தோழியா, காதலியா?

 

“”எனக்கு இன்னிக்கு, ராசிபலன்ல அதிர்ச்சின்னு போட்டிருந்தான். ஆனா, அது, இந்த மாதிரி, ஒரு இன்ப அதிர்ச்சியா இருக்கும்ன்னு, நான் கொஞ்சங்கூட எதிர்பார்க்கல… வா தீபிகா… வெல்கம். இன்னும் பத்து நாள்ல, நான் தாலி கட்டப் போற தேவதை, சொல்லாமக் கொள்ளாம முன்னால வந்து நிற்கும் போது, கையும் ஓடல, காலும் ஓடல… வெல்கம்.”
“”சாரி அசோக்… இப்படி திடீர்ன்னு வந்ததுக்கு. வர்றதுக்கு முன்னால, உங்களுக்கு ஒரு போன் செய்திருக்கணும். நீங்க எங்கேயோ வெளிய கிளம்பிட்டு இருக்கீங்க போலிருக்கே?”
தோழியா, காதலியா“”இன்னும், நம்ம கல்யாண பத்திரிகை கொடுத்து முடியல… அதை இன்னிக்கு முடிச்சிரலாம்ன்னு நினைச்சேன்… அதுக்காகத் தான் இன்னிக்கு ஆபீசுக்கு லீவ் போட்டிருக்கேன்… இப்ப ஆரம்பிக்கறத, இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு ஆரம்பிச்சா ஒண்ணும் தப்பில்ல… உனக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லேன்னா, நீயும் என் கூட வரலாம். என் ப்ரண்ட்ஸ் எல்லாம் அசந்து போயிருவாங்க… பின்ன, கல்யாணப் பொண்ணும், மாப்பிள்ளையுமே நேர்ல வந்து கூப்பிட்டா?”
“”நல்ல ஐடியா தான்… ஆனா, அதப்பத்தி பின்னால பேசுவோம். இப்ப உங்கக்கிட்ட வேற ஒரு விஷயம் பேசறதுக்காக வந்துருக்கேன்… பேசலாமா?”
“”கட்டாயம்… ஆனா, அதுக்கு முன்னால, நீ என்ன சாப்பிடற சொல்லு… என் கையாலேயே தயாரிச்ச, ஒரிஜினல் தஞ்சாவூர் பில்டர் காபி வேணுமா… இல்லே ரிஸ்க் எடுக்க வேண்டாம்ன்னா, ரெடிமேட் கூல்ட்ரிங்க் கொண்டு வரட்டுமா?”
“”எதுன்னாலும் ஓ.கே.,”
தூக்கலான வாசனையுடன், இரண்டு கப் காபியை, ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வந்தான் அசோக். காபியை சுவைத்தவுடன், தனக்கு மனைவியாக வரப் போகிறவள், “வாவ்… சூப்பர் காபி…’ என, பாராட்டப் போகிறாள் என்று நினைத்தான். ஆனால், ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததால், காபியை ரசிக்கும் மனநிலையில் இல்லை, தீபிகா.
“”தீபிகா… நீ இன்னும் கல்யாண ஷாப்பிங்கை முடிக்கல போலிருக்கே… உங்கம்மா சொன்னாங்க. போற போக்கைப் பாத்தா, தாலி கட்டற அந்த நிமிஷம் வரைக்கும், உனக்கு ஷாப்பிங் வேலை இருக்கும் போலிருக்கே?”
“”என்ன பண்றது அசோக்… நான் ஒரே பொண்ணு. இந்த ஊர்ல, சொந்த பந்தம்ன்னு அதிகம் கிடையாது. அதனால, எல்லா வேலையும் நான்தான் செய்ய வேண்டியதிருக்கு… அப்பா இதய நோயாளி, அம்மாவுக்கு ஆஸ்த்மா. அவங்கள அலைக்கழிக்க வேண்டாம்ன்னு, எல்லாத்தையும் நானே, என் தலைல போட்டு செய்துகிட்டு இருக்கேன்… அது போகட்டும், நீங்க, ஷாப்பிங்கை முடிச்சிட்டீங் களா?”
“”ஓ… போன மாசமே முடிச்சிட்டேன். உன்னை மாதிரி, நானும் தனி மரம் தான். ஆனா, எனக்கு ப்ரண்ட்ஸ் நிறைய உதவினாங்க. அதான், சீக்கிரமா முடிக்க முடிஞ்சது.”
“”உங்களுக்கு நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்களா?”
“”நிறையன்னு இல்ல… ஆனா, இருக்கற கொஞ்சப் பேரு, எனக்காக எதுவும் செய்வாங்க!”
“”அந்த மாதிரி ஒரு ப்ரண்டு தான், கல்யாணப் பொண்ணுக்கு புடவை தேர்ந்தெடுத்தாங்க போல இருக்கு… அவங்க தான், மாப்பிள்ளை டிரஸ்சையும் செலக்ட் பண்ணாங்க போல இருக்கே…”
தீபிகாவின் குரலில் தெரிந்தது, எகத்தாளமா, விரக்தியா என, அசோக்கால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
“”நீ… பிரேமாவை சொல்றியா… ஆமாம்… அவ தான், இந்தக் கல்யாண வேலைய இழுத்துப் போட்டுக்கிட்டுச் செய்யறா… இன்னிக்குக் கூட, அவ எனக்காகத்தான் லீவு போட்டிருக்கா… நாங்க ரெண்டு பேரும் சேந்து போய், மிச்சம் இருக்கற பத்திரிகைய கொடுக்கலாம்ன்னு இருக்கோம். அது சரி, பிரேமாதான், உ<ன் புடவையை, “செலக்ட் ‘ செஞ்சான்னு உனக்கு எப்படி தெரியும்?”
“”நீங்க அந்தப் புடவைய வாங்கினது, என்னோட பெரியப்பா பையனோட கடை… அவன் சொன்னான்.”
அதன் பின், எப்படி பேச்சைத் தொடருவது என, இருவருக்குமே தெரியவில்லை.
தீபிகா நிமிர்ந்து உட்கார்ந்து, தொண்டையை கனைத்துக் கொண்டது… அவள் ஏதோ, நெருடலான விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறாள் என்பதை, அசோக்குக்கு உணர்த்தியது. அவனும் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“”அசோக்… நான் எதையும் வெளிப்படையாப் பேசிப் பழக்கப்பட்டவ… நீங்க பொண்ணு பாக்க வந்தபோதே, உங்கக்கிட்ட நான் என்ன எதிர்பாக்கறேன்னு பட்டியல் போட்டுச் சொன்னேன்.
என்னோட கேள்வி, உங்கள காயப்படுத்தினா, என்னை மன்னிச்சிருங்க… ஆனா, பதில் சொல்லாம இருந்துறாதீங்க. இப்பவே சில விஷயங்கள்ல தெளிவா இருக்கறது, ரெண்டு பேருக்குமே நல்லது. பிரேமாவுக்கும், உங்களுக்கும் உள்ள உறவு என்ன?”
“”தீபிகா… நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நாங்க ஒரே ஆபீசில் வேலை பாக்கறோம்… அதுவும் அடுத்தடுத்த சீட்ல… எனக்கு, அவள அஞ்சு வருஷமாத் தெரியும். அவளுக்கும் என்னை மாதிரி அரட்டை அடிக்கறதுன்னா ரொம்ப பிடிக்கும். நாங்க நண்பர்கள்; அவ்வளவுதான்.”
அசோக்கின் குரலில் தென்பட்ட எரிச்சல், தீபிகாவைப் பாதிக்கவில்லை.
“”நீங்க எதைப்பத்திப் பேசுவீங்கன்னு, நான் தெரிஞ்சிக்கலாமா?”
“”பாரதியார் கவிதைகள், சாமர்சாட் மர்ம நாவல்கள், அல்டாஸ் ஹக்ஸ்லியோட எழுத்து, தீபா மேத்தாவோட படங்கள், ஷேர் மார்க்கெட், கிரிக்கெட் மேட்ச், ஆபீஸ்ல நடக்கற பாலியல் குற்றங்கள், “டிவி’ யோட கேடுகள், இப்படி… எதப்பத்தி வேணும்ன்னாலும் பேசுவோம்.”
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அவனையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் தீபிகா. அசோக்கிற்கு எரிச்சல் அதிகமாகியது.
“”நீ, எதைத் தெரிஞ்சிக்கணும்ன்னு நினைக்கறியோ, அதைச் சொல்றேன்… பிரேமாவுக்கு கல்யாணம் ஆயிருச்சி… அவ என்னை விட அஞ்சு வயசு பெரியவ; அவளுக்கு ஆர்த்தின்னு, ஒரு பெண் குழந்தை இருக்கு; அதுக்கு பத்து வயசாகுது… ஆர்த்தியும் என்னோட ப்ரண்டு தான்.”
தீபிகாவின் வெறித்த பார்வை தொடரவே, அசோக்குக்கு கோபம் தலைக்கேறியது.
“”இப்ப உனக்கு என்ன வேணும்… எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல உடலுறவு இருக்கான்னு தெரிஞ்சிக்கணும்; அவ்வளவுதானே… எங்கம்மா மேல சத்தியமா சொல்றேன்… அந்த மாதிரி எதுவும் கிடையாது. எங்களுக்குள்ள இருக்கறது, ஒரு தூய்மையான நட்பு; ப்ளேட்டானிக் லவ்… பிரேமா மாதிரி, ஒரு தோழி கிடைக்கறது அபூர்வம். தீபு… நீ அவளோட பேசிப் பாறேன். நீயும் அவளோட ப்ரண்டாயிருவ. பாவம் பிரேமா… அவ புருஷன் ஏதோ பிசினஸ் செய்றாராம். அவனுக்கு பணம் ஒண்ணுதான் குறி. அவன் பிரேமாகிட்ட சரியாப் பேசுறதே கிடையாதாம்… பொண்டாட்டி, குழந்தைய வெளிய எங்கேயும் கூட்டிக்கிட்டுப் போறதில்லையாம்… அவங்களுக்குள்ள எந்த உறவும் இல்லையாம்… ஒரு நாள் பிரேமா, இதெல்லாம் சொல்லி அழுதா… நான் ஆறுதலாப் பேசினேன். அப்படியே… எங்க நட்பு ஆரம்பிச்சது. நீ எங்க உறவை சந்தேகப்படறியா
தீபிகா?”
இப்போது, தொலைவில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தீபிகா . பின், அசோக்கின் முகத்தை பார்த்தாள்.
“”இந்த நட்பு, நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் தொடருமா?”
“”நிச்சயமா… வொய் நாட்… அது ஒண்ணும் தப்பான உறவு இல்லையே… அப்புறம், எதுக்கு அதை விடணும்?”
“”அசோக்… எனக்கு சுத்தி வளைச்சி பேசத் தெரியாது… என்னால, உங்களுக்கும் பிரேமாவுக்கும் இருக்கற உறவை ஜீரணிக்க முடியல; அவ்வளவுதான்.”
“”என்ன தீபிகா… ஒரு பெரிய கம்பெனில ஆபீசரா இருக்கற… நீ இப்படி படிப்பறிவில்லாத கிராமத்து பொம்பளை மாதிரி பேசலாமா… கம்ப்யூட்டர், இன்டர்நெட் காலத்துல, இப்படி ஆபீஸ்ல கூட வேலை பாக்கற பொம்பளை கூட, புருஷன் பேசக் கூடாதுன்னு சொன்னா, கேட்க நல்லாவா இருக்கு?”
