குமார சம்பவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 34,006 
 
 

பாகம் நான்கு | பாகம் ஐந்து

இவ்விதமாக கங்கை கரையில் அடர்ந்து வளர்ந்திருந்த நாணல் புதர்களுக்கு மத்தியில் குமரன் ஜனனம் நிகழ்ந்தது . கங்காதேவி குமாரனை நன்கு கவனித்து வளர்த்து வருகிறாள். ஒரு சமயம் சிவன் பார்வதியுடன் ஆகாய மார்க்கமாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவரும் கங்காதேவியுடன் இருக்கும் குமாரன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். ஈஷ்வரன் குமாரனின் பிறப்பு ரகசியத்தைக் கூறுகிறார் அதனைக் கேட்டு அகமகிழ்ந்த பார்வதி குழந்தை குமரனை கைலாச பர்வதத்திற்கு அழைத்துச் செல்கிறாள்.

கைலாச மலையில் குமரனின் பிறந்த நாள் வைபவத்தைக் கொண்டாட நிச்சயிக்கின்றனர். இது கேட்டு இந்திராதி தேவர்களும் முனிவர்களும் அனைவரும் மிகவும் சந்தோஷப் படுகின்றனர். குழந்தை குமாரனின் திருவிளையாடல்கள் அனைவரையும் ஆனந்தம் படுத்துகிறது , குமாரன் குழந்தையாக இருந்தாலும் பெரும் வீரனாக இருந்தான்.

குமாரனுடைய வீரமும் சூரமும் பற்றிக் கேள்வி படுகின்ற தாரகன் பீதி அடைகிறான் . இந்திரன் முதலிய தேவர்கள் கைலாச மலைக்கு வருகிறார்கள் . சிவனின் அருகில் நின்று கொண்டிருக்கும் குழந்தை குமாரனின் ஆயுதம் தரித்து ஒளி பொருந்திய அவனது அழகு அனைவரையும் வசீகரித்தது . இந்திரன் மிகவும் மகிழ்ச்சிக் கொண்டவன் ஆனான் . அவன் மனதில் நமக்கு ஜயம் நிச்சயம் கிட்டும் என்ற உறுதி ஏற்பட்டது.

ஈஷ்வரனிடம் தேவேந்திரன் தாரகனின் வதத்திற்காக குமாரனை அனுப்பும் படி பிரார்த்திக்கிறான். அதனால் ஈஷ்வரர் இந்திரன் முதலிய தேவர்களுக்கு சகாயம் செய்யும் பொருட்டு குமாரனை அனுப்ப அனுகிரகம் செய்கிறார் . பார்வதியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குமாரனுக்கு ஆசீர்வாதம் செய்து கைலாசமலையில் இருந்து அனுப்ப சம்மதிக்கிறாள். தேவர்கள் அனைவரும் குமாரனுடன் ஸ்வர்க்க லோகம் செல்கிறார்கள். அங்கு நாரதரும் கந்தர்வர்களும் குமாரனை வரவேற்று மகிழ்கிறார்கள் .

தாரகனுடன் போர் செய்து அவனைக் கொல்வதற்காக யுத்தத்திற்கு தயாராகிறார்கள். சைனியத்திற்கு சேனாதிபதியாக குமாரனை தேர்வு செய்கிறார்கள். சேனைகளைத் திரட்டிக் கொண்டு நாரதர் , இந்திரன் முதலிய தேவர்கள் அனைவரும் குமாரன் தலைமையில் தாரகனை வதம் செய்ய கிளம்புகிறார்கள்.

யுத்தத்திற்கு கிளம்பும் முன் பல கொடிய அழிவுகள் , மற்றும் அபசகுனங்கள் தோன்றின இருந்த போதிலும் கோபத்தினால் வெகுண்டு எழுந்தான் தாரகன். அசுரக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு யுத்தம் புரிகிறான் . தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே மிக கோரமான யுத்தம் ஆரம்பித்தது. மிகுந்த பலவானாகிய குமரன் தாரகாசுரனைக் கொல்கிறான்.

உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் மிகுந்த தந்தோஷம் அடைந்தனர். மீண்டும் இந்திரனுக்கு ஸ்வர்க்க லோகத்தில் பதவி கிடைத்தது. எல்லா இடங்களிலும் மங்களம். பொங்கியது.

இத்துடன் குமார சம்பவம் நிறைவடைந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *