கதையாசிரியர் தொகுப்பு: வேல ராமமூர்த்தி

5 கதைகள் கிடைத்துள்ளன.

கூண்டை விட்டு வெளியே…

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடிந்ததும் கூண்டைத் திறந்து கோழிகளை விடுவிப்பதில் ஜானகிக்கு ஓர் ஆனந்தம். மாலையில் கூண்டில் அடைப் பது அம்மாவின் பொறுப்பு. ஜானகிக்கு வீட்டின் வாசல்புறத்தை விட கொல்லைப்புறம் மிகவும் பிடிக்கும். கொல்லையில் தான் மரங்கள் இருக்கின்றன. மரங்களில் பறவைகள் இருக்கின்றன. நடுவில் கிணறு. சுற்றிலும் மருதாணி, துளசி, ரோஜா, செவ்வந்திச் செடிகள். கிணற்றடியில் ஒரு துவைகல், எப்பொழுதும் குளிர்ச்சியாய் இருக்கும். கை வேலைகள் ஒழிந்த


எருதுகட்டு

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இன்று, புதன்கிழமை, ‘எருதுகட்டு’. உக்கிரமான நாள். நிறைகுளவள்ளி அம்மனுக்கு வருஷா வருஷம் ஆவணிக்குள்ளே முளைக்கொட்டு நடத்தி ஆகணும். தவறினால் ஆத்தா ‘கோவம்’ ஊர் தாங்காது. எருதுகட்டு ஒரு வில்லங்க மான காரியம். ஆப்பநாட்டுச் சனம். பொங்கி விடும் பொங்கி குடிக்காத ஆள் இருக்க மாட்டான். சிறிசு. பெருசு… அத்தனையும் தள் னாடும். ‘குடிக்கக் கூடாது’ன்னு ஊர்க் கட்டுப்பாடு உண்டுதான். எவன் கேக்குறான்? வருஷத்திலே


கறி

 

 தேன் கூட்டிலே நெறிகிற ஈ. மாதிரி, பஸ் நிலையத்தில் ஜனக் கூட்டம். வருசா வருசம் சித்திரை பதினெட்டுக்கு சோலைசாமி கோயில் திருவிழா. சனம் வெள்ளமாய் பொங்கி விட்டது பொங்கி. எத்தனை பஸ் வந்து அள்ளிக் கொண்டு போனாலும் கூட்டம் குறைந்த பாடில்லே. ஒழுங்கு பண்ண ‘போலீஸ் லத்தி அடி’. அவ்வளவும் கறி திங்க வந்த கூட்டம். காரேறி, மாட்டு வண்டி கட்டி. நடையாய் நடந்து கறிக்கு ஆசைப்பட்டு வந்த சனங்கள் தான். ஒரு கிடாயா? ரெண்டு கிடாயா?


கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்!

 

 எட்டையபுரம் சுப்ரமண்ய பாரதி நடந்தே வந்தார். நேற்று புறப்பட்டதில் இருந்து கை வீச்சு குறையாத நடை. களைப்புத் தெரியாமல் இருக்க காற்றோடும் காட்டுக் குருவிகளோடும் உரையாடிக்கொண்டு வந்தார். குயில்களோடு சேர்ந்து பாடிக்கொண்டும் வந்தார். கடந்து வந்த ஒவ்வோர் ஊர்க் கிளிகளும், குருவி, காகங்களும் அடுத்த ஊர் எல்லை வரை உடன் வந்து, பிரிய மனம் இல்லாமல் தத்தம் எல்லைக்குத் திரும்பின. காடல்குடி மாரிச்சாமி நாயக்கர் வழி மறித்து அழைத்துப் போய் குடிக்கக் கொடுத்த இரண்டு செம்பு கம்பங்கஞ்சி,


இருளப்ப சாமியும் 21 கிடாயும்

 

 இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித் தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி, இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த விஷயத்தில் பெரியாளுகள் ரொம்பக் கண்டிஷன். ’எளவட்ட முறுக்கிலே