மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார்.
1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1955ல் தமிழ்முரசில் பிரசுரமான ‘வஞ்சகிதானா?’ என்ற சிறுகதையே இவரை எழுத்துலகில் அடையாளப்படுத்தியது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகமென இதுவரை 39 நூல்களை எழுதியுள்ளார். தமிழவேள் நாடக மன்றத்தின் சார்பில் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியதுடன் நடித்தும் உள்ளார்.
ஜப்பானியர், வெள்ளையர் காலனித்துவம், ஒன்றுபட்ட மலாயா என்று மூன்று ஆட்சிக் காலக்கட்டங்களைப் பார்த்தவர். அவற்றை இவர் தமது இலக்கியப் படைப்புகளில் பதிவும் செய்திருக்கிறார்.
இவரது சீரிய முயற்சியில் சிங்கைப்பாவலர்கள் முப்பது பேர் ஒருங்கிணைந்து பாடிய “கவிக்குலம் போற்றும் தமிழவேள்” தமிழவேள் நாடக மன்றத்தின் தகைமையில் வெளியீடு கண்டது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்காகக் கட்டுரை, கதை எனப் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
எழுத்துலகம் என்ற இலக்கிய மலர்த்தோட்டத்தில் தம் நூல்களும் மணக்க வேண்டுமென்று இவர் தமது பெரும்பாலான நூல்களுக்கு மலர்களின் பெயரைச் சூடியுள்ளார்.
எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்:
- ஆளவந்தான் (தொலைக்காட்சியில் முதல் தமிழ் நாடகம்) – 1963
- கவிக்குலம் போற்றும் தமிழவேள் – 1982
- மணங்கமழும் பூக்கள் – 1997
- பூச்செண்டு (சிறுகதைத் தொகுப்பு) – 1985
- அணிகலன் (கவிதைத் தொகுப்பு) – 1985
- உதயம் (கவிதைத் தொகுப்பு) – 1988
- மலர்க்கொத்து (சிறுகதைத் தொகுப்பு) – 1988
- சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு) – 1988
- மகரந்தம் (கவிதைத் தொகுப்பு) – 1988
- மாதுளங்கனி (கவிதைத் தொகுப்பு) – 1989
- நித்திலப் பூக்கள் (கவிதைத் தொகுப்பு) – 2001
- மணக்கும் மல்லிகை (சிறுகதைத் தொகுப்பு) – 2001
- வாகைப் பூக்கள் – 2003
- இன்பத் தமிழ் (மாணவர்களுக்கான கட்டுரைகள்) – 2004
- தமிழ் எங்கள் உயிர் – 2004
- மணமகன் யார்? (நகைச்சுவை நாடகம்) – 2007
- தியாகச் சுடர் (நகைச்சுவை நாடகம்) – 2007
- எதிரொலி (நகைச்சுவை நாடகம்) – – 2007
- வானவில் (நகைச்சுவை நாடகம்) – 2007
- அமுதத் தமிழ் (மாணவர்களுக்கான கட்டுரைகள்) – 2007
- அத்தை மகன் (நகைச்சுவை நாடகம்) – 2007
- ஏணி/னிப்படி (நகைச்சுவை நாடகம்) – 2007
- விண்வெளிப் பூக்கள் – 2007
- தாழம்பூ – 2008
- இன்பத் திருநாடு – 2010:
- சூரியகாந்தி – 2013
- தேசிய மலர்கள் – 2015
- சாமந்திப் பூக்கள் (நாடக) – 2015
அமைப்புகளில் வகித்த / வகிக்கும் பொறுப்புகள்:
- கலைமகள் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியர் – 1959
- செம்பவாங் தமிழர் சங்க பள்ளியில் தலைமையாசிரியர் – 1961- 1972
- சிங்கப்பூர் கல்வியமைச்சின் தமிழ்ப் பாடநூலாக்க குழுவில் – 1991 – 1997
- செம்பவாங் தமிழர் சங்கம் – செயலாளர் – 12 ஆண்டுகள்
- செம்பவாங் தமிழர் சங்கம் கெளரவ பொதுச் செயலாளர் – 1961 – 1975
- தமிழவேள் நாடக மன்றம் – நிறுவனர், முன்னாள் தலைவர்
பெற்ற பரிசுகள் / விருதுகள்:
- நெருஞ்சி முள்’ நாடகம் – வானொலி – இரண்டாம் பரிசு
- ‘கணையாழி விருது’ – கவிமாலை – 2008
- ‘நல்லாசிரியர் விருது’ – தமிழ்முரசு – 2012