“மேலும் ஒரு மர்ம சாவு!, சாத்தான் வளைவில் மர்ம சாவு தொடர்கிறது ” செய்தித்தாளை மேசையின் மேல் போட்டான் சுந்தர் .
“என்ன மச்சி என்ன விஷயம்?” என்று வினவினான் இளங்கோ.
“இல்லை இளங்கோ அங்கு விபத்தில் இறந்த ஒருவன் இரவில் ஆவியாக அலைவதாகவும், அந்த ஆவி தான் மக்களை காவு கொள்வதாகவும், அந்த வட்டத்தில் வாழும் மக்கள் நம்புகிறார்கள் . அவர்கள் நம்பிக்கையை மெய்பிக்கும் விதமாக, அங்கு இது வரை பத்து விபத்துகள் ஏற்பட்டுள்ளது. போலீசுக்கும் இது வரை இந்த விஷயத்தில் ஒரு தீர்வும் கிடைத்த பாடு இல்லை , அவர்களும் குழப்பத்தில் உள்ளார்கள்” என்றான் சுந்தர்.
இளங்கோ, “அதுக்கு அய்யா என்ன செய்வதாக உத்தேசம்,துப்பு துலக்க போகிறீர்களா?” என்றான்.
சுந்தர், “நான் அடுத்த வெள்ளிக்கிழமை அந்த வளைவில் என் வண்டியில் சென்று அனைவருக்கும் அங்கு பேய் நடமாட்டம் இல்லை என்பதை நிரூபிப்பேன், அதுவும் இரவு பன்னிரண்டு மணிக்கு வண்டியில் செல்ல போகிறேன், நீயும் கூட வரே” என்றான்.
“சுந்தர், இந்த விபரீத பரிச்சை வேண்டாம் டா, நான் இந்த விளையாட்டுக்கு வரலைப்பா” , இளங்கோ சொல்வதை சுந்தர் பொருட்படுத்தாமல் “வாழ்கையில் த்ரில் வேண்டும், அதுவும் பேய் இருப்பதாக இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நம்புகிறார்கள் மூடர்கள் . நான் அந்த வட்டத்தில் உள்ள மக்களை முட்டாள் ஆக்க போகிறேன், ஹா ஹா ஹா” என சிரித்தான்.
“நீ, இனி யார் பேச்சையும் கேட்க மாட்டாய் . மீறி யாரவது எதாவது சொன்னால் , “நான் ஒன்னு முடிவு செஞ்சா என் பேச்சையே நான் கேட்க மாட்டேன்னு ” சினிமா டயலாக் சொல்வே. உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு ” இது இளங்கோ.
“சரிடா நீ என் கூட வராட்டியும் பரவாயில்லை, நான் முடிவு செஞ்ச மாதிரி என் போக்கிலே போறேண்டா. சரி என் கூட கொஞ்சம் வண்டி எடுத்துட்டு வா, என் வண்டியை சர்வீசுக்கு விடனும்” என்று சொல்லிவிட்டு ஒரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்தான் சுந்தர். சிறுது நேரம் கழித்து இருவரும் கிளம்பி சென்றனர்.
வெள்ளிகிழமை மாலை வந்தது. சுந்தர் தன் வண்டியை எடுத்து கொண்டு இளங்கோவின் வீட்டிற்கு வந்து அவனையும் அழைத்து பார்த்தான் . அவன் தனக்கு இதில் உடன்பாடில்லை என்றும் அவனையும் செல்ல வேண்டாம் என்றும் வற்புறுத்தினான். இதில் சற்றும் மனம் தளராத சுந்தர் ” அடேய் தொடை நடுங்கி , நீ வராட்டியும் பரவாயில்லை என்னை கோழை ஆக்கிறாதே” என்றான். இதன் பின் இளங்கோ வேறு எதுவும் பேசாது மௌனம் காத்தான்.
” சரிடா நான் கிளம்பறேன் ” என்று சொல்லிவிட்டு சுந்தர் கிளம்பினான்.
மணிக்கு சாத்தான் வளைவுக்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு தன் வண்டியை நிறுத்தினான் சுந்தர். தான் செய்வது சரியோ என்றொரு சந்தேகம் அவனுக்கு இருந்தது , இருப்பினும் அவன் பிடிவாதம் அவனுடைய பய உணர்ச்சியை வென்றது. ஐந்து நிமிடம் கழித்து அங்கிருந்து கிளம்பினான்.