“”அசோக்… தயவு செஞ்சி என்னை புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க… கூட வேலை பாக்கறவங்க கூட, பேசக் கூடாதுன்னா சொன்னேன்… என் கூடயும் ஆம்பளைங்க வேலை பாக்கறாங்க. நம்ம ரிசப்ஷன்ல எவ்வளவு ஆம்பளைங்க வர்றாங்கன்னு பாருங்களேன்…
“”ஆனா, அது வேற… உங்க கூட வேலை பாக்கறவளோட நீங்க எதைப் பத்தி வேணாலும் பேசலாம்… எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசலாம். ஆனா, அந்தப் பேச்சு, ஆபீஸ் நேரத்துக்கு, அப்பறமும் தொடர்ந்துச்சின்னா… அந்தப் பேச்சு, அவளோட செக்ஸ் லைப்பைப் பத்தி இருந்துச்சின்னா… நண்பருக்கு உதவி பண்றதுங்கறது, அவருக்கு மனைவியா வரப்போறவளுக்கு, கல்யாணப் புடவை எடுக்கறது வரைக்கும் வந்துச்சின்னா… அது பிரச்னைல கொண்டு போய் விட்டுரும்
அசோக்!
“”நீங்க… அதை உண்மையான நட்பு, ப்ளேட்டானிக் லவ் அப்படின்னு சொல்லிக்கலாம். நீங்க ரெண்டு பேரும், ஊர் பூரா ஜோடியா சுத்தறதப் பாக்கற எங்க சொந்தக்காரங்க, என் ப்ரண்ட்சுக்குப் பதில் சொல்லி முடியல…
“”நீங்க ரெண்டு பேரும் நடுராத்திரி வரைக்கும் பீச் மணல்ல உட்காந்துட்டு சாமர்செட் மர்ம கதையப் பத்தி ஆராய்ச்சி செய்றீங்கன்னு நான் நம்பறேன். ஆனா… மத்தவங்க நம்ப மாட்டேங்கறாங்களே… ஊரைப்பத்தி நான் கவலைப்பட மாட்டேன்னு விட்டேத்தியா இருக்க முடியாது அசோக்… நாளைக்கு நாமும் குடும்பம், குழந்தைன்னு… இதே ஊர்ல வாழணும் இல்லையா?”
“”தீபிகா… வார்த்தையக் கொஞ்சம் அளந்து பேசு… எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல தப்பான உறவு இல்லைன்னு, அம்மா மேல அடிச்சி சத்தியம் செய்ததற்கு அப்புறமும், நீ இப்படிப் பேசறது கொஞ்சம் கூட நல்லால்ல.”
“”ஒரு பொம்பளையோட மனசைப் புரிஞ்சிக்கற அளவுக்கு, ஆம்பளைங்களுக்கு எப்போ பரிணாம வளர்ச்சி ஏற்படப் போகுதுன்னு தெரியல அசோக்… நானும் வெளிப்படையாவே சொல்லிடறேன். ஒரு வேளை நீங்களும், பிரேமாவும் ஆபீஸ் விஷயமா, வெளியூர் போக வேண்டி வந்து… ஒரே ரூம்ல தங்கற சந்தர்ப்பம், சூழ்நிலை காரணமா, உங்களுக்குள்ள உறவு ஏற்பட்டுச்சின்னா… அதைக் கூட நான் பெரிசா நினைக்க மாட்டேன்… அது, உடம்புகளுக்குள்ள ஏற்படற சாதாரண உறவுதான்.
