தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (பிறப்பு: சனவரி 8) கவிதாயினி, தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சிநிலா ஆகிய பெயர்களில் எழுதிவரும் இலங்கை படைப்பாளியாவார்.
ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், ஹப்புத்தளை தேர்தல் தொகுதியில் தியத்தலாவை என்ற ஊரைச் சேர்ந்த இளம் கவிதாயினியும், சிறுகதை படைப்பாளியுமான எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன் – நஸீஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார்.
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா என்ற சொந்தப் பெயரையே பெரும்பாலும் பயன்படுத்தி வரும் இவர் கவிநிலா, குறிஞ்சி நிலா என்ற புனைப் பெயர்களிலும் எழுதி வருவதுண்டு. சொந்த ஊரான தியத்தலாவையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து உயர்படிப்புக்காக தலைநகரில் தங்கியிருக்கிறார்.
துரம் 03ல் கல்வி கற்கும் போதே பூங்கா என்ற சிறுவர் சஞ்சிகையில் இவரது ஆக்கம் வெளிவந்தது. அத்துடன் மீலாத் தின போட்டிகள், தமிழ்தினப் போட்டிகளில் பங்குபற்றி பல தடவைகள் முதலிடத்தை பெற்றிருக்கிறார்.
தரம் 08ல் கற்கும் போதே கவிதையின் படிக்கட்டுக்களில் காலடி எடுத்து வைத்த இவரது முதல் கவிதை 2004ம் ஆண்டு மெட்ரோ நியூஸ் என்ற பத்திரிகையில் காத்திருப்பு என்ற தலைப்பில் வெளிவந்தது. அதையடுத்து இதுவரை சுமார் 120க்கும் மேற்பட்ட கவிதைகளையும், 20க்கும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
துன்பம், சந்தோஷம், இனிமை, காதல், பெண்ணியம், சமூக அவலம், சீதனக்கொடுமை, மலையகப் பிரச்சனைகள் என்பன இவரது பாடுபொருள்களாக காணப்படுகின்றன.
வீரகேசரி, தினகரன், தினக்குரல், மித்திரன், மெட்ரோ நியூஸ், சுடர்ஒளி, நவமணி, விடிவெள்ளி, போன்ற இலங்கையின் முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளான ஓசை, நிஷ்டை, மரங்கொத்தி, ஜீவநதி, செங்கதிர், படிகள், அல்லஜ்னா, நிறைவு, ஞானம், இந்திய சஞ்சிகையான இனிய நந்தவனம், மற்றும் இணையத்தளங்களான www.vaarppu.com, www.youthfulvikatan.com பெண்களின் குரலாக ஒலிக்கும் www.oodaru.com, போன்ற வலைப்பதிவுகளிலும் அவருடைய ஆக்கங்கள் பதிவாகியுள்ளன. www.riznapoems.blogspot.com, www.riznastory.blogspot.com, www.poetrizna.blogspot.com ஆகிய தன்வலைப்பூக்களிலும் அவரது படைப்புக்களைப் பார்வையிட முடியும்.
2008ம் ஆண்டு ஏப்ரல் 20 – 26 வார சுடர் ஒளி பத்திரிகையில் வெளிவந்த உணர்வுகள் என்ற பகுதியிலும், 2008 புரட்டாதி மாத செங்கதிர் சஞ்சிகையிலும் மற்றும் 2010ம் ஆண்டு பெப்ரவரி ஞானம் சஞ்சிகையிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் பிரசுரமாகியுள்ளன.
பிறை எப்.எம்., சக்தி எப்.எம்., இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் நேத்ரா அலைவரிசையில் கவிதை கூறியிருப்பதுடன் கடந்த 2010 பெப்ரவரி 03ம் திகதியன்று இவரது நேர்காணலும் இடம் பெற்றது.
தற்போது BEST QUEEN FOUNDATION என்ற அமைப்பின் பிரதித் தலைவராகவும் (bestqueen12@yahoo.com, www.bestqueen12.blogspot.com) பூங்காவனம் சஞ்சிiயின் ஆசிரியர் குழுவிலும் சேவையாற்றி வரும் இவர் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.
