கதையாசிரியர் தொகுப்பு: லா.ச.ராமாமிர்தம்

67 கதைகள் கிடைத்துள்ளன.

சாட்சி

 

 (1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சின்ன வயதின் விளையாட்டு ஒன்று இப்போது ஞாபகம் வந்தது. “தட்டாமாலை தாமரைப் பூ தட்டாமாலை தாமரைப் பூ சுற்றிச் சுற்றிச் சுண்ணாம்பூ -” தலையின் தனிக் கிறுகிறுப்பில் அவனைச் சுற்றி இருந்தவையும் இருந்தவரும் பொங்கி வடியும் அலைபோல் மேலும் கீழும் மிதந்து ஆடினர். அவன் சிநேகிதர்கள் கூத்தும் கொம்மாளமும் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். பார்ட்டி’ ஒரு தினுசான கட்டத்துக்கு வந்து விட்டது. வாயிலிருந்து


?

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாம் வேத காலத்துக்குச் செல்கிறோம். வேத காலத்தைப் பற்றிப் படித்தோ, படித்தவரிடம் கேட்டோ அறியேன். ஆனால் என்னுள் திடீரென ஜனித்த வித்து, விறுவிறெனப் பெரிதாகி, என்னின்று விடுதலை பெற என்னை வாட்டிக் கொண்டிருக்கும். இக்கதை – கதையென்று எப்படிச் சொல்வேன்?- சமயம் (situation) அதன் வழியே காட்டிய சில அனுமானங்கள்படி, வேத காலம் என்ற பெயரில் அனுமான காலத்துக்குச் செல்வோம். அனுமானமே கேள்விக்குறிதான்.


ஆத்மன்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மனிதன்தான் தெய்வமாகிறான். தெய்வம் என்பது ஒரு சித்தி நிலை. தான் இல்லாத, முடியாத தன்னிடம் இலக்கணங் களை, சிறப்புகளைத் தான் விருப்பப்பட்ட ஒரு உருவத்தில், இடத்தில் ஆவாஹனம் செய்து, அதைத் தரிசனமாக்கப் பாடுபடுவது மனித இயல்பு. கூடவே தெய்வத்திடம் தான் விரும்பிய பலன்களை எதிர்பார்ப்பதும் மனித இயல்பு. ஆனால் தெய்வீகம் தெய்வத்தைக் காட்டிலும் பெரிது. தெய்வீகம் தெய்வத்தின் அம்சங்களைக் குறிப்பிடுகிறது. தெய்வத்தின் உருவை,


சூரம்சம்ஹாரம்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏறுமயி லேறிவிளை யாடுமுகமொன்றே!” “சபாஷ்!” “மாறுபடு சூரரை வதைத்தமுகமொன்றே!” “சபாஷ்!” “கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகமொன்றே!” “சபாஷ்!” “குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றே!” “சபாஷ்!” “சூரனே, சூரனைப் புறங்காட்டும் சுப்ரமண்ய தீரனே!” “சபாஷ்!” ஜல்! ஜல்!! ஜல்!!! ஜல்!!!! எட்டுப் பேருக்கும் கடைசியில் முற்றுப்புள்ளி வைத்தாற் போன்ற அச்சிறுவனின் குரலோசையும். காற்சிலம்போசை யும்தான் தூக்கி நின்றது. உண்ணாமலை, பிள்ளையார் கோவில் சந்து முனை யில்,


வேண்டப்படாதவர்கள்

 

 வீட்டின் கொல்லைப்புறம் தாண்டி மரங்களும் செடி கொடிகளும் புதர்களும் அடர்ந்தன. பூமிமேல் உதிர்ந்த இலைகளும் சருகுகளும் காலடியில் புதைந்து புதைந்து ஜமக்காளம் விரித்தாற்போல் பரவிக் கிடந்தன. அந்த இடமெல்லாம் விலையாகி விட்டதாகக் கேள்வி. ஆனால் இன்னும் கட்டிடங்கள் எழும்பவில்லை. இப்போதைக்கு முயற்சி இருப்பதாகவும் தெரியவில்லை. அவர் ஆபீஸ் போனபின் தன் சாப்பாட்டையும் அடுக்குள் காரியங்களையும் முடித்துக்கொண்டு வாசற் கதவைத் தாளிட்டுவிட்டு, உஷை அனேகமாய் இங்கேதான் பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பாள். ஒரு மரத்தின் மேல் சாய்ந்தபடி, புட்களின் அரட்டையைக்


