நல்ல தம்பிக்கு உதாரணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 9, 2021
பார்வையிட்டோர்: 3,305 
 
 

ராமாயண கதை எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை.

அந்தக் காலத்தில் ராமாயண காவியத்தை தெரு கூத்தாகக் காட்டி பரப்பி வந்தார்கள்.

அப்புறம் ராமாயண கதையை நிறைய நாடகக் கலைஞர்கள் நாடகமாகப் போட்டு பரப்பி வந்தார்கள்.

கால§க்ஷப வித்வான்கள் ராமாயண கதையை,ஒரு வாரம்,பதினைத்து நாட்கள்,ஒரு மாசம், என்று தினமும் சாயங்காலத்தில் ‘கால §க்ஷபம்’ செய்து வந்து, மக்களுக்கு ராமாயண கதையின் சாராம்சத்தை பரப்பி வந்தார்கள்.

சினிமா படங்கள் வர ஆரம்பித்தவுடன் எல்லாம் மொழிகளிலும் ராமாயண கதை வர ஆரம்பித்தது.

சமிப காலத்தில் ராமாயண கதையை ‘டெலி சீரியலாக’ எடுத்து பரப்பி வருகிறார்கள்.

அதனால் ராமாயண கதை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை தான்.

ராமர் தந்தை வாக்கைக் காப்பாற்ற மணைவி சீதையுடனும்,தம்பி லக்ஷமணரோடு காட்டுக்கு வந்தது எல்லோருக்கும் தெரியும்.

ராவணன் சீதையை (அப்போதைய) லங்கைக்கு தூக்கிக் கொண்டுப் போன பிறகு, ராமர் அவர்கள் தங்கி இருந்த ‘குடிலில்’ சீதை இல்லாமல் இருக்கவே,வருத்தப் பட்டுக் கொண்டு,தம்பி லக்ஷ்மணரைக் கூட அழைத்துக் கொண்டு,சீதையை தேடிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.

ராவணனோடுப் போய்க் கொண்டு இருந்த போது சீதை,’தன் கணவர் தன்னைத் தேடிக் கொண்டு வந்தால்,நாம போன வழி அவருக்குத் தெரியட்டுமே,என்று நினைத்து,அவள் அணிந்து இருந்த ஒவ்வொரு நகையாக கழட்டி,ராவணன் கவனிக்காமல் இருக்கும் போது,பூமியில் போட்டுக் கொண்டு போய் கொண்டு இருந்தாள்.

ராமர் வந்துக் கொண்டு இருந்த வழியில் சீதை அணிந்து இருந்த வைரத் தோடு கிடைத்தது. உடனே அவர் சந்தோஷப் பட்டு,தம்பியைப் பார்த்து “லக்ஷ்மணா,இந்த வைரத்தோடு சீதை தன் காதில் போட்டுக் கொண்டு இருந்தது தானே” என்று ஆவலுடன் கேட்டார்.

அதற்கு லக்ஷ்மணர் “எனக்குத் தெரியாதே அண்ணா” என்று சொன்னார்.

கொஞ்ச தூரம் போனதும் ராமருக்கு சீதை அணிந்துக் கொண்டு இருந்த வைர மூக்குத்தி கிடைத்தது.உடனே ராமர் தம்பியைப் பார்த்து “லக்ஷ்மணா,இந்த வைர மூக்குத்தி சீதை தன் மூக்கில் போட்டுக் கொண்டு இருந்தது தானே”என்று ஆவலாகக் கேட்டார்.

“எனக்குத் தெரியாதே அண்ணா” என்று மறுபடியும் சொன்னார் லக்ஷ்மணர்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ராமருக்கு சீதை அணிந்து இருந்த வைர நெக்லஸ் கிடைத்தது.உடனே ராமர் தம்பியைப் பார்த்து “லக்ஷ்மணா,இந்த வைர நெக்லஸ் சீதையை கழுத்தில் போட்டு க் கொண்டு இருந்தது தானே” என்று ஆவலாகக் கேட்டார்.

