கதையாசிரியர் தொகுப்பு: மாத்தளை சோமு

4 கதைகள் கிடைத்துள்ளன.

சின்ன உருவங்கள்…

 

 (1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஸ்கூல் கேட்டருகே போனதும் அந்த நினைவுகள் ஒரு திரைப்படமாய் விரிந்தன. அவன் மனம் அப்படியே வெலவெலத்துக் கால்கள் கேட்டைத் தாண்டிப் போகத் தயாராகின. இன்று வகுப்பிற்குப் போனால் நிச்சயம் தலைமை ஆசிரியர் “சரஸ்வதி பூஜைக்கு காசு கொண்ணாந்தியா?” என்று கேட்பார். அவன், தான் கொண்டு வரவில்லை என்பதை உறுதிப்படுத்துவதைப் போல் எழுந்து தலையைக் கீழ் போட்டவாறு நிற்பான். அப்போது தலைமை ஆசிரியர் “மத்தவங்கள்


முகம்

 

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குளியலறைக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தான் நித்தியானந்தன் என்ற நித்தி. அவனுடைய முகம்தான் கண்ணாடியில் தெரிந்தது. அது அவன் முகம்தானா? தெரிவதைக் காட்டுவது தானே கண்ணாடி. அது அவன் முகமே தான்… உள்ளத்தைதான் கண்ணாடி காட்டும்; காட்டுகிறது. இந்த உலகில் உள்ளதை உள்ளபடியே காட்டுவது இந்தக் கண்ணாடி மட்டும்தான்… வேறு யார் இப்படி இருக்கின்றார்கள்? எங்கு பார்த்தாலும் பொய் புகழ்ச்சி…. முகத்துக்கு முன்னே ஒரு


தாய்லாந்துக் காதல்

 

 மொபைலில் வைத்த அலாரம் அடித்ததால் தூக்கம் கலையவே, மொபைலில் மணி பார்த்து, இன்னும் நேரம் இருக்கிறது என்ற எண்ணத்தோடு அலாரத்தை நிறுத்திவிட்டு, மறுபடியும் அவன் தூக்கத்தை மீட்க முனைந்தான். காலையில் விடிவதற்கு முன்னர் அல்லது விடியும்போது எழுவது அவனுக்குப் பிடிக்காது. ஊரில் இருந்தபோதுகூட காலை 8 மணிக்குத்தான் எழுவான். அவனை எழுப்ப எவரும் இல்லை. அம்மாவும் அப்பாவும் போட்டி போட்டுக்கொண்டு அவனைத் தாலாட்டுவார்கள். ‘பிள்ளையே இல்லை’ என சோதிடர்களும், ‘பிள்ளை பிறக்க வாய்ப்பு இல்லை’ என வைத்தியர்களும்


ஒற்றைத் தோடு!

 

 கருணை இல்லத்து வாசலில் கிடந்த பெஞ்சில் சத்யனும் நாகலிங்கமும் உட்கார்ந்திருந்தார்கள். சத்யனின் மடியில் தவமணி உட்கார்ந்திருந்தாள். அவளின் பார்வை அந்த இல்லத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த அவள் வயதொத்த பிள்ளைகள் மீது கிடந்தது. சத்யன் அந்தப் பிள்ளைகளைப் பார்த்துவிட்டு இவர்களோடுதான் தவமணி இருக்கப் போகிறாள் என நினைத்தான். ஆனால் அந்த நினைவை அவன் நெஞ்சுக்குள் ஒலித்த ஒரு குரல் கலைத்தது… “பிள்ளய கவனமா பாருங்கோ… அது எனக்கு போதும்…’ அது சாகுந்தறுவாயில் பூரணி சொன்ன வார்த்தைகள்.