கதையாசிரியர் தொகுப்பு: ராம் முரளி

2 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்வீட்டு சீதனம் !

 

 நீண்ட நேரமாக சுவற்றில் தலைகீழாக தொங்கிக்கொண்டிந்த மின்விசிறியை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்த அசோக் ஒரு வழியாக தன் குழப்பங்களுக்கு தெளிவு கண்டவனைப்போல தன் இருக்கையில் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனது முகம் வியர்வையால் குளிர்ந்திருந்தது. அவனது பிரதான மேசையின் வலது புறத்தில் நின்றுக்கொண்டிருந்த சதுர வடிவ கடிகாரத்தில் மணி நான்கை தொட்டிருந்தது. வேகமாக இருக்கையிலிருந்து எழுந்த அசோக் தன் சட்டை பித்தான்களை சரி செய்துகொண்டான். அந்த அலுவலகத்தின் தென்கோடியில் அமைந்திருந்த அவனது அறையிலிருந்து வெளியேறி வரிசையாக


எச்சில் ருசி

 

 எச்சில் கரை சிறுசிறு திட்டுகளாக காய்ந்துக்கிடந்த ரயில் நிலைய சிமென்ட் தரையில் சுருண்டு படுத்திருந்தாள் கோணி கிழவி. அவள் உடம்பில் ஒரு அழுக்கடர்ந்த பழஞ்சீலை சுற்றப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக அவளது ரத்தம் உறைந்த வற்றிய உடலை அந்த சீலை போர்த்தியிருந்தது. அந்த குடிகாரப்பயல் செல்லமுத்துதான் சீக்குண்டு இறந்துபோன தனது அம்மாவின் சீலை ஒன்றை கோணி கிழவிக்குகொண்டு வந்து கொடுத்தான். சீலையை கையில் வாங்கியதும் காய்ந்துபோன மாந்தோளை போன்ற தனது மூக்கு துவாரத்தில் அந்த சீலையை