ரெண்டாவது ஷுவை எப்போ…

 

லண்டனில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த கவுண்டி. அந்த கவுண்டியிலே ஒரு தச்சராக வேலை செய்து வந்தார். அவர் ஒரு வாடகை வீட்டிலெ ஜான் தன் மனைவி மேரியுட னும்,ஒரு பையன்,பெண்ணுடன் வசித்து வந்தார்.

ஜான் நிறைய தச்சு வேலை செய்து பணம் சம்பாதித்து, ஒரு வீட்டு கட்ட நல்ல பலகைகளை வாங்கி வைத்துக் கொண்டு இருந்தார்.

அவர் பையனுக்கு பத்தொண்பது வயது ஆனவுடனே,அவன் லண்டனில் ஒரு வேலை கிடைத்து அவன் லண்டனுக்குப் போய் விட்டான்.

அவர் பெண்ணும் பதினெட்டு வயது ஆனவுடன் அந்த கவுண்டியிலே இருந்த ஒரு பையனைக் காதலித்து, ஒரு வருஷம் கழித்து, அந்தப் பையனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வேரே ஒரு ஊருக்குப் போய் விட்டாள்.

பையனும் தங்களை விட்டுப் போய் விட்ட பிறகு, ஜான் தான் சேர்த்து வைத்து இருந்த கட்டைகளை எல்லாம் வைத்துக் கொண்டு ஒரு சின்ன மர வீடு கட்டிக் கொண்டான்.அந்த வீட்டில் ஜான் தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

அவன் கட்டின வீட்டில் தரை மட்டத்தில் ஜான் எல்லா வசதிகளையும் பண்ணி விட்டு, ஒரு மர மாடிப் படி போட்டு மாடியிலெ ஒரு சின்ன ‘ரூமை’ப் போட்டு, அந்த ‘ரூம்’லே ஒரு ‘பாச்சலர்’ இருந்து வர எல்லா வசதிகளியும் பண்ணினார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஜான் தன் மனைவியுடன் ‘சர்ச்சு’க்குப் போய் விட்டு,திரும்பி வந்து சாப்பிட்டு விட்டு, கொஞ்ச நேரம் அந்த மாடி ‘ரூம்’லே தன் மனைவி மேரியுடன் இருந்து இயற்க்கை யை ரசித்து வந்தார்.

ஜானுக்கு எழுபது வயது ஆனவுடனே,கஷ்டமான தச்சு வேலைக்குப் போய் வர முடியவில்லை. அவன் தான் வேலை செய்த போது வந்த பணத்தில் சேமிப்பில் வாழ்க்கை நடத்தி வந்தான்.

ஜானுக்கு எழுபத்தி ஐஞ்சு ஆகி விட்டதாலும்,மேரிக்கு எழுபத்து மூனு வயசு ஆனதாலும், இரு வரும்,ராத்திரி ஏழு மணிக்கு எல்லாம் சாப்பிட்டு விட்டு படுக்கப் போய் விடுவார்கள். இருவரும் ஒரு ரெண்டு மணி நேரம்தான் தூங்குவார்கள். அப்புறம் இருவருக்கும் தூக்கமே வராது. அப்புறம் இருவரும் வெறுமனே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கொண்டு இருப்பார்கள்.

தங்கள் ‘தூக்கமின்மையை’ சொல்லி வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஜான் ஆசைப்பட்டு, தன் மனைவி மேரியை அழைத்துக் கொண்டு அந்த கவுண்டியில் இருந்த ஒரு டாக்டரிடம் போய் காட்டினார்.அந்த டாக்டர் ஜானைப் பார்த்து “உங்க ரெண்டு பேருக்கும் எல்லா ‘டெஸ்ட்டுகளு ம்’ எடுத்து வைத்திடம் பண்ண 200 பவுண்ட் ஆகும்” என்று சொன்னவுடனே, ஜான் “டாக்டர் என் கிட்டே அவ்வளவு பணம் இல்லே” என்று சொல்லி மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

