கதையாசிரியர் தொகுப்பு: லக்ஷ்மி சரவணகுமார்

8 கதைகள் கிடைத்துள்ளன.

பர்மா ராணி

 

 2010 – தாஸ் சவோக் – டெல்லி – பின்பனிக்காலம். வினோத்துக்கு, இந்த மொத்தப் பயணமும் விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மூடிக்கிடந்த கடந்த காலத்தின் ரகசியப் பக்கங்கள், இந்தத் தேடலின் ஒவ்வொரு தருணத்திலும் திறந்துசெல்வதைக் கண்கூடாகப் பார்த்தான். அவன் தேடும் தனியொரு மனிதராக அல்லாமல், ஒரு நூற்றாண்டின் ரகசியமாகவே மாறியிருந்தார் ஜாவேத். புதிய புதிய சுவாரஸ்யங்களைத் தந்த அந்த ரகசியத்தின் எழுதப்படாத, விநோதமான பாத்திரம் இவன். `தமிழ் சினிமா – நேற்றின் நிழல்’ என்னும் பெயரில், சினிமாவின்


ஆவாரம் பூ

 

 இலையுதிர்காலம் தொடங்கிவிட்டதன் அடையாளமாக மலையில் இருக்கும் மரங்கள் அத்தனையும், கோடையை மறந்து பூக்கத் தொடங்கியிருந்தன. ‘பொழுசாயம் ஆட்ட வெரசா ஓட்டிக் கொண்டாந்திருடா. நாளைக்குக் கொஞ்சத்தை திண்டுக்கல் சந்தையில போயி வித்துட்டு வரணும்…’ – காலையில் கிடையில் இருந்து ஆடுகளைப் பத்தும்போது ராசகிட்ணக் கீதாரி சொன்னதை மனதில் வைத்துத்தான், பிற்பகலுக்குப் பின்பாக ஆடுகளை வேகமாகக் கிடையை நோக்கித் திருப்பினான் அப்பு. அடிவயிற்றில் இருந்து கிளம்பிய பசிக்கு, அவன் கை தானாக ட்ரவுசர் பையில் சேமித்து வைத்திருந்த ஆவாரம் பூக்களைத்


நாய்வேட்டம்

 

 வாயின் இரண்டு ஓரங்களில் இருந்தும் வெள்ளி நூல் போல, சேகருக்கு சதா எச்சில் ஒழுகியபடியே இருந்தது. வீட்டில் இருந்து கிளம்பும்போதே உடலில் சின்னதாக ஓர் அரிப்பை உணர்ந்தான். உடல் முழுக்க அந்த அரிப்பின் அடையாளமாகச் சிறிது சிறிதாகத் தடிப்புகள் முளைத்தன. ரெஜிஸ்ட்டரில் கையெழுத்து போட்டுவிட்டு உடை மாற்றிக்கொண்டவனுக்கு, நேற்று ஒரு நாயைப் பிடிக்கும்போது அது பிராண்டிவைத்ததில் பிய்ந்துபோன தன் கால்சட்டை பட்டனின் நினைவு இப்போதுதான் வந்தது. கால்சட்டை, இடையில் நிற்கவில்லை. ஊக்கை மாட்டிச் சமாளித்தான். நா வறண்டு


குதிரைக்காரன் குறிப்புகள்

 

 ‘வீழாதே என் தெய்வமே வீழ்ந்துவிடாதே வீழ்ந்தவர் எவரும் எழுந்ததில்லையே! ’ – song of giant of the first age. ”ப்ளூ மவுன்டெய்னை விக்கப்போறேன் அசோக்… திஸ் வில் பி ஹெர் லாஸ்ட் ரேஸ்…’ முதலாளியிடம் இருந்து இந்த வார்த்தைகளை அசோக் கேட்டபோது, அந்த நாளுக்கான சூரிய வெளிச்சம் அடிவானத்தில் இருந்து எழத் தொடங்கியது. இன்னும் பனி விலகாத புல்வெளி. பந்தயச் சாலையை ஒருமுறை பார்த்தவன், அந்தக் குதிரையின் மீது முதல்முறையாக ஏறிய நாளை நினைத்துக்கொண்டான்.