“”ஆனா… நீங்க சொல்றதப் பாத்தா, நீங்களும், அவளும் உணர்வு பூர்வமா ரொம்ப நெருங்கிட்டீங்கன்னுதான் எனக்குத் தோணுது… உங்களால, ஒரு நாள் கூட, அவளைப் பாக்காம இருக்க முடியாது. அவளுக்கும் உங்கக்கிட்ட, ஒரு மணிநேரமாவது பேசாட்டி தூக்கம் வராது போல இருக்கே…
“”உங்களுக்குள்ள இருக்கற நெருக்கத்துல, மூணாவது மனுஷியான எனக்கு, கொஞ்சம்கூட இடம் இல்லைன்னுதான் தோணுது… உங்க மனசுல, நீங்க எனக்குத் தர வேண்டிய முக்கியமான இடத்துல, அவ இருக்கா… உங்களுக்கு நடுவுல, என்னோட இடத்துக்கு முண்டியடிச்சி சண்டை போட்டுக்கிட்டு இருக்க எனக்குப் பிடிக்கல அசோக்…”
“”தீபிகா… உன்னோட நாகரிகமான உடையையும், நுனிநாக்கு ஆங்கிலத்தையும் பார்த்து, உனக்கு பரந்த மனசு இருக்கும்ன்னு எடை போட்டது என்னோட தப்புத்தான்… உன்னை விட, பிரேமாவோட புருஷன் எவ்வளவோ மேல். ஒரு நாள் நைட், 11 மணிக்கு நானும், பிரேமாவும் ஒரு ஓட்டல்ல உட்காந்து சாப்பிட்டுக்கிட்டு இருந்தபோது, பிரேமாவோட புருஷன், அதே ஓட்டலுக்கு வந்துட்டான். நாங்க ரெண்டு பேரும் இருக்கறதப் பாத்துட்டு, “ஹாய்…’ன்னு சொல்லிட்டு, அவன் ப்ரண்டோட சாப்பிட போய்ட்டான். அவன் பக்கா ஜென்டில்மேன். நீயும் இருக்கியே…”
“”இப்போ தேவையில்லாம, எதுக்கு பிரேமாவோட புருஷனை வம்புக்கிழுக்கறீங்க… நீங்கதானே சொன்னீங்க, அந்தாளுக்கு சம்பாதிக்கறது ஒண்ணுதான் குறின்னு. அப்படிப்பட்ட ஆளு, பொண்டாட்டிய தண்ணி தெளிச்சி விட்டிருக்கலாம். ஆனா, அந்த மாதிரி ஆளுகூட, உங்க ரெண்டு பேரோட உண்மையான நெருக்கத்தைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டா, சும்மா இருப்பாரான்னு சொல்ல முடியாது…
“”வேணா ஒரு டெஸ்ட் பண்ணிப் பாப்போமா… பிரேமாகிட்ட சொல்லி, உங்களுக்குள்ள நடந்த அன்யோன்யமான சம்பாஷனைய, அவ புருஷன்கிட்ட சொல்லச் சொல்லுங்க… “தன்னோட தாம்பத்திய வாழ்க்கையப் பத்திக்கூட பேசினான்னு…’ சொன்னீங்கல்ல அதை அப்படியே, அவளோட புருஷன்கிட்ட சொல்லச் சொல்லுங்க… அதை அவளால சொல்ல முடியும்ன்னா, உங்க நட்பு சாதாரண நட்புத்தான்… ஒத்துக்கறேன்.
“”அசோக்… நான் திரும்பத் திரும்ப சொல்றேன். உங்களுக்குள்ள உடலுறவு இருக்குன்னு நான் சொல்ல வரல… ஆனா, இப்படி மனசளவுல ஒரு நெருக்கமான உறவு இருக்கும்போது, <உங்களால என்னை மனைவியா ஏத்துக்கிட்டு, எனக்குன்னு உரிய இடத்தக் கொடுக்க முடியுமான்னு தான் தெரியல…
“” நான் இன்னும், ஒரு படி மேல போயே சொல்றன்… பிரேமா அளவுக்கு நெருக்கமான, ஒரு ஆண் நண்பர் உங்களுக்கு இருந்தாலும் சரி… அதாவது, தினமும் ஒருத்தர ஒருத்தர் பாக்காம, பேசாம இருக்க முடியாதுங்கிற மாதிரி… அது கூட நம்ம மண வாழ்க்கையை நிச்சயமாய் பாதிக்கும். பிரேமாவோட புருஷன், இதை சாதாரணம்ன்னு நெனச்சு, அலட்சியம் பண்ணலாம். ஆனால், எனக்கு பயமா இருக்கு அசோக்… ரொம்பவே பயமா இருக்கு.”