ஜானும்,மேரியும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பணம் தேவைப்பட்டதால் ஜான் தன் மாடியை வாடகைக்கு விட நினைத்து, அவன் வீட்டு வாசலில் ஒரு ‘To Let’ போர்ட்டை மாட்டினான்,

போலீஸ்லே வேலை செய்து வந்த ஒருவர் அந்த மாடி போர்ஷனில் குடி வந்தார்.அவர் தினமும் எட்டு மணி நேரம் நின்றுக் கொண்டு வேலை செய்து வந்தாதால்,இரவு வேலை முடிந்து தன் ‘போர்ஷ ணுக்கு’ வந்ததும்,அவன் கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டு,அவன் அணிந்து இருந்த கனமான ‘ஷு’ வை கழட்டி வேகமாக கிழே எறிந்தார்.

அந்த போலீஸ்காரர் ‘ஷு’வின் மேல் பாகத்தில் கனமான இரும்புத் தகடுடன்,கனமான தோலினால் செய்யப் பட்டு இருந்ததால் எறிந்த ஷு,மரத் தரையில் விழுந்ததும்,கீழே படுத்துக் கொண்டு இருந்த ஜான் மேரி தலையிலே ஒரு இடி விழுந்த சத்தம் போல கேட்டது.

சத்தம் கேட்டு பாதி தூக்கத்திலே இருந்து எழுந்துக் கொண்ட ஜான்,மெல்ல மாடிப் படி ஏறி அந்த போலீஸ்காரர் இடம் “தம்பி,உன் போலீஸ் ஷுவை கொஞ்ச மெல்லமாக தரையிலே வைப்பா ப்ளீஸ்.நீ வேகமாக உன் ஷுவை கழட்டி எறிவதாலே,கீழே படுத்து இருக்கும் எங்க தலைலே இடி விழுந்தா மாதிரி சத்தம் வருது.அதனாலே எங்க ரெண்டு பேர் தூக்கமும் கலைஞ்சு விடுது.அப்புறமா எங்க ரெண்டு பேருக்கும் தூக்கமே வறதில்லே” என்று சொன்னதும் அந்த போலீஸ்காரர் ஒத்துக் கொண்டார்.

அடுத்த நாளும் அந்த போலீஸ்காரர் வேலை அசதியாலே முதல் நாள் செய்தது போலவே தன் முதல் ஷுவையும்,வேகமாக கழட்டி எறிந்தார்.

கீழே படுத்துக் கொண்டு இருந்த ஜானுக்கு ரொம்ப கோவம் வந்தது.போலீஸ்காரர் ஏறிந்த ‘ஷுவின்’ சத்தத்தை பொறுத்துக் கொண்டு இருந்தார்.ரெண்டு நிமிஷம் கழித்து அந்த போலீஸ்காரர், தன் காலில் இருந்து ரெண்டவது ஷுவை கழட்டி எறிந்த பிறகு,அந்த ‘ஷு’ போட்ட சத்தத்தை பொறு த்துக் கொண்டு தூங்கப் போனார்.

அடுத்த நாளும் அந்த போலீஸ்காரர் ஜான் வந்து சொன்னதை மறந்து விட்டு வேலை செய்து விட்டு வந்த அசதியாயால் முதலில் ஒரு ஷுவையும் கழட்டி எறிந்து விட்டு,அடுத்த ஷுவை ரெண்டு நிமிஷம் கழித்து கழட்டி எறிந்தார்.

ஜானும் மேரியும் அந்த ரெண்டு ஷு போடும் ‘சத்தத்தையும்’ பொறுத்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்கள்.

‘சரி, இவர் கிட்டே சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லே.நாம ரெண்டு சத்தத்தையும் பொறுத்து கிட்டு தான் ஆகணும்’ என்று நினைத்து பொறுத்துக் கொண்டு வந்தார்கள்.

மூன்றாவது நாள் அந்த போலீஸ்காரருக்கு வேலை கொஞ்சமாக குறைவாக இருந்தததால், அவர் தன் ‘போர்ஷனுக்கு’ வந்து முதல் ஷுவைக் கழட்டி,வேகமாகப் போட்ட பிறகு, வீட்டுக்காரர் சொன்னது ஞாபகத்துக்கு வரவே,தன்னுடைய ரெண்டாவது ஷுவை மெதுவாக கழட்டி ஓசைப் படாமல் வைத்தார்.

வழக்கமாக தினமும் ரெண்டு ‘இடி’ சத்தம் கேட்டு வந்த ஜானுக்கும் மேரியுக்கும், எப்போது ரெண்டாவது ‘இடி’ சத்தம் கேட்கும் என்று காத்து கொண்டு இருந்தார்கள்.

அவர்கள் பொறுமை எல்லை மீறி போய் விட்டது.

ஒரு அரை மணி நேரம் பொறுத்துப் பார்த்த ஜானுக்கு,அந்த ரெண்டாவது ‘இடி’சத்தம் வராம இருக்கவே, கோவம் வந்து,தன் அசதியையும் பார்க்காமல்,மெல்ல மாடிப் படி ஏறிப் போய் அந்த போலீஸ்காரரைப் பார்த்து “ உன் ரெண்டாவது ஷுவை எப்போ கழட்டப் போறே” என்று கத்தினார்.

வீட்டுக்காரைப் பார்த்ததும் அந்த போலீஸ்காரர் பவ்யமாக, “நீங்க சொன்னது எனக்கு ஞாபகம் வரவே நான் என் ரெண்டாவது ‘ஷுவை’ முதல் ‘ஷு ‘கழட்டின அடுத்த நிமிஷமே,மெதுவா ஓசைப் படாம கழட்டி வச்சுட்டேன்” என்று சொன்னதும் ஜான் அந்த போலீஸ்காரரைப் பார்த்து, “இன்னிக்கு பண்ணது போலவே தினமும் தயவு செஞ்சி பண்ணுப்பா” என்று தன் கோவத்தை அடக்கிக் கொண்டு, மெல்ல படிக்கட்டில் இறங்கி வந்தார். 

