கதையாசிரியர் தொகுப்பு: முரளி கருணாநிதி

5 கதைகள் கிடைத்துள்ளன.

களவாடிய பொழுதுகள்..

 

 வெறுமையை யாரால் அனுபவிக்க முடியும். எனக்கு இந்த வெறுமையான நேரம் மிக பிடிக்கும். ஒரு விடுமுறை நாளின் மாலைவேளை நண்பர்கள் அற்றவனாய், உறவுகள் துறந்தவனாய் தனியாக சென்று கொண்டு இருப்பேன். யாரிடமும் பேச பிடிக்காது, என்னை அறியாத மக்கள் இருக்கும் ஒரு சுழலில் என்னை விதைத்து கொள்வேன். எந்த சிந்தனையும் இருக்காது, பேச்சும் இருக்காது. ஆனால் அது அமைதி கொள்ளும் நேரம் என்ற அர்த்தம் அல்ல. சுவாரசியமான புத்தகங்களின் பக்கத்திற்குள் ஒளிந்திருக்கும் வெறுமையான காகிதமோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்


விண்ணோடும்,முகிலோடும்…

 

 சென்னை மாகாணம் தமிழகத்தின் அடையாளம். நமது பிரமாண்ட வளர்ச்சியின் நிரூபணம். ஆந்திராவில் இருந்து பிரித்தோமா? இல்லை பாதியை நாம் தாரை வார்தோமா? என்ற எந்த பூர்விகமும் நமக்கு தெரியாது. மதகந்தராஜாவின் பெயரும், சென்னியப்ப நாயக்கரின் பெயரும் மாறி மாறி சூட்டபட்டது. எல்லா மாநில மக்களும் பாதுகாப்பாக வாழும் நகரம் என்று பெருமைபட்டு கொள்ளலாம். எப்போதும் நெரிசலும், பரபரப்பும் என்று இருக்கும் சென்னை நாளை விடுமுறையும் கூட. இந்த நகரம் தன் உடல் எடையை கொஞ்சம் குறைத்து கொள்ளும்.


மாடர்ன் தியேட்டர் அருகில்

 

 இந்த அழகான நகரம் எப்பொழுதும் பல வகையான ஓசைகளை எழுப்பி கொண்டே தான் இருக்கும், அந்த ஓசை அனைத்தும் இணைந்து இசையாய் ஒரு கானத்தை காலை முதலே இந்த நகர் எங்கும் காற்றோடு வருடிவிடும். ஆனால் இன்று இந்த நகரத்தால் ஒரு வெறுமையான பாடலை தான் தர முடிந்தது போலும்…! அந்த பாடலில் அமைதியே பெருமளவில் பின்னணி இசையை சேர்க்க, மவுனங்கள் கீதங்களை பாடியது. இந்த நகரில் இன்று தொழிற்சாலைகள் இயங்காததால் பிரமாண்ட இயந்திரங்கள் இசை சேர்க்கவில்லை.


சிவா மற்றும் சிவா

 

 சரியாக மதியம் 1 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக்கொண்டு இருந்தது வாரனாசி எக்ஸ்பிரஸ். 8′ம் பிளாட்பார்மில் மக்கள் கூட்டத்தில் நீந்திக்கொண்டே முன்னேறுகிறான் சிவா. ரயில் கிளம்ப, சரியான நேரத்தில் உள்ளே ஏறுகிறான். “ஓம்.. நமோ சிவாய..!!” என்று எழுதப்படுள்ள தனது காவி பையை இருக்கையில் கிடத்தி விட்டு ஜன்னல் ஓரம் சாய்கிறான். கத்தரிவெயிலின் தாக்கம் கூட அறியாதவனாய் ஜன்னல் வழியாக சென்னையை பார்த்து கொண்டு மூச்சிறைக்கிறான் “போகிறேன் சென்னை….!!” என்று. மெல்ல கண்களை


கண் விழித்தார் பெருமாள்

 

 பெருமாள் கண் விழித்தால் பிரளயம் ஏற்படும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு தினம் தான் இன்று. பெருமாள் கண் விழிக்கிறார், மிகவும் கடினமாக இருக்கிறது போலும். பல ஆண்டுகளாக சேர்ந்தே இருந்த இமைகள் இரண்டும் பிரிய மனம் இல்லாமல் பட்டாம்பூச்சி சிறகை விரிப்பது போல படபடகிறது. சாதாரண மின் விளக்கின் ஒளி கூட கதிரவனின் ஒளி போல அவர் கண்களில் கூசுகிறது. மீண்டும் ஒரு முறை பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு வேறு. ஒரு வழியாக கண்களை கசக்கி கொண்டு