கதையாசிரியர் தொகுப்பு: யூமா வாசுகி

3 கதைகள் கிடைத்துள்ளன.

பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்

 

 ஓரிடத்தில் ஒரு முதியவள் இருந்தாள். அவளுக்கு ஆக மொத்தத்தில் ஒரே ஒரு பேரிக்காய் மரம் மட்டும்தான் சொத்தாக இருந்தது. குடிசையை ஒட்டி, நிறைய காய்களுடன் அது நின்றிருந்தது. ஆனால் ஒருபோதும் கிழவிக்கு ஒரு பழம் கூட கிடைக்கவில்லை. காய்கள் பழுக்கத் தொடங்கினால் பக்கத்து வீடுகளிலிருந்து பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் அவளை ஏமாற்றிவிட்டு பழங்களைக் கொண்டுபோய் விடுவார்கள். கோபத்தில் கிழவிக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கும். அப்படியிருக்கும்போது ஒரு பயணி முதியவளின் குடிசைக்கு வந்தான். அங்கே இரவு தங்குவதற்கு அவன்


நதிக்கடியில் மனிதர்கள்

 

 பெட்ரோ டி உர்டிமாயஸ் துறவியின் வேடமணிந்து பிச்சையெடுக்கப் புறப்பட்டான். அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. மாலை நேரமானது. குன்றும் மலையும் ஏறி இறங்கி பசித்துக் களைத்த பெட்ரோ, திருடர்கள் குகையை அடைந்தான். அங்கே தங்கமும், வெள்ளியும் குவிந்து கிடந்தன. வறுப்பதற்காக ஒரு ஆட்டை சமையலறையில் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். தாங்கிக்கொள்ளவே முடியாமல் பசி அதிகரித்தபோது பெட்ரோ விரைவாக ஆட்டின் ஒரு காலை ஒடித்து அடுப்பில் சுடத் தொடங்கினான். அப்போதுதான் திருடர்கள் வந்தார்கள். “இவனை நாம் நதியில் மூழ்கடிக்க வேண்டும்” என்று


வேட்டை

 

 வாசல் வரை வந்து நின்று தயங்கித் திரும்பினார் உஸ்மானி. தளர்ந்த உடலை நாற்காலியில் கிடத்திக்கொண்டு விறகுச் சாம்பல் கிடக்கும் கணப்படுப்பிற்குள் கண்களைச் செலுத்தியிருந்தவனை அவரது அழைப்புக்குரல் சலனப்படுத்தவில்லை. “பொனாச்சா….” “……” “மகனே பொனாச்சா” “…..” “சீக்கிரம் வந்துவிடுவேன். வீட்டிலேயே இரு. குடிக்கறதானா கொஞ்சம் சாப்பிட்ட பிறகு குடி, உடம்பு தாங்காது.” கெட்டுச் சீரழிந்து கொண்டிருக்கிற மகனது உடல் நிலைக்காக வெளிப்பட்ட பெருமூச்சுடன் உஸ்மானி படியிறங்கினார். கொழுத்த புலி மாதிரி திமிராய் அலைந்து கொண்டிருப்பான் பொனாச்சா. சேர்ந்தாற் போல