கதையாசிரியர் தொகுப்பு: ரெ.சசிக்குமார்

21 கதைகள் கிடைத்துள்ளன.

இது என் வீடு

 

 “ஹேய் தேவி நீ வேணும்னா பாரு அம்மா உன் பிறந்தநாள் அதுவுமா தான் போய் சேரும் போல”. “வேணாம்டி மதி வாய வச்சுக்கிட்டு சும்மா இரு, நான் என் பிறந்தநாளை காலத்துக்கும் கொண்டாட முடியாம போயிடும்டி”. “ஏய் பெரியம்மா ரெண்டு நாளில் என் பிறந்தநாள் வருது அன்னைக்கு பார்த்து நீ போய் சேர்ந்த அவளோ தான் பார்த்துக்க” என்று இழுத்துக் கொண்டிருந்த தன் பெரியம்மாவை நோக்கிக் கூறினாள் தேவி. அனைவரும் ஒவ்வொருவராக சீதேவிக்கு பால் கொடுக்க, தொண்டைக்குழி


என்னைப் பார் காய்ச்சல் வரும்

 

 பாகம் 5 | பாகம் 6 ஹர்ஷிதாவின் வீட்டை வந்தடைந்தார் யோகா. ஹர்ஷிதாவின் அம்மா அவரை வரவேற்றார். உள்ளே வந்தவர் விருந்தாளியாக இல்லாமல் வந்ததும் வீட்டினுள் நுகர்ந்து பார்க்க ஆரம்பித்தார். பிறகு ஹர்ஷிதாவின் அறைக்குச் சென்று பூஜையறைக்கு அவளை அழைத்தார். ஹர்ஷிதா வழக்கம்போல மறுத்தாள். மேலும் அவள் அனைவரும் என்ன செய்கிறீர்கள்? என்று தன் குடும்பத்தாரிடம் வினவினாள். யோகா அக்கா தன் தோழியிடம் ஒரு எழுமிச்சை, கற்பூரம், குங்குமம், மஞ்சள் மற்றும் ஒரு குவளையில் நீரெடுத்து வரச்சொன்னார்.


என்னைப் பார் காய்ச்சல் வரும்

 

 பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6 ஆம் நான் யோசித்த விஷயங்கள் சரிதான். மாயா அக்காவின் ஆன்மா ஏன் இன்னும் அங்கு இருக்கக் கூடாது என்பதே எனது சந்தேகம். அந்த ஆன்மாவினால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் நானாக இருந்தால் கூட அந்த நிகழ்வு நடந்து சுமார் 15 வருடங்கள் கடந்து போய்விட்டன. இன்னுமா அக்காவின் ஆன்மா அங்கு அழையும் என்று சிந்தித்த எனக்கு, நான் இங்கு தான் உள்ளேன் என்று அக்கா உரக்கச்


என்னைப் பார் காய்ச்சல் வரும்

 

 பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 இஸ்லாமிய நண்பர் கொடுத்த நீரை எடுத்துக் கொண்டு பெரியப்பா நிஷாவின் அறைக்குச் சென்றார். அந்த நீரை வழக்கமாகக் குடிக்கக் கொடுக்கப்படும் நீராக நிஷாவிடம் பெரியப்பா கொடுத்தார். அதைக் குடித்த மறுகணமே நிஷாவின் உடலில் ஒரு நடுக்கம் ஏற்பட்டு மொத்த உடலும் சிலிர்த்துள்ளது.‌ இதைக் கண்ட பெரியப்பா திடுக்கிட்டுப் போனார். பிறகு உடல் சாதாரண நிலையை அடைந்ததும், பெரியப்பா அந்த நீரைக்கொண்டு நிஷாவின் முகத்தைக் கழுவினார். அதன்


என்னைப் பார் காய்ச்சல் வரும்

 

 பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 மாயா அக்காவின் ஆன்மா குறித்த சர்ச்சைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மிளிறத் தொடங்கியது. இத்தனை நிகழ்வுகளையும் எப்படி ஊர்மக்கள் மாயா அக்காவின் ஆன்மாவுடன் இணைத்தார்கள் என்றால், இதைப் போன்ற அமானுஷ்யங்கள் யாவும் நிகழ்ந்தேறிய காலகட்டம் அக்காவின் இறப்பிற்குப் பின்பு தான். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ஒருமித்த கருத்துகளும் கூட. இவை போகப் பேய் விரட்ட வரவழைக்கப்பட்ட கோடாங்கியிடம் பாதிக்கப்பட்டவர்கள் கூறிய பெயரும் “மாயா” தான். பொதுவாக


