கதையாசிரியர் தொகுப்பு: பா.தினேஷ்பாபு

1 கதை கிடைத்துள்ளன.

அப்பாயி…

 

 கழிவறையில் இருந்து வெளியே வந்தவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனையும் அறியாமல் அவன் கண்களில் இருந்து வந்த நீர்த்துளி தரையை தொட்டது. எதிரே சுவரில் இருந்த பல புகைப்படங்களில் அந்த 80 வயது முதியவள் மட்டும் இவனை பார்த்து ஏளனமாக சிரிப்பதாக உணர்ந்தான். தினகரன்… பெயருக்கு ஏற்ப சூரியனின் பிரகாசம் அந்த முகத்தில் இருந்தாலும் மனித உணர்வுகளை அந்தந்த பருவங்களில் வென்றெடுக்க முடியாது பிற்காலத்தில் குற்ற உணர்வுகளில் வருந்தும் பெரும்பான்மையான கூட்டத்தில் அவன் மட்டும் என்ன