துவிடுறன்… அதுக்குள்ள ஓடிபோய் முடிஞ்சா எல்லாரையும் காப்பாற்றிக்க’

மைதானத்தில் இருந்து நாங்கள் வாகனத்தில் இங்கு வந்து சேரவே 5 நிமிடங்கள் வரை சென்றிருந்தது…

ராகேஷால் எவ்வளவு வேகமாக ஓட முடியும்…

ஆனால் ரகேஷ் சரி.. தயார் என்றார்…

‘ஆனா ஒரு ரிக்வெஸ்ட்..’

‘என்னது’

‘என்னோட சேர்த்து இவங்களையும் அவிழ்த்துவிடனும்..’

‘ஹா… சுவர்…சுவர்…சுவர்… இந்த பொண்ண வச்சி நாங்க என்ன பண்ண போறோம்..’

எனக்கு ஒன்றும் புரியாமல் இருந்தது…

நேரம் 8 ஆக இருந்தது…

அறையின் யன்னல் திரை விலக்கப்பட்ட போது, மைதானம் மிகவும் தெளிவாக தெரிந்தது.

பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்குத் தயாராக இருந்தார்…

ராகேஷினதும், எனதும் கட்டுகள் அவிழ்த்துவிடப்பட்டன…

இருவரும் அங்கிருந்து வேகமாக ஓடி, அந்த வீட்டில் இருந்து வெளியில் வந்தோம்…

இந்த நேரத்துக்குள் அந்தப் பந்துவீச்சாளர் பந்தை எறிந்திருப்பார்…

இனி எங்குப் போய் காப்பாற்றுவது…

எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது..

வேகமாக ஓடி வந்த ராகேஷ் பின்னர் நின்று வீட்டைத் திரும்பி பார்த்தார்…

பாரிய சத்தத்துடன் அந்த வீடு வெடித்துச் சிதறியது…

நாங்கள் வீட்டில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் இருந்த பாதுகாப்பு சுவருக்குப் பின்னர் மறைந்திருந்தோம்…

‘என்ன ராகேஷ் இது.. இங்க எப்படிக் குண்டு வெடிச்சது..’

ராகேஷ் சிரித்தார்…

‘ரிமோட்டையும் குண்டையும் மாற்றி வச்சிட்டன்…’

‘எப்படி’

‘கன்ட்ரோல் ரூம்ல நம்மல அடிக்க வந்தாங்க இல்லையா? அவங்க எல்லாரும் இவங்களோட ஆட்கள்தான்.. அவங்கள விசாரிச்சதில ஒருத்தன் உண்மைய சொல்லிட்டான்.. அவங்க மைக்ரோ அட்டமிக் போம் வச்சிருந்த பந்துல இருந்து குண்ட ரிமுவ் பண்ணி, அதுல ரிமோட் ஒன்ற பிக்ஸ் பண்ணிட்டன்.. பிறகு அவர் அப்பல் ரிமோட்ட நான் பறிச்சி, அந்த குண்ட அதுக்குள்ள வச்சிட்டன்.. அந்த பந்து அடிபடும் போது, இங்க குண்டு வெடிச்சிட்டு.. அவ்வளவுதான்..’

‘யு.. ஆர்…. வெரி க்ளவர் ராகேஷ்.. என்னால நம்பவே முடியல்ல…ப்ப்ப்பா…’

நாங்கள் வந்த ஜீப் வண்டியை நோக்கி ராகேஷ் நடந்து கொண்டிருந்தார்…

எனக்கு ராகேஷ் மீது இருந்த அன்பு பெருகி வலிந்தது..

‘ராகேஷ்… உங்கள்ட்ட ஒன்று சொல்லனும்..’

‘யா… சொல்லுங்க…’

அவர் ஜீப் வண்டியில் ஏறி வாகனத்தின் இயந்திரத்தைத் தொடக்கி இருந்தார்…

‘நான்;… நான்… நான் உங்கள அண்ணானு கூப்பிடட்டுமா?’

‘இப்படி எல்லா பொண்ணுங்களும் அண்ணானு கூப்பிட்டுட்டா எப்படி?

என்று சொன்ன ராகேஷ் கண்ணடித்தார்…

பின்னர்

‘வண்டியில ஏறு தங்கச்சி’

என்றார்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *