கதையாசிரியர் தொகுப்பு: முனைவர் ப.சரவணன்

6 கதைகள் கிடைத்துள்ளன.

காற்றில் எழுதுபவர்கள்

 

 வண்டியை விட்டு இறங்கும்போது அந்தத் தெருவில் நாங்கள் எதிர்பார்த்தபடி யாருமே இல்லை. அறநிலையத் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தக் கோவிலை ஒட்டிய பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பதாகக் கேள்விப்பட்டுத்தான் இங்கு வந்து இறங்கினோம். ஆனால், எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அங்கிருந்த ஒரு வீட்டின் வாசலில் நின்றிருந்தவரிடம் விசாரித்தோம். அவர் சலிப்புடன், “இப்ப அந்தக் கோவிலில் அன்னதானம் போட்டுக்கிட்டு இருக்காங்க. அதைச் சாப்பிட்டுட்டு நேரா, இந்தப் பக்கம் வந்து உக்காந்துக்கிட்டும் படுத்துக்கிட்டும் கிடப்பாங்க. கொஞ்சநேரம் கழிச்சு இங்க வந்து


கலையிரவு

 

 ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையும் இரவில் எங்கள் வீட்டிற்கு ஆட்கள் வருவது வழக்கமாகிவிட்டது. கடந்த மாதம் 16 பேர் வந்திருந்தனர். அவர்களுள் நால்வர் குழந்தைகள். ‘இந்த மாதம் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும்’ என்றுதான் நினைக்கிறேன். எங்கள் வீட்டில் மாதத்துக்கு ஒருநாளாவது இப்படி ஆட்கள் வருவதும் தங்குவதும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது. மற்ற நாட்கள் முழுவதும் நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருப்போம். நான் வேலைக்குச் செல்வதால் அம்மா பெரும்பாலும் தனிமையில்தான் இருப்பார். அவரின் நடமாட்டம் முற்றத்துக்கும் சமையற்கட்டுக்கும்


காத்திருப்பு

 

 ரயில்பூச்சி ஊர்வது போலத்தான் அவள் அங்கும் இங்குமாக ஊரிக்கொண்டே இருப்பாள். அவளுக்குப் பின்னால் அவளைவிடப் பத்து வயது குறைந்த சிறுமியர் கூட்டம் ரயில்பெட்டிகள் போலச் சென்று கொண்டிருக்கும். சிரிப்பும் கூத்துமாகத்தான் அவர்களின் கூட்டம் அலைந்து கொண்டிருக்கும். ‘அவர்கள் எதற்காகச் சிரிக்கிறார்?’ என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்றால் நீங்களும் அந்தப் பெட்டிகளுள் ஒன்றாக மாறி, அவர்களின் பின்னே செல்ல வேண்டும். அப்படி நீங்கள் மாறாவிட்டால் அந்தக் கூட்டத்தை நீங்கள் லூசுகளின் கூட்டம் என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்குப் புரியவில்லை,


மலைக்காளி

 

 மலைக்காளிக்கோவிலின் முற்றத்துத் திண்ணையில் காளிதேவியும் ஆனந்தனும் சும்மா அமர்ந்திருந்தனர். இங்கிருந்து பார்த்தால், 610 பாறைப் படிக்கட்டுகளுக்குக் கீழே இருக்கும் மலையடிவாரக் கடைகளும் அவற்றுக்கு அருகே அமந்திருக்கும் சிற்றாலயங்களின் கோபுர முகப்புகளும் தெரியும். மலையடிவாரத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். விடுமுறைக்காலங்களில் மட்டும் கூட்டமே மிகும். அங்குள் சிற்றாலயங்களில் மக்கள் நுழைவர். ஆனால், மக்களுள் மிகச் சிலர்தான் பாறைப்படிகளில் ஏறி மலைக்காளிக்கோவிலுக்கு வருவார்கள். அவ்வப்போது இளங்காதலர்கள் தங்களின் கைகளைக் கோத்தபடியே மகிழ்ந்து பேசிக்கொண்டே, பாறைப்படிகளில் ஏறி நூறு அல்லது


குழந்தைமை

 

 பேருந்தின் ஆட்டத்தைவிட அவரின் ஆட்டம் மிகுதியாக இருந்தது. பேருந்தில் கூட்டம் குறைவுதான். ஆனால், இருக்கைகள் நிறைந்துவிட்டன. அவரைத் தவிர யாரும் நிற்கவில்லை. அவருக்கு மட்டும் இருக்கை கிடைக்கவில்லை. கிடைத்தாலும் அவர் அமர்வார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அவர் நிற்பது போலவே நடக்கிறார். அமர்வது போலவே மிதக்கிறார். அமர நினைத்து மரக்கிளைக்கு அருகில் சென்ற பறவை திடீரெனத் தன் மனத்தை மாற்றிக்கொண்டு, பறந்து வானில் எழுவது போல ஒரு முடிவின் எதிர்மறையான மாற்றத்தில், அந்த மாற்றம் செயலுக்கு


நாய்ச்சோறு

 

 அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததற்காகத்தான் அவனை எல்லோரும் திட்டினார்கள். ‘ஆறுமாதத்திற்கு ஒரு வீடு’ என மாறி மாறி வேலை செய்துகொண்டே இருந்தால், தன்னுடைய வேலைத்திறமை, நடத்தை மீது மற்றவர்களுக்கு ஐயம் ஏற்படக் கூடும்’ என்று நினைத்துத்தான் அவன் ஒரே முடிவோடு அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அவன் இதுவரை நான்கு வீடுகளில் பணியாற்றி இருக்கிறான். அந்த வீட்டுக்காரர்கள் யாரும் இவனை “வேலையைவிட்டுப் போ!” என்று கூறியதே இல்லை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவனாகத்தான் தன் விருப்பம் போலவே வெளியேறினான்.