கதையாசிரியர் தொகுப்பு: நாகா ரா

2 கதைகள் கிடைத்துள்ளன.

கடற்கல்லறைகள்

 

 இராமேஸ்வரம் வந்திறங்கியப்போது, காலை ஏழ மணி, மஞ்சள் வெயிலும், கடலின் நிற்காத ஓசையும் எங்களை வரவேற்றது. முதல்முறை இங்கு வருகிறேன், அதுவும் அம்மாவின் வேண்டுதல் மற்றும் வற்புறுத்தல்களால். இராமநாதபுர ஜில்லாவின் கோடை வெயில் மகத்துவத்தை ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தால், அம்மாவின் ஆசையை மூன்று மாதங்களாக கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் ஆசையே ஏக்கமாகி அம்மாவின் முகத்தில் வடுக்களாக பதிய ஆரம்பித்தபோது, சரி இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று முடிவெடுத்து இன்று வந்தாகிவிட்டது. கோவில் புனஸ்காரங்களையெல்லாம் முடித்துவிட்டு இன்றிரவே சென்னைக்கு இரயில்


இதுவும் ஒரு (சிறு) கதை

 

 “ஒரு சிறுகதை வேணும்பா, பிச்சைக்காரங்க வாழ்க்கைய மையமா வச்சு, நாலு நாள்ல, முடியுமா?” என்று ஆனந்தம் நாளிதழ் சண்முகம் கேட்டபோது எனக்கு அவள்தான் நினைவுக்கு வந்தாள். “உண்மைக்கதையா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று அவர் மேலும் கூறியபோது, அவளைவிட்டால் இதற்கு வழியே இல்லை என்று தோன்றிற்று. “சரி சார் முயற்சி பண்றேன்” என்று போனை வைத்துவிட்டு சிந்திக்கலானேன். நான் சென்னைவாசி. என் முதல் காதல் இரயில் பயணம். நகர பேருந்துகளை நரகத்தின் கூடாரமாகத்தான் பார்ப்பேன். இரயில்