கதையாசிரியர் தொகுப்பு: மூவலூர் இராமாமிர்தம்

1 கதை கிடைத்துள்ளன.

தமயந்தி

 

 ‘பிள்ளைப்பேறு உண்டாவதென்பது எளிதில் முடியக்கூடிய காரியமன்று. தாங்கள் இப்பிறவியில் பாவம் எதுவும் செய்யவில்லை என்றபோதிலும், முற்பிறப்பில் செய்த பாவத்தின் காரணமாகவே தங்கட்குப் பிள்ளைபேறு இல்லாது போயிற்று. இதற்குப் பரிகாரமாகத் தாங்கள் தீர்த்த யாத்திரை செய்தால் புதல்வன் பிறப்பான்’ என்று புரோகிதன் கூறினான். தள்ளாத வயதில் யாத்திரை செய்வது முடியாதென்றும், வேறு ஏதாவது மார்க்கம் இருந்தால் கூறும்படியும் அரசன் புரோகிதரைக் கேட்டான். உலகத்திலுள்ள தீர்த்தங்கள் எல்லாம் சமுத்திரத்தில் அடக்கம். சமுத்திரமோ பிராமணர் பாதத்தில் அடக்கம். ஆகையால் பிராமணர்களுக்கு ஏராளமான