கதையாசிரியர் தொகுப்பு: பிரணா

4 கதைகள் கிடைத்துள்ளன.

பரிணாமம்

 

 1800 களின் தொடக்கம், தோவாளை,கன்னியாகுமரி சலசலத்து ஓடும் பழையாறு அங்கிருந்த நிசப்தத்தை தன் ஆயிரம் கரங்களால் தன்னுள்ளே இழுத்துக் கொண்டு சென்றது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த ஆற்றின் கொடை, பச்சை ஆடை உடுத்திய நிலப் பெண்ணால் பறைசாற்றப்பட்டுக் கொண்டிருந்தது.அறுவடைக் காலமாதலால் ஆங்காங்கே வயல்களில் அறுப்பெடுக்கும் பணிகள் நடைப் பெற்றுக் கொண்டிருந்தன.மேலாடை மறுக்கப்பட்ட, கீழ் சாதி பெண்கள் அங்கே வரிசையாய் நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்.மேலாடையில்லாமல் இப்படித் தாங்கள் நிற்க வேண்டிய நிலையை வெட்கி வெட்கியே இயல்பாகவே சற்றுத் தங்கள் உடலைக்


மனிதம்

 

 என்னால் நம்பவே முடியவில்லை.எப்படி இது சாத்தியம்.நேற்று கூட மாமியார் வீட்டிற்கு சென்றபோது லட்சுமியம்மாவை பார்த்தேனே.நன்றாகதானே இருந்தார்.அதற்குள் என்னாகி இருக்கும்.நினைத்துப்பார்க்கயில் அதிர்ச்சியாக இருந்தது.என்ன ஒரு நிச்சயமற்ற வாழ்க்கை.அடுத்த நொடி நடக்க போகும் அதிசயங்கள் சொல்லி மாளாது.விணு அதற்குள் மறுபடி என்னை செல்லில் அழைத்தான். “யமுனா,கிளம்பிட்டியா,சீக்கிரம் போ..நான் ஆபிஸ்ல இருந்து கிளம்பிட்டேன்.பத்து நிமிஷத்துல வந்துடுவேன்”.அவன் குரலில் பதட்டம் இருந்தது. “ஏன் விணு என்ன ஆச்சு நேத்து நல்லாதான இருந்தாங்க..எனக்கு ஒன்னுமே புரியலயே”. “நெஞ்சு வலியாம்.திடீர்னு தான்,ஹாஸ்பிட்டலுக்கு போன் பண்றதுக்குள்ளயே உயிர்


உன் மழை

 

 சிறு சிறு தூறலாய் முகத்தில் அறைந்தத் துளிகளை விலக்கி, இந்த சிறு மழைக்கு பயந்து தங்களை மறைக்கும் இடம் தேடி ஓடும் மக்களைப் பார்த்தப்படியே உன்னிடம் கேட்கிறேன்.. “எங்கு அழைத்து செல்கிறாய் இந்த மழையில்..?” “எதோ மழையில் நனைவது பிடிக்காதவள் போலவே கேட்கிறாய்..?” “மழையில் நனைவது பிடிக்கும்…தெறிக்கும் இந்த சாரலை ஏந்திக் கொண்டே உன்னுடன் பயணிப்பது அதை விடப் பிடிக்கும்” “உன்னுடைய ரசனையும் எனக்குப் பிடிக்கும்” “அது சரி..என் கேள்விக்கு பதில்..?” “இன்னும் சிறிது நேரத்தில்” தெரிந்துக்


தெய்வத்தாய்

 

 அறையை முழுவதுமாய் ஒரு நோட்டம் விட்டாள் விட்டாள் வேதா.இப்போதுதான் திருப்தியாய் இருந்தது.அப்பப்பா ஒரு வாரமாய் வேலை பெண்டை கழட்டிவிட்டது. ‘வீட்டில் இருக்கும் எதாவது ஒரு உருப்படியாவது,உருப்படியாய் உதவுகிறதா?எல்லாவேலையும் நானேதான் செய்ய வேண்டும்.எல்லாம் என் தலை எழுத்து’ தனக்குத் தானே பேசிக் கொண்டவளாய் மிச்சமிருக்கும் அலமாரியையும் ஒதுங்க வைத்தாள். நேற்றுதான் வீட்டை வந்து பார்த்து அட்வான்ஸ் கொடுத்தது போல் இருந்தது.அதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது.இதற்கு முன்னால் நான்கு,ஐந்து வீடுகள் பார்த்தார்கள்.எதுவுமே வேதாவிற்கு பிடிக்கவில்லை.கதிருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. காலையில்