வளைவை அவன் நெருங்க நெருங்க அவன் துடிப்பு அதிகம் ஆனது . அதனால் முன்னே வந்த வேக தடையை காண மறந்து அதன் மேல் வேகம் குறைக்க மறந்தான். வண்டி மேலே ஏறி குதித்தது, வளைவை நெருங்கிய சுந்தர் அவன் காதில் “புஸ்…” என்று யாரோ ஊதியதை போல் உணர்ந்தான் . சரியாக வளைவின் முன்னே தன் வண்டியின் பின்னே யாரோ அமர்ந்து வண்டியை இழுப்பதாக உணர்ந்தான். பயம் கவ்வியது அவனை, திரும்பி பார்க்காமல் வண்டியை கிலியில் வேகமாக முறுக்கினான். வண்டி ரோட்டில் தாறுமாறாக ஓடியது . எதிரே வந்த லாரியில் மோதிய சுந்தர் தூக்கி எறியப்பட்டான் .தூரத்து மனிகூண்டில் மணியின் ஓசை பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது.
துடிப்பு அடங்கும் வேளையில் அவன் வண்டியின் சக்கரம் அவன் முகத்தின் அருகே உருண்டு விழுந்தது. சக்கரத்தின் டயரில் ஒரு ஆணி இருப்பதை கண்டான் . அவன் அருகில் லாரியின் டிரைவர் வந்து நிற்க, சுந்தர் ” பேய் , பேய் ” என சத்தமாக ஆரம்பித்து ,” இ….. ” என்று முனகி தன் கடைசி முச்சை விட்டான்.
சிறிது நேரம் கழித்து வந்த போலீஸ்காரரிடம் லாரி டிரைவர் மணி ” ஐயா , இவர் இறக்கும் முன்னர் , ” பேய் , பேய் ” என்று பிதற்றினார்” என்றார் . சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே “ஆமாம்பா இங்கு இரவில் பன்னிரண்டு மணிக்கு பேய் காவு வாங்குகிறது என்று ஒரு சர்ச்சை இருக்கிறது, அது உறுதி தான் போலே ” என்றார் ஏட்டு ஏகாம்பரம்
“மேலும் ஒரு மர்ம சாவு !, சாத்தான் வளைவு மர்மம் தொடர்கிறது ” செய்தித்தாளை மேசையின் மேல் போட்டான் ராஜேந்திரன்.
“என்ன மச்சி என்ன விஷயம்?” என்று கேட்டான் பாலாஜி.
எதிர் பாரத கிளைமாக்ஸ் …………நல்ல கதை ……….
கதை ரொம்ப நல்ல இருக்கு, சுந்தரும் சாவானு கடைசி வரைக்கும் நினைக்கலை.. சுந்தரையும் சாவடித்து சாத்தான் வளைவு தன் பெயரை நிலைக்கச் செய்துவிட்டது… நல்ல ஆரம்பம்… தொடரட்டும் உன் முயற்சி.. சனிக்கிழமை நைட் நீயும், நானும் பீர் அடிச்சிட்டு செகண்ட் சோ போவோம், ஞாபகம் இருக்கா?? அப்படி ஒரு நாள், நீயும் நானும் சென்ட்ரல் தியேட்டரில் செகண்ட் ஷோ ரொம்ப த்ரில்லரான பேய் படம் பார்த்தோம் (தெலுங்கு டு தமிழ் டப்) படம் முடிச்சு, என்னை வீட்டில ட்ராப் செய்துட்டு, நீ தனியா போனதை நினைச்சு ரொம்பவும் பயந்தேன், நீ வீரன் டா…. மாப்ளே…
ஷாகுல்
இன்னும் சில கதைகளை இந்த இணையதளத்தில் உலவ விட்டு இருக்கிறேன் …அதையும் தயவு செய்து பாரடா மச்சி… ஓபன் தி பாட்டில்
நல்ல கதை விஜய்.. மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துகள் …
நன்றி, உங்கள் விமரிசையான விமர்சனங்கள் என்னை ஊக்குவிக்கிறது . மேலும் கதைகள் எழுதவும் அவை ஊன்று கோலாக அவை இருக்கிறது .
such a good story
ஸ்டோரி இஸ் நய்சே அண்ட் இண்டரஸ்டிங் , சோ ப்ளீஸ் கொந்திநுஎ வ்ரிடிங் ஸ்டோரீஸ்