சாந்தினி

 

பொம்மை… பொம்மை… வாசலில் குரல் கேட்டவுடன், வாணி ஓடோடி வந்தாள். தலையில் பொம்மைக் கூடையுடன் பொம்மைக்காரர் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்.

“”அங்கிள்… பொம்மை அங்கிள்… இங்கே வாங்க, எனக்கு பொம்மைகளைக் காட்டுங்க… நான் வாங்கணும்” என்றாள் வாணி.

சாந்தினிஅழகான மாடி வீடு… உற்சாகமாக அழைக்கும் குழந்தையைக் கண்டதும் பொம்மை விற்கும் வேலு மனதுக்குள் குதூகலித்தார்.

“”ஆஹா… இன்னிக்கு சரியான வியாபாரம்தான்…” என்று மனதுக்குள் மகிழ்ந்தபடி வாணியை நோக்கி வந்தார்.

பொம்மைக் கூடையை கீழே இறக்கி, ரயில், பஸ், கப்பல், புறா, என பலவித பொம்மைகளை எடுத்துக் காட்டினார்.

வாணியின் கண்கள் ஒரு சிறிய அழகான பெண் குழந்தை பொம்மையின் மேலே பதிந்தது.

“”அங்கிள்… இந்தப் பாப்பா பொம்மையைக் குடுங்களேன்…” என்றாள்.

வேலு அதை அவளிடம் கொடுத்து, “”பாப்பா… 50 ரூபா குடும்மா..!” என்றார்.

பொம்மையைப் பெற்றுக் கொள்ளாமல், “”இருங்க… அம்மாகிட்டே இருந்து பணம் வாங்கிட்டு வர்றேன்…” என்றபடியே வீட்டுக்கு உள்ளே ஓடினாள்.

அவள் ஓடிய வேகத்தில், கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி கீழே விழுந்தது. வேலுவின் எண்ணம் தவறாக ஓடியது. தன் மகள் சாந்தினியின் கழுத்தில் அந்தச் சங்கிலி இருப்பது போல அவருக்குத் தோன்றியது.

வாணி ஆவலுடன், அம்மாவை அழைத்துக் கொண்டு வாசலுக்கு ஓடி வந்தாள். பொம்மையும் இல்லை… விற்றவரும் இல்லை… ஏமாற்றத்துடன் அந்த மனிதரை வாணி அங்குமிங்கும் தேடினாள்…

அப்போதுதான் வாணியின் அம்மா, அவள் கழுத்தில் இருந்த சங்கிலியைக் காணாது பதறினார்.

“”செயினை எங்கே போட்டே?” அம்மா கேட்டதும், வாணி பதறினாள்.

“‘அம்மா, பொம்மைக்காரர்தான் சங்கிலியைத் திருடிக்கிட்டு போயிட்டாரு போல இருக்கு…” என்றாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த வாணியின் அம்மா போலீசிடம் புகார் தெரிவிக்கலாம் என்று முடிவு செய்தார்.

அன்று இரவு முழுவதும் வாணி சரியாகவே தூங்கவில்லை. தொலைந்து போன சங்கிலியும் அந்த அழகிய பொம்மையும் அவள் கண் முன்னே தோன்றிக் கொண்டேயிருந்தன.

மறுநாள் காலை… வாணி தனது அறைக்குள்ளிருந்த ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள்.

அப்போது அந்த பொம்மைக்காரர் வருவதைப் பார்த்தாள். அவர் கூடவே, ஒரு சிறிய பெண்ணும் வந்து கொண்டிருந்தாள்.

வாணி உடனே, “”அம்மா… அப்பா…. அந்த பொம்மைக்காரர்….” என்று அலறினாள்.

எல்லோரும் வாசலுக்கு ஓடி வந்தனர். பொம்மைக்காரரும் அவர் மகளும் அந்த வீட்டு வாசலுக்கு வந்து நின்றனர்.

