கதையாசிரியர் தொகுப்பு: நெய்வாசல் நெடுஞ்செழியன்

4 கதைகள் கிடைத்துள்ளன.

புரிந்த பாடம்

 

 வாசல் தெளித்து கோலம் போட்ட பாரதி விளக்கேற்றி வைக்கும் எண்ணத்துடன் முகம் கழுவுவதற்காக கொல்லைப்புறம் சென்றாள். தண்ணீரைத் திறந்தவள் விநோதமானதொரு சப்தம் காதில் விழ நிமிர்ந்தாள். மெல்லியதாய் கீச்சுக்குரலாய் ஒரே சீரான இடைவெளியில் வந்த சப்தம் என்னவாக இருக்கும் என்பதை அறிய காதைத் தீட்டிக்கொண்டு ஒவ்வொரு பகுதிக்கும் சென்றவள் தேக்கு மரத்தின் அருகே துணி உலர்த்தும் கொடி கட்டுவதற்காக நடப்பட்டிருந்த பனஞ்சாத்தின் மீது கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து அந்த சப்தம் வருவதை அறிந்து நின்றாள். பானைக்கு வெளியே


மேகங்கள் கலைந்தபோது…

 

 கேண்டினிலிருந்து வெளியே வந்தபோதுதான் நரசிம்மன் கணேசனை பார்த்தான். வழக்கத்திற்கு விரோதமான அவன் வேகமும் தன்னைக் கண்டுபிடிப்பதில் காட்டிய அவசரமும் அவன் சாதாரணமாக வரவில்லை என்பதை உணர்த்த நரசிம்மன் குழம்பினான். ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்த அப்பாவின் நினைவு வந்தது. காலையில் பார்த்தபோதுகூட நன்றாகத்தானே பேசினார். இன்னும் இரண்டு நாளில் வீட்டிற்கு அழைத்து போகவில்லையென்றால் தானாகப் புறப்பட்டு வந்துவிடுவேன் என்றாரே… ஒருவேளை இரண்டு நாட்கள் கூட பொறுக்க முடியாத அவசரத்தில் புறப்பட்டு வந்து ஏதாவது ஆகி இருக்குமோ? என்ன? ஏது? என்பது


அம்மா அம்மாதான்

 

 தன்னிடமிருந்த மாற்றுச் சாவியால் கேட்டைத் திறந்த சண்முகம், ஸ்கூட்டரை உள்ளே தள்ளவும், வீட்டுக்குள் யாரோ விளக்குப் போடவும் சரியாக இருந்தது. அடுத்த நொடியே வீடு இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். ஸ்கூட்டரைத் தள்ளுவதை நிறுத்திவிட்டு யார் விழித்துக் கொண்டிருப்பது என நோட்டமிட, கதவைத் திறந்து கொண்டு அபிராமி வெளிப்பட்டாள். நல்லவேளை பிள்ளைகள் விழித்திருக்கவில்லை. ஆடிட் காரணமாக நேற்றும் இப்படி பதினொரு மணிக்கு வீட்டுக்கு வந்தபோது தூங்கிக் கொண்டிருக்க வேண்டிய பிள்ளைகள் தூங்காமல் விழித்துக்


ஒரு காதலின் கதை

 

 மணி இரண்டுக்கும் மேலிருக்கும். ஊரே உறங்கிக் கொண்டிருக்க அவள் – அபர்ணா மட்டும் தூக்கமின்றித் தவித்தாள். அன்று நடந்ததொரு சம்பவம் அவள் அமைதியை அழித்துத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது. தூங்காமல் புரண்டு புரண்டு படுத்ததால் ஏற்பட்ட அசதி, கண் எரிச்சல் புறரீதியாகவும், அதற்குக் காரணமான சம்பவம் அகரீதியாகவும் அலைக்கழிப்பைத் தர அதிகம் சோர்ந்திருந்தாள். மனதைச் சமன்படுத்தி தூங்கிவிடலாம் என்று தூங்க முற்பட்டும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொருவிதமான எண்ணமும், அதுசார்ந்த காட்சிகளும் விரிய தூக்கம் தொலைந்து போனது. இரண்டு