கதையாசிரியர் தொகுப்பு: ஸிந்துஜா

14 கதைகள் கிடைத்துள்ளன.

சிநேகிதம்

 

 உள்ளே கூடம் அமளிப்பட்டது. வனஜாவின் குரல் வழக்கம் போல் உயர்ந்திருந்தது. இந்த ஒரு வாரத்தில், டோலுவுக்கு லூட்டியடிக்கும் குழந்தைகள், இந்த வீடு, வனஜாவின் வெட வெட உடலுக்குச் சற்றும் பொருந்தாத சன்னமில்லாத குரல் எல்லாம் பழகியிருக்கும். வருஷங்கள் கழித்து டோலுவைச் சந்திப்பேன் என்று ஒருநாளும் நான் கனவு கண்டதில்லை. போன வெள்ளிக்கிழமை ஆபிசிலிருந்து திரும்பி, வனஜா கொடுத்த காப்பியைக் குடித்துக் கொண்டிருந்த போது வனஜா, “”இன்னிக்கி கல்கத்தாலேர்ந்து போன் வந்தது” என்று சிரித்தாள். “”ரொம்ப ஜாலியா இருக்கியே,


இழப்பு

 

 மரத்தடி மேடையில் உட்கார்ந்திருந்த நாகு, எதிர்மரத்தில் இருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த குருவியை வியப்புடன் மறுபடியும் பார்த்தான். அவன் அதை விரட்டுவது போல் செய்த சைகைகளால் பாதிக்கப்படாதது போல அது உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒன்று, அது அவனது சைகைகளை அலட்சியம் செய்து இருக்க வேண்டும். அல்லது அது ஆழ்ந்த சிந்தனையில் இருக்க வேண்டும். அது கண்களை அப்படி இப்படி சுழற்றிக் கொண்டிருந்ததிலிருந்து அதற்குத் தெரிகிற கண்கள்தான் இருக்க வேண்டும் என்று


தடுமாற்றம்

 

 பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. தெரு விளக்குகள் வழக்கம் போல் இருட்டுக்குத் துணையாக எரியாமல் நின்றிருந்தன. கோயிலுக்குப் போன அம்மா இன்னும் வரவில்லையே என்று வீட்டை விட்டு வெளியே வந்தேன். குளிர் காற்று முகத்தில் அறைந்தது. டிசம்பரில் போனால் போகிறது என்று எப்போதாவது தலை காட்டும் ஈரப் பசை கலந்த காற்று. “”உங்க மதுரைல வருஷத்துக்கு மூணு ஸீசன் தான். ஹாட், ஹாட்டர், ஹாட்டஸ்ட்” என்று என் நண்பன் மூர்த்தி சொல்லிச் சிரிப்பான். மூர்த்திக்கு அப்படி ஒன்றும்


அடி

 

 பலராமன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்துக்கு, இப்போது சூரியன் வந்து விட்டான். சுள்ளென்று உறைக்கும் வெய்யிலில் இருந்து தப்பிக்க நிழல் படும் இடத்தைத் தேடினார். கடந்த ஒரு மணி நேரமாக அவர் அந்தப் பார்க்கில்தான் இருந்தார். காலையில் வாக்கிங் வந்து அந்தப் பார்க்கைச் சுற்றிச் சுற்றி வந்த வயதானவர்கள், யுவர்கள், யுவதிகள், குழந்தைகள் எல்லோரும் இப்போது திரும்பிப் போய் விட்டிருந்தார்கள். அவர் சித்தலிங்கத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார். பார்க்குக்கு வலது பக்கம் சென்றால் பதினாறாவது கிராஸில், சித்தலிங்கத்தின் வீடு இருந்தது.


கலையும் ஒப்பனைகள்

 

 பங்கஜத்துக்கு ஒரு நிமிஷம் நெஞ்சு நின்றுவிடும் போலிருந்தது. மனதை முகம் காட்டிவிடக் கூடாது என்று பிரயத்தனப்பட்டு ஒரு புன்னகையை நழுவ விட்டாள். அவளுக்கு எதிரே உட்கார்ந்திருந்த பார்வதி பங்கஜத்தின் மனதை அறியாதவளாய் “”என்னமோ போ, கோமதி பொண்ணுக்கு ரொம்ப அதிர்ஷ்டம்தான். பார்த்த முதல் ஜாதகமே ஒத்துப்போய், வர வெள்ளிக்கிழமை அவா நிச்சயதார்த்தம் பண்ண வராளாம் . ஒரு வாரத்திலே எல்லா வேலையையும் எப்படித்தான் கோமதி சமாளிக்கப் போறாளோ?” என்றாள். பங்கஜம் “”கோமதி ரொம்ப கெட்டிக்காரி மாமி. எல்லாத்தையும்


மலர் மனம்

 

 ராமையா வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தார். வீடு நிசப்தமாக இருந்தது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதது போல், சுவரில் இருந்த பழைய கடிகாரம் பதினோரு முறை காறிற்று. “”இன்னும் பொட்டுண்டு வரலையா?” என்று சமையலறையைப் பார்த்துக் கேட்டார். “”பத்தரைக்கே வந்துடுவானே” உள்ளேயிருந்து ஒன்றும் பதில் வரவில்லை. “”ஏய் , உள்ளேதான் இருக்கியா?” என்று ராமையா கத்தினார். “”என்ன, ஏய், ஏய்ன்னு, எப்போ பாத்தாலும் கூப்டுண்டு, எங்க அம்மா, அப்பா வச்ச பேர் விஜயான்னு எவ்வளவு அழகா


செல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்

 

 1 செல்லச்சாமிக்கு வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு முழிப்பு வந்து விட்டது . மாடித் தரையில் படுத்திருந்தவரின் கண்கள் மேலே சிமிட்டிக் கொண்டிருந்த வானத்தின் எண்ணற்ற கண்களைச் சந்தித்தன . நீலமும் வெள்ளையுமாக வானில் தெரிந்த புரிபடாத சித்திரங்களில் எதையாவது தேடிக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்த்தார். அவர் சிறுவனாக இருந்த போது இம்மாதிரி வானில் காணப்படும் ஓவியங்கள் முந்தின ஜன்மத்தில், இதே நாளில் நடந்த காட்சிகளைத்தான் தீட்டிக் காண்பிக்கப் படுவதாக நினைத்ததுண்டு . வெட்ட


அறமற்ற மறம்

 

 டிசம்பர் காலை பத்துமணிக் குளிரில் கஸ்தூர்பா ரோடு குளிர்ந்து கிடந்தது. போன வருஷம் இதே நேரம் இந்த தில்லிக்கு வந்த போது நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று இருந்தது. ” இந்த நவம்பர்ல, சரியான குளிர் சமயத்ல வந்து சேர்ந்திருக்கே. நல்லதுதான் போ. அடுத்த வின்டருக்கு நீ தயாராயிடுவே ” என்று சாமித்துரை அவன் வந்த புதிதில் சொல்லிச் சிரித்தார். வந்த ஒரு வாரம் அவர் கூடத்தான் அவன் தங்கியிருந்தான். அப்புறம் சரோஜினி நகரில் ஒரு பஞ்சாபி


ஏமாற்றம்

 

 கணேசன் விழுந்தடித்துக் கொண்டு சாமியார் மண்டபத்தை அடைந்த போது, தியாகராஜன் வந்திருக்கவில்லை. அவனே அரை மணி லேட் என்றால் தியாகு அவனை விட மோசமாக இருக்கிறானே என்று சுற்று முற்றும் பார்த்தான். தியாகுவின் சுவடே காணோம். மண்டபத்தைச்சுற்றி மரங்களும் கொடிகளும் செடிகளும் ‘ பசேல் ‘ என்று பரவிக் கிடந்தன. சாமியார் மண்டபத்துக்கு இடது புறமும், வலது புறமும் வயல்கள் வீசிக் கிடந்தன. காற்றில் ஆடிய நெற் பயிர்களின் பச்சை கண்ணை வந்து அடித்தது. சாமியார் மண்டபத்தில்


வேஷங்கள்

 

 முன்னிரவின் குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆனால் மனதில் படிந்திருந்த குமைச்சலை அதனால் அடக்க முடியவில்லை. வைதீஸ்வரன் பார்வை வானத்தில் படர்ந்தது. கொட்டிக் கிடந்த ஏகப் பட்ட நட்சத்திரங்களில் எது ரொம்பவும் அழகு என்று தேடிச் செல்வதைப் போல நிலவு உருண்டு சென்று கொண்டிருந்தது. அகலமாக விரிந்து கிடந்த மொட்டை மாடியில், இந்தக் காற்றிலும் , நிலவிலும் , இருளிலும் இதற்கு முன் எவ்வளவோ தினங்கள் மயங்கி, முயங்கிக் கிடந்திருக்கிறார் அவர். ஆனால் இன்று மனதில்