கதையாசிரியர் தொகுப்பு: பசுந்திரா

6 கதைகள் கிடைத்துள்ளன.

வெண் நிலவுகள்

 

 ” பிச்சை எடுக்கிறதுக்காகவே பிள்ளையை பெறுவது , பிறகு – பேத்தி ,பேத்தி – எண்டு சொல்லித்திரியிறது ‘பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! ‘எண்டு சொல் வேண்டியது தானே….” என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண்மணி – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை . சேற்றில் தோய்த்தெடுத்தது போல இருந்தாலும் பார்ப்பதற்கு அழகான சிலை போல் பிள்ளையும் பிச்சைத்தட்டுமாய் இருக்கும் மகளையும் , மனம்


சொந்தக்காறன்

 

 நான் எதிர் பாராத நேரம் ஏதோ ஒன்று எங்கிருந்தோ வந்து என் முகத்தில் விழுந்தது. ‘என்ன இது மோசமாக நோகிறதே.. ? ‘ என அந்த பக்க கண்ணை மூடிக்கொண்டு சாபிட்ட கையாலே கன்னத்தை தடவிய போது முன்னால் இருந்த ராசன் படீரென என் முகத்தில் மூக்கடியில் குத்தினான். அவன் கோபமாக பேசிய போதுதான் புரிந்தது இது அவனின் இரண்டாவது அடி என்று . எனக்கு என்ன செய்வ தென்று தெரிய வில்லை . வலித்த இடத்தை


காதலான ஆழம்

 

 இந்த செய்தி வந்ததில் இருந்து – அப்பா எத்தனை விடயங்களை சாதித்திருக்கிறார் என்று எனக்குள் ஒரே ஆச்சரியம். “எனக்கு படிக்க பணம் தந்தவர் , எனக்கு திருமணம்பேசி செய்து வைத்தவர் , நான் அவரது வளர்ப்புப் பிள்ளை , எப்ப வந்தால் பார்க்கலாம் ?” என அழைப்பின் மேல் அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. நேற்றில் இருந்து தொலை பேசி அலறிக்கொண்டு இருகிறது. சில தசாப்த பிரிவின் முடிவில் அப்பாவை பார்க்கப்போகிறோம் என்ற செய்தியால் . என்னுள்


மான பங்கம்

 

 வகுப்புத் தோழன் குண்டனை காலை – அந்தக் கோலத்தில் – கண்டதில் இருந்து நந்தனின் மனம் திக் திக் என்று இருந்தது. நந்தன் இதற்கு முன் தேங்காய் பாதியை கடித்து விட்டு தங்கச்சியை சாட்டி விடுவது , தான் வலிய அவளுக்கு அடித்து விட்டு அவள் அழுதால் ‘தங்கச்சிதான் முதல் அடிச்சவள்’ என்று கதையை மாற்றி விடுவது என முட்டையாலவெளிய வந்த சின்னச் சின்ன குஞ்சுப் பொய்கள் சொல்லி இருக்கிறான். ஆனால் இன்று காலை செய்தது வித்தியாசம்


ஈருடல் ஓருயிர்

 

 முதல் முறையாக மதனா பாலனை இழுத்துக்கொண்டு குழிக்குள் வந்து விட்டாள். நூறு முறை ‘ உள்ள வாங்கோ… உள்ள வாங்கோ…’ என கத்தி தொண்டை தண்ணி வயற்றி விட்டாலும் பாலன் வரமாட்டான். பலாலி இராணுவ முகாமில் இருந்து இந்தியன் ஆமி ஆட்டலறி செல் அடித்தால் .- இரண்டு நிமிடம் 25 விநாடி – எடுக்கும் அளவெட்டி மாரியம்மன் கோயிலடிக்கு வந்து விழுந்து வெடிக்க என ஒரு கணக்கு வைத்திருந்தான் பாலன். இந்தக் கணக்கை கண்டுபிடித்து கொஞ்ச நாள்தான்


ஆழ நட்ட வாழை

 

 11 வயது நிரம்பிய கரனை பார்ப்பவர்கள் எட்டு வயதே மதிப்பார்கள். ஆனால் அவனோ அந்த 18 ,19 வயது இழைஞர்கள் மூவரின் பின்னால் கையில் ஒரு தடியை பாதையெங்கும் இழுத்து கோடு போட்ட படி நடந்துகொண்டு இருந்தான் . அவனுக்கு நினைவு தொரிந்த இத்தனை வருடத்தில் இதுவே முதல் தடவையாக வேலைக்குப் புறப்பட்டு இருக்கிறான். பெரிதாக ஒன்றும் வெட்டிப் புடுங்கும் வேலை இல்லை இது ஒரு எட்டிப் புடுங்கும் வேலை. புடுங்குவதும் தேங்காய் மாய்காய் இல்லை வெறும்