கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீஅருண்குமார்

3 கதைகள் கிடைத்துள்ளன.

வேத வித்து

 

 “ஈஸ்வரா” சொம்பைக் கையில் வாங்கி கை கால்களை அலம்பினார் விஸ்வநாதய்யர். மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரமாக ஒரு காலத்தில் இருந்து தற்போது என்னவென்றே தெரியாமல் இருக்கும் துணியை உதறி கையைத் துடைத்துக் கொண்டவர், அப்படியே முள்முள்ளாக இருந்த முன்னுச்சி மண்டையைத் துடைத்துக் கொண்டார். முற்றத்தைக் கடந்து பின் கதவைத் திறந்து புழக்கைடைக்குச் சென்றவர் கிணற்றுக்குப் பக்கத்தில் இருந்த தோய்க்கும் கல்லில் அமர்ந்தார். அவர் பின்னாலேயே வந்த விசாலம், கிணற்றில் சாய்ந்தவாறு நின்று கொண்டாள். விசாலம் கேட்டாள் “ஏன்னா, போன


காந்தி இன்னாபா சொன்னாரு

 

 எனக்கும் தியாகுவுக்குமான நட்பு எங்களின் இரண்டாம் வகுப்பிலிருந்து ஆரம்பமானது. முதல் வகுப்பு வரை வேறு ஊரில் படித்த நான் இரண்டாவது படிக்கும் போது குடும்பத்தோடு திருவொற்றியூர் வந்து சேர்ந்தோம். ஸ்கூல் திறந்து சுமார் ஒரு மாசம் கழிச்சுதான் நான் சேர்ந்தேன்.புது பள்ளிக்கூடம். புது வாத்தியார். புது சூழல். முதல் நாள் பள்ளிக்கூடத்துக்கு போனபோது எனக்கு ஒரே அழுகையாக வந்தது. சிகப்பா, அழகா (நிஜமாதான்), சூட்டிகையா ஒரு பையன்,புதுசா வந்து சேந்ததும் சூர்யா டீச்சர்தான் என்னை கையைப் பிடிச்சிண்டு


அஞ்சுமாடு

 

 மாங்குடி கிட்டாவைய்யரைத் தெரியாதவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்க முடியாது. மனுஷர் ரஸிகஸிரோன்மணி. ஆளும் பார்க்க ரொம்பப் பிரமாதமாக இருப்பார். ஸ்நான ஸந்தியாவந்தனங்களில் ஒரு ஆசாரமும் குறையாது. அப்பா வைத்து விட்டுப் போன 5 வேலி நிலம் இருக்கிறது. குத்தகை தவறாது வந்து விடும். மனுஷ்யன் காலங்கார்த்தால 4 மணிக்கெல்லாம் ஏந்துண்டுடுவார். எல்லாம் முடிந்து ஐந்தரை மணிக்கு ஆற்றிலே ஒரு குளியல். சாதாரணக் குளியலல்ல, ஆற்றிலே இறங்கினால் இக்கரைலேந்து அக்கரைக்கு ஒரு தடவை போயிட்டுத் திரும்புவார். அதானோ என்னவோ