Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2012

300 கதைகள் கிடைத்துள்ளன.

மோதிக்கொள்ளும் காய்கள்

 

 ‘பயணிகளின் கனிவான கவனத்திற்கு. வண்டி எண் ஆறு ஒன்று ஏழு எட்டு சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் நான்காவது நடைமேடையிலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படும். யாத்ரி க்ருப்யா க்யான் தே…’ காதைக் கிழித்துவிடும் நோக்கில், சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் அப்பிக்கிடந்த சலசலப்பையும், பரபரப்பையும் தாண்டி கத்திக்கொண்டிருந்தாள் ஒரு பெண், ரயில் நிலைய ஒலிப்பெருக்கியில். கடைசி நிமிடத்தில் வந்து ரயில் கிளம்புவதற்குள் தங்கள் பெட்டிகளில் ஏறிவிட அவசர அவசரமாய் ராகவனைக் கடந்து விரைந்து


கடவுளின் ராஜினாமா கடிதம்

 

 மொழி என்று ஒன்று இருக்கும் வரை அதற்காக போராடவில்லை என்றால் (அது ஆரோக்கியமானதாகவே இருப்பினும்) சாப்பிடக்கூடிய உணவானது தொண்டைக் குழியை விட்டு உள்ளே போகமாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிடும் சில அரசியல் பிரமுகர்களுக்கு. தேவையில்லை என்றாலும் போராடித்தான் ஆக வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. சத்தியமாக ஓட்டுக்காக இல்லை என்று சொன்னால், ஒரு பிறந்த 5 மாதமே ஆன குழந்தை வாயை பொத்திக் கொண்டு வயிறு குலுங்க சிரிக்கும். ஆகையால் மொழிக்கு நிறைய பிரச்சனைகள் தேவையாக உள்ளது.


ஆணாதிக்கம்

 

 சென்ற வாரம் ஏற்பட்ட கனவில் மிகுந்த ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்து விட்டது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் ஃபிராய்டின் கனவுகளின் விளக்கத்தின் படி அது உண்மைதான் என்று என்னால் குத்துமதிப்பாக கூற முடியும். இறந்து போன அந்த மனிதருடன் எப்படி நான் விவாதம் செய்து உறுதி செய்து கொள்வது. விவாதத்திற்குரிய அந்த உருவம் மிகுந்த சிரமத்தின் பேரில் முயற்சி செய்து கொண்டிருந்தது. அதன் முயற்சி என்னை பயமுறுத்துவதற்காக என்பது இறுதியில் தான் எனக்குத் தெரிய


திரியும் உண்மைகள்

 

 ‘ம‌ஞ்சு, பூர்ணிமாவ‌ நான் ல‌வ் ப‌ண்றேன்’. ‘நினைச்சேன், பணம் வாங்காம‌‌ ரிப்பேர் ப‌ண்ற‌ப்போவே நினைச்சேன்’. மெலிதாக‌ வெட்க‌ப் புன்ன‌கை பூத்த‌ கதிர் தொட‌ர்ந்தான். ‘ஆனா என‌க்கு கொஞ்சம் சந்தேகமா இருக்கு’. ‘அட‌ப்பாவி, ல‌வ் ப‌ண்ண ஆர‌ம்பிச்ச‌துமே ச‌ந்தேக‌மா உன‌க்கு’. ‘இல்ல‌, அவ‌ ஸ்கூட்டி ரிப்பேர் ஆற‌தும், என்கிட்ட‌யே எடுத்துட்டு வ‌ர‌தும், ரிப்பேர் ப‌ண்ற‌ வ‌ரைக்கும் என் கிட்ட‌யே பேசுற‌தும், வீட்ல‌ ச‌மைச்ச‌த‌ என்கிட்ட‌ குடுக்குற‌தும், நாளு, கிழமைன்னா வீட்டுக்குக் கூப்பிடுறதும் எல்லாமே, நான் ஆச‌ப்ப‌ட்ற‌ மாதிரியே ந‌ட‌க்குது’.


‘நேற்று’- என்று ஒன்று இருந்தது

 

 சென்னை பிராட்வேயில் ராஜா அண்ணாமலை மன்றம் அருகே ஷேர் ஆட்டோவிலிருந்து இறங்கிய நொடியில் என் செல்போன் ஒலித்தது. நம்பரைப் பார்த்தேன். குணசேகர். “என்ன மச்சி. இந்த வாட்டியும் லேட்டா?”- என்றான். “எல்லாரும் வந்தாச்சா?” “நீயும் சையதும் தான் எப்பவும் லேட்டு மச்சான்.” “பஸ் ஏறிட்டா அரை மணி நேரம்டா குணா. ஒரு தம்மை போட்டு ரெண்டாவத பத்த வைங்க வந்துருவேன்.” “வீக் – என்ட கெடுத்துராம வந்து சேர்ந்தா சரி.” செல்போனை அணைத்து பாக்கெட்டில் போட்டபடி ரோட்டைக்