என்னைப் பார் காய்ச்சல் வரும்

 

 பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 மாயா அக்காவிற்கு நடந்ததைப் பற்றி அம்மாவிடம் விசாரித்தேன். மாயா அக்கா மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், மேலும் அன்றுப் பகலில்‌ நீ சரிவர உணவு உண்ணாமல் இருப்பதால் தான் இது போன்ற நோயெல்லாம் வருகிறது என்று பெற்றோர்கள் சிறிது வாய்ச் சொல்லால் கண்டித்திருக்கின்றனர். ஆகவே தான் அவர் மாயா இப்படிச் செய்திருக்கிறாள் என்று அம்மா கூறினார். மேலும் வழக்கமாக அப்பா அண்ணனைக் கடையில் வைத்துவிட்டுக்


என்னைப் பார் காய்ச்சல் வரும்

 

 பாகம் 1 | பாகம் 2 இராமநாதபுரம் நகரிலுள்ள ஒரு அமைதியான, அத்தனை வசதிகளும் நிறைந்த ஒரு அழகானத் தெரு இளங்கோவடிகள் தெரு. என் வீட்டிற்கு ஒரு வீடு தள்ளி மாயா அக்காவின் வீடு. அக்காவின் தாயார் ஒரு சிறியப் பெட்டிக்கடை ஒன்றை வைத்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தார். என் வீட்டில் பள்ளிப்பருவத்தில் வாங்கியுண்ணத் தரப்படும் முக்கால்வாசி சில்லறைகள் அந்தக் கடையைத் தான் சென்றடையும். ஜவ்வு மிட்டாய், சூட மிட்டாய், புளிப்பு மிட்டாய், கொக்கோச்சு, கடலை மிட்டாய்,


வன்மம்

 

 லில்லி எனும் தாயும் சைரஸ் எனும் மகனும் அந்த சமூகத்தில் பல இன்னல்களைத் தாண்டி வாழ்ந்து வந்த ஒரு அழகான சிறிய குடும்பம். முதலில் அவர்கள் குடும்பம் பெரிய குடும்பம் தான். சைரஸின் அப்பாவின் பெயர் மணி. இரை தேடச் சென்ற போது போதையில் ஒருவன் அதிவேகமாக ஓட்டி வந்த காரில் மாட்டி இறந்து போனார். அவனது சகோதரர்கள் சகோதரிகள் ஆறு பேர். பெயர் சூட்டப்படும் முன்னரே அந்த சமூகத்தால் அரைகுறை பாசத்துடனும் சிலர் முழுமையான பாசத்துடனும்


இம்புட்டுத்தேன் வாழ்க்கை

 

 சூரிய வெளிச்சம் முற்றிலும் பரவாத சிறிது பகலின் வெளிச்சம் மட்டும் ஊடுருவிய மிதமான இருட்டு அறையில் பகல் நான்கரை மணியளவில், கலைந்த போர்வையின் நடுவே முகம் மற்றும் உடம்பெல்லாம் வியர்வை முத்துக்களாய் வடிய முகத்தில் ஏதோ ஒரு சிறு வலிக்கான மிகச் சுழிப்புடன் நெஞ்சைப் பிடித்தவாறே அமர்ந்திருந்தார் மீசைக்காரர் வேலு. இடுப்பில் தண்ணீர் குடத்துடன் முதல் நடையைக் கட்டிய சிவகாமி ஜன்னலின் வழியே தனது கணவர் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, சரி இப்போ தான் எழுந்திருக்காங்க போல என்ற


மாமனிதர்கள்!

 

 எங்க எங்க இருந்தோ அள்ளிகினு வந்ததையும், நசுங்கி போனதையும், செதஞ்சு போனதையும், நாக்கு தள்ளுனதையும், கண்ணு பிதுங்குனதையுமுலாம் அறுத்து பார்த்த கையி. அப்போலாம் கூட எந்த உணர்ச்சியும் இல்ல ஒரு மண்ணுமில்ல. எங்க இருந்துடா குமாரு வந்துச்சு இம்மாம்பெரிய ஃபீலிங்கு. ஆனா சும்மா சொல்ல கூடாதுடா குமாரு நீயும் காதல் மன்னன்டா யப்பா. எத்தனையோ பேரு அழுதுகினும் கத்திகினும் வந்து பாத்திருக்கேன், ஆனா அவ அழுதது மட்டும் என்னைய இன்னா பண்ணுச்சுனு தெரில. அவ அழுதது எனக்கு