கதையாசிரியர் தொகுப்பு: ராஜலக்ஷ்மி பரமசிவம்

1 கதை கிடைத்துள்ளன.

அப்பாவிற்குக் கிடைத்த தண்டனை !

 

 மைதிலி கோலத்தைப்போட்டு விட்டுத் திரும்பினாள் . மைதிலியின் வயது என்னவோ ஐம்பது தான்.. ஆனாலும் வாழ்க்கையின் பாடங்கள் அவளுடைய வயதை அறுபதைத் தாண்டி சொல்லத் தோன்றியது. கோலத்தின் அழகைப் பார்த்ததும் தன்னைப் பிரிந்த கணவனின் நினைவு ,மைதிலியை அழுத்தியது.அவனுக்கு இவள் கோலத்தையும் பிடிக்கும், இவள் கோலம் போடும் அழகும் படிக்கும். மைதிலிக்குத் திருமணம் ஆன போது அவளுக்கு வயது பத்தொன்பதைத் தாண்டவில்லை. இயற்கை அவளுக்கு அழகை வாரி வழங்கியிருந்தது. எழுதி வைத்தார் போலிருந்த கண்ணும், ஒற்றைக்கல் ஜொலிக்கும்