“”சரி தீபிகா… நீ முடிவா என்ன தான் சொல்ற?”
“”ரொம்ப சிம்பிள். உங்களுக்கு தேவை நானா, இல்லை பிரேமாவோட நட்பான்னு, நீங்க தான் முடிவு செய்யணும்.”
இப்போது தான் நிஜமாகவே சிந்திக்க துவங்கினான் அசோக். பிரேமாவுடனான நட்பை குறித்து, அவன் இதுவரை தன் அம்மாவிடம் கூட பேசியது இல்லை. தீபிகாவின் கூர்மையான வாதங்கள், அவன் போட்டிருந்த வேஷங்களையும், மேலோட்டமான எண்ணங்களையும், தவிடுபொடியாக்கி, உண்மையை தோலுரித்து காட்டி
விட்டது.
பிரேமாவின் மேல், அவனது நகத்தின் நுனி கூட பட்டதில்லை என்பது உண்மை தான். அதனால் மட்டுமே, அது தெய்வீக நட்பு, தூய நட்பு என்று சொல்லிவிட முடியுமா? சரி… பிரேமாவை பார்க்காமல், அவளோடு அரை மணி நேரமாவது பேசாமல், ஒரு நாளாவது இருந்துவிட முடியுமா?
அப்படி இருக்கும் போது, இந்த மாதிரி நேர்மையான சிந்தனையும், கூர்மையான அறிவும் கொண்ட ஒரு பெண்ணைக் கைப் பிடித்தால், இன்னும் குழப்பம் தான் அதிகமாகும்… தொண்டையைக் கனைத்துக் கொண்டு, உணர்ச்சியற்ற, ஆனால், உறுதியான குரலில் பேச ஆரம்பித்தான்…
“”என்னை மன்னிச்சிரு தீபிகா… பிரேமா ஜஸ்ட் ஒரு ப்ரண்டுதான்னு இதுவரைக்கும், என்னை நானே ஏமாத்திக்கிட்டு இருந்தேன். நீ, இப்போ வெளிப்படையா. “நானா, பிரேமாவா’ன்னு, கேட்கும் போது தான், பிரேமா இல்லாம நான் வாழ முடியாதுன்னு தெரியுது… அந்த பிரச்னையை எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியல…
“”ஆனா, அது என்னோட தலைவலி. இப்போதைக்கு நம்ம கல்யாணம் நடக்கறது சரியில்லைன்னுதான் எனக்கும் படுது. நான், எங்க சைடு ஆளுங்ககிட்ட சொல்லி சமாளிச்சிக்கறேன். நீ எப்படியாவது உங்கப்பா, அம்மா கிட்ட சொல்லி, இந்த கல்யாணத்த நிறுத்திரு. என்னை மன்னிச்சிரு தீபிகா… எனக்குள்ளேயே புதஞ்சி கிடந்த விஷயங்கள, நான் பாக்க வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்!”
இப்போது, அவனை உற்றுப் பார்த்தாள் தீபிகா. அவளது கண்களில் நீர் நிறைந்து விட்டது என்றாலும், குரல் கரகரக்காமல் தெளிவாகப் பேசினாள்…
“”அசோக்… நான் உங்கள எவ்வளவு தூரம் காதலிச்சேன்னு என்னால உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. நீங்க பொண்ணு பாத்துட்டு போனதுலேர்ந்து, <உங்களையே நினைச்சி, கற்பனையா <உங்க கூட வாழ ஆரம்பிச்சிட்டேன்.
