கதையாசிரியர் தொகுப்பு: புலோலியூர் க.சதாசிவம்

1 கதை கிடைத்துள்ளன.

புது வாழ்வு

 

 (1966 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “பெரியவர்?” “யாழ்ப்பாண ஆஸ்பத்திரி மோனை.” “தம்பி?” “நெல்லியடி.” “ஆச்சி?” “உனக்குக் கிழவியோடைதானடா பகுடிப் பேச்சு… வேறை எங்கை போறது? சந்தைக்குத் தானடா மோனை…” “அக்கா ?” ‘வானு’க்கு முன் ஆசனத்தில் சாரதிக்குப் பக்கத்தில், கைக் குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்த கந்தசாமி, ஆச்சிபோல அக்காவும் ஏதாவது சொல்லுவாள் என எண்ணித் திரும்பிப் பார்க்கிறான். அக்கா மணியத்தின் கேள்விக்கு ஒன்றுமே பேசாது சிமிட்டிக் கொண்டே