கதையாசிரியர் தொகுப்பு: பா.விசாலம்

1 கதை கிடைத்துள்ளன.

அடிமைகள்

 

 உளுந்தூர்பேட்டையில் நின்ற சில நபர்களை ஏற்றிக் கொண்டு பஸ் புறப்பட்டபோது அநேகமாக எல்லோரும் தூக்கம் என்ற தேவதைக்கு அடிமையாகி இருந்தார்கள். சீதையின் பக்கத்து சீட் மாமி தூங்கி அவள் தோளில் அடிக்கடி சரியலானாள். பஸ் வேகம் எடுத்து முன்னேறியது. சீதையின் நினைவுகள் பின்னோடியது. மாணிக்கவேலர் நாடகக் கம்பெனி என்றால் அன்று சாதாரணமா என்ன? குரூப்பில் ஒருவனை சோடை என்று விரல் மடக்க முடியுமா? சீதை அதில் தன்னுடைய திறமையைக் கொண்டு நேர்மையாக நாலு காசு சம்பாதித்து வயிற்றைக்