தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து, ஆயிரக்கணக்கான கதைகளை ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைத்து, வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பான முயற்சி. வாசிப்பு குறைந்து வரும் தமிழ்ச் சூழலில் கணினி வழி வாசிப்பினைத்தொடர இம்முயற்சி பெரிதும் உதவும். சிறுகதை குறித்த கட்டுரைகள் துவங்கி, பல ஆண்டுகால சிறுகதைகளை பெட்டகம் போல சேமித்து வைத்திருப்பது இளம் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆய்வாளர்களுக்கும் மிகப் பயனளிக்கும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பணிக்கு வாழ்த்துகள்.நன்றி.