ம.ரா.போ.குருசாமி

 

முனைவர் ம.ரா.போ.குருசாமி தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; சொற்பொழிவாளர். இவர் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், இராசபாளையம் அருகில் உள்ள மகமது சாகிப்புரம் என்னும் மம்சாபுரத்தில் 1922ஆம் ஆண்டில் பிறந்தவர். 2012 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 6 ஆம் தேதியன்று கோவையில் காலமானார்.

சிறுகதைகள்

இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை. 
உழைப்பில்லாச் சுகம்; தமிழ்முரசு (ஐந்தாவது புத்தகம்), 1946 செப்டம்பர், பக்கம் 25 -36.
சில்லறையும் மொத்தமும்; தமிழ்முரசு (ஏழாவது புத்தகம்), 1946 நவம்பர், பக்கம் 11 – 17.

சிறு குறிப்பு 

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தாறோ, முப்பத்தேழோ-சரியாக நினைவில்லை. அப்போது ‘தட்ச யக்ஞம்’ என்று ஒரு திரைப்படம் வந்தது. நான் உயர்நிலைப் பள்ளி மாணவன். மதுரையில் அந்தப் படத்தைப் பார்த்தேன். படத்தின் கலைத்தரம் பற்றி அந்தக் காலத்தில் ஒன்றும் தெரியாது. ஆனால், அன்று அந்தத் திரைப் படத்தில் கண்ட சிவன் கூத்து இன்னும் என் உள்ளத்தில் கிளர்ச்சி ஊட்டுகிறது… பிறகு கல்லூரியில் படிக்கும்போது ஒரு சிந்தனை எழுந்தது: உயிருலக இயக்கங்களுக் கெல்லாம் அடிப்படை எது? அங்கு ஏற்படும் பிறழ்ச்சிகளுக்கு என்ன காரணம்? இந்தச் சிந்தனை பல ஆண்டுகள் என்னுளே கிடந்தது. அந்தச் சிந்தனையின் விளைவு தான் ‘ஊழி ‘. அதே சிந்தனை இனியும் வேறு வடி வங்கள் கொள்ளக்கூடும். 

1944-டாக்டர் மு.வ. அவர்களுக்கும் எனக்கும் மிக வேண்டிய நண்பர் ஒருவர்; அப்போது மணப் பருவத்து முறுக்கேறிய காளை. முதற் காதலின் ‘தோல்வி’யால் மிகவும் அதிர்ச்சி அடைந்தார் அந்த நண்பர். அவருடைய உள்ளத்தைக் கவர்ந்த பெண், தன் இதயத்தையும் அவருக்குப் பறிகொடுத்தாள். 

ஆனாலும், காதல் முற்றவில்லை; மணம்பெறவில்லை. இளம் பருவத்துக் காளைக்கு இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வது எளிதாக இல்லை… பிறகு ஒரு தெளிவு பிறக்க வும் நண்பருக்கு வழி ஏற்பட்டது… ‘நண்பரின் உள்ளத் துக் கிளர்ச்சிகளைக் கதையாக்கு ‘ என்று மு. வ. சொன் னார். எழுதி முடித்து அவரிடம் படித்துக் காட்டி னேன். நான் படித்துமுடித்த பிறகு தாமும் ஒன்று எழுதி யிருப்பதாகச் சொல்லிப் படித்தார். இரண்டுக் கும் மூலம் ஒன்று; கிளைத்த முறை வேறு. அவர் எழுதிய கதை ‘எவர் குற்றம்’ என்ற தலைப்பில் விடுதலையா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. நான் எழுதிய ‘வாழ்க்கைத் துணை’ இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. 

திறனாய்வுக் கருத்துக்களைக் கதை வடிவிலே கொடுக்க நினைத்து எழுந்தவை இரண்டு கதைகள். ‘தோல்விதானா’ என்பது ஒன்று; ‘சுடலையாண்டி என்பது மற்றொன்று. (இந்தச் சுடலையாண்டி யைப் படித்தவுடன் மு. வ. அவர்கள் உள்ளம். பலவகை என்ற இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார்.) 

இப்படி ஒவ்வொரு கதையும் தோன்றிய விதத் தைச் சொல்வது என் நோக்கமன்று. இங்கே குறிப் பிட்ட நான்கு கதைகள் சற்றே போக்கு மாறியவை ; சற்று நிதானத்தோடு படிக்கவேண்டிய அமைப்புக் கொண்டவை. 

மற்றவை பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையிலே எழக்கூடிய சிந்தனைகளின் விளைவுகளே. 

இந்தக் கதைகள் முன்னரே தமிழ் முரசு, தமிழ் நாடு (வார இதழ்), தென்றல் (மாத இதழ்), சுடர், கலைக் கதிர் முதலிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இவற்றை முதலில் வெளியிட்டு ஊக்கிய இதழாசிரியர் கட்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்தக் கதைகளை நூல் வடிவில் தொகுத்து வெளியிட உதவிய நண்பர்களுக்கு நன்றி உரியது. 

– ம.ரா.போ. குருசாமி, இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.