பேய்களின் தேசம் இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற இவருடைய இரு கவிதைத் தொகுப்புக்களும் கனவுகள் உயிர் பெறும் நேரம் என்ற சிறுகதைத் தொகுதியும் இலக்கிய உலகத்துக்குள் நுழைய காத்திருக்கிறது.
இலக்கியத் துறையில் மாத்திரமன்றி கணினித் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வரும் இவர் Information & Communication Technology என்ற கற்கை நெறியைப் பூர்த்தி செய்து Diploma பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவி வானில் உலா வரும் இக் கவிநிலாவுடன் தொடர்பு கொள்ள…
Phone:- 0094775009222
Email:- frizna76@yahoo.com
Website: storyrizna.blogspot.com
வெளியிட்ட நூல்கள்
- இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை)- 2012
- வைகறை (சிறுகதை)- 2012
- காக்கா குளிப்பு (சிறுவர் கதை)- 2012
- மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை)- 2012
- வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை)- 2012
- இதோ! பஞ்சு காய்கள் (சிறுவர் கதை)- 2012
- திறந்த கதவுள் தெரிந்தவை – ஒரு பார்வை (விமர்சனங்கள்)- 2013
- நட்சத்திரம் (சிறுவர் பாடல்கள்)- 2014
- மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) – 2015
- மழையில் நனையும் மனசு
என்னுரை – வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் புகழ்ந்தவளாகவும், அவன் தூதர் நபிக்கு ஸலாம் கூறியவளாகவும்…
இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற கவிதைத் தொகுதியை அடுத்து வைகறை என்ற எனது இந்த சிறுகதைத் தொகுதியினூடாக உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.
அன்றாடம் நான் பார்த்த அல்லது கேட்ட சில விடயங்கள் என் மனதைக் குத்திக் கீறி ரணப்படுத்தின. அவ்வாறான சமூக அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கில் சிறுகதைகளை யாத்தேன். எனது சிறுகதைகளில் நான் கையாண்டிருக்கும் பிரச்சனைகளின் கருவானது, என்னோடு இருப்பவர்கள் அனுபவித்த துன்பங்களின் மறுவடிவம் என்றும் கூறலாம். ஆகவே அந்த நிலையில் இருக்கும் வாசகர்கள் குறிப்பிட்ட என் சிறுகதைகளை வாசித்து ஆறுதல் அடைவார்களேயானால், அந்த ஆறுதலைத்தான் என் சிறுகதைகளினூடாக நான் காணும் வெற்றியாக கருதுகிறேன்.
எனது ஆக்கங்களைப் பிரசுரித்து உதவிய அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகள், வலைத்தளங்கள், என் முன்னேற்றத்தில் அக்கறை காட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், சிரமம் பாராது எனக்கு அழகிய முன்னுரையை எழுதித் தந்த திரு. நீர்வை பொன்னையன் அவர்களுக்கும், முற்போக்கு கலை இலக்கிய மன்ற உறுப்பினர்கள் யாவருக்கும், பின்னட்டைக் குறிப்பை எழுதித்தந்த டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்களுக்கும், அட்டைப்படம் மற்றும் கணினி வடிவமைப்பை செய்து தந்த சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களுக்கும் என் மன நதியில் ஊற்றெடுக்கும் வற்றாத நன்றிகளை நவில்கிறேன்.
இந்தத் தொகுதியில் உள்ள நிறைகள் யாவும் இறைவனைச் சாரும் குறைகள் எல்லாம் என்னைச் சாரும்.
இனி உங்கள் விமர்சனங்களுக்காய் காத்திருக்கிறேன்!!!
எச்.எஃப். ரிஸ்னா
முகவரி: 21 ஈ, ஸ்ரீ தர்மபால வீதி, கல்கிசை, இலங்கை
தொலைபேசி : 0775009222,0719200580.
ஈமெயில் : riznahalal@gmail.com
வலைத்தளம் – www.storyrizna.blogspot.com