“”நமக்குப் பொறக்கப்போற குழந்தைக்கு, பேர் கூட தேர்ந்தெடுத்துட்டேன். இப்படி கல்யாணம் நின்னு போனது, தலைல இடி விழுந்த மாதிரி இருக்கு. ஆனா… ஒரு வேளை நமக்கு கல்யாணம் நடந்திருந்தா, என் நிலைமை இன்னும் மோசமா போயிருக்கும். எது எப்படியோ, உண்மைய தயக்கமில்லாம ஒத்துக்கிட்டதுக்கு
தேங்க்ஸ்.”
தீபிகாவின் உருவம், கண்ணில் இருந்து மறையும் வரை, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அசோக். காற்றில் சலசலத்துக் கொண்டிருந்த, தன் கல்யாண பத்திரிகை கவர்களைப் பார்த்து பெருமூச்சு விட்டான். வாசல் கதவு திறக்கும் சப்தம் கேட்டு, நிமிர்ந்து பார்த்தான்.
“”ஹாய் அசோக்… இன்விடேஷன் கொடுக்கக் கிளம்பலாமா?” என்று கேட்டபடியே, வீட்டிற்குள்ளே நுழைந்தாள் பிரேமா.

- மே 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
‘‘என்னங்க... இப்படிஇடிஞ்சு போய், பித்துப் பிடிச்ச மாதிரி உக்காந்துட்டு இருந்தா எப்படி? உங்க ஆபீஸ் பிரச்னை எப்பத்தான் தீரும், சொல்லுங்க? எப்போ என்கொயரி முடியுமாம்? இன்னும் எவ்வளவு நாளைக்குதான் சஸ்பெண்ட் பண்ணி வெச்சிருப்பாங்-களாம்?’’ மாலதிக்கு என்ன பதில் சொல்-வது என்று தெரிய-வில்லை. மொத்தத்தில் ...
மேலும் கதையை படிக்க...
தாயில்லாமல் நானில்லை
""டேய் நம்ம ஜெயிச்சிட்டோம்டா... மினிஸ்டர் பொண்ணு கல்யாணத்துக்கு பூ அலங்காரம் முழுசும் நமக்குதான். மூணு லட்ச ரூபாய் கான்ட்ராக்ட்... கல்யாணத் தேதிய இப்பத்தான் சொன்னாங்க...'' ""கையக் கொடுரா... இதுக்கெல்லாம் காரணம் நீதாண்டா,'' எட்வர்டின் கைகளைப் பற்றி முரட்டுத்தனமாக குலுக்கினான் ஜான். ""கல்யாணம் என்னிக்கு?'' ""பிப்ரவரி 15.'' ""பிப்ரவரி ...
மேலும் கதையை படிக்க...
தோழனா நீ காதலனா?
''ரிஷி, அஞ்சாம் தேதி நான் லண்டன் போறேன். நாலு நாள் ஸ்டே இருக்கும். இந்தியாவிலேயே செல்போன் தயாரிக்கிற ஃபேக்டரி ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்தேன்ல... அதுக்கான ஒப்பந்தத்துல கையெழுத்துப் போடப் போறேன்.'' ''கங்கிராட்ஸ் சந்தியா, உன்கூட யாரு வர்றா?'' ''யாரும் வரல. அப்பாவுக்கு உடம்பு ...
மேலும் கதையை படிக்க...
இதயத்தில் நுழைந்த வைரஸ்!
""மிஸ்டர் செந்தில்?'' ""நான் தான் பேசறேன்.'' "" நான் சங்கரி பேசறேன்.'' ""சொல்லுங்க மேடம்.'' ""என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு பைல் காணாமப் போகுது. பாதி வேல பாத்துக்கிட்டிருக்கும் போதே ஆப் ஆயிருது. திடீர் திடீர்ன்னு ஏதோ படம் முன்னால வருது. எனக்கு பயமா இருக்கு செந்தில்.'' ""உங்க ...
