கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 24, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

செருப்பு

 

 பிள்ளையார் கோவில் மணி வழக்கமான இனிமையின்றி, ஒலிப்பது போல், நீண்ட நேரமாய் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. ஏதாவது விபரீதம் நடந்தால் தான் இவ்வாறு ஒலிப்பது வழக்கம். இன்றைக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. காதை அடைக்கும் அந்தச் சத்தம் பொறுக்காமல் தேவி வீட்டு வாசலருகே வந்து நின்றிருந்தாள். சங்கக் கடைக்குச் சாமான்கள் வாங்கப் போயிருந்த அப்பா, தெருக் கோடியில் பரக்கப் பரக்க வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் முகத்தில் என்றுமில்லாத கவலை தெரிந்தது,.அவர் படலையைத் தாண்டி வந்ததும் ஓடோடிச் சென்று,


புகையில் தெரிந்த முகம்

 

 சாப்பிட்டுவிட்டு ஒரு சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில்சாய்ந்தேன். மேலே எலெக்ட்ரிக் லைட் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. இரவு பத்து மணிக்குமேலிருக்கும். என் அறையிலும் வெளியிலும் ஆழ்ந்த அமைதி குடிகொண்டிருந்தது. புகைப் போட்ட திறம் யாழ்ப்பாணத்துப் புகையிலை (என்று தான் கடைக்காரன் சொல்லித் தந்தான்) குழப்பம் செய்யாமல் நன்றாக எரிந்தது. எனது சொற்ப நேர விறுவிறுப்பு இன்பத்துக்கு அந்தப் புகையிலைச் சுருட்டு தன் உடலையே அக்கினிக்கு அர்ப்பணித்துக் கொண்டது. இந்தக் காலத்திலே பிறர் நலத்துக்காக இம்மாதிரித் தியாகம் செய்யும்


சிங்கமும் விறகு வெட்டியின் மகளும்

 

 (நோர்வே தமிழ் பள்ளிப் பிள்ளைகள்ளுக்காக எழுதியது பா நாடகம் – 22. 02. 2001) பிள்ளைகள்:- பாட்டி பாட்டி கதை சொல்லுங்கோ கதை சொல்லுங்கோ பாட்டி பாட்டி. சக்கரைக்குள் கசப்பு மருந்தை ஒழித்து வைத்து தருவாயே கதையோடு கதையாக புத்திமதிகள் சொல்வாயே வெளியே காற்று அடிக்குது வெண்பனியும் கொட்டுது பாட்டி பாட்டி கதை வேணும் கதைவேணும் பாட்டி பாட்டி பாட்டி :- என்ன கதை சொல்ல எதனைப் பற்றிச் சொல்ல எனக்குத் தெரிந்த கதை யெல்லாம் ஏற்கனவே


மாயை

 

 1 கொக்கிரகுளம் சப்ஜெயில் சேகண்டி பன்னிரண்டு மணி அடித்தது. அந்த இடமே பயங்கரமானதுதான். ‘பிள்ளையைப் போட்டு பிலாப்பழம் எடுத்த ஓடை ‘ச் சரிவில் உள்ள அடவிப் பிராந்தியம் அது. அங்கு வானுயர்ந்த பல சாதி மர வர்க்கங்களும் அர்ச்சுனன் வகுத்த சரக்கூடம் போலப் பின்னி நிற்கும். அந்த இடம் பேய் பிசாசுகளுக்குப் பெயர் போனது. அயலூர்க்காரன்கூட அந்த அடவியின் நெருக்கத்தைக் கண்டு அஞ்சுவான். அந்தத் தோப்பின் மேலாக ஓடும் ஐரோட்டுத் திருப்பத்தில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகமானதால், அங்கு


சிக்காத மனம்

 

 தூங்க மறுத்த கண்களுக்கும், ஏங்கித் தவிக்கும் நெஞ்சத்திற்கும் பதில் சொல்ல முடியாது இமைகளை இழுத்து மூடிய படி கிடந்தாள் தீபா.மூடிய கண்களுக்குள் தெரிந்த இருளுக்குள் ஒளிர்ந்த வளையங்களுக்கிடையில் இரு கண்கள் வந்து சிரித்து போனது. பல இடர்களை தாங்க வலிமை தந்த கண்களது.இதயங்களற்று இயந்திரமாகிப் போன மானிடர்கிடையில் என் இதயம் பூக்க செய்கின்ற கண்களது.இருக்கின்ற காதலை உணர்த்தமுடியாது, இல்லை உணர்த்தத் தேவையில்லை யென உணர்ந்தபடி போகிற அவசர உலகில் இன்னுமுமென்னை வருடிக் கொடுத்தபடி எனை சாகாமல் வைத்திருகின்ற