“எனக்குத் தெரியாதே அண்ணா” என்று மறுபடியும் சொன்னார் லக்ஷ்மணர்.

இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ராமருக்கு சீதை அணிந்து இருந்த வைர ஒட்டியாணம் கிடைத்தது.

உடனே ராமர் தம்பியைப் பார்த்து “லக்ஷ்மணா,இந்த வைர ஒட்டியாணம் சீதை இடுப்பில் போட்டுக் கொண்டு இருந்தது தானே” என்று ஆவலாகக் கேட்டார்.

“எனக்குத் தெரியாதே அண்ணா” என்று மறுபடியும் சொன்னர் லக்ஷ்மணர்.

‘நாம லக்ஷ்மணனை எதேக் கேட்டாலும் ‘எனக்குத் தெரியாதே அண்ணா’ன்னு அவன் ஒரு பதிலை சொல்லிண்டு வறானே’ என்று மிகுந்த சோகத்தால் வாடி வந்துக் கொண்டு இருந்த,ராமருக்கு கோவம் வந்தது.

அவர் தம்பி லக்ஷ்மணரைப் பார்த்து “லக்ஷ்மணா,நான் சீதை காணாமல் போனதில் இருந்து எத்தனை சோகத்திலே இருக்கிறேன் தெரியுமா.நாம போய்க் கொண்டு இருக்கிற இந்த வழியிலே சீதைப் போட்டுக் கொண்டு இருந்தது போன்ற நகைகள் ஒவ்வொன்றும் கிடைக்கும் போதேல்லாம், அதை நான் எடுத்து நன்றாகப் பார்த்து விட்டு,சந்தேகப் பட்டு,அந்த நகைகளை உன் கிட்டே காட்டும் போது எல்லாம்,நீ அவற்றை கையில் வாங்கிப் பார்க்காமலே ‘எனக்குத் தெரியாதே அண்ணா’ ‘எனக்கு தெரியாதே அண்ணா’ன்னு சொல்லிக் கொண்டு வந்துக் கொண்டு இருக்கிறாய். நீ சொல்றது கொஞ்சம் கூட சரியே இல்லே.நீ என் கூட வருவதில் எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லே” என்று சொல்லி கோவித்துக் கொண்டார்.

லக்ஷ்மணர் அண்ணன் ராமரைப் பார்த்து பவயமாக “அண்ணா,நீங்க என்னே மன்னிக்கனும் நான் உண்மையைத் தான் சொன்னேன்.உங்களுக்கு கல்யாணம் ஆகி சீதா தேவி உங்களுக்கு மணைவியாக வந்த பிறகு,சீதா தேவியின் பாதங்களை மட்டும் தான்,நான் பார்த்துக் கொண்டு வந்து இருக்கேன்.நான் சீதா தேவியை நிமிர்ந்துப் பார்த்ததே இல்லே.அதனால் தான் நீங்க காட்டின ஒரு நகையின் அடையாளமும் எனக்குத் தொ¢யலே” என்று சொன்னாராம்.

லக்ஷ்மணர் சொன்னதை கேட்ட ராமர் மிகவும் சதோஷப் பட்டார்.

உடனே ராமர் தம்பி லக்ஷ்மணரைக் கட்டிக் கொண்டார்.

பிறகு “ஒரு தம்பி என்பவன் ‘தன் அண்ணியை,பாதம் வரைக்கும் தான் பார்க்கலாம்.நிமிர்த்தே பார்க்கக் கூடாது’ என்கிற ஒரு நல்ல நீதியை கடைப் பிடித்து வந்து இருக்கிறாயே.நீ உண்மையிலே ஒரு நல்ல தம்பிக்கு உதாரணம்.நான் உன்னை கோவித்துக் கொண்டு இருக்கக் கூடாது” என்று சொல்லி வருத்தப் பட்டார் ராமன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *