கதையாசிரியர் தொகுப்பு: வே.தர்மராஜ்

1 கதை கிடைத்துள்ளன.

காவேரி

 

 எனது செருப்பிரண்டையும் கையில் பிடித்துக்கொண்டு, மணப்பரப்பில் காலை வைத்தேன். மாலைச்சூட்டில் காய்ந்திருந்த மணல், அடிப்பாதத்தை வெதுவெதுப்பாய் வருடியது. அது, அடிப்பாதத்தில் ஒரு பூச்சியின் நகர்தலை மிதித்ததுபோல் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தி, எனது சிறுவயது உற்சாகத்தை நினைவூட்டியது. அப்படியோர் இதமான வருடல். அன்னையின் தலைவருடல் போல. ஆற்று மணலின் நடுவே வீசும் காற்று, யாருடைய அந்தரங்கத்தையும் கவர்ந்து வராமல், பரிசுத்தமான மெல்லிய இசைபோல் இனிமையாக காதில் ரீங்காரமிட்டது. இப்போது காதிற்குள் குறுகுறுப்பு. எனது இரு கைகளையும் காது மடலை