மெத்தென்று ஒரு முத்தம்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோமதி ஜன்னலண்டை உட்கார்ந்தபடி, வெளியே மருதாணி மரக்கிளையில் இரண்டு காகங்கள், ஒன்றை யொன்று கொத்திக் கொண்டு சண்டையிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மாலை மஞ்சள் வெய்யில் அவளுடைய பூனை விழி களில் பட்டு, விழிகள் எரி திரிகள் ஆயின. வெய்யில் இன்னும் சற்று நேரத்தில் முகத்தை விட்டு நகர்ந்ததும், அந்த ‘ஜாலக்’ மாறிவிடும். மனம், அதற்கு மறுசுபாவமாவே போய்விட்ட இறுக்கம் தளர்ந்து, சற்று லேசாவே


கொலு

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் வீடு திரும்பியபோது கதவு திறந்திருந்தது. அவர் உள்ளேயிருந்தார். வழக்கம்போல், ஈஸி சேரில் பேப்பர் பார்த்துக்கொண்டு. காலை வேளையில் தலைப்புகளைத் தவிர, விவரமாய்ப் படிக்க நேரமிருப்பதில்லை. “எப்போ வந்தேள்? வந்து நேரமாச்சா?” “என்ன சுண்டல் தண்டலா ? ஏது, அமர்க்களமாயிருக்கே அலங்காரம் ! Dressed to kill!” “கொலு இல்லியா? தினப்படி போல் உடுத்திண்டு போமுடியுமா?” “நல்லாத்தானிருக்கே, நேரே அம்பாளே கொலுப் பார்க்க


தபஸ்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நடந்ததெல்லாம் நடந்த பிறகு … என்னினைவின் முகட்டில் தோன்றுவது ஒரு பெரும் நிலைக்கண்ணாடி, கோவிலில் அம்பாள் சன்னதிக்கெதிரில் இருப்பது போல் நான் என்னைக் காண்கிறேன். நீறு துலங்கும் என் வெண்ணெற்றியின் இருமருங்கிலும் கருமை செழிந்த மயிர் , சுருட்டை சுருட்டையாய் விழுகின் றது. நான் அதை வெட்டவுமில்லை, வழிக்கவுமில்லை. நேரே தூக்கிப் பின்புறமாய் சீவி விட்டிருக்கிறேன். நீண்டு வங்கி வங்கியாய் வளைவுகொண்ட கேசம்.


கிரஹணம்

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளுக்கு வரவே பிடிக்கவில்லை. “நான் இங்கேயே குழாயில் இரண்டு சொம்பு ஊற்றிக்கொண்டு விடுகிறேன். நீங்கள் போய் வாருங்கள்” என்றாள். ஆனால் அவர் தான் கேட்கவில்லை. ‘சூரிய கிரஹணம் சும்மா வருவதில்லை . தம்பதி ஸ்னாநம் ரொம்பப் புண்ணியமாக்கும். உனக்கு என்ன தெரியும்?” ஆம்; அவளுக்குத் தெரியாது. ஆனால் அவருக்குத் தெரிய நியாயமுண்டு. இதுவரை இரண்டு மனைவியரை சமுத்திர ஸ்னாந்த்திற்கு அழைத்துப் போயிருக்கிறார். இவள்


பகல் கனவு

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாலு பேர் மாதிரி எனக்கு வாக்கு சாமர்த்தியம் போத வில்லை; ஒன்றுமில்லாததைச் சில பேர் எவ்வளவு ரசமாய், காது, கண், மூக்கு வைத்து ‘ஜோடனை’ பண்ணி, நேரில் நடப்பது போலவே சொல்லிக் காண்பித்து விடுகிறார்கள் ! கேட்பவருக்கு மெய்சிலிர்த்து விடுகிறது. எனக்கோ அது தான் சூன்யமாயிருக்கிறது. மண்டையிலும் மனதிலுமிருக்கும் வேகத்தில், கால்பங்கு கூட வாய் வார்த்தையில் வரமாட்டேனென்கிறது. ஆனால், எனக் கென்னவோ அப்படித்