அந்தச் சிறிய பெண், “”ஐயா, தயவு செய்து எங்க அப்பாவை மன்னிச்சிடுங்க… இதோ உங்களுடைய தங்கச் சங்கிலி… ஏதோ எனக்கு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தப்பு பண்ணிட்டார்… இனிமேல் இப்படிப் பண்ண மாட்டார்…” என்று கெஞ்சினாள்.

பொம்மைக்காரரும் தனது தவறை உணர்ந்தவராக அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

அந்தச் சிறிய பெண்ணின் உயரிய எண்ணத்தைப் பார்த்து வாணியின் பெற்றோர் அவளைப் பாராட்டினர். பொம்மை விற்கும் வேலு, வாணிக்கு அவள் விரும்பிய பொம்மையை நன்றியுடன் பரிசளித்தார்.

அன்றிலிருந்து வாணியும் சாந்தினியும் உற்ற தோழிகளாக மாறினர்.

- பி.கணேஷ்ராம், பெங்களூரு (ஏப்ரல் 2012) 

தொடர்புடைய சிறுகதைகள்
பனை மரமும் பச்சைக் கிளியும்…
தெற்கு காரசேரி எனும் கரிசல்காட்டுப் பகுதியில், ஒரு பனைமரம் இருந்தது. அதன் உடல் கறுப்பாகவும் ஓலைகள் பச்சைப் பசேல் என்றும் இருந்ததால் அந்தப் பனைமரம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.பலவிதமான பறவைகள் அந்தப் பனைமரத்துக்கு வந்து தங்கிச் செல்லும் என்றாலும் ஓர் ...
மேலும் கதையை படிக்க...
மரக்காட்டில் முயல் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. நேகா அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. மிக அழகான நேகாவைப் பார்க்க தினமும் யாராவது விருந்தினர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஒருநாள் நரியும் பார்க்க வந்தது. முயல் குடும்பத்தினருக்குப் பயமாக இருந்தது. “அடடே! இப்படி ஒரு அழகான முயல் குட்டியை ...
மேலும் கதையை படிக்க...
இல்லாத திருடனைப் பிடித்த கதை
முன்னொரு காலத்தில் "ஓஹோ ராமன்' என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் தன்னைப் பற்றி "ஓஹோ' என்று புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்ததாலும் அவ்வூரில் மேலும் பலர் ராமன் என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாலும் அவ்வூர் மக்கள் அடையாளத்துக்காக அவனை ...
மேலும் கதையை படிக்க...
ராமுவும் சோமுவும் ஒரே வகுப்பு. இருவரும் ஒருவரையருவர் எப்போதும் வம்பிழுத்துக்கொண்டே இருப்பார்கள். இதை ஒருநாள் கவனித்த ஆசிரியர், ''ஏன்டா இப்படி உங்களுக்குள்ளே அடிச்சுக்கறீங்க? ஒருத்தருக்கொருத்தர் ஹெல்ப் பண்ணிக்கிட்டு, ஒத்துமையா இருக்கணும். இனிமே, சண்டை கிண்டை போட்டீங்க, அடி பின்னிடுவேன்!'' என்று அதட்டினார். ஒருநாள், எல்லோரும் ...
மேலும் கதையை படிக்க...
சைக்கிள்
ஒரு நாள் என் மகனின் சைக்கிள் திருடுபோனது. அப்பார்ட்மெண்டின் கீழே நிறுத்தப்பட்டிருந்த போது வாட்ச்மேன், கேட், பூட்டு, இத்யாதி...இத்யாதி என்று பல பாதுகாப்புகள் இருந்தும் சுலபமாகத் திருடிவிட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கம்ப்ளெயிண்ட் கொடுக்கும் தைரியம் இல்லாததால், அப்படியே விட்டு விட்டேன். ""ஏன் கம்ப்ளெயிண்ட் ...
மேலும் கதையை படிக்க...
பனை மரமும் பச்சைக் கிளியும்…
பூட்டு, சாவி எங்கே?
இல்லாத திருடனைப் பிடித்த கதை
சண்டை எத்தனை நாளைக்கு?
சைக்கிள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)