
இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ‘ சரசா சூரி’ எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்…
நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..
பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து’ ஜாங்கிரி’ எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..
என்னுடைய கதைகளில் வரும் கதாபாத்திரங்களைக்கூட இழிவு படுத்தும் வகையிலோ , புண்படுத்தும் வகையிலோ சித்தரிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவள்…
என்னுடைய ஆறு சிறுகதை தொகுப்புகள் அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ளது..
- அழகர்சாமி..பாலாமணி..மற்றும் சிலர்….
- பொன்னியின் செல்வி….
- கொலுசுதான் பேசுமா….???
- சதுரத்துக்குள் வட்டம்..
- கங்கையின் புனிதம்….
- தணல்..
நான் ‘ மனமெனும் மாயவலை’ எனும் அறிவியல் தொடரையும் எழுதி வருகிறேன்.. ‘ மனமெனும் மாயவலை…முதலிரண்டு பகுதிகளில் அமேசான் கிண்டிலில் வெளியாகி உள்ளன.
இணையத்தில் ‘ சரசா சூரி’ என்ற பெயரில் என்னைப் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்..