தொடர்புடைய சிறுகதைகள்
அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 டாக்டர் கூப்பிட்டதும் காயத்திரி கனேசனை அழைத்துக் கொண்டு டாக்டர் ரூமுக்குள் போய் எல்லா ‘ரிசல்ட்டுகளை’ டாக்டா¢டம் கொடுத்தாள். டாக்டர் எல்லா ‘ரிசல்ட்டுக¨ளையும்’ வாங்கிப் பார்த்தார்.’ரிசல்ட்டுக¨ளை’ப் பார்க்கும் போது அவர் தன் நெற்றியை சுருக்கினார்.பிறகு டாக்டர் கணேசனை ...
மேலும் கதையை படிக்க...
நாஷ்டா முடித்து விட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு சவாரிக்கு கிளம்பிணான் சரவணன். மெயின் ரோடு தாண்டும் போது எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி ‘ஸ்பாட்டிலேயே’ இறந்து விட்டான். விஷயம் தெரிந்து ஓடி வந்தாள் தேவி. தரையில் ரத்த வெள்ள்த்தில் விழுந்து கிடைக்கும் சரவணனைப் பார்த்ததும் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 குழந்தைக்கு ‘நாம கரணம்’பண்ண ஆரம்பித்த வாத்தியார் இடம் காமாக்ஷியும்,சாம்பசிவனும் குழந்தைக்கு ‘மீரா’ என்று பெயர் வைக்க சொன்னார்கள்.வாத்தியாரும் அந்த குழந்தைக் காதிலே ‘மீரா’ என்று மூன்று தடவை சொன்னார். சாம்பசிவன் வாத்தியாருக்கு வெத்திலை பாக்கு,தேங்காய் பழத்துடன் தக்ஷணையையும் ...
மேலும் கதையை படிக்க...
செல்வம் எண்ணூர் ‘பவுண்டரியில்’ ஒரு ‘மெக்கானிக்கா’க வேலை செய்து வந்தான். பல்லாவரத்தில் இருந்து காலை ஆறு மணிக்கெல்லாம் நாஷ்டா பண்ணி விட்டு,கையில் பகலுக்கு சாப்பாடும் எடுத்துக் கொண்டு போய் வந்தான்.செல்வம் வேலை முடித்து வீட்டுக்கு வந்து சேரும் போது மணி ஏழு ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14 செந்தாமரை அரை ஆண்டு பரிக்ஷகளில் மிக நன்றாகப் படித்து அவள் வகுப்பிலே முதல் மாணவியாக ‘மார்க்’ வாங்கி இருந்தாள்.செந்தாமரை வாங்கின ‘மார்க்குக்கும்’ ரெண்டாவதாக வந்த மாணவி வாங்கின மார்க்குக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததைக் கவனித்த கணபதி ...
மேலும் கதையை படிக்க...
மேரி ஜானை நாலு வருடங்களாக ‘டேட்’ பண்ணீ கல்யாணம் பண்ணிக் கொண்டாள். இருவ ரும் ஒரு சின்ன ஊ¡¢ல் வசித்து வந்தார்கள்.அந்த ஊ¡¢ல் ஒரு சின்ன சர்ச்சும், ஒரு சின்ன மருத்தவ மணையும் தான் இருந்தது. முதல் மூணு வருடங்கள் அவரகள் ரெண்டு ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 அந்த வாத்தியார் “நீங்க பாவம் இந்த ஒரு காலை வச்சுண்டு,அக்குள் கட்டையையும் வச்சுண்டு,ரொம்ப சிரமப்பட்டு ரொம்ப சிரத்தை யா எல்லா ‘ஸ்ராதத’ காரியங்களையும் செஞ்சு முடிச்சேள்.உங்க சிரத்தையை நான் ரொம்ப பாராட்டறேன்”என்று சந்தோஷமாக சொன்னார். உடனே ரமேஷ் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 ஒரு நல்ல முஹ¥ர்த்த நாள் அனறு ராமநாதன் மங்களம் கல்யாணத்தை நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள் குப்புசாமியின் குடும்பமும்,ராமசாமியின் குடும்பமும். கல்யாணம் நல்லபடியாய் முடிந்தவுடன்,மங்களத்தை ‘புக்ககத்தில்’ கொண்டு போய் விட்டு விட்டு,ராமசாமி இடமும்,விமலா இடமும் சொல்லிக் ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம் -22 | அத்தியாயம் -23 | அத்தியாயம் -24 அவள் மௌனமாக இருந்தாள்.கொஞ்ச நேரம் கழித்து ”அந்த ராணீ நம் வூட்லே எவ்வளவு வேலைங்க செஞ்சு வந்தா.ஒரு சின்ன பொருளைக் கூட அவள் திருடினது இல்லே.அப்படி பட்ட ராணியின் குழந்தை நாம ...
மேலும் கதையை படிக்க...
அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 ரெண்டு வேலைகாரிகள் நின்றுக் கொண்டு இருந்தார்கள்.மேஷ் அவர்கள் ரெண்டு பேருக்கும் அவர்கள் கேட்ட சம்பளம் தர ஒத்துக் கொண்டு நாளைக் கு காத்தாலே இருந்து வேலைக்கு வர சொல்லி அனுப்பினான்.அவர்கள் போனதும் காயத்திரி “இங்கே வேலைக்கு ...
மேலும் கதையை படிக்க...
தீர்ப்பு உங்கள் கையில்…
அவங்க வயித்தெரிச்சல் நம்மே…
அப்பா, நான் உள்ளே வரலாமா…
எனக்குக் கல்யாணமே வேணாம்… நான்…
சேற்றில் மலர்ந்த செந்தாமரை
ஜாக்கிறதே,அந்த தூண்லே இடிக்காம…
தீர்ப்பு உங்கள் கையில்…
ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
குழந்தை
தீர்ப்பு உங்கள் கையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)