மேலும் கதையை படிக்க...
பாலியல் தொழிலாளி!
"எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்...' என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி. காவல் துறையில், இடமாற்ற உத்தரவு வாங்குவது, அவ்வளவு சுலபம் இல்லை; அதற்கு, பல லட்ச ரூபாய் செலவாகும் என்று அவளுக்கு தெரியும். மதுரையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ...
மேலும் கதையை படிக்க...
கால் சென்டர் காதலி
'இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்... இதுதான் எங்கள் உலகம்' என்ற கவிஞரின் சொற்களை மெய்ப்படுத்துவதாக அந்த கால் சென்டர் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. மணி இரவு 11.45. பெங்களூரு நகருக்குச் சற்று வெளியே அந்தக் குட்டி வளாகத்தில் ஆண்களும் பெண்களுமாக 680 ...
மேலும் கதையை படிக்க...
என்னவளே… அடி என்னவளே!
மண்டையைப் பிளக்கும் தலை வலியில் துடித்தபடி எழுந்தேன். ஜன்னல் வழியே புகுந்த வெயில், அறைக்கு ஓர் அசாதாரண வெளிச்சத்தைக் கொடுத்து, என் மனதில் இனம் புரியாத குற்ற உணர்வை உண்டாக்கியது. தலையைக் கையில் பிடித்தபடி எழுந்த போது, நேற்று இரவு நடந்ததெல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
''என்னங்க...'' ''என்ன, சொல்லு?'' டி.வியில் மூழ்கியிருந்த வாசுவின் குரலில் தெரிந்த எரிச்சல், மாலதியைச் சுட்டது. இருந்தாலும், ஆக வேண்டிய காரியத்தை மனதில்கொண்டு, மிகவும் குழைவாகப் பேசினாள் மாலதி. ''என்னங்க, எனக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுங்களேன்... ப்ளீஸ்!'' ''உனக்கு எதுக்கு செல்போன்? வீட்லதான் லேண்ட்லைன் இருக்கில்ல... அப்புறம் ...
மேலும் கதையை படிக்க...
லஞ்சம்… வஞ்சம்!
சாரதா தனது ஆடிட் டரின் முன்னால் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆடிட்டரும், அவளது தந்தையின் ஆப்த நண்பருமான வாசுதேவன் பாசம் தொனிக்கப் பேசினார்... ‘‘சொல்லும்மா, என்ன பிரச்னை?’’ ‘‘அங்கிள்! யாரோ ஜெய்கிஷன்னு ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீஸர் நேத்து என்னை செல்லுல கூப்பிட்டார். ஏறக்குறைய ...
மேலும் கதையை படிக்க...
ஒரு விபத்து – ஒரு விசாரணை
அந்த டெம்போ டிராவலர் வேனில் இருந்த எல்லாரும் பதட்டமாக இருந்தனர். டிரைவரின் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தன. டிரைவருக்குப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த வாசுவின் முகம் வியர்த்திருந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த வாசுவின் மனைவி, மவுனத்தைக் கலைத்தாள். ""ஏங்க... அந்த பையனோட ...
மேலும் கதையை படிக்க...
பெரிய இடத்து உத்தரவு!
தாயில்லாமல் நானில்லை
தோழனா நீ காதலனா?
இதயத்தில் நுழைந்த வைரஸ்!
பாலியல் தொழிலாளி!
கால் சென்டர் காதலி
என்னவளே… அடி என்னவளே!
எஃப்.எம். ரேடியோவும் செல்போனும்..!
லஞ்சம்… வஞ்சம்!
ஒரு விபத்து – ஒரு விசாரணை

தோழியா, காதலியா? மீது 2 கருத்துக்கள்

  1. vishnupriya says:

    இன்றைய தலைமுறையின் உண்மையான பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)