அம்மாவும் அப்பாவும் காதலிக்காத கதை

 

 இத்தனை காலங்களில், அப்பாவின் மீது ராமுக்கு மிஞ்சி இருந்தது, வெறுப்பு… வெறுப்பு… வெறுப்பு மட்டும்தான். ராமுக்கு அவர் மீது இருந்த அதே வெறுப்பு, அவருக்கும் அவன் மீதும், அவன் அம்மாவின் மீதும் இருந்தது. அம்மா, ஒரு பூஞ்சை; சிறு வயதிலிருந்தே உழைக்கப் பழகியவள். கண்களைச் சுற்றி எப்போதும் கருவளையங்களும், இந்த ஜென்மத்தில் துடைத்தெடுக்க முடியாத தனிமை உணர்ச்சியும் அவள் முகத்தில் நிறைந்திருக்கும். தனிமை அடர்ந்த முகம், சக மனிதனுக்கு எப்போதும் அந்நியமான ஒன்றுதான். அப்பா, அவளுடன் நடந்த


மச்சம்

 

 மச்சம் குறித்த முதல் அக்கறை அவனுக்கு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு திங்கள்கிழமை அதிகாலையில்தான். விடுமுறை முடிந்து அலுவலகம் கிளம்பவேண்டி முகச்சவரம் செய்ய கண்ணாடியைப் பார்த்தவனுக்கு நம்பவே முடியாத ஆச்சர்யம்,, சரியாக அவனது இடது கன்னத்தில் இதழ்களுக்கு மிக அருகில் சின்னதாய் ஒரு மச்சம். ஏதாவது அழுக்காயிருக்குமோ என ஒரு முறைக்கு இரண்டு முறை முகம் கழுவிப் பார்த்தும் அந்தக் கருப்பு அதே அழுத்தத்துடன் இருந்தபோதுதான் இது மச்சம் தானென நம்பவேண்டியதாகிப் போனது, அதெப்படி இருப்பத்தி


ஜோக்கர்

 

 அடுத்த ஷோ தொடங்க இன்னும் பத்து நிமிடங் கள்தான் இருந்தன. ஜோக்கருக்குப் பதற்றம் குறைந்திருக்கவில்லை. இன்னொரு பீடியை எடுத்துக் குடித்தான். புகை கூடவே கொஞ்சம் இருமலையும் சேர்த்துக் கொண்டுவந்தது. இந்த ஊருக்கு வந்து டென்ட் அடித்து பதினாறு நாட்கள் ஆகிவிட்டன. வீட்டுக்கு இன்னும் பைசா அனுப்பவில்லை. முன்பெல்லாம் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்துவிட்டால் திரும்பிப் போகும் வரை என்ன நடந்தாலும் கவலைப்படத் தேவையிருக்காது. ரெண்டு மாசமோ, மூணு மாசமோ எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இப்போது அஞ்சு ரூபாய்க்கும்


மிச்சமிருக்கும் தறிகளுக்காக ஒருவன்…

 

 சுந்தரி ஷிஃப்ட் முடித்துக் கிளம்பும்போது மழை வேகமாகப் பெய்யத் தொடங்கியது. நவநீதன் கம்பெனி வாசலில் நின்று மழையில் நனைந்தபடி, மினி பஸ்ஸில் ஏறும் சுந்தரியைப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு வாழ்வில் இரண்டு சந்தோஷங்கள் இருந்தன. ஒன்று, சுந்தரி. இன்னொன்று, நைட் ஷிஃப்ட் வேலை. முகத்தில் படிந்து இருந்த மழை நீரைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டே ஜன்னல் வழியே அவனைப் பார்த்து அவள் சிரித்த பின்புதான் கம்பெனிக்குள் நுழைந்தான். அவளின் சிரித்த முகம் மனதில் நிழல் ஆடிக்கொண்டு