கே.ஜே.அசோக்குமார்

 

கே.ஜே. அசோக்குமார் மே 10, 1975-ல் கும்பகோணத்தில் கே.ஆர். ஜெயராமனுக்கும், சுதந்திராதேவிக்கும் பிறந்தார். திருவாரூரில் பள்ளிக்கல்வி பயின்றார். திருச்சியில் எம்.எஸ்.ஸி (வேதியியல்) முதுகலைப்பட்டம் பெற்றார்.

கே.ஜே. அசோக்குமார் புனேயிலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்து வருகிறார். அ. ஸ்ரீதேவியை 2000-ல் திருமணம் செய்து கொண்டார். மகள் ஹரிணி மற்றும் மகன் நந்தன்.

பள்ளிநாட்களில் கோகுலம் இதழ்களில் பங்களிப்புகள் செய்துள்ளார். கல்லூரிக் காலங்களில் கல்லூரி இதழ்களில் கவிதை, கதை, கட்டுரை வெளியாகின. முதல் சிறுகதை வார்த்தை இதழில் வெளியானது.

விருதுகள்

  • வாசகசாலை இலக்கிய விருது
  • நெருஞ்சி இலக்கிய விருது

நூல்கள்

  • சாமத்தில் முனகும் கதவு (2016)
  • குதிரைமரம் & பிறகதைகள் (2021)