கதையாசிரியர் தொகுப்பு: பொன் குலேந்திரன்

69 கதைகள் கிடைத்துள்ளன.

கிரகணம்

 

 கொழும்பில் இருந்து தேற்கே, 100 கிமீ தூரத்தில் களுகங்கையைத் தழுவிச் செல்லும் நகர் இரத்தினபுரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள் வாழும் நகர். கடும் மழையின் போது அடிக்கடி வெள்ளத்தில் அந்த நகர் மூழ்கும். அந்நகரை சுற்றியுள்ள கிராம மண்ணில் இரத்தினக்கற்கள் விளைந்தன. சுண்ணாகத்தை பிறப்பிடமாகக் கொண்ட சின்னத்தம்பி அரசாங்கத்தில் சாதாரண கிளார்க்காக வேலை செய்தவர். அவரோடு கொழும்பு சஹிரா கல்லூரியில் படித்த காசிமின் தந்தை ஹனீபா பேருவளையில் வைரவியாபாரி. அவர் மறைவுக்குப் பின், காசிம் தந்தையின்


கொல்லி வாய் பிசாசு

 

 வன்னியில் மணியம் குளம்., அக்கராயன் குளத்துக்கு மேற்கே, அடர்ந்த ஈச்சம் காட்டைத் தழுவிய ஒதுக்குப் புறக் கிராமம். அக்கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள; அடர்ந்த காட்டில் சடைத்து வளர்ந்த முதிரை, கருங்காலி, பாலை, காட்டு வேம்பு மரங்களுக்கும் ஈச்சம் பற்றைகளுக்கும் குறைவில்லை.. அந்த மரங்களின் அடர்த்தியான மரச் சோலையில் ஒரு வைரவர் கோவில். அக்கோவிலுக்கு இரு நூறு யார் தள்ளி ஒரு சுடலை. அதில் தகனத்துக்கு முன், பிரேதத்தைவைத்து கிரிகைகள் செய்வதற்கு சரிந்த நிலையில் ஓரு கொட்டில்.


புதுமைப் பெண்

 

 “ஏதோ முற்பிறவியிலை செய்த கர்மாக்களோடு உங்கடை குடும்பத்திலை வந்து பிறந்திருக்கிறாள் உண்டை மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர் வைத்தாயோ தெரியாது. இவளால் பேசமுடியாது. எழுத முடியாது, காது மட்டும் கேட்டால் போதுமா? நீயும் உன் புருஷனும் இல்லாத காலத்தில் இவள் எப்படித் தான்வாழப் போகிறாளோ, கடவுளுக்குத் தான் தெரியும். இப்படி அங்கக் குறைகளோடு வாழ்வதிலும் பார்க்க கேதியிலைபோய் சேர்ந்திட்டால் நல்லது”இ பொரிந்து கொட்டினாள் சீதாப்பாட்டி என்ற எண்பது வயதைத் தாண்டிய சிவகாமியின் . தாய்


பொன்னாடையும், மலர்செண்டும், பிணப்பெட்டியும்

 

 (ஒரு உருவகக் கதை) “சாந்தி” ஒரு பிரபல்யமான கடை. இறுதியில் மனிதனின் ஆன்மா சாந்தி பெறுவதை நினைவூட்டும் பெயர். பொன்னாடை, மலர்வளையம், பிணப்பெட்டி போன்ற முக்கியப் பொருட்களை ஈமச் சடங்கு நிகழ்வுக்காக விற்பனை செய்யும் கடை. குறுகிய நேரத்தில் தாங்கத்தக்க விலைக்கு ஏற்றவாறு வாங்கக்; கூடிய கடையாதலால், வாடிக்கையாளர்களுக்குக் குறைவில்லை. கடையின் விற்பனை பகுதியில் பொன்னாடை, மலர்வளையம், பிணப்பெட்டி ஆகிய மூன்றும், அன்று நடக்கவிருக்கும் ஒரு தனவந்தரும், அரசியல்வாதி ஒருவரின் ஈமச் சடங்;கு நிகழ்வுக்குப் போவதற்கு தம்மைத்


கச்சத்தீவு

 

 1480 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட சுறாவளியால் இராமேஸ்வரம் உற்பட 11 தீவுகள் தோன்றின அதில் கச்சைதீவும் உள்ளடங்கும். இராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லையில் ;அமைந்த 285 ஏக்கர் பரப்புள்ள மக்கள் வாழாத தீவு. இத்தீவைச் சுற்றி நல்ல மீன்வளமும,; தீவில் கனிவளமும் உள்ளது. பெட்ரல் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகளும் உண்டு. கச்சை என அழைக்கப்பட்ட பச்சை நிற ஆமைகள் அதிகம் இத்தீவில் சுற்றியுள்ள கடலில் காணப்படுவதால்; பச்சை தீவு என அழைக்கப்பட்டு, பின்னர்