கதையாசிரியர் தொகுப்பு: பி.ஜி.கதிரவன்

1 கதை கிடைத்துள்ளன.

கூட்டுத்தொகை ஐந்தும், குருவிகளும்!

 

 அந்த ஞாயிற்றுக்கிழமைதான், என் மனைவி மகேஸ்வரியையும், மகன் பிரபாகரனையும் சாத்தூரிலிருந்து கூட்டி வந்திருந்தேன். விடுமுறை முடிந்து, மறுநாள் பிரபாகரனுக்கு பள்ளி திறக்கவிருந்ததால், வேறு வழியின்றி இருவரையும் மாமியார் அனுப்பி வைத்திருந்தார். மகேஸ்வரியின் தம்பி கேசவனின் திருமண வேலைகள் இன்னும் நிறைய இருக்கிறது. வந்தவள், அவள் இல்லாதிருந்த போது, வீட்டை, சமையலுக்கு பயன்படுத்திய பாத்திரங்களை, நான் எப்படி வைத்திருக்கிறேன் எனப் பார்வையிட்டாள். “”பரவாயில்லையே, நீட்டா வச்சிருக்கீங்களே,” என்றாள் பிரியமாய். “”அப்பா… நம்ம வீட்டுல, குருவி கூடு கட்டியிருக்குன்னு போன்ல