கதையாசிரியர் தொகுப்பு: மணிசேஷன்

1 கதை கிடைத்துள்ளன.

கோவில் காளைகள்

 

 செல்லப்பா இறந்துவிட்டார் என்று இன்று வாட்ஸாப் செய்தி கிடைத்து நாங்கள் அரசு மருத்துவமணைக்கு வந்து வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறோம். செல்லப்பாவுக்கு 75 வயதுக்கு மேல் இருக்கும். எங்களுக்கு அவர் செல்லப்பா. உங்களுக்கு அவரைச் ”சாரங்கன் பாகவதராக”த் தெரிந்து இருக்கலாம். செல்லப்பாவை எனக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியும்.என் அத்தையின் மைத்துனர் அவர். திருவாரூர் கமலாலயக் குளத்தின் ஒரு பக்கக் கரையில் இருந்தது அவர்வீடு. அவர்வீடு என்றால் அவரது வீடுஅல்ல அவர் அண்ணன் அதாவது எங்கள் அத்தையின் குடும்பம் இருந்த