கதையாசிரியர் தொகுப்பு: லலிதானந்த்

1 கதை கிடைத்துள்ளன.

தொலைந்த நதி

 

 பதினாறு வருடங்கள் கடந்தும், நீ தந்து சென்ற நினைவுகள் என்னும் நதி எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. நேற்று தொலைக்காட்சியில் ‘மகாநதி’ படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அழுகை பொங்கியது. காவிரிக்கரையில் வாழ்ந்த ஒரு எளிய மனிதன் கூவம் நதிக்கரையில் நின்று கலங்குவதைப் பார்த்து அழுதேனா! அல்லது ‘இங்கே குளிக்கும் மனிதன் அழுக்கில் கங்கை கலங்குது’ என்று மகளைத் தோளில் சாய்த்துக் கொண்டு, பெருந்துயரத்துடன் ஒலித்த கமலின் குரல் கேட்டு அழுதேனா! நதிகளை நேசிக்கும் உன் நினைவுகள் தந்த வலியினாலும்